பல்லாங்குழி ,தாயம் மற்றும் பெண்ணிய நுண்ணரசியல்


பல்லாங்குழி என்ற விளையாட்டு வீட்டில் இருக்கும் பெண்கள் பொழுதுபோக்கிற்காக விளையாண்டு வந்த ஒரு பழமையான விளையாட்டு, இன்று பொழுதுபோக்கிற்கு நிறைய வந்து விட்டதால் அவைகள் மறந்து போய் விட்டன. நாளடைவில் மறைந்து போகவும் வாய்ப்புண்டு, இம்மாதிரி விளையாட்டுகளில் இருக்கும் பெண்ணிய நுண்ணரசியலை மாற்று கோணத்தில் ஆராயவே இந்த முயற்சி.

பல்லாங்குழி விளையாட்டை பற்றி நண்பர் இளையகவி இங்கே விவரித்திருக்கிறார்,
அதனால் நேராக ஆராய்ச்சிக்கு போவோம்.

இந்த விளையாட்டு பெண்களுக்கு வியாபார தந்திரம் ஆண்களுக்கு சமமாக இருக்கிறது என்று நிருபிக்கும் விளையாட்டு. இந்த விளையாட்டில் உடல் உழைப்புக்கு பெரிதாக வேலையில்லை, ஆனால் மூளைக்கு உண்டு, எங்கே ஆரம்பிக்க வேண்டும் என்று ஆரம்பித்திலிருந்து முடிவு வரை, தீர்க்கமாக எடுக்கும் முடிவுகளுக்கே வெற்றி,
இந்த விளையாட்டில் அதிர்ஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை.



"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்பது போல் எந்த தொழிலும் அனுபவத்தாலேயே வெற்றியை அடைய முடியும், அனுபத்தில் மட்டுமே நாம் எடுக்கும் முடிவுகளில் முதிர்ச்சி தெரியும். இந்த விளையாட்டு மூலம் பெண்களும் தங்களாலும் ஆண்களுக்கு நிகராக எல்லா தொழில்களிலும் பிரகாசிக்க முடியும் என்று நிரூபிக்கிறார்கள், இன்று ஆண்களை விட பெண்களே குடும்ப பொறுப்புகளை சீராக நடத்துகிறார்கள், அது ஒரு பெரிய குழுமத்தை வழி நடத்துவதை விட கடினமானது.

***********************************

தாயம் என்ற விளையாட்டு பெண்கள் மட்டும் விளையாடும் விளையாட்டல்ல என்று மகாபாரதம் என்ற சரித்திர புனைவின் மூலம் தெரிகிறது, இந்த விளையாட்டு இன்னும் கிராம புறங்களில் விளையாடப்பட்டு வருகிறது பெண்களால்.

தாயக்கட்டைகள் என்று சொல்லப்படும் நீண்ட கனசெவ்வக உலோகத்தில் நான்கு பக்கங்கள் மையப்படுத்த பட்டிருக்கும், ஒரு பக்கம் மட்டும் எந்த குறிகளும் இல்லாமல் மற்ற பக்கங்களில் முறையே ஒன்று, இரண்டு, மூன்று என்று குறிகள் இருக்கும், அந்த இரண்டு கட்டைகளையும் சேர்ந்து உருட்டும் பொது கிடைக்கும் எண்களை பொறுத்து அவர்களின் ஆட்டம் இருக்கும்.

அந்த கட்டைகள் நம் கையில் இருக்கும் வரை மட்டும் தான் நமது நிலைப்பாடு, இதை கீழே உருட்டியவுடன் வரும் எண்கள் நமக்கு வாழ்வின் சாத்திய பாடுகளை சொல்லி தருகிறது, பெண்கள் அதிர்ஷ்டம் என்ற சொல்லை நம்பி இருக்க வேண்டும் என்று ஆண்களால் திணிக்க பட்ட விளையாட்டாக இது இருக்கலாம் என்று நினைக்கிறேன்,
ஏனென்றால் முயற்சிகளில் வெற்றியை விட தோல்விகளே இதில் அதிகம் கிடைக்கும்,

காரணம் இந்த விளையாட்டில் தாயம்(ஒன்று),ஐந்து,ஆறு,பன்னிரெண்டு என்ற எண்களுக்கு மட்டுமே இதில் தொடர் ஆட வாய்ப்பு, இரண்டு ,மூன்று,நான்கு என்ற எண்கள் வந்தால் நம் சுற்று முடிந்து அடுத்தவர் வாசம் ஆட்டம் போய் விடும், இதில் தொடர் ஆட்ட காரணிகளே நிறைய இருப்பது போல் தோன்றினாலும் சாத்தியப்பாடுகள் முடிவுறு காரணிகளுக்கே அதிகம்,

இருப்பினும் தன்னிடம் இருக்கும் காய்களை நகர்த்தி முடிவுக்கு செல்வதில் எடுக்கும் முயற்சிகள் அவர்களுடைய தலைமை பண்புகளை மேலும் நமக்கு உணர்த்துகிறது,
உண்மையில் நாம் உணர வேண்டியது என்னவென்றால் எந்த சூழ்நிலையிலும் பெண்களும் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியும் என்பதே.

மதியம் சாப்பிட வீட்டிற்கு செல்லும் பொழுது என் மனைவி அண்டை வீட்டாரும் தாயம் விளையாடி கொண்டிருந்தார், விளையாடி விட்டு வர நேரமானதால் வந்த ஆராய்ச்சி இது

22 வாங்கிகட்டி கொண்டது:

g said...

சூப்பர். அருமையான ஒரு விளையாட்டைப் பற்றி சொன்னது. பெண்களுக்கான விளையாட்டுதான் இது.

Anonymous said...

சின்ன வயசுல பாட்டி வீட்டுக்கு போனா என்ன மாதிரி சின்னப்பசங்கள ஒப்புக்கு சப்பாணியா உக்காரவச்சு, தாயம் விளையாடுவாங்க. இப்ப தாயம் எப்படி விளையாடுறதுன்னு ஞாபகம் சுத்தமா இல்லை

வால்பையன் said...

//ஜிம்ஷா said...
சூப்பர். அருமையான ஒரு விளையாட்டைப் பற்றி சொன்னது. பெண்களுக்கான விளையாட்டுதான் இது.//

இன்னும் கிராம புறங்களில் நிறைய விளையாட்டு இருக்கிறது நண்பா.
தனியாக ஒரு ஆராய்ச்சியே செய்யலாம்

வால்பையன்

வால்பையன் said...

//சின்ன அம்மிணி said...
சின்ன வயசுல பாட்டி வீட்டுக்கு போனா என்ன மாதிரி சின்னப்பசங்கள ஒப்புக்கு சப்பாணியா உக்காரவச்சு, தாயம் விளையாடுவாங்க. இப்ப தாயம் எப்படி விளையாடுறதுன்னு ஞாபகம் சுத்தமா இல்லை//

நிறைய விளையாட்டுகள் இப்படி தான் அழிந்து கொண்டிருக்கின்றன.
கிராமங்களில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த விளையாட்டுகள்
நகரமயமாக்கலில் முற்றிலும் அழிந்து விடும் அபாயம் உள்ளது

வால்பையன்

வால்பையன் said...

தமிழச்சியுடன் நேற்று வாய்ஸ் சாட்டில் இது பற்றி பேசும் பொழுது, பெண்கள் உட்கார்ந்து விளையாடி உடம்பை பெருத்து சோம்பேறியாகி விட்டார்கள்,
ஆக்கபூர்வமான சிந்தனைகள் வேண்டும், நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று கூறினார்,
என்னை பொறுத்தவரை நான் வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களை என் மனைவி படிக்காவிட்டாலும் சரி, எடைக்கு மட்டும் போட்டு விட கூடாது. அதை பாதுக்காப்பது தான் என் பெரும்பாடு

வால்பையன்

Anonymous said...

What does 'பல்லாங்குழி ,தாயம்' IN english?

Tech Shankar said...

Pallaanguly, Thaayam patri ivvalavu vishayangalaa aahaa

Unknown said...

அநியாயத்துக்கு யோசிக்கிறீங்க . ஆனா இந்த விளையாட்டெல்லாம் நான் சின்ன வயசில விளையாடியதுதான்

வால்பையன் said...

//DotNet DayCare said...
What does 'பல்லாங்குழி ,தாயம்' IN english?//

தெரியல,
டோண்டு சாரை கேட்டால் தெரியாலாம்

வால்பையன்

வால்பையன் said...

//SQL The Great said...
Pallaanguly, Thaayam patri ivvalavu vishayangalaa ஆஹா//

ஏதாவது விட்டு போயிருக்குமே தவிர இவ்வளவு தான் என்று சொல்ல முடியாது

வால்பையன்

வால்பையன் said...

//jaisankar jaganathan said...
அநியாயத்துக்கு யோசிக்கிறீங்க . ஆனா இந்த விளையாட்டெல்லாம் நான் சின்ன வயசில விளையாடியதுதான்//

நானும் விளையாடியது தான்,
இருந்தாலும் நாளடைவில் நானும் மறந்து போக இருந்தேன்.
நல்லவேளை என் மனைவி ஞாபக படுத்தினால்

வால்பையன்

Selva Kumar said...

சூப்பர் ஆராய்ச்சி...

//மதியம் சாப்பிட வீட்டிற்கு செல்லும் பொழுது என் மனைவி அண்டை வீட்டாரும் தாயம் விளையாடி கொண்டிருந்தார், விளையாடி விட்டு வர நேரமானதால் வந்த ஆராய்ச்சி இது
//

நீங்களும் விளையாடியிருக்கலாமே ....

கூடுதுறை said...

பல்லாங்குழி,தாயம் பற்றி எழுதிவிட்டீர்கள்...

அடுத்து, நொண்டி, கில்லிதாண்டு, கிச்சு கிச்சு தாம்பாளம் பற்றியும் எழுதுங்களேன்

வால்பையன் said...

//வழிப்போக்கன் said...
சூப்பர் ஆராய்ச்சி...
நீங்களும் விளையாடியிருக்கலாமே ....//

சரிதான் மேலும் உதை வாங்க நல்ல ஐடியா கொடுக்கிறீர்கள்

வால்பையன்

வால்பையன் said...

//கூடுதுறை said...
பல்லாங்குழி,தாயம் பற்றி எழுதிவிட்டீர்கள்...
அடுத்து, நொண்டி, கில்லிதாண்டு, கிச்சு கிச்சு தாம்பாளம் பற்றியும் எழுதுங்களேன்//

நொண்டி பெண்கள் விளையாட்டு தான்,
கில்லி தாண்டு ஆண்கள் விளையாட்டு
உடல் உளைப்பிலாமல் விளையாடும் விளையாட்டு கிச்சு கிச்சு தாம்பாளம்
அது பற்றி இன்னும் தீவிர!? ஆராய்ச்சியில் இறங்க வேண்டும்

வால்பையன்

Selva Kumar said...

//உடல் உளைப்பிலாமல் விளையாடும் விளையாட்டு கிச்சு கிச்சு தாம்பாளம்
அது பற்றி இன்னும் தீவிர!? ஆராய்ச்சியில் இறங்க வேண்டும்
//

அடுத்த பதிவா இந்த ஆராய்ச்சி செஞ்சிருங்க.....:-))

கூடுதுறை said...

//கிச்சு கிச்சு தாம்பாளம்
அது பற்றி இன்னும் தீவிர!? ஆராய்ச்சியில் இறங்க வேண்டும்//

ஆராய்ச்சியா?

எனது பின்னுட்டத்தில் இணைப்பு புகைப்படம் கவனித்திரா?

Natty said...

எங்க எடுத்தாலும், பெண்ணையும் ஆணையும் பிரித்து பேசிவிட்டு, பெண்மைக்கு சிறப்புன்னு சொல்றது, தவறுன்னு தோனுது..... பல்லாங்குழி பெண்கள் பலர் விளையாடிய விளையாட்டு, தாயம் ஆண்களும் சரி - பெண்களும் சரி விளையாடிய விளையாட்டு, ஆடு புலி ஆட்டம் ஆண்கள் அதிகம் விளையாடிய விளையாட்டு, மரப்பாவை, சின்ன தேங்காயில் குச்சி வைத்து சத்தம் வர வைப்பது, பூவரசம் இலையில் குழல் ஊதுவது, எல்லாமே அழகு, அறிவு, திறமை கொண்டதுதான்....

அறிவும் திறனும் தனிநபர் முயற்சியும், சூழலும், பிற காரணிகளையும் பொறுத்தது.

/
இன்று ஆண்களை விட பெண்களே குடும்ப பொறுப்புகளை சீராக நடத்துகிறார்கள்
/

எங்க இருந்தய்யா உங்களுக்கு மட்டும் இவ்வளவு தகவலும் வருது... இல்லறத்திலேயும் ஆண் பெண் பேதமை பாராட்டுவது.., அங்கேயும் வட்டம், சங்கம், உரிமை, எல்லா பேதங்களையும் கொண்டு வருகிறோம்...

நம்முடைய சிந்தனைகள் மற்றும் ஊடகங்கள் மூலமாகவே இயல்பான அன்பு நிலை இழந்து, நான் என்ற முனைப்பை மட்டுமே கொண்டு, எந்த ஆணும், எந்த பெண்ணும் மகிழ்ச்சியாக வாழ முடியாது...

ச்சும்மா.... ரொம்ப நாள் உங்க பதிவெல்லாம் படிச்சு, ஒரு பின்னூட்டம் கூட போடமால் இருந்து, இன்னைக்கு ஏதாவது எழுதனும்னு தோனுனதாலே வந்த ஒரு சிந்தனை தான்... நுண்ணரசியல்லே இதெல்லாம் ஜகஜம்ப்பா!

வால்பையன் said...

//வழிப்போக்கன் said...
//உடல் உளைப்பிலாமல் விளையாடும் விளையாட்டு கிச்சு கிச்சு தாம்பாளம்
அது பற்றி இன்னும் தீவிர!? ஆராய்ச்சியில் இறங்க வேண்டும்
//
அடுத்த பதிவா இந்த ஆராய்ச்சி செஞ்சிருங்க.....:-))//

வேற ஆராய்ச்சி ஓடுது வழிப்போக்கன்

வால்பையன்

வால்பையன் said...

//கூடுதுறை said...
எனது பின்னுட்டத்தில் இணைப்பு புகைப்படம் கவனித்திரா?//

ரொம்ப நல்லாயிருக்கு
எங்க எடுத்திங்க?
எதுல எடுத்திங்க?
எப்படி எடுத்திங்க?

வால்பையன்

வால்பையன் said...

// Natty said...
எங்க எடுத்தாலும், பெண்ணையும் ஆணையும் பிரித்து பேசிவிட்டு, பெண்மைக்கு சிறப்புன்னு சொல்றது, தவறுன்னு தோனுது.//

//அறிவும் திறனும் தனிநபர் முயற்சியும், சூழலும், பிற காரணிகளையும் பொறுத்தது. //

இங்கே நீங்க சொன்ன காரணிகள் பெண்களுக்கு முழுமையாக கிடைப்பதில்லை,
இந்த பதிவு ஒரு நேர்மறையான எண்ணத்துடன் எந்த சூழலையும் நமக்கு சாதகமாக எடுத்து கொள்ளமுடியும் என்று எழுதப்பட்டது,

//எங்க இருந்தய்யா உங்களுக்கு மட்டும் இவ்வளவு தகவலும் வருது... இல்லறத்திலேயும் ஆண் பெண் பேதமை பாராட்டுவது.., அங்கேயும் வட்டம், சங்கம், உரிமை, எல்லா பேதங்களையும் கொண்டு வருகிறோம்...//

குடும்ப நிர்வாகம் ரொம்ப சிக்கலானது என்று என் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன்,
அதை மையப்படுத்தி தான் அவ்வாறு எழுதினேன்.

வால்பையன்

கவிதா | Kavitha said...

வால் பையன்,பல்லாங்குழி க்காக தேடின்னப்ப கிடைச்சுது.. படிச்சேன்..

நன்றி... பல்லாங்குழி பற்றியும் எழுதும்.. நிறைய மறந்துட்டேன் பாக்கலாம்.. :)

!

Blog Widget by LinkWithin