சிரிக்க மட்டுமே! :)

தில்லுமுல்லு படத்தில் ரஜினிக்கும் தேங்காய் சீனிவாசனுக்கும் இன்டர்வியூ உரையாடல் வருமே, அதே பாணியில் மக்களுக்கும், ஓட்டுகேட்டு நடைபயணம் சென்றுள்ள ஸ்டாலினுக்குமான கற்பனை உரையாடல்.
'நீங்க தான் ஓட்டு கேக்க வந்ததா, உங்க பேரு'
'இளைஞரணி தலைவர் கழகத்தின் தளபதி ஸ்டாலின்'
'ஆமா உங்க பேர யாரு கேட்டாலும் இப்படி தான் முழுசா சொல்லுவீங்களா'
'ஆமா சார். நம்ம பேர சுருக்குற உரிமை நமக்கு இல்லை. நாம என்ன பெரியாரா, அண்ணாவா, கலைஞரா, அஞ்சா நெஞ்சனா. அதனால தான் என் பேர யாரு கேட்டாலும் 40 வருசத்துக்கு முன்னாடி எனக்கு கொடுக்கபட்ட பதவி இளைஞரணி தலைவர், நானே எனக்கு செல்லமா வச்சுகிட்ட பேரு கழகத்தின் தளபதி, எங்க அப்பா வச்ச பேரு ஸ்டாலின், எல்லாத்தையும் சேர்த்து சொல்லுவேன்'
'ஓட்டு கேட்டு வந்துருக்கீங்க வேஸ்டி கட்டாம பேண்டு போட்டு வந்துருக்கீங்க'
'நமக்கு எதிரி ஜாஸ்தி.கோவத்தில எவனாவது வேஸ்டியா அவுத்து விட்டுடானா இருக்குற கொஞ்சம் நிஞ்சம் மானமும் போய்டும் அதான் சார் பேண்ட் போட்டு வந்தேன்'.
'சினிமாவுல ஏதாவது இன்ட்ரெஸ்ட் உண்டா'
'அரசியல் பண்ற நேரம் போக அப்பப்ப டைம் கிடைச்சா, அப்பாவும் பெர்மிசன் கொடுத்தா சினிமா பார்ப்பேன் சார்'
'7G தெரியுமா'
'இல்ல சார், எனக்கு 2G(ஊழல்) தான் தெரியும்'
'நான் சொல்றது உலக புகழ் பெற்ற செல்வராகவன் எடுத்த 7G ரெயின்போ காலணி'
'மன்னிக்கனும் சார். நான் கேள்விபட்டது இல்லை'
'படிப்புக்கு நடுவுல பொழுதுபோக்கே தவிர, பொழுதுபோக்கே வாழ்க்கை இல்லனு எங்க அப்பா சொல்லிருக்காரு சார்'
'வேற என்னன்ன சொல்லிகொடுத்துருக்காரு உங்க அப்பா'
'எங்க அப்பா சொல்வாரு சார், முதல நீ ஒரு சுயநலவாதி, அப்புறம் தான் நீ ஒரு பொதுநலவாதினு'
'ஓஹோ அதான் இப்படி ஊழல் பண்றீங்களா'
'பொருளாதார அடிப்படையில பாத்தீங்க நாங்க பண்ண ஊழல்னால எங்க குடும்பமே ஒரு தலைமுறைக்கு உக்காந்து சாப்டும்'
'அதிகமா ஊழல் பண்ணிருந்தீங்கனா இரண்டு தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடலாமே'
'எத்தனையோ இந்தியர்கள் சாப்ட வழி இல்லாம ரோட்ல இருக்காங்க. நாம சாப்டுற சாப்பாடுக்கு மேல சாப்டுற ஒவ்வொரு பருக்கையும் அடுத்தவனோடதுனு விஜய் சொல்லிருக்காரு சார்'
'யார் அந்த விஜய்'
'நீங்க கேள்விபட்டது இல்லையா. ரொம்ப ஆச்சிரியமா இருக்கே'
