என்ன நடந்தால் நமக்கென்ன

ஒருவர் எதிர்மறையாக சிந்திப்பதை அவர் பாதுகாப்பாக கருதுவார் என்பதால் அது அவர் விரும்பம்னு விட்டலாம்., ஆனால் அந்த எதிர்மறை சிந்தனையை நம் மீது திணிக்கும் பொழுது எனக்கு அதிர்ச்சியும், பரிதாபமும் ஏற்படும். அவள் ஏன் அவன் கூப்டதும் போனா என்பது கூட தன்னை ஒழுக்கவாதி வட்டத்தில் இருப்பதாக காட்டிக்கொள்ளும் மனநிலை. போலயே சாதி வேண்டும் என்பவர்கள், மதம் வேண்டும் என்பவர்கள். கடவுள் நம்பிக்கையாளர்களை கூட விவாதத்தில் புரியவைக்க முடியும், குறைந்த பட்சம் 1%வது யோசிப்பார்கள்

ஆனால் இந்த எதிர்மறை சிந்தனை கொண்டவர்கள் நம்மையும் சேர்த்து குழிக்குள் இழுப்பார்கள். பெரிய இவனாட்டும் எழுதுறியே நீ உலகை மாத்தியிருவா?  நீ எழுதினால்
சாதி ஒழிஞ்சிருமா?
மதம் அழிச்சிருமா?
கடவுள் இல்லைனு ஆயிருமா?
அவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்துருவா?
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திருவா?

உனக்கு என்ன தாண்டா பிரச்சனை? என் எழுத்து மொக்கைன்னு நினைக்கிறியா, ஆமா மொக்கை தான், எல்லாரும் 2 வரி எழுதி 200 லைக்ஸ் வாங்கினா நான் 200 வரிகள் எழுதி 2 லைக்ஸ் வாங்குவேன். 5000 ஃப்ரெண்ட்ஸ். 10000 பாலோயர்ஸ் இருக்காங்க, ஏன் அவங்கல்லாம் படிக்கலன்னு நான் கவலை படலையே, உங்கிட்டயும் வந்து ஏண்டா என் கட்டுரைய படிக்கல, ஏண்டா லைக் போடலன்னு நான் கேட்க போறதும் இல்லயே.



நான் எழுதுவது ஒரு முயற்சி, ஒரு முன்னெடுப்பு. என்னால் இமயமலையை நகர்த்த முடியாது, ஆனால் அதில் இருந்து ஒரு சின்ன கல்லை உடைக்க முடியும். கண்டிப்பாக முடியும். நான் தெரியாதுன்னு சொல்லுவேன், ஏன்னா அது எனக்கு உண்மையிலயே தெரியாது., ஆனா முடியாதுனு சொல்ல மாட்டேன், ஏன்னா என்னால் கத்துக்க முடியும், உலகில் யாரோ ஒருவரால் முடிகின்ற விசயம் நிச்சயம் என்னாலும் முடியும்

நான் எழுதி விட்டு, அதன் விளைச்சலை ரசித்து அறுவடை செய்ய அமர மாட்டேன், வேற என்ன எழுதலாம்னு யோசிக்க போயிருவேன். என் எழுத்து இந்த உலகில் 0.00000001% மாற்றத்தை ஏற்படுத்தினாலும் போதும், என் பேராசை ஒன்றே ஒன்று தான், நான் இந்த பூமியை விட்டு செல்லும்  பொழுது என் வருகையை அழுத்தமாக பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டாம், என் வருகை ஒரு சாதாரண மனிதனை போல் மறக்கப்பட கூடாது.

நீ முடியாது முடியாதுன்னு இப்படியே உட்காந்துகிட்டு இரு. நான் உருண்டாவது நகர முயற்சிப்பேன், நகர விரும்பும் நண்பர்கள் என்னுடன் பயணிப்பார்கள். என் எழுத்து சரியோ தவறோ, உண்மையோ பொய்யோ, ஆனால் எதையுமே செய்யாமல் இருப்பதற்கு அதையாவது செய்வது தான் என் பிறப்புக்கு நான் செய்யும் மரியாதை.

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin