எனக்கு நேர்த்தியாக சினிமா விமர்சனம் சொல்ல வராது!
ஏற்கனவே இந்த படத்தை பற்றி சித்தார்த் அவர்கள் நேர்த்தியாக விமர்சித்ரிப்பதால் அதனுடைய லிங்கையும் இங்கே தருகிறேன். அதில் விடுபட்டவைகளை எங்கே என் பங்கிற்கு சொல்லி விடுகிறேன், சிலவற்றை அங்கிருந்து எடுத்திருப்பதால் அவருக்கு நன்றியையும் இங்கே தெரிவித்து கொள்கிறேன்.
மோனிகாவை உங்களுக்கு தெரியுமா? மேட்ரிக்ஸ் இரண்டாம் பாகத்தில் நடித்திருப்பார்.
ஹாலிவுட் நடிகைகளில் என்னை கவர்தவர்களுள் இவரும் ஒருவர். இவருக்காக தான் இந்த படத்தை பார்க்கவே அமர்ந்தேன், ஆனால் வித்தியாசமான திரைக்கதையில் இயக்குனர் மனதை ஆக்கிரமித்து விட்டார்.

பின்நவீனம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு மரபுகளை கட்டுடைத்தல் என்ற பொதுவான பதில் வரும், புரியாமல் விழிப்பவர்களுக்கு இந்த படத்தை உதாரணமாக சொல்லலாம்.
சரி! மரபு எது? அதை எவ்வாறு அடையாளம் காணுவது?
சுலபமான பதில் இயல்பே மரபு!
எது மரபை கட்டுடைத்தல்?
இயல்பை மீறுவதே மரபை கட்டுடைத்தல்.
இதுவரைக்கும் படத்தை பற்றி எதுவுமே சொல்லலையோ!
இந்த படத்தில் அப்படி என்ன இருக்கிறது?
படத்தின் ஆரம்ப காட்சியே கதையின் இறுதி காட்சி!
லாஜிக்குடன் ஒன்றி படத்துடன் கலந்து மூளைசலவையாகி வெளிவரும் வேலையெல்லாம் இங்கே கிடையாது, கலைத்து போட்ட சீட்டுகட்டிலிருந்து ஒவொன்றாக எடுத்து உங்கள் கண்முன் காட்டி பத்து சீட்டு காட்டிய பின் முதலில் என்ன காட்டினேன். என்று கேட்கும் விளையாட்டு போல் ஆரம்பம் முதல் இறுதி வரை எல்லா காட்சிகளையும் உங்கள் மூளையில் சேமித்து வைக்கவேண்டிய கட்டாயம் இங்கே இருக்கிறது,
மறந்து விட்டீர்களேயானால்! எந்த லூசு பையன்டா படம் எடுத்தது என்பீர்கள்?

என் வேலையை குறைக்க சித்தார்த் வலையிலிருந்து சில, வண்ணம் மாறியிருப்பது அவரிடம் விடுபட்டு என்னால் எழுதப்பட்டவை.
காட்சி 1: மார்க்கஸும் பியேரியும் போலீஸால் ஒரு இரவு விடுதியிலிருந்து கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றனர்.
காட்சி 2: மார்க்கஸும் பியேரியும் இரவு விடுதியில் டெனியா என்ற ஒருவனை கொடூரமாக கொல்கின்றனர்.
மேலே சொன்ன காட்சிக்கு முன் ஒரு டாக்சியில் அவர்கள் அந்த இரவு விடுதியை தெருத்தெருவாக தேடுவார்கள். டாக்சியில் மார்க்கஸும் பியேரியும் மட்டுமே இருப்பார்கள், ட்ரைவர்கள் வேறு யாரும் இருக்கமாட்டார்கள்.
மார்க்கஸும் பியேரியும் ஒரு இரவு விடுதியின் பெயரை சொல்லி அங்கே போகும் படி ட்ரைவரை விரட்டுகிறார்கள், ட்ரைவர் இடம் தெரியாது என்று சொல்ல, கோபத்தில் ட்ரைவரை அடித்து போட்டு அந்த டாக்சியை எடுத்து சொல்வார்கள்.
இரண்டு நண்பர்களின் உதவியுடன் தெருத்தெருவாக இருக்கும் விபச்சாரிகளிடம் எல்லாம் ஒரு பெயரை சொல்லி கேட்டு, அவனை தெரியுமா என்று கேட்பார்கள், கடைசியாக ஒரு பெண் அவனை டெனியா என்று கேட்டால் தான் தெரியும், என்றும் அவனை ஒரு குறிப்பிட்ட இரவு விடுதியில் பார்க்கலாம் என்பாள்.
காவலர்களின் விசாரணை முடிந்து பியேர்ஸ் வெளியே வருவான். ஏற்கனே விசாரணை முடிந்த மார்க்கஸ் சோகத்துடன் வெளியே நின்று கொண்டிருப்பான். இரண்டு பேர் அவனிடம் வந்து, அவனை எங்களுக்கு தெரியும் அவனை என் நண்பன் பார்த்திருக்கிறான் என்பான்..
காட்சி 3: அலெக்ஸ் என்ற பெண் டெனியாவால் ஒரு சுரங்கப்பாதையில் வைத்து கற்பழிக்கப்படுகிறாள்.
(அப்போது பின்னாலிருந்து ஒருவன் பார்த்து விட்டு ஓடுவான்)
காட்சி 4: மார்க்கஸும், அவனது காதலியான அலெக்ஸும் இவளது நண்பனான பியரியும் ஒரு பார்ட்டிக்கு செல்கின்றனர். அங்கிருந்து அலெக்ஸ் மட்டும் தனியாக சுரங்கப்பாதை வழியாக செல்கிறாள்.
காட்சி 5: காலை. விடிந்ததும் மாலை பார்ட்டிக்கு தேவையான எதையோ வாங்கி வர மார்க்கஸை வெளியே அனுப்புகிறாள் அலெக்ஸ். அவன் சென்றவுடன் சோதனை செய்து பார்க்கிறாள்.தான் கர்பமாக இருப்பது தெரியவர, பகல் கனவில் மிதக்கிறாள். பச்சைப்புல்வெளி. ஆங்காங்கே தண்ணீர்ரை பீச்சி அடிக்கும் குழாய். விளையாடும் குழந்தைகள் என ரம்மியமான ஓர் பூங்காவில் நிறைமாத கர்பிணியான அலெக்ஸ் கண்களை மூடியபடி ஏகாந்தமாய் படுத்திருக்கிறாள்.
மீண்டும் நான்.
படத்தில் நேர்த்தியான எடிடிங் முக்கிய பங்கு, ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் கட் எல்லாத ஷாட் பயன்படுத்த படுகிறது, அப்படி காட்சி கட் ஆனால் அதன் முந்தய காட்சிக்கு போகிறோம் என்று அர்த்தம். இது ஒரு வித்தியாசமான திரைக்கதை வடிவம்,
ஏற்கனவே ஒழுங்காக எடுத்த படத்தை பத்து துண்டுகளாக ஒட்டி மேலிருந்து கீழாக ஒட்டியிருப்பார்களோ என்று எண்ண தோன்றும், எது எப்படியோ இது ஒரு வித்தியாசமான முயற்சி
இந்த பாணியில் புனைவுகள் எழுதினால் ரசிக்கதக்கவாறு இருக்கும்.
இந்த பாணியில் புனைவுகள் உருவாக்க அய்யனார் மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களை அன்போடு கேட்டுகொள்கிறேன்,
இல்லையென்றால் நானே எழுதி எல்லோரையும் கொடுமைப் படுத்த வேண்டியிருக்கும்