'ஆச்சிரிய படுற அளவு அப்படி யார் அவரு'
'கிபி 2015 வாழுற ஒரு பெரிய மகான். போதிதம்பர் எழுதுன ஓலை சுவடில அவர பத்தி படிச்சுருக்கேன் சார்'
'நாங்க ஓட்டு போடனுமா இரண்டு பெரிய மனுஷங்க (அழகிரி, கனிமொழி) ரெக்கமண்டேசன் வேணுமே. இருக்கா'
'நான் படிச்ச படிப்புக்கு போடாதா ஓட்டு, எங்க அப்பா பேருக்கு இல்லாத ஓட்டு, அந்த இரண்டு பேரு சொல்லிதான் போடுவீங்கனா அப்படி ஒரு ஓட்டு எனக்கு வேணாம் சார். நான் வரேன் சார்'
'கொஞ்சம் நில்லுபா, உனக்கென்ன விஜயகாந்த் மாதிரி பொசுக்கு பொசுக்கு கோவம் வருது. இவ்வளோ சின்ன வயசுல இப்படிபட்ட கொள்கைய வச்சுகிட்டு யாருக்கும் பயப்படாம டான் டான் னு பதில் சொல்றியே உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குபா'
'உலகத்துல உன்னை விட திருட்டுபய யாரும் இல்லை, அதனால நீ யாருக்கும் பயபடாதே. அதே மாதிரி உன்னைவிட கேனபய யாரும் இல்லை, அதனால யாரை தாழ்வா நினைக்காதே. இதான் சார் எங்க அப்பா எனக்கு சொல்லி கொடுத்த பாடம். இதான் சார் எனக்கு வேதவாக்கு'
'பாருப்பா உடம்பெல்லாம் புல்லரிச்சு போச்சு. யாரு உங்க அப்பா'
'தென்கோடி இலங்கையில ஈழதமிழர்கள் துன்புறுத்தபட்ட போது வடகோடி சென்னையில முதல் ஆளா ஏசி போட்டு படுத்துகிட்டு ஒரு மணிநேரம் உண்ணா விரதம் இருந்தாரே ஒரு மகான் அவர பத்தி கேள்வி பட்டுருக்கீங்களா'
'இல்லையே'
'அப்ப அவர் தான் எங்க அப்பா, தமிழ் இன மக்கள் காவலன் கலைஞர் கருணாநிதி'
'அந்த மகானை தெரிஞ்சுகாதது என்னோடய துரதிர்ஷ்டம்பா'
'அது என் அதிர்ஷ்டம் சார்'
'ஏன்'
'அவர பத்தி உங்களுக்கு தெரிஞ்சு இருந்தா எனக்கு ஓட்டு போட மாட்டீங்க சார்'
'என்னது'
'அதாவது அவர பத்தி உங்களுக்கு தெரிஞ்சு இருந்தா என் வாயால அவர பத்தி சொல்ற பாக்கியம் கிடைச்சுருக்காது சார்'
'உன்னை மாதிரி வீட்டுக்கு ஒரு விவேகாந்தர் இருந்தா நாடே சுபிக்ஷம் ஆயிடும் பா. எங்களுக்கும் ஒரு கொள்கை உண்டு. யாரு அதிகமா பணம் தருவாங்களோ, அவங்களுக்கு தான் ஓட்டு போடுவோம். ஒருவேளை நீ ஜெயிச்சா நீயாவது ஊழல் பண்ணாம ஆட்சி நடத்துபா..'
நன்றி https://www.facebook.com/arunbal.s

2 வாங்கிகட்டி கொண்டது:

thamizh said...

basically I like stalin. but ur article really superb.

thamizh said...

basically I like stalin. but ur article really superb.

!

Blog Widget by LinkWithin