கேள்வி-பதில்

கேள்வி:
இயற்கை இனபெருக்கத்திற்காக ஆண், பெண் என படைத்துள்ளது இருப்பினும் ஓரினைசேர்க்கை விருப்பம் மனிதனுக்கு மட்டும் ஏன்?

பதில்:
சிங்கம், குரங்கு, பறவைகள், பென்குயின் மற்றும் மனிதன் உட்பட 268 விலங்குகள் பைசெக்ஸுவல் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இருபால் விரும்பிகள்.

ஓரினை சேர்க்கை விருப்பத்திற்கு காரணம் மனரீதியானது, சிறு வயதில் ஹாஸ்டலில் இருந்து படித்தல், சிறார் சிறையில் இருப்பது, உறவினர்களே செக்ஸிக்காற்காக பயன்படுத்திகொள்வது என பல காரணிகள். ஹாஸ்டலிலும், ஜெயிலிலும் பாலியல் தேவைகள் ஓரினைசேர்க்கை மூலம் தீர்த்துக்கொள்வார்கள்.

முதல் பிரச்சனை அம்மாதிரி வயதில் செக்ஸ் வைத்துகொள்வது எதிர்பால் ஈர்ப்பை குறைக்கலாம். செக்ஸ் என்றால் இவ்ளோ தான் என நினைக்க வைக்கலாம்.
இரண்டாவது பிரச்சனை தாழ்வு மனபான்மை, தன்னால் ஒரு பெண்ணை திருப்தி படுத்தமுடியாது என்றோ, பெண்களுடன் உறவு கொண்டால் தேவையில்லாத வியாதி பிரச்சனைகள் வரும் என பயப்படுவது.

கிரேக்கர்கள் காலத்தில் பெண் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே, ஆணுக்கு ஆண் மட்டுமே இன்பம் தர முடியும் என ஒரு நம்பிக்கை இருந்தது. பைபிளில் கூட ஓரினைசேர்க்கை என்ற வார்த்தை உள்ளது.

பொதுவாக இணைத்தில், பேருந்தில் நம்மை அப்ரோச் செய்யும் ஓரினை பிரியர்கள் பீட்டா வகை. அவர்களுக்கு அவர்களை ஆளும் ஒரு துணை தேவைபடும். ஓரினை, பை-செக்ஸுவல், ஸ்ட்ரைட் அனைத்திலும் ஆல்ஃபா, பீட்டா உண்டா. ஆல்ஃபா தனக்கு அடங்கி போகும் துணையை தேடும், பீட்டா தன்னை ஆளும் துணையை தேடும்.

ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் காதலை சொல்வது போல் தான் ஓரினை பிரியர்க்ள் அப்ரோச் செய்வதும். பெண்ணிடம் காதல் சொல்லும் போது செருப்பால் அடிப்பதோ, ஊரை கூட்டுவதோ எப்படி அநாகரிகமோ அது போல் தான் ஓரினை பிரியர்களை ட்ரீட் செய்வது அநாகரிகம். விருப்பமில்லை என ஒதுங்கி கொள்ளுதல் நல்லது.

அவர்களும் மனிதர்கள் தான், அவர்கள் விரும்பம் தான் வேறு

#கேள்விபதில்

2 வாங்கிகட்டி கொண்டது:

baskkar said...

ஆனால் சமீப காலங்களில் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதர்கு மீடியாவும் ஒரு காரணம்

விஸ்வா said...

ஓரின சேர்க்கை ஒரு பக்கம் இருக்கட்டும்.. உயிர்கள் இனப்பெருக்கம் செய்வதன் நோக்கம் என்ன??

!

Blog Widget by LinkWithin