தங்கம் விற்பனை வரி ரத்து!

1997-1998 சமயங்களில் சென்னையில் ஒரு நகை கடையில் வேலை செய்துக்கொண்டிருந்தேன். நான் தங்கம் சம்பந்தமான தொழிலில் இருங்கி 18 வருடங்கள் ஆகப்போகிறது. நான் நகைகடையில் வேலை செய்யும் போது ஒரு கிராம் தங்கத்தின் விலை 394 ரூபாய். ஒரு கிராம் வெள்ளியின் விலை 7.90 காசுகள். இன்று தங்கம் ஒரு கிராம் 2728 ரூபாய், வெள்ளி ஒரு கிராம் 41.30 காசுகள்.

நான் வேலை செய்த காலத்திலும் முறையான பில் சிஸ்டம் கிடையாது., பேப்பரில் கொட்டேசன் என்று எழுதி தருவதோடு சரி, தாலி வாங்குபவர்களுக்கு மட்டும் கண்டிப்பாக பில் போட வேண்டும் என்று கடை முதலாளி ஆர்டர், அதற்கு 2% மட்டும் வரி வரும். அதுவில்லாது மாதம் ஒரு முறை ஆடிட்டர் மூலம் மாதம் 100 கிராம் விற்றதாக கணக்கு எழுதப்படும். இது தான் அனைத்து நகைகடைகளும் ஃபார்முலா.

பிறகு வாட் வந்தது, தங்க கட்டியாகவே ஒருவர் கையில் இருந்து இன்னொருவர் கைக்கு மாறினால் அதற்கு தனியாக வரி என்ற சட்டம் வந்தது. சிறு வியாபாரிகள் திகைத்தார்கள். கோவை, மதுரை பகுதிகளில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் காணாமல் போனார்கள். நகை உற்பத்தியாளர்களும் வரி செலுத்தவேண்டும். கடைசியாக அதை வாடிக்கையாளர்களிடன் வசூலிக்க வேண்டும். அந்த சமயங்களில் சுபநிகழ்ச்சிகள் தவிர்த்து முதலீடாக தங்கம் வாங்குதல் குறைந்தது.

சமீபமாக 2 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான்கார்ட் கொடுக்க வேண்டும்,. 1% வரி கட்ட வேண்டும் என்று சட்டம் வந்ததும் இந்தியா முழுவதும் இந்தியா முழுவதும் நகை விற்பனையார்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். தனிபட்ட முறையில் இரண்டு மாசம் நான் செம பல்பு வாங்கினேன். தென் இந்திய பகுதிகளில் மீண்டும் திறந்து விட்டாலும் வட இந்திய பகுதிகளில் நீண்ட நாள் வேலை நிறுத்தம் தொடர்ந்தது.

கடைசியாக இன்று தான் அந்த வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு சுழற்சி செய்யப்படும் தங்கம் தவிர்த்து புதிதாக வாங்கும் தங்கம் அனைத்தும் அரசு வங்கிகள் வழியாகவே வாங்க முடியும். அப்போதே கிலோவுக்கு 20000 வரை வரி விதிக்கப்படும். மேலும் மேலும்  வரி விதித்துக்கொண்டே போனது தான் வேலை நிறுத்தற்கு காரணம்.

ஒத்துகிறேன். நகை விற்பனையாளர்கள் முறையான கணக்கு காட்டுவதில்லை தான். அதற்கு காரணம் அதிகபடியான வரியே. அந்த வரியை வாடிக்கையாளர்கள் மேல் திணிக்கும் பொழுது அவர்கள் வேறு கடையை நாடலாம். அதனாலே பலர் இன்னும் கொட்டேசன் முறையில் பில் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கடந்த இரண்டு வருடங்களில் சேவை வரி 25% அதிகரித்துள்ளது./ பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி எட்டு  முறை உயர்ந்துள்ளது. அரசாங்கம் வரி வாங்கவில்லை. சாமான்ய மக்களிடம் பிடிங்கிக்கொண்டிருகிறது.  மறுபக்கம் கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு இரண்டு வருடத்தில் 50 ஆயிரம் கோடி வரி சலுகை. மக்களும், கடை முதலாளிகளும் ஏமாற்றாமல் என்ன செய்வான்?


0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin