எங்கே செல்கிறது உலகம்?????

ஈகோவை தமிழ்படுத்தினால் நான் என்ற அகங்காரம் என்று புரிந்துக்கொள்ளப்படும். ஆனால் பல மருத்துவர்கள் அதன் உண்மையான அர்த்ததை புரிந்துகொள்ளவில்லை. உலகில் எல்லா மனிதர்களுகும் ஈகோ உண்டு. நான் உன்னை விட ஒரு படி உயர்ந்தவன் என்பதாக காட்ட அந்த உள்ளுணர்வு தூண்டிக்கொண்டே இருக்கும். சம்பந்தமே இல்லாமல் ஒருவர் எனக்கு அவனை தெரியும், இவனை தெரியும் என பேசுவதை கவனித்ததுண்டா. அதுகூட நான் உன்னை விட ஒரு படி உயர்ந்தவன் என காட்டுவது தான். நான் எந்த பழக்கமும் இல்லாத ஒழுக்கவாதியா காட்டிக்கொள்வதும் ஈகோ தான்.

மருத்துவர்கள் புரிந்துகொள்ளவில்லை என சொன்னது. ஈகோ என்றாலே கோவமாக புரிந்துக்கொள்வது தான். ஆனால் ஈகோ அப்படியில்லை. அதீத அன்பில், அதீத காதலும் கூட நான் உன்னை விட ஒரு படி உயர்ந்தவன்/ள் என காட்டிக்கொள்ள முடியும். பெரும்பாலும் ஆண்கள் உடலாலும், பணத்தாலும், போட்டியிலும் தன் ஈகோவை காட்டுவதையே விரும்பினார்கள். ஒரு சில ஆண்கள் மட்டுமே அன்பில் தங்கள் ஈகோவை காட்டினார்கள், ஆனால் பெண்கள் ஆரம்பத்தில் இருந்தே தங்களை அழகு படுத்தி கொள்வதிலும்,அன்பிலும், காதலிலும் மட்டுமே தங்கள் ஈகோவை காட்டினார்கள். வேற வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனலாம். ஆண் எங்கேயோ, யாரிம் ஈகோவின் முன் தன்னை வெளிப்படுத்த முடியாமல் தன் ஈகோவையை பெண்ணிடம் காட்டினாலும் அவள் மாறாக காதலையே காட்டுவாள்

நாகரிகம் வளர வளர பொருள்முதல்வாத சிந்தனையில் இருந்து மனிதன் கருத்துமுதல்வாத சிந்தனைக்கு மாறினான். மனிதர்களில் ஏற்றதாழ்வு இல்லை என்றான். வர்க்கபேதத்தை சாடினான். அன்பே பிரதானம் என வாழ நினைத்தவர்கள் கருத்தியல் சிந்தனையை ஏற்று கலை, இலக்கியம், அறிவியல் என தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி நம்மால் சமூகத்துக்கு எதாவது செய்ய முடியுமா என யோசித்தார்கள். தங்கள் ஈகோவை விட மறுத்த கூட்டம், சாதி, மதம், வர்க்கம் என ஏற்றதாழ்வுகளில் வன்முறையை செலுத்தி தங்கள் ஈகோக்கு தீனி போட்டது

தனக்கு சமமாக அமர்வதா என்று இம்மானுசேகரன் என்பவர் கொல்லப்பட்ட கதை உங்களுக்கு தெரியுமா? சாதியம் என்னும் ஈகோ. உன் மதம் என்ன அவ்ளோ பெருசா என நாடு முழுவதுமே சண்டை நடந்துக்கொண்டு இருக்கிறது. அதே வக்கிர ஈகோ தான் பெண்களின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஆப்ஃப்ட்ரால் ஒரு பொம்பள எனக்கு ஐடியா கொடுக்கிறியா என்பதில் ஆரம்பித்து தன் அதிகாரத்தை பயன்படுத்தி பாலியல் துன்புறுத்துதல் வரைக்கும் தன் ஈகோவை காட்டும் முயற்சி தான்.

நான் எழுதும் பொழுது சகமனிதனை மனிதனாக மதியுங்கள் என்று எழுதுவேன். பெண்ணை மதின்னு எழுத மாட்டேன், அனைவர்களை மனிதர்களாக பார்க்க என்னால் முடிகிறது. இங்கே எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமே நாம் குழந்தைகளில் இருந்தே துவங்குகிறது. அவர்களுக்கு ஏற்றதாழ்வுகளை ஊட்டி விடுகிறோம். வர்ஷாவுக்கு 7.30க்கு கிளாஸ் முடியும், பெண் குழந்தைகளை பெற்றோர் வந்து கூட்டி செல்லனும், எல்லா குழந்தைகளையும் பெற்றோர் வந்து கூட்டி செல்லனும் என்பதே சரி, இந்த குழந்தை பருவத்திலே ஆணை உயர்த்தி விட்டால் அவன் பெண்ணை வீக்கர் செக்ஸா தானே பார்ப்பான்

பெண் குழந்தைகள் வெளியும் செல்லும் பொழுது உடை நேர்த்தியை கவனிக்கும் என்பதை பெற்றோர்கள் அதே கருத்தியலை ஆண் குழந்தைகளுக்கும் காட்டுகிறீர்கள். என் குழந்தைகளின் பள்ளி சான்றிதழில் சாதி,மதம் என்ற இடத்தில் கோடுகள் தான் இருக்கும். இதனால் எதிர்காலத்தில் இடஒதுக்கிடு பெறுவதில் சிக்கல் வரும் என என் நண்பர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும் சாதி,மத படிநிலைகளில் அவர்களை அமர வைக்க நான் விரும்பவில்லை. எனக்கு எல்லா சாதியிலும் நண்பர்கள் உண்டு என்பவன், எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் உண்டு என்பவன் உண்மையில் சமநிலையை உணரவில்லை, நண்பன் என்றால் நண்பன் மட்டுமே.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எவ்வாறு அமைக்க தீர்மானிக்கிறீர்கள் என சிந்தித்ததுண்டா? நிம்மதியான வாழ்வா அல்லது வசதியான சொகுசான வாழ்வா? உண்மையில் சொகுசான வாழ்வுக்கு தான் அவர்களை பணம் சம்பாரிக்கும் இயந்திரமாக மாற்றிக்கொண்டியிருக்கிறீர்கள். அந்த போட்டியில் வர்க்கபேதத்தில் சிக்கி வசதி படைத்தவன் தன் ஈகோவை காட்ட வசதி இல்லாதவன் தன் ஈகோ தன்னை விட இயலாதவனிடம் போய் காட்டுவான். உண்மையில் இங்கே நடக்கும் எல்லா செயல்களும் பட்டாம்பூச்சியின் இறக்கை விளைவு தான். ”எல்லா தேவைகளுக்கு பின்னால் ஒரு காரணமும், எல்லா விளைவுக்கு பின்னால் ஒரு செயலும் இருக்கும்”

சாதிய படுகொலைகள், மதபடுகொலைகள், கூட்டுபாலியல் வன்முறைகள் அனைத்துக்கு பின்னும் பொருள்முதல்வாத கருத்தியல் சிந்தனையே உள்ளது. இது என் இடம், இது என் சொந்து, நீ என் அடிமை என்பதின் வெளிப்பாடே இத்தனை வன்முறைகளுக்கும் காரணம். நான் பிரச்சனைகளுக்கு தற்காலிய தீர்வை தேட மாட்டேன். பிரச்சனையின் அடி ஆழம் வரை யோசிப்பேன். இந்த மனிதன் வாழ ஒரே வழி பொதுயுடமை என்ற கருத்துமுதல்வாத சிந்தனை மட்டுமே

முதல் ரேங்க் எடுன்னு என படிக்க சொல்லாதீர்கள், இதில் எதுவோ இருக்கு அது என்னான்னு தெரிச்சுக்கோன்னு சொல்லுங்க.கற்பதை ஊக்கப்படுத்துங்கள் எந்த புத்தகமாக இருந்தாலும், ஒரு பூவை ரசிக்க கற்றுக்கொடுங்கள், ஓவியம் வரைய கற்றுக்கொடுங்கள், நடனம் ஆட கற்று கொடுங்கள், இயற்கையும் நாமும் வேறு வேறு அல்ல என கற்றுக்கொடுங்கள். இல்லாதவருகும், இயலாதவருக்கும் நாம் செய்வது உதவி அல்ல, அது மனிதத்தின் கடமை என கற்றுக்கொடுங்கள். நம் ஈகோவை நம்மால் ஒழிக்க முடியாது., ஆனால் நான் உன்னை விட அன்பானவன் என்பதில் கூட நம் ஈகோவை வெளிப்படுத்தலாம்

கிட்டதட்ட இரண்டரை லட்சம் வருடங்களாக இந்த பூமியை ஆட்சி செய்து கொண்டிருப்பது ஹோமோ சேபியன்ஸ் சேபியன்ஸ் என்ற மனிதர்களாகிய நாம். ஆனால் இப்போதிருக்கும் நிலையில் அடுத்த பத்தாயிரம் வருடத்தில் மொத்த மனித இனமே அழித்து விடும் என்பதாகவே என் உள்ளுணர்வு உள்ளது. மனிதர்களின் போட்டி அரசியலில், வர்க்க பேதத்தில் தன் ஆழ்மன தூண்டுதலால் இந்த பூமியையும் அழிக்க போகிறோம். நம் சந்ததிக்கு கரிதுகள் மட்டுமே மிஞ்சம்.

மாறுங்கள். காதலாலும், அன்பாலும் உங்கள் ஈகோவை காட்டுங்கள்
மனிதம் வளர்ப்போம்


0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin