குவியல்!.....(30.04.09)

சந்தேகமேயில்லை! அதே தான், அவியல் வரிசையில் புதிதாக குவியல்!
நமக்கெல்லாம் வராதுன்னு தான் நினைச்சிகிட்டு இருந்தேன்! முயற்சி செய்து பாருன்னு சொன்ன நண்பர்களுக்கு நன்றி,

*******************************
இந்த வார ஆனந்தவிகடன் பக்கம் 26-ல் நண்பர் லக்கிலுக்கின்(யுவகிருஷ்ணா) சிறுகதை வெளியாகியுள்ளது! கதையின் பெயருகேற்ப முடிவில் ஒரு மர்ம முடிச்சை போட்டிருக்கிறார்.
(அவிழ்க்கவில்லை)

*******************************
டெலிமார்க்கெட்டிங்கில் இருந்து யாராவது போன் செய்தால், முதலிலேயே(பென்ணாக இருந்தால்) குரலாங்க இது என்று சிலாக்கிக்கவும், ஏன் என்று கேட்டால் குரல் இல்லைங்க புல்லாங்குரல் என ஐஸ் வைத்தால், ரூட்டு மாறுதுன்னு போன் கட் செய்யப்படலாம், அல்லது வெயிலுக்கு ஐஸ் நல்லாயிருக்கேன்னு கடலை தொடரப்படலாம். எதுவாக இருந்தாலும் விளைவுகளுக்கு கம்பேனி பொறுப்பல்ல

நன்றி:ரமேஷ் வைத்யா

*********************************

ஒரு சிறிய பதிவர், பதிவர் சந்திப்புக்கு சென்னை சென்றிருந்த போது அனைவரும் இன்னும் சின்னபையனாக எதிர்பார்த்தோம் என சொல்லவே, மனம் வெகுண்டு வெறித்தனமாக தொப்பையை குறைக்க பாடுபட்டு கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் தலைக்கு டை அடிக்கும் எண்ணமும் உண்டாம்.

என்ன பண்ணாலும் வாலை மறைக்க முடியாதே!

************************************

புதிதாக ஆரம்பிக்கப்படுள்ள நெல்லைதமிழ் தமிழ் வலைப்பூக்கள் இணையத் திரட்டியில் இந்த வார முகப்பு பதிவராக நான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளேன், மேலும் அங்கு புதிதாக இணையும் வலைப்பூ நண்பர்களை, ”புதுமுகம், அறிமுகம்” என்ற தலைப்பில் முகப்பில் அறிமுகப்படுத்துகிறார்கள், இயல்பாக இருக்கிறது, இணைந்து பாருங்களேன்

இணைய இதை அழுத்தவும்

**************************************

வெளியூரிலிருந்து சென்னை செல்லும் பதிவர் நண்பர்கள், ஒரு நாளுக்காக அறை எடுத்து தங்க வேண்டியதில்லை, பதிவர் நண்பர்களுக்கு இந்த உதவி செய்வதை பெருமையாக கருதுவதாக சொல்கிறார் அண்ணன் அப்துல்லா! அருமையான அறை, கனிவான கவனிப்பு. அவரது வலைப்பூவில் தகவல் மற்றும் அலைப்பேசி எண் மட்டும் கொடுத்து விட்டால் போதும்

*******************************************

உழைக்கும் அனைவருக்கும் எனது உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

***************************************

எனக்கு இது புதிது, ஆனாலும் ஒரு கவிதை எழுதி தான் ஆகணுமாம்!
மற்றவர்கள் கவிதையை எடுத்து போடுவதை விட நாமே ஒரு கவுஜ எழுதினால் என்ன என்று தோன்றியது!

தொப்பை

கை, கால்கள்
அனைத்துக்குமாய்
சேர்த்து சாப்பிட்டாய்,
நீ மட்டும்
வளர்ந்தாய்,
பிகர்களை இழந்தேன்
அவமானம் அடைந்தேன்.
விட்டேன் சாபம்
கை, கால்களே
அனைத்துக்குமாய் சேர்த்து
அதை சாப்பிடுங்கள்

(எப்படியோ குறைச்சா சரி)

73 வாங்கிகட்டி கொண்டது:

அ.மு.செய்யது said...

Me the first ??

Mahesh said...

அருண்.... இந்த மாதிரி தொகுப்புகள்லயே இதுதான் சூப்பர் !!

அ.மு.செய்யது said...

//சந்தேகமேயில்லை! அதே தான், அவியல் வரிசையில் புதிதாக குவியல்!//

வாங்க...!!!! அட நீங்களுமா ?

வால்பையன் said...

Mahesh said...

அருண்.... இந்த மாதிரி தொகுப்புகள்லயே இதுதான் சூப்பர் !!//

என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே!

அ.மு.செய்யது said...

ந‌ண்ப‌,

ச‌ங்கு சுட்டாலும் வெண்மை த‌ரும்.

அத‌னால‌ ந‌ரையை ப‌ற்றி க‌வ‌லைப் படாதீங்க‌ !!!

அ.மு.செய்யது said...

அப்துல்லா ( பிர‌ப‌ல‌ பாட‌க‌ர் ) அண்ணனோட‌ ந‌ல்ல‌ ம‌ன‌சு யாருக்கு வ‌ரும் ?

சென்னையிலே வீடு இருந்தாலும் அடுத்து சென்னை வ‌ரும் போது அவ‌ர் வீட்டில‌ ஒருநாள் த‌ங்கி, பிற‌விப் ப‌ய‌னை அடைத‌லே அடுத்த‌ இல‌க்கு !!!

Suresh Kumar said...

கவிதை நல்லா இருக்கு

அ.மு.செய்யது said...

//கை, கால்கள்
அனைத்துக்குமாய்
சேர்த்து சாப்பிட்டாய்,
நீ மட்டும்
வளர்ந்தாய்,
பிகர்களை இழந்தேன்
அவமானம் அடைந்தேன்.
விட்டேன் சாபம்
கை, கால்களே
அனைத்துக்குமாய் சேர்த்து
அதை சாப்பிடுங்கள்//

ந‌ல்ல‌ இல‌க்கிய‌ த‌ர‌த்தோடு எழுத‌ப்ப‌ட்ட‌ ஜ‌ன‌ர‌ஞ்ச‌க‌ க‌விதை.

(எங்க‌ அந்த‌ ல‌வ்டேல் மேடிய‌ ? )

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

SUBBU said...

குவியல் குவியுது தல :))))))))))))))

கார்க்கிபவா said...

குவியல்..

டைட்டில் வேல்யூ அதிகங்க..

வெயிலான் said...

// எங்க‌ அந்த‌ ல‌வ்டேல் மேடிய‌ ? //

எதுக்கு வரிக்கு வரி கும்மவா? :)

S.A. நவாஸுதீன் said...

அவியல் (குவியல்) நல்ல காரசாரமாதான் இருக்கு.

S.A. நவாஸுதீன் said...

துணுக்கு செய்திகள் படித்ததுபோல் சுவாரசியமும் உண்டு. தொப்பை கவிதை (நக்கல்) சூப்பர்

Raju said...

அடிச்சு ஆட்டுங்க பாஸு..(வாலைத்தான்..!)

கண்ணா.. said...

// பிகர்களை இழந்தேன்
அவமானம் அடைந்தேன்.
//

:)))))))

கலக்கல் தல...

இன்னும் நீங்க நிறைய குவிக்கலாம்

கடைக்குட்டி said...

குவிய குவிய எழுதவும்...

:-)

நல்லாத்தான் இருக்கு..

தினேஷ் said...

நான் இதுவரை தொப்பை பற்றிய கவிதையை படித்ததே இல்லை ...

தொப்பை கவிதை வழங்கிய வால் இன்று முதல் ”தொப்பை கவி வால்பையன்” என்று அழைக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்....

Anonymous said...

சபாஷ் சரியான போட்டி.

ஆ! இதழ்கள் said...

நன்றாக இருக்கிறதே

ஆ! இதழ்கள் said...

நன்றாக இருக்கிறதே தொடர்ந்து எழுதுங்கள்...

:)

புதியவன் said...

கலக்கல் குவியல் நண்பரே...

உங்களுக்கும் எங்கள் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்...

Venkatesh Kumaravel said...

ஆஹா... நீங்களுமா? அட்டகாசமான ஆரம்பம்! தொடர்ந்து குவிச்சு தள்ளுங்கண்ணே!

அப்துல்மாலிக் said...

அருமையான தொகுப்பின் குவியல் வால்

அதிகமான நபர்கள் அதிகம் கவ்லைப்படுவது தொப்பை பற்றிதான் அழகான வரிகளில் ஒரு கவுஜ

அப்பாவி முரு said...

// பிகர்களை இழந்தேன்
அவமானம் அடைந்தேன்//

அட ஏண்ணே காலம் போன கடைசியில,

சிவனேன்னு கிடக்காம, பிகராம் பிகரு.

விஜய் ஆனந்த் said...

:-)))...

பரிசல்காரன் said...

இந்தக் குவியல் என்ற தலைப்பில் என் அவியலை ஒருமுறை நான் எழுதினேன் என்று இந்த வரலாற்றின் பக்கங்களில் பொறித்துக் கொள்கிறேன்.

ஏற்கனவே உங்களுக்குப் பொருத்தமான காக்டெய்ல் தலைப்பை சஜஸ்ட் செய்தேன். நீங்கள் தாமதித்தீர்கள், கார்க்கி காக்டெய்லை (கு) பிடித்துவிட்டார்!

உங்களுக்கு குவியல் என்ப்தை விட வேறு தலைப்புகள் பொருத்தமாக தேர்ந்தெடுக்கலாமே..

’மிக்ஸிங்’ - என் யோசனை.

(ப்ரொஃபைல் ஃபோட்டோவை மாற்றவும். பின்னால் திருவள்ளுவர் பயப்படுகிறார்)

வால்பையன் said...

//’மிக்ஸிங்’ - என் யோசனை//

அதிலும் அண்ணன் ஆதி முந்திவிட்டார்!

சின்னதம்பியின் டைரி குறிப்புகள் யோசித்தேன்!

இந்த கான்செப்டுக்கு நீங்கள் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் என்பதால் குவியல் ஆக்கிவிட்டேன்!

எனக்கு மகிழ்ச்சி, உங்களுக்கும் மகிழ்ச்சி தானே!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/முயற்சி செய்து பாருன்னு சொன்ன நண்பர்களுக்கு/

என்னா வில்லத்தனம்!

வேந்தன் said...

நல்லா இருக்கு :)
தொடர்ந்து எழுதுங்கள்...

தீப்பெட்டி said...

கவுஜ கலக்கல்...

கடைக்குட்டி said...

தல என் பதிவ படிக்காமலேயே வாழ்த்துக்க்கள் போட்டுட்டீங்க..

அன்புக்கு நன்றி..

ஆனா ஒரு முற படிச்சுடுங்க இப்போ..
:-)

VIKNESHWARAN ADAKKALAM said...

ஆரம்பிச்சாச்சு... அசத்துங்க....

வினோத் கெளதம் said...

எல்லாமே சூப்பர் மேட்டர்ராகித்தே..
நான் உங்கள கண்டுபுடிக்க முடிஞ்சதே உங்க அந்த தல மேட்டர் வச்சு தான்..

சின்னப் பையன் said...

ஹாஹா... வாய்ப்பேயில்லாமே சூப்பரா இருக்கு... :-)))

நசரேயன் said...

குவியல் நல்லா இருக்கு

Anonymous said...

Super

கிரி said...

புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் அருண் :-)

இன்னும் கொஞ்சம் தகவல்களை சேர்த்து எழுதுங்க

cheena (சீனா) said...

வால் - தொப்பை - இள நரை - எதற்குக் கவலை - பையா

நாம் எப்பொழுதும் யூத் தானே

அப்துல்லா வூட்ல நானும் ஒரு நா தங்கப் போறேன்

பீர் | Peer said...

குவியலில் குறிப்பெடுத்துக்கொண்டேன். (அண்ணன் அப்துல்லா) :)

Anonymous said...

குவியல் சுவை...குதுகுலம் அவை...


தொப்பையை குறை....
இள நறையை மறை.....
மாற்றம் நம் நிறைவுக்காக இருக்கட்டும் மாற்றமும் மாறுதலும் ஏன் மற்றவருக்காக......

Subash said...

ஹாஹா
அருமை

Thamira said...

நா இப்பதான் ஊறுகா போட்டுனு வர்றேன்.. இங்க குமியல் நடக்குதா.?

Suresh said...

சூப்பர் குவியல் ;) ஹா ஹா மச்சான் வாழ்த்துகள்...

வீணாபோனவன் said...

துவையல்...

-வீணாபோனவன்.

லோகு said...

அருமை..

தொடருங்க..

காயத்ரி சித்தார்த் said...

கலக்கல் கவிதை அண்ணா!! :)

KADUVETTI said...

:))))))))))

இராகவன் நைஜிரியா said...

மீ த 50

இராகவன் நைஜிரியா said...

குவியல் நல்லா இருக்கு

வாரம் ஒன்று எதிர்ப்பார்க்கின்றேன்

ஊர்சுற்றி said...

//ஒரு சிறிய பதிவர், பதிவர் சந்திப்புக்கு சென்னை சென்றிருந்த போது அனைவரும் இன்னும் சின்னபையனாக எதிர்பார்த்தோம் என சொல்லவே, மனம் வெகுண்டு வெறித்தனமாக தொப்பையை குறைக்க பாடுபட்டு கொண்டிருக்கிறார்.//

:))))

பட்டாம்பூச்சி said...

சூப்பரா இருக்கு :-)

shortfilmindia.com said...

குவியல்.. :)

கண்ணா.. said...

பின்னூட்டமிட்டவர்களுக்கு பதில் சொல்லாமல் பல பேருக்கு பின்னூட்ட சென்ற வாலை கண்டித்து ....
தமிழன தலைவர் தலைமையில் நாளை காலை 6 மணி முதல் அண்ணா சமாதியில் உண்ணும் விரதம் மேற்கொள்ள இருக்கிறோம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்....

வால்பையன் said...

நன்றி அ.மு.செய்யது

நன்றி சுரேஷ்குமார்
அது கவுஜ! கவிதையல்ல!

நன்றி ராதாகிருஷ்ணன்

நன்றி சுப்பு

நன்றி கார்க்கி
நீங்க சொன்ன சரியா தான் இருக்கும்,!

நன்றி வெயிலான்
அதுக்கு தான்

நன்றி S.A. நவாஸுதீன்
இது குவியல் மட்டுமே!

நன்றி டக்ளஸ்

நன்றி கண்ணா

நன்றி கடைக்குட்டி

நன்றி தினேஷ் இராஜேந்திரன்
இனிமேல் நிறைய படிக்கலாம்

நன்றி மயில்

நன்றி ஆ! இதழ்கள்

நன்றி புதியவன்

வால்பையன் said...

ந்னறி வெங்கிராஜா

நன்றி அபுஅஃப்ஸர்

நன்றி அப்பாவி முரு!
குசும்பா! எனக்கு 19 வயசு தான் ஆவுது!

நன்றி விஜய் ஆனந்த்
எங்கே போயிட்டிங்க தல!

நன்றி பரிசல்காரன்
போட்டோ மாத்தனும்

நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்
அது நீங்க தான்னு வெளியே சொல்லையே

நன்றி வேந்தன்

நன்றி தீப்பெட்டி

நன்றி விக்னேஷ்வரன்

நன்றி நெல்லைதமிழ்

நன்றி வினோத்கெளதம்

நன்றி ச்சின்னபையன்

நன்றி நசரேயன்

நன்றி ஸ்ரீராம்

நன்றி கிரி

நன்றி சீனா

நன்றி Chill-Peer

நன்றி தமிழரசி!
நீங்க சொன்ன சரிதான்

நன்றி சுபாஷ்

நன்றி ஆதி

நன்றி வீணாபோனவன்
நீங்க எழுதுங்க அந்த தலைப்புல நல்லாயிருக்கு

நன்றி லோகு

நன்றி காயத்திரி
உங்களையெல்லாம் ப்ளாக் பக்கம் வரவழைக்க எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு!

நன்றி காடுவெட்டி

நன்றி இராகவன் நைஜிரியா

நன்றி ஊர்சுற்றி

நன்றி தமிழினி
ஏற்கனவே இணைச்சுட்டேன்னு நினைக்கிறேன்

நன்றி பட்டாம்பூச்சி

நன்றி shortfilmindia.com

கண்ணா நன்றி சொல்லிட்டேன்! மாலை புது பதிவும் போட்டு விடுகிறேன்!

NO said...

One more joker in the blog world with his truck load of half eaten, left over and putrid Korean meals.....First reaction is that the smell is unbearable. Should be fast diverted to the nearest pig sty where its needed for those poor creatures to get cured from Swine fever!

Thiru Vall Paiyyan Sir requires a more closer scrutiny to determine what he thinks he is.

At the face value, looks like one more of those ego bloated, all knowing, self proclaimed geniuses!!!

We shall see shortly..........

Thanks.

வால்பையன் said...

நோ அண்ணே என்ன சொல்றிங்கன்னே புரியல
ஆனா எதோ ஜோக்கர்ன்னு சொல்றது மட்டும் புரியுது!
என்னை சரியா புரிஞ்சிகிட்டதுக்கு நன்றி!

தமிழ் ப்ளாக் படிக்க தெரிஞ்ச நீங்கள் ஏன் தமிழில் பின்னூட்ட கூடாது!

கண்ணா.. said...

ok அண்ணா சமாதி விரதம் வாபஸ்....

waiting for next kummi

கண்ணா.. said...

நன்றிக்கு நன்றி..

NO said...

அன்பான திரு வால் பையன் அவர்களே,

வருகின்றேன் விரைவில், தமிழில், தங்கள் பொன்னான முட்டாள்தனத்தை விமர்சிக்க!

நன்றி சந்திப்போம் விரைவில்
நோ

வால்பையன் said...

//வருகின்றேன் விரைவில், தமிழில், தங்கள் பொன்னான முட்டாள்தனத்தை விமர்சிக்க!//

கேட்கவே காதுல தேன் வந்து பாயுது!

குசும்பன் said...

//கூடிய விரைவில் தலைக்கு டை அடிக்கும் எண்ணமும் உண்டாம்.

என்ன பண்ணாலும் வாலை மறைக்க முடியாதே//

அட கருமமே ஜிப் போடாமலா சென்னை வரை போனீங்க?

வால்பையன் said...

//குசும்பன் said...

//கூடிய விரைவில் தலைக்கு டை அடிக்கும் எண்ணமும் உண்டாம்.
என்ன பண்ணாலும் வாலை மறைக்க முடியாதே//
அட கருமமே ஜிப் போடாமலா சென்னை வரை போனீங்க?
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

நான் வால் பையனின் ரசிகராய் இருந்தாளும் கூட திரு.நோ அவர்கலின் ரசிகனும் கூட. திரு. நோ-வின் பதிவர்களின் மீதான உங்கல் விமர்சனங்கல் பள ஏற்கத்தக்கவையே. தொடறட்டும் உங்கல் பனி. அதிக பிரசங்கமாக எலுதும் பதிவர்கலை வலிக்கிர மாதிரி கொட்டுங்க ஆனா எங்க தள வாலை கொஞ்சம் பார்த்து உட்றுங்க. மத்தவங்க அலவுக்கு அன்னன் டேஞ்சர் கிடையாது.

சொள் அலகன்.

வால்பையன் said...

சொள் அலகன் அண்ணே!
நான் நோ அவர்களின் விமர்சனதை வரவேற்கிறேன். விமர்சனம் மட்டுமே நமது குறைகளை சுட்டிகாட்டும், நமது தவறுகளை திருத்தி கொள்ள உதவும்!

எனது எழுத்து மேம்பட வேண்டுமென ஆசைப்பட்டால் விமர்சனத்தை தாங்கி கொள்ளும் பக்குவமும் வேண்டும்!

நான் ரெடி!

NO said...

அன்பான நண்பர் திரு வால் அவர்களே,

பலர் இந்த ப்லோக் உலகில் தங்கள் மேன்மையான கருத்துகளை பதிவிட துடிகிறார்கள். தவறில்லை. ஆனால் 99% முட்டாள்தனமாக உள்ளது. சரி. அது அவர்கள் இஷ்டும். ஒப்புக்கொள்கிறேன். அனால், எப்பொழுது தங்கள் குப்பையை பொது மக்கள் முன் துப்புகிரர்களோ, பொது மக்களில் ஒருவனான எவரும் இந்த நோ உட்பட சும்மா இருக்கவேண்டும் என்று அவசியம் ஏதும் இல்லியே?

நீவிர் துப்பினால் நாங்களும் உங்களின் அசிங்கமான அல்லது முட்டாள்தனமான எழுத்துகளின்மீது ஏன் துப்பக்கூடாது?

அதிலும், முட்டாள்தனமானது மட்டும் என்றல் பரவாஇல்லை. பல அறிவிலிகள் அதிமேதவிதனமாக, அசிங்கமாக, பொய்யாக, சில்லறைத்தனமாக கொக்கரிக்கின்றனர். இந்த ஜென்மங்களுக்கு கொஞ்சமாக யாராவது திருப்பித்தர வேண்டாமா?

அதனால்தான், அடியேன் கொஞ்சும் முரட்டுதனமாக, மோசமாக பலரை விமர்சிக்க செய்கிறேன். எழுதுவதற்குமுன் ஒழுங்காக, உருப்புடியாக, நன்றாக, நிஜமாக, அழாமாக யாரும் எதையும் படிப்பதுஇல்லை பொலிருக்கு. வாய்க்கும் மனதுக்கும் எது வருவதோ அதை வாந்தி எடுக்கிறார்கள்.

நண்பர் திரு வால் அவர்கள் எப்படி என்று சில நாட்களில் சொல்கிறேன்.

விமர்சனத்துக்கு தயாராக இருக்கும் உங்கள் திறந்த மனதையும் பாராட்டுகிறேன். (நண்பர் திரு Lucky மற்றும் அழுக்கு வீரன் நண்பர் திரு அந்தோனி இரவி போன்று அல்லாது)

நன்றி

பீர் | Peer said...

திரு.நோ அவர்களை தமிழில் எழுத வைத்த தமிழ் வளர்த்த வால்மேதை அண்ணன் வால்பையன் அவர்கள் வாழ்க!!!

திரு.நோ அவர்களே, இதேபோல தமிழ் வலை அனைத்திலும் கொஞ்சும் தமிழிலேயே முரட்டுதனமாக பின்னூட்டமிட்டால் நல்லது.

NO said...

அன்பான மதுரைகார மச்சான் திரு பீர் அவர்களே,

ஒரு சிறு தயக்கம் நண்பரே. நீங்கள் இஸ்லாமியரா இல்லையா என்று எனக்கு தெரியாது. அனாலும் "Peer" என்றாலோ "Pir" என்றாலோ ஒரு சூபீ புனிதரை குறிப்பதாகும். தமிழில் எழுதுவது அதை "Beer" என்று தொனிப்பதுபோல் உள்ளது. அதலால் தங்களை சில் என்ற கூற விரும்புகிறேன்.

திரு சில் அவர்களே, உங்கள் சப்பாத்தி கடையை கூர்ந்து கவனித்து கிடைப்பதை சுவைக்க நேரமின்மையால், தங்களை விமர்சிக்க பிறிதொரு நேரம் ஒதுக்குகின்றேன்.

எனினும் கிடைத்த நேரத்தில் நீங்கள் ஏதோ மன அழுத்தத்தை பற்றி கொட்டியதை பார்க்க நேர்ந்தது. படித்ததும் வந்தது எனக்கு அது!

தங்கள் என்ன "Psychiatry" பயின்றவரா அல்லது மருத்துவம் தெரிந்தவரா?
அட்டகாசமாக எதோ அடித்து தள்ளி குதறி பிரட்டி உருட்டி பரப்பிவிட்டுரிக்கீர்?

ஆகா ஆகா என்னே உங்கள் கண்டுபிடிப்பு....

சுட்டதுதான் சுட்டீர்கள் நெட்டிலிருந்து, செரியாக செய்யகூடதோ? .

மதுரைகார நண்பரே, கதை விடும் அன்பரே
காபி அடித்தல் மட்டும் போதாது, அதை நன்றாக வடிக்கவும் வேண்டும்.

நண்பர் திரு சில் அவர்களே, சந்திப்போம் சில நாட்களில். கண்டிப்பேன் உங்கள் சொதப்பலை.

நன்றி

பீர் | Peer said...

'மதுரைகார மச்சான்' ஆஹா...கேட்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
திரு.நோ அவர்களே, பிரபல பதிவர்களுக்கு முரட்டுத்தனமாய் பின்னூட்டமிடும் வேலைகளுக்கு இடையில், நான் சுட்ட சப்பாத்தியையும் சுவைத்ததற்கு நன்றி. நான் ஒன்றும் எழுத்தாளன் இல்லை. எனக்கு இது ஒரு 'ஜஸ்ட் டைம் பாஸ்' அவ்வளவு தான். இருந்தாலும் ஜெய்ஹிந்துபுரம் வந்து என்னையும் கண்டிக்க இருக்கும் தங்களை வருக வருக என வரவேற்கிறேன்.

NO said...

நண்பர் திரு சில் அவர்களே,

மதுரையின் மைந்தன் மறவாமல் அழைகின்றீர், தட்ட முடியவில்லை.
எனினும், கறுப்பாடுகள் பல பல கண்டதை தின்று நல்லதை கொன்று பொல்லாததை பரப்புகின்றது!

அவைகளை முதலில் படித்து விட்டு, கொஞ்சம் படுத்திவிட்டு , பொய் முகமூடிகளை கிழித்துவிட்டு, முடிந்தால் புதைத்துவிட்டு பின் நேரமிருந்தால் கண்டிப்பாக வருகின்றேன்!

உண்மையாக சொன்னால், கொஞ்சம் சுவைத்தவரையில், உங்கள் சப்பாத்திகள் மிகவும் பழசாக போனதுபோல் தெரிகின்றது!

புரிகிறது, நீங்கள் Time pass ஆகத்தான் இப்படி உங்களையும் உங்கள் எழுத்துகளையும், அதை படிபவரயும் வருத்துகிரிர்கள் என்று.
அனாலும், open shop அக, blog அக போனதால் எல்லாரும் வரலாம் என்றானதால், விமர்சனங்களை தவிர்க்க முடியாது!

Hence the same scale will be applied to you and also to Thiru Lucky Look! (He happens to be a great short story writer it seems and the joke is there are some 50 jalras drooling to hear his great write ups. Hence I have this huge unfinished agenda with him and a few others, after which I shall see. By the way if you are interested how I am handling Mr. Lucky, look at his latest posting. I expect you to face the same )

மிக்க நன்றி நண்பரே.
நண்பர் திரு வால்பையன் தன்னுடிய ப்லோக் இப்படி யாரோ இருவருக்காக வீனடிக்கபடுகிறது என்று வருந்த வேண்டம். இத்துடன் முடிக்கிறேன்.

நன்றி திரு சில்

சந்திப்போம், சப்பாத்தி புறத்தில்!

Anonymous said...

நோ-வுக்கு நோ சொள்ளாத வால் மற்றும் சில்-க்கு வாழ்த்துக்கள்.

நள்ளாருக்கு விமர்சனம் !! நடத்துங்க !!

வெற்றுப் புகல்சிகளை விட்டு விடுங்கள் பதிவர்கலே!

சொள் அலகன்

ஜோதிஜி said...

பாரில் அமர்ந்திருக்கும்
என்னை நோக்கி வருகிறானொருவன்.
சீருடை இல்லையென்றாலும்
பார்மேனாய் இருப்பதற்கான
சாத்தியங்கள் நிறைய.
பேப்பர்களை கைகளில் மடித்திருந்தான்
தோள்கள் உயர்ந்திருக்கும் உடல்
மிக அருகில் வந்துவிட்டான்.
கைககள் பார்த்தேன்
பில்புக் இருந்தது.
வியந்தும் பயந்தும் எழுந்தேன்.
கையமர்த்தி அமரச்செய்தவனின்
கைகளில் காப்புகாய்த்த விரல்கள்.
30பாகையில் தலைசாய்த்துப் பார்த்தவனின்
உதடுகள் பிரிந்தன வார்த்தைகள் உதிர்ந்தன
“பில்லை கொடு,இல்லாட்டி நீ காலி”
சொல்லிச்சிரித்தவன் பில்பேப்பர்
ஒன்றை உருவிக்கொடுத்துவிட்டு
அருகில் இருக்கும் தூணில் சாய்ந்து
நின்று கொண்டான்
இன்னொருவனைப்போலவே.
இது கனவொன்றும் இல்லை,
கையிலிருக்கிறது பில்.
காலிபாட்டில்களும்,
காலி பிளேட்டுகளும்,
அடிகளும்
உதைகளும்

கவிராயரே எப்டிங்க இப்டி?

!

Blog Widget by LinkWithin