இரவு நேர தொல்லைகளும் சில அதிர்ச்சி தகவல்களும்!

நேற்று இரவு பணி முடிந்து பதினொரு மணியளவில் அலுவலகம் அருகே இருக்கும் டீ கடைக்கு சென்றேன், அங்கே அதற்கு அருகே இருக்கும் டாஸ்மார்க் கடையின் சேல்ஸ்மேன் நின்று கொண்டிருந்தார், கொஞ்சம் பரிட்சியம் ஆதலால் கர்நாடகாவில் சரக்கு விலை ஏறி உள்ளதை பற்றி கூறினேன், அவர் தந்த அதிர்ச்சி அதற்கும் மேலே,
இன்னும் மூன்று மாதத்திற்குள் தமிழகத்திலும் ஒரு குவாட்டருக்கு நுப்பது ரூபாய் வரை ஏற வாய்ப்புள்ளதாம்.

தண்டனை கடுமையாக இருந்தால் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது போல்
குவாட்டர் விலை கூடினால் குடிகாரர்கள் குறைய வாய்புள்ளது. சந்தோசம்

***********************

வீட்டிற்கு போனதும் என் மனைவி சோத்து பானையை முன்னாடி தூக்கி வைத்து விட்டு தூங்க போய் விட்டால், எப்போதும் நடப்பது தான் அது.

சாப்பிடும் நேரங்களில் தொலைகாட்சி பார்ப்பது வழக்கம்
வழக்கும் போல் ஆன் செய்தேன்.

ஜீரோவில் புதிதாக வந்திருக்கும் வேர்ல்டு மூவீஸ், the triangel என்ற ஆங்கில சீரியல்.
பெர்முடா பற்றிய கதை,
நேற்று இரவே "நாங்கள் மட்டும் சீரியல் பார்க்க கூடாது நீங்கள் மட்டும் பார்க்கலாமா" என்று மனைவி திட்டியதால் சத்தம் குறைவாகவே வைத்து கொண்டேன்.

நான் பார்த்த காட்சி.

அங்கே சென்று வருபவர்களுக்கு ஞாபக மறதி வருவது போல் காட்டினார்கள் நேற்று.
திரும்பி வரும் அவன் தன் மனைவியுடன் காரில் வரும் போது ஒரு கடையை காட்டி இது நேற்று இல்லையே என்பான். இல்லை சில வருடங்களாக இங்கே தான் இருக்கிறது என்பாள். வீட்டிற்கு சென்றதும் பதினைந்து வருடம் மதிக்கத்தக்க சிறுவன் ஓடி வந்து அப்பா என்று கட்டி கொள்வான். ஆசையிடு கட்டி கொள்ளும் அவன், அதன் பின்னே அப்பா என்று ஓடி வரும் ஐந்து வயது சிறுவனை ஆச்சிரியமாக பார்ப்பான்.

அவன் மனைவின் முகத்தை ஒரு முறை பார்ப்பான், அந்த இடத்தில் ஒரு அமைதி நிலவும், அதன் பிறகு உங்கள் கற்பனைக்கு

****************************************

சன் டீவியில் ஜெமினி கணேசன், ரங்காராவ் நடித்த படம்
நான் பார்த்த போது பாவம் ஜெமினியின் மனைவி இறந்திருப்பார்.
ரங்காராவ் அவரை மறுமணம் செய்ய வற்புறுத்த ஜெமினி காஞ்சனா இருந்த இடத்தில் வேறொரு பெண்ணா என்று சொல்லும் போது நானும் அதே அளவு காதலனுடன் என் மனைவியுடன் இருக்கிறேனா என்று வெட்கம் வந்தது,

பிறகு ரங்காராவ் சாவித்திரியை ஜெமினிக்கு பொண்ணு பார்க்க போக ஒரு வழியாக தமிழ் படம் சுபத்தில் தான் முடியும் என்று அடுத்த சேனல்அடுத்தடுத்து இரண்டு சேனல்கள் ரஜினி பாட்டு, கேட்கும் மூடில் நானில்லை என்பதால் அடுத்த சேனல்,
யாருக்கோ மாட்டிய பெல்டை யாரிடமிருந்தோ எடுத்து எப்படி சுருங்கி விட்டது பாருங்கள் இடுப்பு என்று பூச்சி காட்டி கொண்டிருந்தார்கள்,

என் நண்பன் ஒருவன் இந்த விளம்பரத்தை பார்த்து அந்த பெல்டை வாங்கி இருக்கிறான்.
வீட்டிற்கு வந்த பிறகு தான் தெரிந்திருக்கிறது, அதை உபயோகிக்கும் முன் நான்கு கிலோ மீட்டர் ஓட வேண்டுமாம், அதற்கு எதற்கு பெல்டு

*********************************************************

அடுத்ததில் ஒரு டாக்டர் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்க வைக்க மருந்து இருப்பதாக கூறி கொண்டிருந்தார், சும்மா சொல்லி கொண்டிருந்தால் இங்கே அதை ஏன் எழுத போகிறேன், எல்லாம் வல்ல கர்த்தரின் துணையால் அதை செய்வாராம்,

அதற்கு எதற்கு இவர், நேரா சர்ச்சுக்கு போய் இயேசுவே எனக்கு புள்ள கொடுன்னு கேட்டுட்டு போயிரலாமே

***************************************************

அடுத்ததுல ஒருத்தர் கல்லு விக்கிறாரு, ஜாதிகல்லாமா இவனுங்களை எல்லாம் பிஞ்ச செருப்பு வைச்சு தான் அடிக்கணும்,

நாய்க்கு உள்ளது போல் மனிதனுக்கும் நிற குருட்டு இருந்திருந்தால்
மஞ்ச கல்லு ஜிங்குசான், பட்ச கல்லு ஜிங்குசான்னு ஆட்டம் போட மாட்டானுங்க

************************************************

அடுத்ததுல செய்திகள்,
இந்தியாவை எப்படியாவது படுகுழிக்குள் தள்ளியே தீருவேன் என்று மன்மோகன் சிங் சபதம் செய்திருப்பார் போல, எந்த எதிர்ப்புகள் வந்தாலும் அமெரிக்கா அணு உலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று அறிக்கை விடுகிறார்.

2012 ல உலகம் அழியும்ன்னு மாலைமலர்ல போட்டாங்க, உலகம் அழியுதோ என்னவோ இந்தியாவை அழிக்க பல பேர் உள்ளேயே முயற்சி செய்கிறார்கள்.

**************************************

தயவு செய்து பதிவுக்கு சம்பந்தமான பின்னூட்டம் போடுங்கள்

62 வாங்கிகட்டி கொண்டது:

புருனோ Bruno said...

//தயவு செய்து பதிவுக்கு சம்பந்தமான பின்னூட்டம் போடுங்கள்//

நொந்து போயுள்ளீர்கள் என்று தெரிகிறது

வால்பையன் said...

வாங்க டாக்டர்!

"சாப்டிங்க்களா"
"தூங்குனிங்க்களா"

ரேஞ்சுக்கு எனக்கு பின்னூட்டம் வருது!
எல்லோரும் என்னை மட்டும் ஏன் இப்படி கொலைவெறியோட
துரத்துராங்கன்னு தெரியல!

வால்பையன்

மங்களூர் சிவா said...

/
தயவு செய்து பதிவுக்கு சம்பந்தமான பின்னூட்டம் போடுங்கள்
/

பதிவிலேயே மிக ரசித்த அருமையான வரிகள்.

மங்களூர் சிவா said...

/
தயவு செய்து பதிவுக்கு சம்பந்தமான பின்னூட்டம் போடுங்கள்
/
பதிவிலேயே மிக ரசித்த வரிகள்.

வால்பையன் said...

//மங்களூர் சிவா said...
/தயவு செய்து பதிவுக்கு சம்பந்தமான பின்னூட்டம் போடுங்கள் /
பதிவிலேயே மிக ரசித்த வரிகள்.//

அதையே ரெண்டு தடவை சொல்லியுள்ள போதே திரியுது நீங்களும் அந்த கொலைவெறி கும்பல்ல ஒருத்தர்ன்னு

வால்பையன்

மங்களூர் சிவா said...

இல்லிங்ணா ரெண்டாவதா போட்டது கமெண்ட் ஃபாலோ அப் மெயில்ல வர்றதுக்குங்ணா
:)

வால்பையன் said...

//மங்களூர் சிவா said...
இல்லிங்ணா ரெண்டாவதா போட்டது கமெண்ட் ஃபாலோ அப் மெயில்ல வர்றதுக்குங்ணா
:)//

நாலுக்கே தாவு தீருது!
நூறு பின்னூட்டம் வர்ற மாதிரி மெயில்ல வாங்கி என்ன பண்றது
ஆசை பட்ட மட்டும் பத்தாதுங்கண்ணா கும்மி அடிக்க ஆளுங்களையும் கூட்டிட்டு வரணும்

வால்பையன்

தருமி said...

ஏங்க.. "நவரச பதிவர்" அப்டின்னு பட்டம் ஏதுனாச்சும் கிடைக்குமான்னு பார்க்கிறீங்களா?
பல துணுக்குகள்; ஒவ்வொண்ணும் ஒரு ரகம்/சுவை ..

டாஸ்மார்க் - சோகம்
இங்கிலிபீசு சீரியல் - சோக்கு
தமிழ் சினிமா - சென்டி
கர்த்தரும், கல்லும் - பகுத்தறிவு
மன்மோகன் - அரசியல், அதுவும் உலக அரசிஉஅல்

(சந்துரு) கலக்குறப்பா .. ம்ம்.. நடத்துங்க

அதிஷா said...

இப்படிலாம் பதிவு போட்டா 2012 ல இல்ல அடுத்த வருஷமே உலகம் அழிஞ்சுரும்
ஆமா இப்ப இதென்ன டிரெண்டா தினமும் பண்ணதெல்லாம் ஒரு பதிவா போட்றது ....

முடில.....ஸ்ஸஸ்ஸஸ்ஸப்பா

இதுக்கே கண்ண கட்டுதே

அதிஷா said...

வால் அப்புறம் ஊர்ல எல்லாரும் சௌக்கியமா????

வால்பையன் said...

ரொம்ப நாளைக்கப்புறம் பதிவுக்கு சம்பந்தமான பின்னூட்டம் வந்துருக்கு
ரொம்ப நன்றி தருமி சார்.
//"நவரச பதிவர்" அப்டின்னு பட்டம் ஏதுனாச்சும் கிடைக்குமான்னு பார்க்கிறீங்களா?//

எதோ எழுதுரட அம்பின்னு சொன்ன போதும் சார்.
நவரச நாயகன் பட்டமெல்லாம் வேணாம் சார்

வால்பையன்

வால்பையன் said...

//அதிஷா said...
இப்படிலாம் பதிவு போட்டா 2012 ல இல்ல அடுத்த வருஷமே உலகம் அழிஞ்சுரும்
ஆமா இப்ப இதென்ன டிரெண்டா தினமும் பண்ணதெல்லாம் ஒரு பதிவா போட்றது ....
முடில.....ஸ்ஸஸ்ஸஸ்ஸப்பா
இதுக்கே கண்ண கட்டுதே//

எனக்கு சத்தியமா சிறுகதை, கவிதைலாம் எழுத தெரியாது
மொக்கை போட்டா கிறுக்கு பயல்ன்னு சொல்றாங்க
என்ன செய்யுறது, இதை தவிர எனக்கு வேற வழி தெரியல மை லார்ட்

வால்பையன்

வால்பையன் said...

//அதிஷா said...
வால் அப்புறம் ஊர்ல எல்லாரும் சௌக்கியமா????//

எல்லோரும் நலமாக இருக்கிறோம்
உங்கள் வருகையை எதிர்நோக்கி

வால்பையன்

அதிஷா said...

//மொக்கை போட்டா கிறுக்கு பயல்ன்னு சொல்றாங்க
என்ன செய்யுறது, இதை தவிர எனக்கு வேற வழி தெரியல மை லார்ட் //

ஓகே நாலு பேருக்கு நல்லதுனா எதுமே தப்பில்ல ....

நீங்க நெறய இத போல மொக்க பதிவா போட்டு இந்த ஊருலயே இல்ல இந்த உலகத்திலயே பெரிய ஆளா வரணும்

ஆண்டவா ஏன்டா நல்லவங்களயே சோதிக்கற!!!!

வால்பையன் said...

//அதிஷா said...
//மொக்கை போட்டா கிறுக்கு பயல்ன்னு சொல்றாங்க
என்ன செய்யுறது, இதை தவிர எனக்கு வேற வழி தெரியல மை லார்ட் //
ஓகே நாலு பேருக்கு நல்லதுனா எதுமே தப்பில்ல ....
நீங்க நெறய இத போல மொக்க பதிவா போட்டு இந்த ஊருலயே இல்ல இந்த உலகத்திலயே பெரிய ஆளா வரணும்
ஆண்டவா ஏன்டா நல்லவங்களயே சோதிக்கற!!!!///

ஆரம்ப்பகால எழுத்துக்களுக்கும் இப்பத்தைய எழுத்துக்களுக்கும் கொஞ்சம் வித்தியாசம் தெரியுது, உங்கள மாதிரி நண்பர்களோட ஊக்கமும் பக்கபலமா இருக்குது.

பின்ன எதுக்கு ஆண்டவன் கிட்டயெல்லாம் கம்ப்ளைன்ட் கொடுக்கிரிங்க

வால்பையன்

அதிஷா said...

அப்பவாவது இந்த வாலு குழந்தைக்கு நல்ல புத்திய குடுக்கட்டுமேணுதான்

வால்பையன் said...

//அதிஷா said...
அப்பவாவது இந்த வாலு குழந்தைக்கு நல்ல புத்திய குடுக்கட்டுமேணுதான்//

மன்னிக்கணும் கடவுள் நம்பிக்கையாளர்களை பொருத்த வரை நான் சாத்தான் கட்சி
சிலபேர் நானே சாத்தான்னு கூட சொல்வாங்க!

அவங்களுக்குள்ள சண்டையை முடிச்சி யாரு ஒரே கடவுள்ன்னு ஏத்துகராங்க்களோ
அதையே நானும் ஒத்துகிறேன்

வால்பையன்

அதிஷா said...

//மன்னிக்கணும் கடவுள் நம்பிக்கையாளர்களை பொருத்த வரை நான் சாத்தான் கட்சி
சிலபேர் நானே சாத்தான்னு கூட சொல்வாங்க!

அவங்களுக்குள்ள சண்டையை முடிச்சி யாரு ஒரே கடவுள்ன்னு ஏத்துகராங்க்களோ
அதையே நானும் ஒத்துகிறேன்
//

ஓகே திரு.சாத்தான்

உங்க அட்ரஸ் குடுங்க லெட்டர் போடுறோம்

ச்சின்னப் பையன் said...

//தண்டனை கடுமையாக இருந்தால் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது போல்
குவாட்டர் விலை கூடினால் குடிகாரர்கள் குறைய வாய்புள்ளது. சந்தோசம் //

இது மாத்திரம் கண்டிப்பா நடக்காது...

வால்பையன் said...

//ஓகே திரு.சாத்தான்
உங்க அட்ரஸ் குடுங்க லெட்டர் போடுறோம்//

15- வது வார்டு
பிராய்டு மருத்துவமனை
கீழ்பாக்கம் கிளை
ஏர்வாடி

ஹீ ஹீ ஹீ

வால்பையன்

ச்சின்னப் பையன் said...

//சாப்பிடும் நேரங்களில் தொலைகாட்சி பார்ப்பது வழக்கம்
வழக்கும் போல் ஆன் செய்தேன்//

F டிவி உங்க வீட்லே வராதா????

ச்சின்னப் பையன் said...

//சாப்பிடும் நேரங்களில் தொலைகாட்சி பார்ப்பது வழக்கம்
வழக்கும் போல் ஆன் செய்தேன்//

F டிவி உங்க வீட்லே வராதா????

ச்சின்னப் பையன் said...

//அடுத்தடுத்து இரண்டு சேனல்கள் ரஜினி பாட்டு, கேட்கும் மூடில் நானில்லை என்பதால் அடுத்த சேனல்//

சிம்பு பாட்டுன்னா மட்டும்தான் பாப்பீங்களோ???

அதிஷா said...

ஆஹா...
இதுக்கு பேருதான்

"இரவு நேர தொல்லைகளும் சில அதிர்ச்சி தகவல்களும்!"

ச்சின்னப் பையன் said...

அடுத்ததுல ஒருத்தர் கல்லு விக்கிறாரு, ஜாதிகல்லாமா இவனுங்களை எல்லாம் பிஞ்ச செருப்பு வைச்சு தான் அடிக்கணும்//

விவேக் ஒரு படத்திலே பண்றாமாதிரி, அவங்கள அதே கல்லாலே அடிச்சி தூக்கிறணும்...

ச்சின்னப் பையன் said...

//2012 ல உலகம் அழியும்ன்னு மாலைமலர்ல போட்டாங்க,//

ஏன், மதுரை தினகரன்லே மறுபடியும் ஏதாவது கருத்துக்கணிப்பு வரப்போகுதா??

Udhayakumar said...

//நுப்பது //

முப்பது.

வால்பையன் said...

///ச்சின்னப் பையன் said...
//தண்டனை கடுமையாக இருந்தால் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது போல்
குவாட்டர் விலை கூடினால் குடிகாரர்கள் குறைய வாய்புள்ளது. சந்தோசம் //
இது மாத்திரம் கண்டிப்பா நடக்காது...///

இல்லை வாய்புள்ளது.
ஞாயிற்று கிழமைகளில் பார் மூடும் வரை இருக்கும் நான் இப்போதெல்லாம் ஏழரை மணிக்கே ஹாலிவுட் சினிமா பார்க்க வீட்டுக்கு வந்து விடுகிறேன்.
விலை ஏறினால் பார் பக்கமே போக கூடாது என்று முடிவு செய்துள்ளேன்

வால்பையன்

வால்பையன் said...

//ச்சின்னப் பையன் said...
//சாப்பிடும் நேரங்களில் தொலைகாட்சி பார்ப்பது வழக்கம்
வழக்கும் போல் ஆன் செய்தேன்//
F டிவி உங்க வீட்லே வராதா????//

வராது, ஆனால் SS music- இல் இரவு கில்மா பாட்டு போடுவார்கள்

வால்பையன்

வால்பையன் said...

///ச்சின்னப் பையன் said...
//அடுத்தடுத்து இரண்டு சேனல்கள் ரஜினி பாட்டு, கேட்கும் மூடில் நானில்லை என்பதால் அடுத்த சேனல்//
சிம்பு பாட்டுன்னா மட்டும்தான் பாப்பீங்களோ???///

ஏற்கனவே அர லூசா சுத்துறேன்.
அவன் பாட்டு பார்த்த அவ்வளவு தான்

வால்பையன்

வால்பையன் said...

/// அதிஷா said...
ஆஹா...
இதுக்கு பேருதான்
"இரவு நேர தொல்லைகளும் சில அதிர்ச்சி தகவல்களும்!"//

ஹா ஹா ஹா
சும்மா லுளுலாயி
பயந்துடிங்க்களா

வால்பையன்

வால்பையன் said...

///ச்சின்னப் பையன் said...
அடுத்ததுல ஒருத்தர் கல்லு விக்கிறாரு, ஜாதிகல்லாமா இவனுங்களை எல்லாம் பிஞ்ச செருப்பு வைச்சு தான் அடிக்கணும்//
விவேக் ஒரு படத்திலே பண்றாமாதிரி, அவங்கள அதே கல்லாலே அடிச்சி தூக்கிறணும்...///

அதையும் பொறுக்கி ராசி கல்லுன்னு வித்துருவானுங்க பொறுக்கிங்க!

வால்பையன்

வால்பையன் said...

///ச்சின்னப் பையன் said...
//2012 ல உலகம் அழியும்ன்னு மாலைமலர்ல போட்டாங்க,//
ஏன், மதுரை தினகரன்லே மறுபடியும் ஏதாவது கருத்துக்கணிப்பு வரப்போகுதா??//

அந்த மேட்டர் உங்களுக்கு தெரியாதா?
இங்கே ஒரே பரபரப்பா கீது

வால்பையன்

வால்பையன் said...

//Udhayakumar said...
//நுப்பது //
முப்பது.//

பேச்சு தமிழ்ல எழுதினா தான் எலக்கியம்ன்னு சொன்னாங்களே
சும்மாவா அது

வால்பையன்

siva said...

"சாப்டிங்க்களா"?

"தூங்குனிங்க்களா"?

"தூங்குனிங்க்களா"??

"சாப்டிங்க்களா"??

"தூங்குனிங்க்களா"??

"சாப்டிங்க்களா"???

"தூங்குனிங்க்களா"??? :-)))

puduvai siva

ஜிம்ஷா said...

///இன்னும் மூன்று மாதத்திற்குள் தமிழகத்திலும் ஒரு குவாட்டருக்கு நுப்பது ரூபாய் வரை ஏற வாய்ப்புள்ளதாம்///


ஸ்ஸ்... போப்பா மனசே சரியில்ல. பின்னூட்டம் அப்புறமா எழுதுறேன்.

புகழன் said...

\\
வீட்டிற்கு போனதும் என் மனைவி சோத்து பானையை முன்னாடி தூக்கி வைத்து விட்டு தூங்க போய் விட்டால், எப்போதும் நடப்பது தான் அது.
\\

அதுக்கப்புறம் சாப்பிட்டீங்களா?
சாப்பாடு நல்லாயிருந்துச்சா?
நல்லா தூங்குனீங்களா?
இதைப் பற்றி எழுதவே இல்லை.

வால்பையன் said...

//siva said...
"சாப்டிங்க்களா"???
"தூங்குனிங்க்களா"??? :-)))
puduvai சிவா//

//புகழன் said...
\\
வீட்டிற்கு போனதும் என் மனைவி சோத்து பானையை முன்னாடி தூக்கி வைத்து விட்டு தூங்க போய் விட்டால், எப்போதும் நடப்பது தான் அது.
\\
அதுக்கப்புறம் சாப்பிட்டீங்களா?
சாப்பாடு நல்லாயிருந்துச்சா?
நல்லா தூங்குனீங்களா?
இதைப் பற்றி எழுதவே இல்லை.//

வந்துட்டாங்க வந்துட்டாங்க
கொலைவெறி கும்பல் வந்துட்டாங்க

வால்பையன்

வால்பையன் said...

//ஜிம்ஷா said...
///இன்னும் மூன்று மாதத்திற்குள் தமிழகத்திலும் ஒரு குவாட்டருக்கு நுப்பது ரூபாய் வரை ஏற வாய்ப்புள்ளதாம்///
ஸ்ஸ்... போப்பா மனசே சரியில்ல. பின்னூட்டம் அப்புறமா எழுதுறேன்.//

எனக்கும் அப்படி தான் இருக்கு ஜிம்ஷா
பதிவோட தலைப்புல அதிர்ச்சிக்கு காரணமே இந்த மேட்டர் தான்

வால்பையன்

கூடுதுறை said...

வால்பையனுக்கு நாற்பதாவது பின்னுட்டுமாக போடுவதுற்கு எனக்கே வெட்கமாக உள்ளது.

இதில் பதிவுற்கு சம்பந்தமாகவே பின்னுட்டம் போடவேண்டுமாம். விசயம் இல்லாமல் சொந்தக்கதை சோகக்கதை எழுதுவாராம். அதற்கு பின்னுட்டமாம்....

இதோ சாபம்!!!
ஜிம்சா வால்பையனை திட்டி வாரம் நான்கு பதிவு எழுதட்டும்

sivashankar said...

ஹலோ வாலு
ஸ்டார் கோல்டுல நீங்க பார்த்த படத்தின் கதயை மிகவும் சுருக்கமா சொன்னதுல நான் படம் பார்த்த மாதிரி இருந்துச்சு. நினைத்து பார்த்தாலே அதிர்ச்சிய இருக்கு. முடிவு என்னனு சொல்லுங்க ப்ளீஸ்...........

வால்பையன் said...

///கூடுதுறை said...
வால்பையனுக்கு நாற்பதாவது பின்னுட்டுமாக போடுவதுற்கு எனக்கே வெட்கமாக உள்ளது.
இதில் பதிவுற்கு சம்பந்தமாகவே பின்னுட்டம் போடவேண்டுமாம். விசயம் இல்லாமல் சொந்தக்கதை சோகக்கதை எழுதுவாராம். அதற்கு பின்னுட்டமாம்....
இதோ சாபம்!!!
ஜிம்சா வால்பையனை திட்டி வாரம் நான்கு பதிவு எழுதட்டும்///


ஓகோ அந்த கொலைவெறி கும்பலோட தலைவனே நீங்க தானா!
ஜிம்ஷாவும், சாம் தாத்தாவும் ஏற்கனவே அதை ஆரம்பிட்சிடாங்க

வால்பையன்

வால்பையன் said...

//sivashankar said...
ஹலோ வாலு
ஸ்டார் கோல்டுல நீங்க பார்த்த படத்தின் கதயை மிகவும் சுருக்கமா சொன்னதுல நான் படம் பார்த்த மாதிரி இருந்துச்சு. நினைத்து பார்த்தாலே அதிர்ச்சிய இருக்கு. முடிவு என்னனு சொல்லுங்க ப்ளீஸ்...........//

ஒழுங்க ஒரு சேனலை பார்த்தால் முடிவு சொல்லலாம்
கங்காரு மாதிரி தாவி கிட்டே போனா எங்கே முடிவு சொல்றது.
அங்கே போயிட்டு வந்தவங்க எல்லோரும் கனவு கண்ட மாதிரி உணர்ராங்க
ஆனா போயிட்டு வந்தது உண்மை

வால்பையன்

ஜிம்ஷா said...

/// வால்பையன் said...
///கூடுதுறை said...
வால்பையனுக்கு நாற்பதாவது பின்னுட்டுமாக போடுவதுற்கு எனக்கே வெட்கமாக உள்ளது.
இதில் பதிவுற்கு சம்பந்தமாகவே பின்னுட்டம் போடவேண்டுமாம். விசயம் இல்லாமல் சொந்தக்கதை சோகக்கதை எழுதுவாராம். அதற்கு பின்னுட்டமாம்....
இதோ சாபம்!!!
ஜிம்சா வால்பையனை திட்டி வாரம் நான்கு பதிவு எழுதட்டும்///


ஓகோ அந்த கொலைவெறி கும்பலோட தலைவனே நீங்க தானா!
ஜிம்ஷாவும், சாம் தாத்தாவும் ஏற்கனவே அதை ஆரம்பிட்சிடாங்க///


சாபம் விட்டாச்சு கூடுதுறை. அப்படியே கொஞ்சம் அறிவுரையும் கூட.

வால்பையன் said...

புரியலையே ஜிம்ஷா!
நீங்க அறிவுரை கேட்கிறிங்களா
இல்ல சொல்ல விரும்புரிங்க்களா

வால்பையன்

Vijay said...

ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை

வால்பையன் said...

சமுதாய சாடல்களை சொல்ல சரியான இடத்தை தேர்ந்தெடுத்துள்ளீர், விஜய்
வாழ்த்துக்கள்
அப்புறம் நாங்கல்லாம் மொக்க பார்ட்டீஸ்
எங்களையும் மதிச்சி கூப்பிட்டதுக்கு நன்றி

வால்பையன்

Vijay said...

தமிழ் வலைப் பதிவுலக

சான்றோர்களுக்கும்,
பெரியோர்களுக்கும்,
அறிஞர்களுக்கும்,
சகோதரர்களுக்கும்,
சகோதரிகளுக்கும்,
நண்பர்களுக்கும்,
தோழர்களுக்கு,
தோழியர்களுக்கும்

என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.

புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய

டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.

எனது அன்பு அழைப்பை ஏற்று
வருகை புரிந்து
வாழ்த்துரை வழங்கியும்,
மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
பேருதவி புரிந்திட்ட

அன்புகளுமிய அன்பர்கள்

திருநெல்வேலி கார்த்திக்
அதிஷா
VSK
dondu(#11168674346665545885)
லக்கிலுக்
ajay
துளசி கோபால்
உண்மைத் தமிழன்(15270788164745573644
VIKNESHWARAN
சின்ன அம்மிணி
VIKNESHWARAN
ஜமாலன்
உறையூர்காரன்
மதுரையம்பதி
கிரி
ambi
ஜீவி
வடுவூர் குமார்
செந்தில்
SP.VR. SUBBIAH
தமிழரசன்
cheena (சீனா)
சிறில் அலெக்ஸ்
வால்பையன்
வெட்டிப்பயல்
பினாத்தல் சுரேஷ்
இலவசக்கொத்தனார்
அகரம்.அமுதா
குசும்பன்
கயல்விழி முத்துலெட்சுமி
சென்ஷி
தருமி
தமிழன்
செந்தில்
மனதின் ஓசை
கானா பிரபா
Kailashi
மாதங்கி
முகவை மைந்தன்

அனைவருக்கும்
நெஞ்சுநிறை
நன்றிகள்
கோடான கோடி

என்றும் உங்கள்
விஜய்
கோவை.

http://pugaippezhai.blogspot.com

தென்றல்sankar said...

//இந்தியாவை எப்படியாவது படுகுழிக்குள் தள்ளியே தீருவேன் என்று மன்மோகன் சிங் சபதம் செய்திருப்பார் போல, எந்த எதிர்ப்புகள் வந்தாலும் அமெரிக்கா அணு உலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று அறிக்கை விடுகிறார்.//

இந்த திட்டத்த நிறைவேற்றினால் எவ்வளவு பயன் என்று பாரு கன்னா,அதபத்தி தெரியாம பேசாதீங்க அண்னே!

வால்பையன் said...

//இந்த திட்டத்த நிறைவேற்றினால் எவ்வளவு பயன் என்று பாரு கன்னா//

இல்லைன்னு யாருங்கண்ணா சொன்னா,
நிறைய சூட்கேஸ் இருக்ககண்டு தான்
மன்மோகன் குதி குதின்னு குதிக்கிறார்.

இந்தியாவிற்கு தேவையான மின்சாரம் எடுக்க நிறைய வழி இருக்குங்கண்ணா

அமெரிக்காவுக்கு இந்தியாவை அடகு வைக்காதிங்கன்னா

வால்பையன்

பரிசல்காரன் said...

ஒரு
வாரத்துக்கு
மேல
ஆச்சு....

எங்க
அடுத்த
பதிவு?

Beemboy-Erode said...

பின்னூட்டல் போடலாம்னு தான் நினைத்தேன் ஆனல் கறார் ஆக சொல்லிட்டீங்களே பதிவு சம்பந்தமாதான் இருக்கனும் என்று அதான் கொஞ்ஜம் யோசனையாகருக்கு...சரி சரி சப்பை மேட்டருக்கு போயி வருத்தபடுரீங்க...

நான் கூட கொஞ்ஜ நேரம் டீவீ பொட்டி பார்த்தேன் சரியான போரு...... சாமி நீங்கலாம் எப்படிதான் தினமும் அந்த கருமத்தை பார்க்றீங்கபா?

rapp said...

என்னங்க நீங்க, கே.ஆர்.விஜயாவை காஞ்சனானு சொல்லிட்டீங்க. நாட்டுக்கு நெம்ப முக்கியமான விஷயமான்னு யாரும் கேட்டுராதீங்க, அப்படிப் பார்த்தா இந்தப் படத்தப் பத்தி எழுதினது மட்டும் முக்கியாமானுதான் பதில் வரும்.

rapp said...

//ஏன், மதுரை தினகரன்லே மறுபடியும் ஏதாவது கருத்துக்கணிப்பு வரப்போகுதா//
சூப்பர் பன்ச்!

பரிசல்காரன் said...


று

டி

கே
க்

றே
ன்


ங்டு
த்தி
வு?

வால்பையன் said...

//rapp said...

என்னங்க நீங்க, கே.ஆர்.விஜயாவை காஞ்சனானு சொல்லிட்டீங்க. நாட்டுக்கு நெம்ப முக்கியமான விஷயமான்னு யாரும் கேட்டுராதீங்க, அப்படிப் பார்த்தா இந்தப் படத்தப் பத்தி எழுதினது மட்டும் முக்கியாமானுதான் பதில் வரும்.//

நான் பார்த்த போது அவர் உயிருடன் இல்லை (படத்தில்)
நான் பயன்படுத்தியிருப்பது கதாப்பாத்திரத்தின் பெயரை

வால்பையன்

வால்பையன் said...

பீம்பாய் அண்ணா உங்கள் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
எனக்கு தெரிந்து நீங்கள் வேறு யாருக்கும் பின்னூட்டம் போட்டு நான் பார்த்ததில்லை.
மிக்க நன்றி அண்ணா, உங்கள் வலையை நீங்கள் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை என்பதால் உங்கள் வலைக்கு செல்ல இங்கே லிங்க் கொடுக்கிறேன்

பீம்பாய்

வால்பையன்

வால்பையன் said...

பரிசல்க்காரன்,கூடுதுறை போன்ற நண்பர்கள்
பின்னூட்டத்திலும் சாட்டிலும் அடுத்த பதிவு எங்கே என்று கேட்கும் போது
ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் பயமாக இருக்கிறது, எழுத்துலக ஜாம்பாவான்கள் கலக்கி கொண்டிருக்கும் தமிழ் வலைப்பூக்களில் என்னிடம் நீங்கள் எதிர்ப்பார்க்கும் அளவுக்கு என்னால் எழுத முடியுமா என்று யோசித்து பார்த்தால்

நான் அவ்வளவு வொர்த் இல்லம்மா

வால்பையன்

வால்பையன் said...

இருந்தாலும் போடற மொக்கையை போட்டு தானே ஆவணும்
இந்தாங்க அடுத்த பதிவு

வால்பையன்

தமிழ்நெஞ்சம் said...

your blog contents are very lengthy. how did you type it?

great.

I enjoyed verymuch.

supersubra said...

//நாங்கள் மட்டும் சீரியல் பார்க்க கூடாது நீங்கள் மட்டும் பார்க்கலாமா..சத்தம் குறைவாகவே வைத்து கொண்டேன்."//

பேசாம இந்த கருவி வாங்கி டிவி ல பிக்ஸ் பண்ணிருங்க அடுத்தவங்களுக்கு தொந்தரவு இல்லாம (remote wireless) ஹெட் போன் போட்டுக்கிட்டு நிம்மதியா படம் பார்க்கலாம்

Cordless Head Phone With FM Radio PORTA SOUND-2003

http://cgi.ebay.in/Cordless-Head-Phone-With-FM-Radio-PORTA-SOUND-2003_W0QQitemZ330370696558QQcmdZViewItemQQptZLH_DefaultDomain_203?hash=item4ceba0c56e

ஜகதீஸ்வரன் said...

//நாய்க்கு உள்ளது போல் மனிதனுக்கும் நிற குருட்டு இருந்திருந்தால்
மஞ்ச கல்லு ஜிங்குசான், பட்ச கல்லு ஜிங்குசான்னு ஆட்டம் போட மாட்டானுங்க//

அட ஏங்க இதுக்கெல்லாம் வருத்தப்படுரீங்க. ஒரு காலத்துல ஆமையை வீட்டுகுள் கொண்டு வரக்கூடாதுன்னு சொன்னாங்க.
இப்ப நட்சத்திர ஆமை வீட்டுல இருந்தா பணம் கொட்டும் சொல்லறாங்க.
அஷ்சய திதியோடு புதுசா ரம்பா திதியைன்னு ஒன்னு புதுசா முளைச்சிருக்கு.

//சும்மா சொல்லி கொண்டிருந்தால் இங்கே அதை ஏன் எழுத போகிறேன், எல்லாம் வல்ல கர்த்தரின் துணையால் அதை செய்வாராம்//
தொலைக்காட்சிங்கரதுன்னால அடக்கி வாசிச்சுருக்காங்க. கன்னியாகுமரி பக்கம் போய் பாருங்க,...

!

Blog Widget by LinkWithin