மதியம் வெள்ளி, செப்டம்பர் 19, 2008
ர்ரிவர்ஸபுல்(irreversable) ஒரு புதிய முயற்சி
மச்சி நான் போதையயுல இருக்கேன், ஒங் கையாண்ட நான் ஒரு கத சொல்லணும், அத்த ஏன் உங்கையில சொல்லனும்னு கேக்குறியா, ஏன்னா நாமெல்லாம் யூத்,
இதுவும் ஒரு யூத் கத தான், அப்பால ரொம்பா நா கழிச்சு நம்ம தோஸ்த பாத்தேன்,
வா மச்சி கொஞ்சம் உட்டுக்கலாம்னு கடைக்கு போனோம், எப்டிகீர மச்சின்னு கேட்டேன், நல்லா இருக்கானாம்பா, கல்யாணம் ஆகி ரெண்டு பசங்கலாம்.
அப்போ எல்லாத்துக்கும் வரட்டா!
சரி உடு மச்சி நடந்தது நடந்துடுச்சி, இந்த டாவுகளே இப்பிடித்தான், நீ பேஜாராகாதன்னு ஒரு சால்னா கடையாண்ட போனோம், ரெண்டு பெரும் குறைய குறைய குட்சோம், அவன் எங்கயோ வடக்கால போறேன்னு சொன்னான், எனக்கு மனசெல்லாம் கஷ்டமா போச்சுப்பா, என்ன பொயப்புடா இதுன்னு வந்துட்டேன். அதான் சகா நான் அவங்ககூட கட்சியா சரக்கடிச்சது
மெய்யாலுமே அந்த பொண்ணு சொல்லிருஜ்சுபா! பின்ன சும்மா அய்யனார் அருவா கணக்கா நுப்பது. ஒன் மன்னாரு கழுத்துல கீதுன்னா எந்த பொண்ணு தான் மிர்சலாகாம இருக்கும், அதான் ஜகா வாங்கிருச்சு, எனக்கோ மேட்டர் எதுவுமே தெரியாது.
அவனோ என்னை ஊரெல்லாம் தேடிகின்னு கீறான். கட்சியில புட்சிடான்பா, ஓஓஓஒன்னு ஒரே அழுவாச்சி.
இது தெரியாமல் என் நண்பன் அவருடன் தனியே சென்றிருக்கிறான், ஊருக்கே வெளியே இருக்குமே பஞ்சாபி ஹோட்டல் அங்கே முப்பது பேத்துக்கு நடுவுல நம்ம பையன்,
எல்லார் கையிலயும் அருவாளு, நம்ம ஆளும் நீ முடிஞ்சா வெட்டிக்கோன்னு சவால் விடுறான். சில பெரிய தலைங்கேல்லாம் கெஞ்சி பாத்துருக்காங்க, கடைசியா சொல்லிட்டான், அந்த பொண்ண சொல்ல சொல்லுங்க, நான் விட்டுடுறேன்
எனது நண்பர் ஒருவர், ஊருக்குள் பெரிய ரவுடி என்று சொல்லிக்கொண்டு திரிபவர், அவருடைய உதவியை நாடினேன், நான் என் நண்பனுக்கு செய்ய நினைத்தது உதவி தான். ஆனால் அதுவே அவனுக்கு பெரிய துரோகமாக மாறி விட்டது. நான் அறிமுக படுத்தின நண்பரும், அந்த பெண் வீட்டாரும் ஒரே சாதி. வந்தது அங்கே தான் வினை. பட்சி கட்சி மாறியது.
அரசனுக்கும், ஆண்டிக்கும் தான் பிரச்சனையில்லை நானும் இரண்டுமாக இருந்தேன், இதெற்கெல்லாம் வேட்டு வைத்தது அவனது காதல், இவன் கொடுத்த கடிதம் அவர்கள் வீட்டில் சிக்கி விட்டதாம், அவளை எங்கேயோ மறைத்து விட்டார்களாம் தேடி கண்டுபிடிக்கணுமாம், நாம தான் பழக்கத்துக்கு எத வேணும்னாலும் செய்வோமே. தேடினோம்.
இதுக்கு முன் அவன் என்னிடம் அவளை பற்றி பேசியதில்லை, ஒரு நாள் நான் அவன் வீட்டிக்கு செல்லும் பொழுது வழியில் அவளுடன் பேசி கொண்டிருப்பதை பார்த்தேன்.
நான்கு வருடமாக காதலிப்பதாக சொன்னான். பெண் வீட்டில் வசதி குறைவாக இருந்தாலும் சாதி பற்றுள்ளவர்கலாம்.
