ஒரு பின்னூட்டத்தின் எதிர்வினை (நண்பன் தியாகுவிர்க்கு)


என்னுடைய முந்தய பதிவான அந்த கொலையை நான் தான் செய்தேன் என்ற பதிவிற்கு
நீ அளித்த பின்னூட்டம் உண்மையில் எனக்கு இம்மி அளவும் அதிர்ச்சி அளிக்கவில்லை நண்பா, சாதரணமாக நண்பர்களுடன் பேசுவதே விவாதத்திற்கு உட்படும் போது, பொதுவில் வைத்துள்ள இந்த மொக்கைக்கு இந்த பின்னூட்டம் ஒரு பெரிய விசயமில்லை. உன்னுடைய பின்னூட்டம் கீழே கொடுக்க பட்டுள்ளது.

///தியாகு said...
ஒரு அரை கிறுக்கனின் முழு கிறுக்கல்கள் " என்கின்ற தலைப்பு இதற்கு மிக பொருத்தமாக இருக்கும் .. ................................................ நான் வால்பையனை கிறுக்கன் என்று சொல்வதாக தவறாக யாரும் புரிந்துகொள்ளவேண்டாம். தலைப்பை பற்றியது எனது இந்த கருத்து ///

இது அதே பதிவில் மற்றொரு நண்பர் அளித்த பின்னூட்டம்.
இந்த பின்னூட்டம் கொஞ்சம் மறைமுகமானது அவ்வளவே.

//jaisankar jaganathan said...
வெயில் காலத்துல இப்படிதான் இருக்கும். போகபோக சரியாகிவிடும்//

வெயில் குறையும் போது கொசுக்கள் குறையுமா
அல்லது எனது பித்தம் தெளியுமா
என்ற வாதத்தை இங்கே வைக்கலாம், ஆனால் அவ்வாறாக வம்பிலுத்தால்
விமர்சன சுதந்திரம் கெட்டுவிடும்

மீண்டும் அரசியல்வாதியின் மறுப்பு அறிக்கை போல் ஒரு பின்னூட்டத்தை விட்டு
உனக்கு நீயே சமாதானம் செய்து கொண்டாய்,

///வால்பையன் உண்மையிலே ரொம்ப அறிவாளி , நல்லவரு , வல்லவரு , ஒரே ஒரு பதிவுல எப்படி கிறுக்கன் சொல்லுவேன்///

இப்பதிவின் மூலம் என்னை உனக்கு உரித்து காட்ட ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்கிறேன்,

நண்பா எனக்கு குண-தோற்ற கட்டமைப்பு (இமேஜ்) என்று ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. அவைகள் கண்டிப்பாக என் சுதந்திரத்தை கெடுக்கும், நான் ஒரு சந்தோஷ பிராணி என்பதை சந்தோசமாக கூறிக்கொள்வேன், கட்டமைப்புகளை மீருவதே என் இயல்பாக வைத்துள்ளேன்,

நான் தெளிவானவன் என்று எப்பொழுதுமே சொல்லி கொள்வது கிடையாது,
இங்கே யாருமே தெளிவில்லை, எதாவது ஒரு தேடல் நம்மை ஆட்டி வைத்து கொண்டே தான் இருக்கிறது. சிலரது வெளிப்பாடு மற்றவர்களை குழப்புகிறது.

என்னுடன் நீ சில நாட்கள் பழகி இருப்பதால், என்னை பற்றி எதாவது ஒரு கருத்தை வைத்திருப்பாய், அதன் வெளிப்பாடே அந்த பின்னூட்டமாகவும் இருக்கலாம்,
அதில் தவறேதும் இல்லை, என்னை எதிர்காலத்தை பற்றி கவலை இல்லாத மனிதன் என்பாய், எனக்கு இப்பொழுது முப்பது வயது ஆகிறது, பதினைந்து வயதில் முப்பது வயதை பற்றி நான் கவலை கொள்ளவில்லை, நாற்பத்தைந்து வயதை பற்றி இப்பொழுது ஏன் கவலை கொள்ளவேண்டும்.

மற்றொன்று என்னுடைய எழுத்துக்கள்,
சமீபத்திய என்னுடைய புனைவு பதிவுகளான

உண்மை என்றால் என்ன?

புதிரில் கலந்த கனவுகள்!

உங்கள் வீட்டு மின்விசிறி!

ஏணி பிடித்து ஏறும் சிந்தனை!

கனவுகள் நிறைந்த தூக்கம்!

போன்ற பதிவுகளை படிக்கும் போது அது கண்டிப்பாக ஒரு மனம் பிறழபட்டவனின் எழுத்தாக தான் தோன்றும், நான் ஏன் இவ்வாறாக எழுதுகிறேன்,
காரணம் மிக எளிது, நேற்று எரிபொருள் விலை ஏறிவிட்டது என்பது செய்தி,
இதை ஒரு பதிவாக போட்டால் என்னை நானே ஏமாற்றி கொள்கிறேன் என்று அர்த்தம்.

இங்கே இருந்து ஒன்றை எடுக்கிறேன், அதை உன்னிடம் கொடுக்கிறேன்.
அதற்கு பதில் நீயே அதை எடுத்து கொள்ளல்லாம், நான் அதை கொடுப்பதென்றால்
அதில் என்மை(என்மை-என் தனித்தன்மை என்பதை குறிப்பிட இவ்வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன், அப்படி ஒரு வார்த்தையே இல்லை என்றோ அது அந்த அர்த்தம் தராது என்றோ சொன்னால், அது பற்றி எனக்கு கவலை இல்லை நான் இப்படி தான்)
நிறைவாக இருக்கவேண்டும்,

இம்மாதிரியான தனித்துவத்தில் தான் நான் என்னை முழுமையாக உணர முடிகிறது.
எனக்கான சுதந்திரம் முழுமையாக என்னால் அனுபவிக்க படுகிறது,
புலம்புதல் வாழ்க்கை இல்லை நண்பா
புரிதலே வாழ்க்கை

இன்னொன்று நீ என்னை குறைவாக மதிப்பிட்டு உள்ளாய்!
என்னை முழு கிறுக்கன் என்று சொல்லியிருந்தால் இன்னும் சந்தோசபட்டிருப்பேன்.


பதிவு போட மேட்டர் இல்லையென்றாலும் எதையாவது எழுதி கொல்வோம்ல

22 வாங்கிகட்டி கொண்டது:

Anonymous said...

//கிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம் 7:32 PM 0 வாங்கிகட்டி கொண்டது//

வால் பையன கிறுக்கன்னு சொன்னாக் கோவிக்க மாட்டாரு. சொன்ன கருத்து எப்படின்னுதான் கேப்பாரு.

வால்பையன் said...

ஹா ஹா ஹா
சரியா சொன்னிங்க வேலன்!

கிறுக்குதல் யாருக்கும் எளிது கடினமாம்
கிறுக்கியதை விளக் குதல்

வால்பையன்

ஜிம்ஷா said...

/// இன்னொன்று நீ என்னை குறைவாக மதிப்பிட்டு உள்ளாய்!
என்னை முழு கிறுக்கன் என்று சொல்லியிருந்தால் இன்னும் சந்தோசபட்டிருப்பேன். ///


நண்பர் தியாகு, தங்களை கொஞ்சம் குறைச்சி மதிப்பிட்டுட்டாரு. முழு கிறுக்கன் னு சொல்லியிருக்கணும் அவ்வளவுதானே!

வால்பையன் said...

///ஜிம்ஷா said...
/// இன்னொன்று நீ என்னை குறைவாக மதிப்பிட்டு உள்ளாய்!
என்னை முழு கிறுக்கன் என்று சொல்லியிருந்தால் இன்னும் சந்தோசபட்டிருப்பேன். ///
நண்பர் தியாகு, தங்களை கொஞ்சம் குறைச்சி மதிப்பிட்டுட்டாரு. முழு கிறுக்கன் னு சொல்லியிருக்கணும் அவ்வளவுதானே!///

வாங்க ஜிம்ஷா
இதுக்கு நாங்க ரிப்பீட்டுன்னு
போட்ருக்கணும்,
நான் சொன்னதையே திரும்ப சொல்லிரிங்கிங்க

வால்பையன்

அதிஷா said...

ஜிம்ஷா சார்பா நான் சொல்றேன்

ரிப்பீட்டட்டட்டட்டட்டடே

அதிஷா said...

வாலு நீங்க ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லவரு

வால்பையன் said...

வாங்க அதிஷா!
இப்படி உண்மையை பகிரங்கமாக சொல்றதுல தாங்க ஒரு கிக்கே இருக்கு

வால்பையன்

அதிஷா said...

அண்ணே கம்பேனி ரகசியத்தல்லாம் வெளிய ச்சொல்லதண்ணே

இப்படித்தான் ஏத்திவிட்டு உண்மைய வாங்கிருவாய்ங்க

பாத்து சூதானமா இருந்துக்கணே

வால்பையன் said...

வாழ்க்கையே திறந்த புத்தகம் தானே
இதிலென்ன மறைக்க

வால்பையன்

வால்பையன் said...

இன்னும் தியாகுவை காணோமே

வால்பையன்

மங்களூர் சிவா said...

கவுஜ சூப்பர்!!

வால்பையன் said...

//மங்களூர் சிவா said...
கவுஜ சூப்பர்!!//

எங்க எப்போ!
என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே

வால்பையன்

தியாகு said...

எவ்ளோ திட்டினாலும் வங்கிகுற , மாப்ள, நீ ரொம்ப .............................................. நல்லவன்டா ,

புகழன் said...

நல்ல காமெடியான பதிவு

பரிசல்காரன் said...

பின்னூட்டத்தை வைத்தே பதிவு போட்டுட்டீங்க! பெரிய ஆள் சார் நீங்க!

வால்பையன் said...

//தியாகு said...
எவ்ளோ திட்டினாலும் வங்கிகுற , மாப்ள, நீ ரொம்ப .............................................. நல்லவன்டா //

ஓஓஒ இதுக்கு பேர் தான் திட்றதா

வால்பையன்

வால்பையன் said...

///புகழன் said...
நல்ல காமெடியான பதிவு///

நன்றி புகழன்,
உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு
(ரொம்ப காமெடியா)

வால்பையன்

வால்பையன் said...

//பரிசல்காரன் said...
பின்னூட்டத்தை வைத்தே பதிவு போட்டுட்டீங்க! பெரிய ஆள் சார் நீங்க!//

என்னங்க இப்படி சொல்லிபுட்டிங்க
தும்மினாலே பதிவு எழுதுறதுக்கு நிறைய பேர் இருக்காங்க
நானெல்லாம் குழந்தைங்க

வால்பையன்

jaisankar jaganathan said...

//என்னை முழு கிறுக்கன் என்று சொல்லியிருந்தால் இன்னும் சந்தோசபட்டிருப்பேன்.//

முழு கிறுக்கா முழு கிறுக்கா முழு கிறுக்கா முழு கிறுக்கா
இப்போ சந்தொஷம்தானே

கூடுதுறை said...

வால்பையன் எந்த ஒரு கிறுக்கனும் இல்லை,

அவர் ஒரு நல்லவர், வல்லவர், அவரைப் பற்றி ஊர் முழுக்கபோய் சொல்லனும்.

அதுவும் யார்கிட்ட ?

(மீதி நாளை)

வால்பையன் said...

//jaisankar jaganathan said...
முழு கிறுக்கா முழு கிறுக்கா முழு கிறுக்கா முழு கிறுக்கா
இப்போ சந்தொஷம்தானே//

நிறையா

வால்பையன்

வால்பையன் said...

/// கூடுதுறை said...
வால்பையன் எந்த ஒரு கிறுக்கனும் இல்லை,
அவர் ஒரு நல்லவர், வல்லவர், அவரைப் பற்றி ஊர் முழுக்கபோய் சொல்லனும்.
அதுவும் யார்கிட்ட ?
(மீதி நாளை)//

வாங்க கூடுதுறை
நீங்க பாட்டுக்கு ஒரு பிட்ட போட்டு போயிரிங்க
நமக்கு இங்க டார்ச்சர் தாங்கல

அப்பிடியெல்லாம் ஒண்ணும் இல்லன்னு வந்து உண்மையை உடச்சிட்டு போங்க

வால்பையன்

!

Blog Widget by LinkWithin