உலகசினிமாவும் ,தமிழ்சினிமாவும்-கிட்டப்பார்வைக்கும், தூரப்பார்வைக்கும் இடையில்


போனவாரம் "வேர்ல்டு மூவீஸ்" சேனலில் ஒரு வேற்று மொழி படம் பார்த்தேன்,
அதை உலகசினிமா என்று சொல்வதை விட வேற்று மொழிப்படம் என்றே சொல்ல ஆசைப்படுகிறேன். ஏனென்றால் வேற்று மொழிக்காரர்களுக்கு நமது படம் உலகசினிமா தானே.

அந்த படத்தின் பெயர் longest penalty in the world ஸ்பெயின் நாட்டை சேர்ந்த படம்.
அம்மாதிரியான ஐரோப்பிய நாடுகளில் கால்ப்பந்தாட்டம் வெகுவான பிரசித்தம் என்று அனைவரும் அறிந்ததே. அதை மையமாக கொண்டே அந்த படம். அப்படத்தை பற்றி மட்டுமே சொல்வேது அவ்வளவு சுவாரிசியம் இல்லை என்பதால், அதை போன்று தமிழில் எடுத்த சென்னை 600028 என்ற படத்துடன் ஒப்பிட்டு எழுதுவது கொஞ்சம் அதிக விசயங்களை அலசுவதற்கு எதுவாக இருக்கும்.



எந்த மொழி படமாக இருந்தாலும் அதன் வெற்றிக்கு சிறந்த திரைக்கதை முக்கியமானது, இந்த இரண்டு படத்திலும் அது நன்றாகவே இருந்தது.வேற்று மொழி படத்தில் கால்பந்தை மையமாக வைத்து எடுத்திருந்தது போல் தமிழ் படத்தில் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுத்திருந்தனர்.

தமிழ்ப்படங்களை வேற்று மொழிப்படங்களுடன் ஒப்பிடும் பொது வெகு சுலபமான ஒரு வார்த்தை நமக்கு பயன்படுகிறது, வேற்றுமொழி படங்கள் திரைப்படங்களாகவும், தமிழ் படங்கள் மசாலா படங்களாகவும் வெளி வருகிறது, தமிழ் பற்றுள்ளவன் மசாலா இல்லாத படங்கள் வேற்று மொழிக்காரர்களுக்கு எடுக்க தெரியவில்லை என்று குறை சொல்லலாம், திரைப்பட பற்றுள்ளவர்கள் மசாலா இல்லாத படங்கள் இவர்களுக்கு எடுக்க தெரியவில்லை என்று குறைப்பட்டு கொள்ளலாம், இரண்டுக்கும் தமிழ்நாட்டில் ஆளுண்டு என்பது நிதர்சன உண்மை.


திரைப்படங்களில் தேவையில்லாத கதாப்பாத்திரங்களின் ஆளுமை என்றுமே சலிப்பை தான் தரும், வேற்று மொழி படங்களில் அந்த தவறை அவர்கள் செய்வதில்லை,
விளையாட சொல்லித்தரும் கோச், விளையாட்டு வீரர்கள், அவர்களின் மனைவி, தங்கைகள், அவர்களும் கூட தனித்தனியாக இல்லாமல் ஒருவரின் தங்கை மற்றொரு வீரனின் மனைவியாக காட்டியிருப்பது கதைக்குள் தேவையில்லாத உரையாடல்களை குறைப்பதற்கு உதவியாக இருக்கிறது.

அங்கேயும் காதல் உண்டு, தமிழ் சினிமாவை போல் காதல் முழுப்படத்தை ஆக்கிரமிப்பதில்லை, ஒரு வீரனின் காதலியான கோச்சின் மகளை ஹீரோவும் காதலிப்பது இங்கே கொச்சையாக பார்க்கப்படலாம். அங்கே நகைசுவையாக சொல்லப்பட்டுள்ளது, ஒரு பெண் தன் காதலனை தேர்ந்தெடுக்க முழு உரிமை உண்டு என்று போகிற போக்கில் துண்டு சீட்டு வீசுவதை போல் காட்டியிருக்கிறார்கள்.

ஒரு ஆண் தினம் ஒரு பெண்ணுடன் சுற்றினால் அவன் மச்சக்காரன்.
அதே ஒரு பெண் நேற்று ஒரு ஆணுடனும் இன்று ஒரு ஆணுடனும் வந்தால் அவளுக்கு நிறைய பெயர் உண்டு. உதாரணமாக "காயின் பாக்ஸ்" "சேர் ஆட்டோ" "மினி பஸ்" போன்று. ஆணுக்கு மட்டும் ஏன் வேறு பெயர்கள் இல்லை என்று தெரியவில்லை.




பாடல்கள் போல் ஒரு அபலக்கூத்தை சினிமாவில் என்னால் ஜீரணிக்க முடியவில்லை, பின்னணி இசை காட்சிக்கு வலு சேர்ப்பது போல் பின்னணியில் பாடப்படும் பாடல்கள் வேண்டுமானால் வலு சேர்க்கலாம், நொடிக்கொருமுறை துணிகளை மாற்றி கண்டம் விட்டு கண்டம் தாண்டி ஆடும் டூயட், கழிவறையில் அசிங்க படம் வரையும் மனநோயாளிகளை போன்று டைரக்டர்களை பார்க்க தோன்றுகிறது.

தமிழ் சினிமாவில் காதல் இல்லாமல் படம் எடுக்க சொன்னால், பாவம் எல்லோரும் வீட்டுக்கு போய் வேறு வேலை பார்க்க வேண்டியது தான். காதலியிடம் காதலன் நீ இல்லாவிட்டால் செத்து போய் விடுவேன் என்று சொல்லும் பொது எனக்கு வாந்தி வருவது போல் உணர்வு ஏற்படுகிறது, தமிழ் படங்களை போல் காதல் என்ற சமுதாய முக்கிய தேவையை!? மக்களுக்கு எடுத்து சொன்ன ஊடகம் வேறெதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

அவைகளை நீக்கி விட்டு பார்த்தால் சென்னை 600028 உலகசினிமாக்களுக்கு நிகரான ஒரு திரைக்கதை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஸ்பெயின் படத்தோட காப்பின்னு சிம்பிளா சொல்றத விட்டுட்டு எதுக்கு எவ்வளவு பெரிய பதிவுன்னு கேக்கறவங்களுக்கு இது அத பத்தி இல்ல, சினிமாவில் காதல் என்ற கண்றாவியை பற்றி.

39 வாங்கிகட்டி கொண்டது:

Anonymous said...

kalakkal climax!

சின்னப் பையன் said...

எனக்கு கிட்டப்பார்வையும் இல்லை, தூரப்பார்வையும் இல்லை - அதாவது நீங்க சொன்ன ரெண்டு படங்களையும் நான் பார்க்கலைன்னு அர்த்தம்.

சின்னப் பையன் said...

அடடா, இத்தனை நாளா அந்த படத்தை எங்கே பார்த்து காப்பியடிச்சாங்கன்னு சொல்லாமெ வச்சிருந்தாங்க.. அதை கண்டுபிடிச்சிட்டீங்களா?

சின்னப் பையன் said...

//அதிக விசயங்களை அலசுவதற்கு எதுவாக இருக்கும்//
எதுவாக இருக்கும்னா என்னங்க... ஜாலியாக இருக்கும்....:-)))

thamizhparavai said...

நல்ல அலசல்.. இன்னும் ஸ்பெயின் படம்(பெனால்டி) பார்க்கவில்லை.
இருந்தாலும் சொல்கிறேன். சென்னை 28 திரைக்கதை,காட்சி அமைப்பு தமிழ் மக்களுக்கேற்றவாறு வேகம் கூடிய விவேகத்துடன் இருந்தது.
இதில் காதல் முதன்மைப்படுத்தப் படவில்லை.அதுவும் கதையின் போக்கில் நகைச்சுவை இழையோடவே இருந்தது.தற்போது வீதிக்கு,வீதி பள்ளி மாணவ மாணவிகளின் காதல் அதிகரித்துவிட்டது.(இதற்கு பாரதிராஜா 80 களிலேயே விதை போட்டுட்டார்)
காதல் மட்டும் படமில்லை.. ஆனால் காதலில்லாமலும் படம் இல்லை.ஏதோ தோணுச்சு சொன்னேன்..

மங்களூர் சிவா said...

/
தமிழ் பற்றுள்ளவன் மசாலா இல்லாத படங்கள் வேற்று மொழிக்காரர்களுக்கு எடுக்க தெரியவில்லை என்று குறை சொல்லலாம், திரைப்பட பற்றுள்ளவர்கள் மசாலா இல்லாத படங்கள் இவர்களுக்கு எடுக்க தெரியவில்லை என்று குறைப்பட்டு கொள்ளலாம்
/

இங்கன கொஞ்சம் திருத்தம் தேவைப்படுதுன்னு நான் நினைக்கிறேன் நீங்க என்ன நினைக்கிறீங்க!!

நிதானமா (இருக்கும்போது) பதிவெழுதுங்க!!

:)))))))))))))))))))))))

மங்களூர் சிவா said...

/

ஒரு ஆண் தினம் ஒரு பெண்ணுடன் சுற்றினால் அவன் மச்சக்காரன்.
அதே ஒரு பெண் நேற்று ஒரு ஆணுடனும் இன்று ஒரு ஆணுடனும் வந்தால் அவளுக்கு நிறைய பெயர் உண்டு. உதாரணமாக "காயின் பாக்ஸ்" "சேர் ஆட்டோ" "மினி பஸ்" போன்று. ஆணுக்கு மட்டும் ஏன் வேறு பெயர்கள் இல்லை என்று தெரியவில்லை.
/

உங்கள் ஆசைப்படி இனிமேல் மச்சக்காரி என்றே அழைச்சிட்டு போவோம் என்ன குறைஞ்சிட போகுது

:)))))))))))))))))

மங்களூர் சிவா said...

/
காதலியிடம் காதலன் நீ இல்லாவிட்டால் செத்து போய் விடுவேன் என்று சொல்லும் பொது எனக்கு வாந்தி வருவது போல் உணர்வு ஏற்படுகிறத
/

:)))))))))))))


மப்பு அதிகமாகிடுச்சா இல்ல சரக்கு சரியில்லாதப்ப அந்த டயலாக் உங்க காதுல விழுந்திடுச்சோ!?!?!?

மங்களூர் சிவா said...

/
இது அத பத்தி இல்ல, சினிமாவில் காதல் என்ற கண்றாவியை பற்றி.
/

"கோடம்பாக்கத்துக்கு சங்கு" அப்படின்னும் தலைப்பு வைக்கலாம் இந்த பதிவுக்கு!!

:))))

Athisha said...

ஏனுங்க உங்க வீட்ல RCV? or SCV?

இப்படிலாம் சேனல் வருதா??

மங்களூர் சிவா said...

RCV / SCV எல்லாம் இல்ல இது சன் டிடிஎச் கரெக்ட்டா வாலு!?!?

ஏன்னா எனக்கும் இந்த சானல் வருது!!

:))))

வெண்பூ said...

// தமிழ் பற்றுள்ளவன் மசாலா இல்லாத படங்கள் வேற்று மொழிக்காரர்களுக்கு எடுக்க தெரியவில்லை என்று குறை சொல்லலாம், திரைப்பட பற்றுள்ளவர்கள் மசாலா இல்லாத படங்கள் இவர்களுக்கு எடுக்க தெரியவில்லை என்று குறைப்பட்டு கொள்ளலாம், இரண்டுக்கும் தமிழ்நாட்டில் ஆளுண்டு என்பது நிதர்சன உண்மை.//

பதிவை படிச்சப்புறம் நீங்க 2வது வகைன்னு எனக்கு தெரிஞ்சு போச்சுங்கோவ்....

வெண்பூ said...

// ஏனுங்க உங்க வீட்ல RCV? or SCV?

இப்படிலாம் சேனல் வருதா??//

RCVல சன் டி.வி. வராது. SCVல கலைஞர் டி.வி. வராது. நம்ம வாலு ஏதோ இங்கிலீஷ் சேனல்தான பாக்குறாரு, அதல்லாம் எல்லா கனெக்சனிலும் வரும்

முரளிகண்ணன் said...

நல்ல பெண்ணிய சிந்தனை

கூடுதுறை said...

இதை இதை இதைத்தான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் வருவேன் என்பதா??

அற்புதமான பதிவு!

//தமிழ் சினிமாவில் காதல் இல்லாமல் படம் எடுக்க சொன்னால், பாவம் எல்லோரும் வீட்டுக்கு போய் வேறு வேலை பார்க்க வேண்டியது தான். காதலியிடம் காதலன் நீ இல்லாவிட்டால் செத்து போய் விடுவேன் என்று சொல்லும் பொது எனக்கு வாந்தி வருவது போல் உணர்வு ஏற்படுகிறது, தமிழ் படங்களை போல் காதல் என்ற சமுதாய முக்கிய தேவையை!//

இந்த கருத்தை நான் மிக மிக ஆதரிக்கிறேன். ஏன் தான் இந்த சினிமாக்காரர்கள் காதலை கட்டிக்கொண்டு அழுகிறார்களோ தெரியவில்லை...

இத்தனைக்கும் காதலை தொடாத படங்கள் நல்ல வெற்றி பெற்று இருந்த போதும் இது இல்லாமல் படம் எடுப்பதில்லை..

//பாடல்கள் போல் ஒரு அபலக்கூத்தை சினிமாவில் என்னால் ஜீரணிக்க முடியவில்லை,///

இது ஒரு மோசமான கூத்துதான். 50 வருடங்களுக்கு முன்பு 30 பாடல்களோடு படம் எடுத்தார்கள் என்றால் அப்போது பாடல்களோடு கூடிய நாட்டு தெருக்கூத்துகளோடு போட்டி போடவேண்டியிருந்தது... இப்போது...

ஆடியோ மார்க்கேட் ஒன்று உள்ளதே அதில் காசு பார்க்கவேண்டும் அல்லவா...அதற்குத்தான் ஹீரோ காடையாம்பட்டியில் மாடு மேய்த்தாலும் கனடாவிற்கு போய் குத்துப்பாட்டு போடுவது..

போதுமா பதிவு சம்பந்தமான பின்னுட்டம்...

வால்பையன் said...

//Anonymous said...
kalakkal climax!//

மிக்க நன்றி அனானி
கருத்தை கச்சிதமாக பற்றி கொண்டீர்கள்

வால்பையன்

வால்பையன் said...

//ச்சின்னப் பையன் said...
எனக்கு கிட்டப்பார்வையும் இல்லை, தூரப்பார்வையும் இல்லை - அதாவது நீங்க சொன்ன ரெண்டு படங்களையும் நான் பார்க்கலைன்னு அர்த்தம்.//

வாரணம் ஆயிரம் கதையை டைரக்டர் கெளதம் முதலில் டாக்டர்!?.விஜய்க்கு சொன்னாராம், கதை நன்றாக இருக்கிறது என்ற சொன்ன விஜய் , சிவகாசி, திருப்பாச்சி சி.டி.க்களை கொடுத்து இதை போல் பண்ணுங்கள் என்றாராம்,

பிறகு எப்படி தமிழ் சினிமா உருப்படும்,
நடிகர்கள் மாறும் வரை தமிழ் சினிமா கதை "காப்பி பேஸ்ட்" தான்

வால்பையன்

வால்பையன் said...

// ச்சின்னப் பையன் said...
எனக்கு கிட்டப்பார்வையும் இல்லை, தூரப்பார்வையும் இல்லை - அதாவது நீங்க சொன்ன ரெண்டு படங்களையும் நான் பார்க்கலைன்னு அர்த்தம்.//

சென்னை 600028 நல்ல படம் தான், நண்பர்கள் பேசிக்கொள்ளும் வசனம் எல்லாமே மிகுந்த நகைசுவையாக இருக்கும், தட்டு கிடைக்காமலா போகும்,
"எதையும் ஒரு முறை"

வால்பையன்

வால்பையன் said...

//ச்சின்னப் பையன் said...
//அதிக விசயங்களை அலசுவதற்கு எதுவாக இருக்கும்//
எதுவாக இருக்கும்னா என்னங்க... ஜாலியாக இருக்கும்....:-)))//

நீங்க அசாட்டா தினம் ஒரு பதிவு போடறிங்க,
எனக்கு டவுசர் அவுராத குறை தான்

வால்பையன்

வால்பையன் said...

சென்னை 600028 நல்ல நகைசுவை படம் தான்.இல்லையென்று சொல்லவில்லை,
அதற்காக மற்ற விசயங்களை ஏற்று கொண்டு தான் ஆகவேண்டுமா

//வீதிக்கு,வீதி பள்ளி மாணவ மாணவிகளின் காதல் அதிகரித்துவிட்டது.//

படிக்காததால் ஏற்படும் அவலங்களையும்,படிப்பதால் ஏற்படும் நமைகளையும் படத்தில் காட்டினால் ஜெயிலில் போட்டு விடுவார்களா என்ன?

//காதல் மட்டும் படமில்லை.. ஆனால் காதலில்லாமலும் படம் இல்லை.ஏதோ தோணுச்சு சொன்னேன்..//

நீங்கள் வாழ்க்கை முழுவதும் காதலித்து கொண்டே தான் இருப்பேன் என்று சொன்னால்
மேலே சொன்னதையும் ஒத்து கொள்கிறேன்.

வருகைக்கு நன்றி தமிழ் பறவை


வால்பையன்

வால்பையன் said...

//இங்கன கொஞ்சம் திருத்தம் தேவைப்படுதுன்னு நான் நினைக்கிறேன் நீங்க என்ன நினைக்கிறீங்க!!
நிதானமா (இருக்கும்போது) பதிவெழுதுங்க!!//

திரைப்பட பற்றுள்ளவர்கள், மசாலா இல்லாத படங்கள் இவர்களுக்கு (தமிழ் இயக்குனர்களுக்கு) எடுக்க தெரியவில்லை என்று குறைப்பட்டு கொள்ளலாம்

இப்போ சரியா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.
அப்புறம் நான் முழுநேர குடிகாரன் இல்லை
விடுமுறை நாட்களில் மட்டும்.

குடித்து விட்டு பதிவு எழுதினால் உங்களால் சத்தியமாக படிக்க முடியாது

வால்பையன்

வால்பையன் said...

//மங்களூர் சிவா said...
உங்கள் ஆசைப்படி இனிமேல் மச்சக்காரி என்றே அழைச்சிட்டு போவோம் என்ன குறைஞ்சிட போகுது//

மேலை நாட்டில் ஒருவன் பெண் நண்பிகளே இல்லாமல் இருந்தானாம், அவனது பெற்றோர்களுக்கு ரொம்ப சந்தோசம் இதனால், ஆனால்தினம் ஒரு நண்பனை வீட்டிற்கு அழைத்து வருவானாம்,

ரொம்ப நாளைக்கு பிறகு அவனுக்கு திருமணம் செய்தது வைக்கலாம் என்று பெற்றோர்கள் நினைத்தார்களாம், அப்போது தான் தெரிந்திருக்கிறது அவன் ஒரு ஓரின பிரியன் என்று.

அவனுக்கும் ஏதாவது பெயர் அப்படியே

:))

வால்பையன்

வால்பையன் said...

//மங்களூர் சிவா said...
மப்பு அதிகமாகிடுச்சா இல்ல சரக்கு சரியில்லாதப்ப அந்த டயலாக் உங்க காதுல //விழுந்திடுச்சோ!?!?!?//

குறைவாக சரக்கு ஊற்றி நிறைய தண்ணீர் ஊற்றி,
அதையும் ஜென் டீ தியானம் போல் மெதுவாக சப்பி சப்பி குடிப்பதால்
எனக்கு குடிக்கும் பொது வாந்தி வராது (எவ்வளவு குடித்தாலும்)

வால்பையன்

வால்பையன் said...

//மங்களூர் சிவா said...
/
இது அத பத்தி இல்ல, சினிமாவில் காதல் என்ற கண்றாவியை பற்றி.
/
"கோடம்பாக்கத்துக்கு சங்கு" அப்படின்னும் தலைப்பு வைக்கலாம் இந்த பதிவுக்கு!!//


"செவிடன் காதுல ஊதின சங்கு" பொருத்தமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்

வால்பையன்

வால்பையன் said...

//அதிஷா said...
ஏனுங்க உங்க வீட்ல RCV? or SCV?
இப்படிலாம் சேனல் வருதா??
மங்களூர் சிவா said...
RCV / SCV எல்லாம் இல்ல இது சன் டிடிஎச் கரெக்ட்டா வாலு!?!?
ஏன்னா எனக்கும் இந்த சானல் வருது!!//

எனக்கு தெரியாது நண்பா, நான் லோக்கல் ஆபரேட்டரிடம் கனைஷன் வாங்கி பார்க்கிறேன் .ஆனால் ஒரு சேனல் புதிதாக வந்தால் ஏதாவது பழைய சேனல் காணாமல் போய்விடும்

வால்பையன்

வால்பையன் said...

///வெண்பூ said...
// தமிழ் பற்றுள்ளவன் மசாலா இல்லாத படங்கள் வேற்று மொழிக்காரர்களுக்கு எடுக்க தெரியவில்லை என்று குறை சொல்லலாம், திரைப்பட பற்றுள்ளவர்கள் மசாலா இல்லாத படங்கள் இவர்களுக்கு எடுக்க தெரியவில்லை என்று குறைப்பட்டு கொள்ளலாம், இரண்டுக்கும் தமிழ்நாட்டில் ஆளுண்டு என்பது நிதர்சன உண்மை.//

பதிவை படிச்சப்புறம் நீங்க 2வது வகைன்னு எனக்கு தெரிஞ்சு போச்சுங்கோவ்....///

ஆங்கில படங்கள் மட்டுமே பார்க்கும் பீட்டர் இல்லை நண்பா நான்.
இரவில் தூக்கம் வராததால் சேனல்களை மாற்றி மாற்றி பார்ப்பது எனது வழக்கம்.
சப் டைட்டிலுடன் வருவதால் ஆங்கில அறிவை வளர்த்து கொள்ள இந்த சேனல் பார்க்கிறேன்

வால்பையன்

வால்பையன் said...

//வெண்பூ said...
RCVல சன் டி.வி. வராது. SCVல கலைஞர் டி.வி. வராது. நம்ம வாலு ஏதோ இங்கிலீஷ் சேனல்தான பாக்குறாரு, அதல்லாம் எல்லா கனெக்சனிலும் வரும்//

சரியா சொன்னிங்க வெண்பூ

வால்பையன்

வால்பையன் said...

//முரளிகண்ணன் said...
நல்ல பெண்ணிய சிந்தனை//

மிக்க நன்றி நண்பரே!

வால்பையன்

வால்பையன் said...

//கூடுதுறை said...
போதுமா பதிவு சம்பந்தமான பின்னுட்டம்...//

நீங்க எப்போதும் சம்பந்தம் இல்லாத பின்னூட்டம் போடமாட்டீர்கள்

நான் குறிப்பிட்டது வேறு சிலரை, அவர்கள் பின்னூட்டங்களை நான் வெளியிடுவது இல்லை,

அந்த கம்முனாட்டி இன்னும் என்னை தொந்தரவு செய்து கொண்டு தான் இருக்கிறது.
மற்றபடி மொக்கைகளுக்கு நான் என்றுமே ரசிகன் தானே

வால்பையன்

g said...

/// ச்சின்னப் பையன் said...
அடடா, இத்தனை நாளா அந்த படத்தை எங்கே பார்த்து காப்பியடிச்சாங்கன்னு சொல்லாமெ வச்சிருந்தாங்க.. அதை கண்டுபிடிச்சிட்டீங்களா?///


வால்பையனுக்கு இதைவிட வேறென்ன வேலை இருக்கபபோகிறது? வாலில் கட்டிவிட்ட பந்தத்துடன் தாவி தாவி...

g said...

/// வால்பையன் said...
நான் குறிப்பிட்டது வேறு சிலரை, அவர்கள் பின்னூட்டங்களை நான் வெளியிடுவது இல்லை,

அந்த கம்முனாட்டி இன்னும் என்னை தொந்தரவு செய்து கொண்டு தான் இருக்கிறது.///



எனக்கு முன்னமே தெரியும். எது என்னைப்பற்றியது இல்லைதானே!?

PPattian said...

உலக சினிமால்லாம் பாக்கறீங்க.. காதல்னாலே வாந்தி வருதுங்கறீங்க.. பயமா இருக்கு உங்களை நெனச்சா.. :)

சென்னை 28ல் வர்றது காதல் இல்லைங்க.. அந்த வயசுல வரவேண்டிய இன்ஃபாச்சுவேஷன்.. அதில சொல்ற காதல் வசனம் எல்லாம் ஜாலியான நகைச்சுவதான்..

g said...

/// வால்பையன் said...

நீங்க அசாட்டா தினம் ஒரு பதிவு போடறிங்க,
எனக்கு டவுசர் அவுராத குறை தான்

வால்பையன்///


அவரு அசாட்டா தினம் ஒரு பதிவு போடுறாரு. நான் சர்வசாதாரணமாக தினம் குறைந்தது 5 பதிவு போடுறேன். எனக்கு டவுசர் அவுராத குறை ...

புகழன் said...

பதிவைப் பார்த்தேன்.
படிக்க வில்லை
சும்மா ஒரு அட்டன்டென்ஸ் மட்டும்.

வால்பையன் said...

// ppattian : புபட்டியன் said...
உலக சினிமால்லாம் பாக்கறீங்க.. காதல்னாலே வாந்தி வருதுங்கறீங்க.. பயமா இருக்கு உங்களை நெனச்சா.. :)//

உலக சினிமா காசு கொடுத்தெல்லாம் பாக்குறதில்ல. தொலைகாட்சி பெட்டியில் போட்டால் பார்ப்பேன். மற்றபடி காதல் எனக்கு பிடிக்காது தான், இதில் பயப்பட என்ன இருக்கு.

//சென்னை 28ல் வர்றது காதல் இல்லைங்க.. அந்த வயசுல வரவேண்டிய இன்ஃபாச்சுவேஷன்.. அதில சொல்ற காதல் வசனம் எல்லாம் ஜாலியான நகைச்சுவதான்..//

எந்த வயசுல காதல் வந்தாலும் அது இனக்கவர்ச்சி தான்,
காதலே நகைசுவை தான் இதில் நகைசுவை வேறயா.

லவ் என்று சொல்லும் வார்த்தைக்கு அன்பு என்ற அர்த்தமும் உண்டு
நான் இந்த பதிவில் சொல்லியிருப்பது லவ்வை பற்றி அல்ல லஸ்ட்டை பற்றி



வால்பையன்

வால்பையன் said...

புகழன் நீங்க சொல்றத நம்ப முடியல
நீங்க படிச்சிருப்பிங்க,
உங்க கருத்த வேறு யாராவது சொல்லியிருக்கலாம்
ரிப்பீட்டு போட பிடிக்காம இப்படி சொல்றிங்கன்னு நினைக்கிறேன்

வால்பையன்

வால்பையன் said...

//ஜிம்ஷா said...
அவரு அசால்டா தினம் ஒரு பதிவு போடுறாரு. நான் சர்வசாதாரணமாக தினம் குறைந்தது 5 பதிவு போடுறேன். எனக்கு டவுசர் அவுராத குறை ...//

ஜிம்ஷா அவருடைய பதிவுகள் அனைத்தும் நகைசுவைகள் நிரம்பியது.
சீரியசான விஷயத்தை கூட நகைசுவை தேன் தடவி கொடுப்பார்.
அப்புறம் இன்னொரு விஷயம் அவர் "யோசிச்சி" எழுதுறார்

வால்பையன்

Madurai citizen said...

நல்ல அலசல்..
அற்புதமான பதிவு!

நீங்க சொன்ன ரெண்டு படங்களையும் நான் பார்க்கலை

Sivashankar S said...

ஹா ஹா அருமை ...

!

Blog Widget by LinkWithin