நான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...

நான் மூணு வருசமா சொல்லிகிட்டு இருக்கேன் 2019ல இந்தியா மிக பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கும்னு

சில மாதங்களுக்கு முன்னால் மூன்று வங்கிகளை ஒன்றாக இணைந்தார்கள், அதற்கு காரணம் அதில் இரண்டு வங்கி நட்டத்தில் இயங்கியது. அதிலானென்ன தப்புன்னு கேட்கலாம். விவரம் புரிந்தவர்களுக்கு தெரியும், இந்திய அளவில் அதனால் எத்தனை வேலை இழப்புகள் ஏற்படும்னு

சமீபத்தில் அரசு பொது நிறுவனமான BSNL சம்பளம் கொடுக்க காசில்லாமல் நின்றது, அந்த சமயத்தில் தான் பொது வெளியில் தெரிய வந்தது, BSNL போல் சுமார் 8 அரசு பொது நிறுவனங்கள் வரை சம்பளம் கொடுக்க காசு இல்லாமல் கடனுக்கு மேல் கடன் வாங்கிக்கொண்டிருக்கிறது என்பது.

நேற்று வந்த செய்தி BSNL தனது பணியாளர்கள் 54000 பேரை கட்டாய ஒய்வு கொடுத்து வெளியே அனுப்புகிறது. அவர்கள் வெளியே வந்த பிறகு அவர்களுக்கு கிடைக்கவேண்டிய தொழிலாளர் வைப்பு நிதியை பெற நடையா நடக்கனும், ஏன்னா போலியோ செட்டுமருந்து வாங்கவே கஜானாவில் காசு இல்லை.

பிறகு எப்படி விவசாயிகளுக்கு மட்டும் மோடி வருடம் 2000 ரூபாய் தரப்போறார். அது மீண்டும் ஆட்சிக்கு வர பாஜக செய்யும் மோசடி என்பதை அறியாதவனும், மோடியின் மலம் கூட உண்ண தகுந்தது என் நம்பிக்கொண்டிருக்கும் சங்கி மட்டுமே அதிலும் ராமர் கோயில் வந்தால் இந்தியா வல்லரசாகி விடும் என சத்தியம் செய்பவன் மட்டுமே அதை நம்புவான்

இன்று இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் என்ற நிறுவனம் லக்சுமி விலாஸ் வங்கியை வாங்கி கொள்வதாக ஒப்பந்தம் போட்டுள்ளது. ஒரு நிறுவனத்தை ஒரு நிறுவனம் வாங்குவது சகஜம் தானே என்பதை ஒரு பொருளாதார நிபுணன் ஒத்துக்கொள்ள மாட்டான், பெரும் திமிங்கலம் ஒன்று எல்லா சிறு மீன்களையும் சாப்பிடுவதற்கு சமம்.



காங்கிரஸின் தேர்தல் அறிக்கை சாத்தியமா? அதனால் தேசம் வளர்ச்சி பாதையில் செல்லுமா?
நல்ல கேள்வி தான்.. மாட்டுக்கு ஆதார் கொடுப்பது தான் தேசத்தின் வளர்ச்சியா? சாமியார்களுக்கு பென்சன் கொடுப்பது தான் தேசத்தின் வளர்ச்சியா? நல்ல கல்லூரிகளையும், சுகாதார கூடங்களையும் அமைக்காமல் ராமர் கோவில் கட்டுவது தான் தேசத்தின் வளர்ச்சியா? 3000 கோடியில் சிலை அமைப்பது தான் தேசத்தின் வளர்ச்சியா?

அந்த கூமுட்டைதனத்தை காங்கிரஸ் செய்யாது என நம்புவோம். ஆனால் காங்கிரஸ் யோக்கிய கட்சி இல்லையே. அதனால் தான் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக போன்றோர் காங்கிரஸையும், திமுகவை விமர்சித்துக்கொண்டு வருகிறோம், சரிப்பா காங்கிரஸ் வேண்டாம், சீமானோ, கமலோ, டிடிவியோ பிரதமர் நாற்காலியில் உட்கார முடியுமா? அவர்களுக்கு ஆதரவு என்று இந்தியா முழுக்க சில்லறைகளை சிதறவிட்டு கொண்டிருக்கிறார்களா?

நீங்கள் தான் சங்கிகளை விட ஆபத்தானவர்களாக இருக்கிறீர்கள். எங்கள் கொள்கை தான் பெருசு அதுவே உயிர் என மார் தட்டிக்கொண்டிருக்கிறீர்கள், உண்மையில் பெர்பெக்‌ஷனிசன் என்பது ஒரு மனநோய். சங்கிகள் கூட திருந்திவிடுவார்கள் போல., உங்கள் மனநோயை எப்படி சுகப்படுவதுன்னு எனக்கு தெரியல. நாளைக்கு நம்ம புள்ளகுட்டிங்க தெருவில் நிற்கும் போது உண்ர்வீர்களா இல்ல சீமானோ, கமலோ, டிடிவியோ உங்களுக்கு கோமணம் வாங்கி தருவார்கள் என நம்புக்கொண்டுயிருப்பீர்களா?

உங்கள் மனநோயை நீங்களே குணபடுத்திக்கொள்வது மட்டுமே ஒரே வழி. பாஜக தேசத்தை பாழ் செய்துவிட்டது, பொருளாதாரத்தை அதள பாதாளத்தில் தள்ளிவிட்டது. நம்மை கே.ஜி.எஃப் படத்தில் வரும் அடிமைகளை போல் நடத்த கார்ப்ரேட்டுகளை மட்டுமே வளர்த்து வைத்திருக்கிறது. இனியும் இதன் அபாயத்தை நீங்கள் உணராமயிருந்தால். உங்கள் மனநோயை குணப்படுத்தவே முடியாமல் போகும்...

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin