நண்பர் பாலகணேசன் எழுதிய ஜாக்கிசான் பதிவு எனக்கு மலரும் நினைவுகளை தூண்டி விட்ருச்சு
நான் பிறக்கும் போது பார்ன் வித் சில்வர் ஸ்பூன் டைப் தான், எங்கப்பாவுக்கு தற்காப்பு கலைகள் மேல் ஆர்வம் அதிகம். ப்ரூஸ்லீ படம் எப்ப வந்தாலும் அவர் வேலை செய்யும் இடத்தில் இருந்து ஒரு ஆட்டோகாரரிடம் பணம் கொடுத்து என்னை வீட்டில் இருந்து கூட்டிட்டு வந்து அவருக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து இண்டவெல்லில் முதல் ஒரு ஐஸ்கிரிம் திரும்ப படம் போட பெல் அடிச்சதும் ஒரு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து படம் முடிந்ததும் வீட்டில் கொண்டு போய் விடனும்.
அப்ப ப்ரூஸ்லீ, ஜாக்கிசான் படங்களுக்கு மதுரை தங்கரீகல் தியேட்டர் ஃபேமஸ். சில வருடங்கள் கழித்து மாப்பிள்ளை விநாயகர் ஆங்கில பட இடத்தை பிடித்தது. ஜெட்லியோட த ரெபள் என்ற படம் அஙக் தான் பார்த்தேன், அதோட ஒரிஜினல் டைட்டில் ஒன்ஸ் அபான் எ டைம் இன் சைனா
தங்கரீகல் தியேட்டர் டிக்கெட் கவுண்டரில் நிற்கும் போது செம காமெடியா இருக்கும், வண்ணதிரை, சினிகூத்தி பத்திரிக்கை தோத்துபோகும் அளவு சினிமா கிசு கிசு பேசிக்கொள்வார்கள். ப்ரூஸ்லீயோட அண்ணன் பையன் தான் ஜெட் லீ, ஜாக்கிசானோட வளர்ச்சி பிடிக்காம இறங்கி விட்ருக்காங்க, ப்ரூஸ்லீக்கு விசம் கொடுத்து கொன்னதே அவர் பொண்டாட்டி தான்னு
ஜாக்கிசான் காலத்தில் ஸ்டண்ட் அஸிஸ்டண்டுகளாக வந்தவர்களில் முக்கியமானவர்கள் samohung மற்றும் yuanbio இருவரும் ஜாக்கிசான் கூட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள் சிறந்த நண்பர்களும் கூட, இதில் சமோஹங் இயற்கையாவே பெருத்த உருவம், அந்த உருவம் வச்சிகிட்டு பல்லி அடிச்சு ஃபைட் பண்றது ஆச்சர்யம், இப்மேன் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 58. ஃபைட் செமையா இருக்கும்
மார்சல் ஆர்ட்ஸ் சண்டை படங்களில் ஜாக்கி, சமோஹங், யிவான்ப்யோ மூன்று பேர் தவிர மற்ற அனைவருமே ரொம்ப சீரியஸா சண்டை போடுவாங்க, சண்டை காட்சிகளில் காமெடி புகுத்தியது முதலில் ஜாக்கி சான் தான், அவரு கூட ஆரம்பகால படங்கில் சீரியஸா தான் சண்டை போட்டுகிட்டு இருந்தார். த ட்ரங்கின் மங்கி படத்தில் எதேச்சையா சண்டையில் காமெடி அமைந்து அது ஹிட் ஆகி, அதே ஃபார்முலாவை கடை புடிக்க ஆரம்பித்தார்
ப்ராஜெட் ஏ படம் வரை ஆரம்பகால சீன கதைகள் இருக்கும், அதன் பிறகு சமகாலத்துக்கு சீன சண்டை படங்கள் வந்தது, அதில் அவர் நண்பர்களை இணைத்துக்கொண்டார். இந்த மூவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்கள், இந்த மூவருமே படங்களை இயக்கியும் உள்ளார்கள். முக்கியமா இந்த மூவர் படங்களில் முதலில் வில்லனிடம் அடி வாங்கிட்டு கடுமையான பயிற்சிக்கு பின் வில்லனை ஜெயிப்பது போல் இருக்கும்
ஆனால் ஜெட்லீயின் வருகைக்கு பின் கள எதார்த்தமே மாறிப்போனது. மார்சல் ஆர்ஸ் சண்டை படங்கள் என்றாலே மேஜிக் ஷோ மாதிரி ஆகிருச்சு, முக்கியமா த ஒன் என்ற ஜெட்லி படம் பார்த்திங்கன்னா தெரியும், ஹார்லி டேவின்சன் ரெண்டு பைக்கை தூக்கி ஒருத்தனை அடித்தான், நிஜத்தில் ரெண்டு சைக்கிளை தூக்கி அடிப்பதே கஷ்டம்.
ஆயிரம் குங்க்ஃபூ நடிகர்கள் வந்தாலும் ஆதிகால ஜாக்கிசான் படம் போட்டாலும் சரி, கடைசியா வந்த ப்ளீடிங்ஸ்டீல் படம் போட்டாலும் சரி, வேற சேனலே மாத்தாமல் பார்த்துட்டு இருப்பேன், ஆம்பளைகளையில் யாரையாவது லவ் பண்றியான்னு கேட்டா நான் ஜாக்கிசானை தான் சொல்வேன்

0 வாங்கிகட்டி கொண்டது:
Post a Comment