அவ்வளவு வசதிமிக்க பாருக்கு அதற்கு முன் நான் சென்றதில்லை,
நானும் இருக்கிறேன் என்று ஒளித்து கொண்டிருக்கும் ஒரு குண்டு பல்பின் கீழே அமர்ந்தோம், வசதியாக இருக்கிறானாம், சொந்த தொழிலாம், உனக்கும் வேலை தருகிறேன் என்றான், வாங்கி கொடுத்த பீருக்கு மண்டையையாவது ஆட்டனுமே ஆட்டி தொலைத்தேன்.
நீண்ட நாட்கள் கழித்து அவனை பார்கிறேன், கொஞ்சம் சதை போட்டிருக்கிறான் ,
பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொண்டான், பீரடிக்கும் போது நண்பர்களுடன் அவனையும் பார்த்திருக்கிறேன், பேசியிருப்பதாக கூட ஞாபகம், பரஸ்பர புன்னகை விசாரித்தல் முடிந்ததும். ஃபிரியா இருந்தா வா போகலாம் என்றான். அப்போதெல்லாம் யாருடா கூப்பிடுவான் என்று அலைந்து கொண்டிருந்ததால் கூடவே சென்றேன்.
பகுதிவாரியாக:
புனைவு
Subscribe to:
Post Comments (Atom)
46 வாங்கிகட்டி கொண்டது:
புரியும்னு நினைக்கிறேன்.
இல்லைனா எதுக்கும் கீழ் பாராவிலிருந்து மேல ஒவ்வொன்னா படிச்சு பாருங்க
ரொம்ம்ம்ம்ப அருமையா இருக்கு!!!!
நல்லா புரியுது!!!(எவ்ளோ நேரந்தான் நானும் தலைகீழா நி்க்குறது??? அவ்வ்வ்வ்வ்வ்...)
நல்லா சொல்றாங்கய்யா கத...
இத ஆரம்பத்துலயே சொல்லிருந்தா ஒரு ரவுண்டு அடிச்சிட்டு படிச்சிருப்பேன்...
நல்லாருங்க் சாமியோவ் :))
ராவாப் படிச்சாலும், மிக்ஸிங்கோட படிச்சாலும் சூப்பர்.
எங்கியோஓஓஓஓஓ போயிட்டீங்க.
என்னால் கீழிருந்து படிக்கும் போது தான் புரிந்து கொள்ள முடிந்தது... முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
நேரா படிச்சு பார்த்தேன்.. தலைகீழாவும் படிச்சி பார்த்தேன்..,அப்புறம் சரக்கடிச்சிட்டு வந்தும் படிச்சி பார்த்தேன்..... ஹூம்..... வாலூஊஊஊஊஊ..இது தேவையாஆஆஆஆஆஆ?(அடங்கவே மாட்டீங்களாப்பா?)போதையில ஊ அல்லாம் அதிகமாயிடிச்சீ கண்டுக்கபடாது)
//நல்லா புரியுது!!!(எவ்ளோ நேரந்தான் நானும் தலைகீழா நி்க்குறது??? அவ்வ்வ்வ்வ்வ்...)//
தலைகீழா எப்படி நிக்கமுடியும்??? தொங்கத்தானே முடியும்?.. வெவ்வ்வ்வ்வ் ;-)
முதல்ல படிச்சேன் புரியலை...
அப்புறம் திரும்ப பதிவோட தலைப்பில் இருந்து படிச்சப்பதான் இதை தலைகீழா படிக்கணும்னு புரிஞ்சிச்சு..:)
நல்லா இருக்கு...
:)
பா
ண்
ந
கு
க்
ரு
இ
லா
ல்
ந
தயவு கூர்ந்து அனைவரும் புதுகை பாணியில் பின்னூட்டவும்..
ம்மாகுக்டிபு குக்வுலூலூலூவா ன்தாசாச்டிப டிபப்இ
நீங்க விமர்சனம் எழுதினப்பவே நான் இதை முயற்சி செய்யலாம்னு நினைச்சேன்.. நல்லாயிருக்கு
//இத ஆரம்பத்துலயே சொல்லிருந்தா ஒரு ரவுண்டு அடிச்சிட்டு படிச்சிருப்பேன்...//
:)))
/// கும்க்கி said...
ம்மாகுக்டிபு குக்வுலூலூலூவா ன்தாசாச்டிப டிபப்இ///
ஏற்கனவே வால்பையன் பதிவுனா படித்தவுடனேயே புரிந்துவிடும். இப்படி போட்டதில் இன்னும் சூப்பரா புரியுது. கும்மிய மாதிரி ரெண்டு பேரு வந்தா போதும். ஒரு ஆப் அடிச்ச பீலிங் வந்துடும்.
//
ஏற்கனவே வால்பையன் பதிவுனா படித்தவுடனேயே புரிந்துவிடும். இப்படி போட்டதில் இன்னும் சூப்பரா புரியுது. கும்மிய மாதிரி ரெண்டு பேரு வந்தா போதும். ஒரு ஆப் அடிச்ச பீலிங் வந்துடும்.//
ரிப்பீட்டு! (ஜிம்ஷா, உங்க ப்ரொஃபைல் படம் ‘கும்'ஷா!)
முயற்சி திருவினையாகட்டும்!
Irreversible தாக்கத்திலிருந்து இன்னும் வெளி வரவில்லை போல! நல்லா இருக்கு.
அனுஜன்யா
//ரொம்ம்ம்ம்ப அருமையா இருக்கு!!!!
நல்லா புரியுது!!!(எவ்ளோ நேரந்தான் நானும் தலைகீழா நி்க்குறது??? அவ்வ்வ்வ்வ்வ்...)//
சூப்பரா ஒரு ரிப்பீட்டே!!!!!!!!!
மன்னிச்சுருங்க விஜய்
ரொம்ப வலிக்குதா!
விக்கி இது ஆரம்பம் தானே!
இன்னும் நிறைய புது புது முயற்சிகள் இருக்கு!
நிறைய ஸ்டாக் வாங்கி வச்சுகோங்க
சென்ஷி, வாழ்த்துரிங்க்களா,
திட்டுறிங்களா ஒன்னும் புரியல
வேலன் உங்களுக்கு பழக்கம் இல்லையே!
அப்புறம் எப்படி?
நன்றி தமிழ் பிரியன்!
அதை அப்படி தான் படிக்க வேண்டும்
வாங்க கும்க்கி
அடிச்ச போதையெல்லாம் இறங்கிருச்சா!
விடுங்க அடுத்த ரவுண்டு பார்த்துக்கலாம்
வருகைக்கு நன்றி வீணாப் போனவன்!
நீங்க வீம்புக்கு வீணா போனவரா இல்ல சும்மா தானா
நன்றி தமிழன்
ந
ன்
றி
அ
ப்
து
ல்
லா
கும்க்கி
ரொம்ப யோசிச்சா அடிச்சதெல்லாம் தெளிஞ்சுராது
வாங்க கார்க்கி
அந்த படத்தோட விமர்சனம் எழுதிய போதே
அய்யனாரையும்,ஜ்யோவ்ராம் சுந்தரையும் இதே போல் எழுத கேட்டிருந்தேன்.
வேலை பளு காரணமாக அவர்கள் தாமத படுத்தியதால் நானே!
அதனால் என்ன சம்பவங்கள் தான் முக்கியம் தாரளமாக எழுதுங்கள்
நன்றி தருமி சார்!
வெறும் ஸ்மைலி தானா
வாங்க ஜிம்ஷா
செலவில்லாம போதை ஏறுதேன்னு சந்தோஷ படுங்க!
வாங்க பரிசல்
வாழ்த்துக்களுக்கு நன்றி
வாங்க அனுஜன்யா!
அந்த பதிவு எழுதும் போதே இதே போல் ஒரு சம்பவத்தை எழுத வேண்டும் என்று நினைத்தேன், இப்போது நிறைவேறி விட்டது.
நன்றி ச்சின்னப்பையன்
அடுத்த பதிவு என்னுடைய நூறாவது பதிவு
அதற்கான வேளையில் இருக்கிறேன்.
உங்கள் ஆலோசனைகள் வரவேற்க படுகின்றன
/// வால்பையன் said...
அடுத்த பதிவு என்னுடைய நூறாவது பதிவு
அதற்கான வேளையில் இருக்கிறேன்.
உங்கள் ஆலோசனைகள் வரவேற்க படுகின்றன///
யோவ் வாலு. நானு மாதத்துக்கு நூறுக்கு மேலே பதிவு போட்டுகினு கீறேன். நீங்க என்னடானா அடுத்து நூறாவது பதிவுனு சொல்லுற. வெட்கமாயில்ல.
ஜோன்ச் , பொஹத் அச்ச கஹானி ஹய் . இஸ் கஹானி கே லியே அப்கோ ஹம் "மாமு"
கி கிதாப் (award) தெத்தே ஹய்.
தன்யவாத்
बालचंदर
வால்பையன் ஒண்டுமே விளங்கேல்ல ...போங்கோ.
டங் டங் டங் !!! தலைய மோதிக்கிற சத்தம் கேட்குதா!!!
கடைசியில் ஒரு டிஸ்கி போட்டு இருக்கலாமே...
கீழ் பாராவில் இருந்து படிக்கவேண்டும் என...
இருந்தாலும் நல்ல புது முயற்சி...என்ன அதிலும் தண்ணீ கதைதானா ???
குசும்பன் said...
டங் டங் டங் !!! தலைய மோதிக்கிற சத்தம் கேட்குதா!!!
இரண்டாகப் பிளந்து என் மீது சிதறி. அய்யய்யோ வெள்ளைச் சட்டையெல்லாம் கரை... மண்டையைச் சொன்னேன்.
அடிச்சா நூறு..,அதுதான் பேரு...,,
வாலூக்கு எப்பவும் ஜோரு....,
படிச்சி பாரு.., ரசிச்சா பேரு..,
குடிச்சி பாரு... மோரு..
நூறாவது பதிவுக்கு லக்கி மாதிரி பெரிய பதிவரை சிறப்பு பதிவு எழுதச் சொல்லுங்கள். மோகன் கந்தசாமி அப்படித்தான் சுந்தர் கிட்ட கவிதை எழுதி பதிவிட்டார். சண்டை சச்சரவும் முடிவுக்கு வரும்.
அனுஜன்யா
//ஜிம்ஷா said...
யோவ் வாலு. நானு மாதத்துக்கு நூறுக்கு மேலே பதிவு போட்டுகினு கீறேன். நீங்க என்னடானா அடுத்து நூறாவது பதிவுனு சொல்லுற. வெட்கமாயில்ல.//
உங்க அளவுக்கு சரக்கு வேணுமில்ல தலைவா,
மாசத்துல நாலுக்கே எனக்கு தாவு தீருது
//balachander said...
ஜோன்ச் , பொஹத் அச்ச கஹானி ஹய் . இஸ் கஹானி கே லியே அப்கோ ஹம் "மாமு"
கி கிதாப் (award) தெத்தே ஹய்.
தன்யவாத்
बालचंदर//
ஏதோ திட்டுரிங்கன்னு மட்டும் தெரியுது, ஆனா என்னான்னு தான் புரியல
//ஹேமா said...
வால்பையன் ஒண்டுமே விளங்கேல்ல ...போங்கோ.//
அப்படியெல்லாம் விட்டுட கூடாது,
என்ன தான் இருக்குன்னு திரும்ப ஒருக்கா படிச்சு பாக்கணும்
//குசும்பன் said...
டங் டங் டங் !!! தலைய மோதிக்கிற சத்தம் கேட்குதா!!!//
ஆச்சர்யமா இருக்கே உங்களுக்கு எப்பவும் மத்தவங்க மண்டய உடைக்கிறது தானே பழக்கம்
//கூடுதுறை said...
கடைசியில் ஒரு டிஸ்கி போட்டு இருக்கலாமே...
கீழ் பாராவில் இருந்து படிக்கவேண்டும் என...
இருந்தாலும் நல்ல புது முயற்சி...என்ன அதிலும் தண்ணீ கதைதானா ???//
உலகமே முக்காவாசி தண்ணியில தான் இருக்குது.
நாம தண்ணிய தொடலென்ன எப்படி
//கும்க்கி said...
அடிச்சா நூறு..,அதுதான் பேரு...,,
வாலூக்கு எப்பவும் ஜோரு....,
படிச்சி பாரு.., ரசிச்சா பேரு..,
குடிச்சி பாரு... மோரு..//
ரொம்ப நன்றி தலைவா
//அனுஜன்யா said...
நூறாவது பதிவுக்கு லக்கி மாதிரி பெரிய பதிவரை சிறப்பு பதிவு எழுதச் சொல்லுங்கள். மோகன் கந்தசாமி அப்படித்தான் சுந்தர் கிட்ட கவிதை எழுதி பதிவிட்டார். சண்டை சச்சரவும் முடிவுக்கு வரும்.
அனுஜன்யா//
நானும் அப்படி தான் நினைத்தேன், ஒருவேளை அதுவே என் கடைசி பதிவாகவும் ஆககூடுமாதலால் நானே எழுதி விட்டேன்
இருக்கு ரொம்ப நல்லா வாலுச்சாமி. எழ்த்ங்க இப்டியே
இழ்த்து தான் இல்கிய்யிய்யம். புர்ஞ்சுதா? நாமழ்ல்லேம் யூத், பாருல போயி சரக்கு ஊத்து.
ஏம்பா வாலு - இது வேறயா - நல்ல வேளை கடைசிப் பாராவிலேந்து படிக்கச் சொன்னே - கடசி எழுத்துன்னு சொன்னீண்ணு வைச்சிக்க - கோட்ட்ரலாம் பத்தாது - படிச்சி பிரிஞ்சி - உன் கிட்டே வந்து பேசி அவனுக்குப் பொறந்த ரெண்டு பசங்களும்ம் நல்லா இருக்கானுங்களா -
சோசப்பு - ய்யூத்துன்னா பார்லே போயி ஊத்திக்கணுமா
Post a Comment