நியூட்ரினோ ஆய்வு!

ஒரு பக்கம் ஹாக்கிங்கை படி்கிறிங்க. இன்னொரு பக்கம் நியூட்ரினொ திட்டத்தை எதிர்க்கிறீர்கள் என்பவர்களுக்கு பதில்

1 ஹாக்கிங் கடவுள் துகள் என்ற ஹிக்ஸ்போஸான் முயற்சியை தேவையற்றதுன்னு சொன்னதா தான் எனக்கு ஞாபகம்.

2 கடலில் கொட்டிய எண்ணெயை அகற்ற வாளி பயன்படுத்தும் தொழில்நுட்பம் நம்முடயது. அதற்கு முறையான கருவிகள் வாங்க நிதி ஒதுக்கலாம்

3 புயல் எச்சரிக்கை புயல் வருவதற்கு முன்னர் அளிக்கப்பட வேண்டாம். ஆனால் மீனவர்கள் கடலுக்கு சென்ற பின்னர் புயல் வந்த பின்னர் புயல் எச்சரிக்கை அளிக்கப்பட்ட பெருமைமிகு தொழில்நுட்பம் நம்முடையது. அதை மேம்படுத்த நிதி ஒதுக்கலாம்

4 குரங்கிணி பகுதியில் காட்டுதீ ஏற்பட்டு 12 உயிர்கள் பலியாகியுள்ளது. வன துறையின் தாமதமே அதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. அதனை மேம்படுத்த நிதி ஒதுக்கலாம்

5 வளர்ந்த நாடுகளை விட அறிவியலில் இந்தியா 20 வருடங்கள் பின் தங்கி உள்ளது. நியூட்ரினோ ஆராய்ச்சி என்பது இதுவரை யாரும் செய்யாமல் நாம் புதிதாக செய்வதல்ல. எப்படி விமானம், அணூ உலை வெளிநாடுகளில் வாங்கினமோ அதே தான் இப்போதும் உபகரணம் வாங்க வேண்டும். அது தேவையில்லாத நிதி விரயம்



6 போக மீண்டும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு. வளர்ந்த நாடுகளில் கரும்பு, ஆமணக்கில் இருந்து எடுக்கப்படும் எத்தனால், மெத்தனால் கொண்டு பயோ டீசல் பயன்படுத்தபடுகிறது. ஒரு பக்கம் விவசாயமும் பாதுகாக்கப்படுகிறது, மண் வளமும் பாதுகாக்கப்படுகிறது.

7 முன்னாடியே சொல்லியிருக்கனும்
தெர்மாகோல் போட்டு நீர் ஆவியாகமல் தடுப்பது தண்ணீர் தொட்டிக்கு தான். ஏரிக்கு அல்ல. நீரில் இருந்து மின்சாரம் எடுப்பதால் நீரின் சுவை குறைகிறதுன்னு ஒரு மத்திய அமைச்சர் சொன்னார், சோலார் மின்சாரம் பயன்படுத்துவதால் பூமியில் வெப்பம் குறையும்னு ஒரு அமைச்சர் சொல்றார். இப்படி விஞ்ஞானிகளை வச்சிகிட்டு நியூட்ரினோ ஆராய்ச்சி தேவையா?

முதல்ல கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பா இருக்கான்னே தெரியல

2 வாங்கிகட்டி கொண்டது:

shri Prajna said...

நீங்க சொல்றது சரியாதா இருக்கு

சிங்கம் said...

ரஜினி சிஸ்டம் சரியில்லைன்னு பொதுவாக சொன்னாலும் அது தான் உண்மையாக உள்ளது."தெர்மோகோல்" போன்ற விஞ்ஞானிகளை வைத்துக்கொண்டு இந்த நாடு என்றைக்கு உருப்பட போகிறது....

!

Blog Widget by LinkWithin