பரிணாமம் நின்று விட்டதா?

கேள்வி கேட்டவர் Mr GK

//Hello Mr. Raj Arun. We saw your posts involving answer to some scientifical questions. We have a below query, please clarify if possible.

As per Darvin theory, most of the researchers accept that humans came from Apes. Doubt is, why now that evolution has been stoped? Why nowadays human not evolved from monkey ? And both human & monkey two species exist parallelly. Why? Please explain in tamil or english.//

மனிதன் குரங்கிலிருந்து பரிணமித்தான் என நேரடியாக புரிந்துக்கொள்ளக்கூடாது. குரங்களிலும் பல வகை உண்டு. பிக்மி மார்மோசெட் என்ற உலகின் மிகசிறிய வகை குரங்கும் உண்டு( மரத்தை பிடித்தது போல் நம் விரலை பிடித்துக்கொள்ளும்
 Pygmy marmoset இந்த பெயரை கூகுள் செய்யவும்) கொரில்லா வகை குரங்குகளும் உண்டு.



குரங்கு வகை என்பதை ஒரு மரமாக கொண்டால் குரங்கு வகைகள் அனைத்தும் அதில் இருக்கும் கிளைகள். அந்த கிளையில் உச்சாணி கொம்பில் உயர்ந்து நிற்பது மனிதன் என்ற உயிரினம் எனலாம். அதற்கு அடுத்து போனோபோ என்ற சிம்பன்சியின் அடுத்த படிநிலை குரங்கும், அடுத்து சிம்பன்சியின் உள்ளது. இவைகள் ஆயுதத்தை பயன்படுத்துவதில் மனிதனுக்கு நெருக்கமாக உள்ளன.

பரிணாமம் நின்று விட்டது என புரிந்து கொள்வது, பூமி சுற்றவேயில்லை. சுற்றினால் நமக்கு என் தெரிவதில்லை என்ற கேள்விக்கு சமமாக பார்க்கிறேன். முன்னது மிக மெதுவாக நடைபெறக்கூடியது, பின்னது மிக வேகமாக நடைபெறக்கூடியது. பரிணாமத்தை மனிதம் நமக்கு கிடைத்த சுவடுகள் வைத்து புரிந்துக்கொண்டான். கண் முன் கிடைத்த ஆதாரங்களின் அதிக பட்ச சாத்தியகூறுகள் அறிந்து ஏற்றுக்கொண்டான்.



பரிணாமத்தை ஏற்றுக்கொள்வதில் மனிதனுக்கு இருக்கும் பெரும் தடை அது படைப்புவாத கொள்கையை மறுக்கிறது. படைப்புவாத கொள்கை பொய் என்றால் அங்கே கடவுளுக்கு வேலை இல்லாமல் போகிறது. இது நாள் வரை தான் நம்பி வந்த கடவுள் பொய் என்பதை மனிதனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வாடிகனே பரிணாமத்தை ஏற்றுக்கொண்டாலும் இன்றும் பூமி தட்டை தான், கோள வடிவம் இல்லை என்றும், சூரியன் தான் பூமியை சுற்றுகிறது என்றும் நம்பும் அதற்கு மாறாக பேசுபவர்கள் சாத்தானின் வாரிசுகள் என உண்மைய ஏற்றுக்கொள்ள மறுக்கும் மதவாதிகள் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

பரிணாமம் குறித்து எனது வலைபூவில் தொடர் கட்டுரை எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும் பொழுது படித்து கேள்விகள் கேட்கவும்

1 வாங்கிகட்டி கொண்டது:

நம்பள்கி said...

Evolution has NOT stopped...It evolutes for sure even now. And, by the way, evolution is NOT an overnight phenomenon. It takes millions of years...Please study evolution [in-depth] first...Then ask questions!!

To the question why monkeys and humans exist parallel. The answer is simple.
Not all Monkeys turn into humans...you are right..!

There are still Monkeys entered into TamilNadu through Ratha Yatra...

Therefore, Monkeys can still co-exist with humans--as proved by BJP Ratha yatra...!?

!

Blog Widget by LinkWithin