கொஞ்சமென்ன, நிறையவே அரசியல் பேசலாம்! - 1

கம்யூனிஸ்ட்கள் மேல் ஆரம்பத்தில் ஒரு மரியாதை இருந்தது, எப்பொழுது அதிலும் சாதி அரசியல் விளையாடுதுன்னு தெரிஞ்சதோ எனக்கு எந்த கட்சியும் ஆகாதுன்னு முடிவுக்கு வந்துட்டேன். அதும் நல்லது தான் அதனால் தான் எல்லா கட்சியையும் விமர்சிக்க முடியுது.

மூன்றாவது அணி அமைவது ஒரு பக்கம் சோதனை முயற்சியாக பார்க்கப்பட்டாலும் இன்னொரு பக்கம் அதிமுகவுக்கு சாதகமாக அமையும் என்பது கண்கூடு.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருக்கும் பஞ்சபாண்டவ அடிமைகள் வெளியவரப்போறதில்ல. இன்னும் ரெண்டு பிஸ்கட் சேர்த்து கிடைக்குமான்னு தான் பார்க்கப்போறாங்க.

பாமக தனித்து நிற்கும்னு சொல்லிகிட்டாலும் மறைமுக பேச்சுவார்த்தை அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால் கூட்டணி என்பதே. அப்படியே கூட்டணி வச்சாலும் வடக்கு பக்கம் 20 அல்லது 25 தொகுதிகள் வெற்றி பெறலாம். அது எப்படி எல்லா கட்சியும் முட்டாள்தனமா கட்சி பொதுகூட்டத்திற்கு வரும் மக்கள் அவங்களுக்கு தான் ஓட்டு போடுவாங்கன்னு நம்புறாங்க?

நேத்து முதலீடு பயன் தருமா, கண் துடைப்பான்னு ஒரு விவாதம். அதில் மார்கிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் மத்திய அரசை பார்த்து ஏ, ஏகாதிபத்திய மோடியே சவுண்ட் விடுறாரே தவிர அதிமுகவை விமர்சித்து ஒரு பேச்சை காணோம். அப்படியே எதும் பேச நிர்பந்தம் வந்தா திமுகவும் அதிமுகவும் ஒன்னு முடிக்கிறாரு.

மனிதநேயமக்கள் கட்சி என்ற இஸ்லாமிய மத கட்சி(பேருக்கு ஒன்னும் குறைச்சலில்ல) ஜவாருஹுல்லா சொல்றது. திமுகவுக்கு 30 மார்க் போடுவாராம், அதிமுகவுக்கு 70 மார்க் போடுவாராம். இவர்களுக்கு உரிமை பெற்று தருவதில் முன்னாடி நிற்பது திமுக தான். அரசியலில் நன்றிக்கு வேலையில்ல போல, ஆக ரெண்டாவது விக்கெட்டும் யாருன்னு தெரிஞ்சு போச்சு.

பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை விட இம்மாதிரி சில்வண்டுகளை அருகில் வைத்துக்கொள்ளத்தான் அதிமுக நினைக்கும். அதே நேரம் உள்ளடி அரசியல் பார்த்தால் அதிமுக, பாஜக கூட்டணியாக தான் இருக்கின்றது. பாஜகவை சேர்ந்த பலர் அதிமுகவுடன் கூட்டணியை விரும்புகின்றனர்.

இந்த தேர்தலில் அதிமுகவுடன் ஏற்கனவே இருக்கும் அடிமைகள் சேர்த்து மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இடதுசாரிகள் கூடவே புது அடிமையாக தமிழ்மாநில காங்கிரஸுயும் இணைய வாய்ப்பிருக்குனு நினைக்கிறேன். வைகோ ஏற்கனவே திமுக,அதிமுக கூட்டணி இல்லைன்னு சொல்லியிருந்தாலும் ஏற்கனவே இருந்த பாமக கூட கண்கள் பனிக்கலாம்.

விஜயகாந்த், காங்கிரஸ் கூட்டணி அமையுமான்னு பார்த்தா திமுக, காங்கிரஸ் கூட நெருக்கம் காட்டுது. தேமுதிக, திமுகவை ரவுடி கட்சின்னு சொல்லுது. மூணாவது அணி உடைச்சா விசிக திரும்ப திமுக கூட்டணியில் வர வாய்ப்பிருக்கு. அதுக்கு டி.கே.எஸ்.இளங்கோவன் ஒரு மன்னிப்பு கடிதம் கொடுத்தா போதும்.(கோமாளி அரசியல்)

தியரிடிக்கலா பார்த்தா அடுத்த ஆட்சியில் திமுக தான் உட்காரனும், ஆனா திமுக எதிர்கட்சியாகக்கூட ஒழுங்கா செயல்படாத காரணத்தால் ஆளுங்கட்சியாக என்னத்த கிழிப்பாங்கன்னு மக்கள் எண்ண ஓட்டம் இருக்கு. கடந்த பாராளுமன்ற தேர்தல் சாட்சி.

இந்த முறை காங்கிரஸ் காட்டிய சூட்டைக்கூட திமுக செய்யல. விலைவாசி உயர்வு, மின்/பால்/பஸ் கட்டணம். அமைச்சர்களின் செயல்படாதன்மைன்னு பல இருந்தாலும் அடுத்த நாம தானேன்னு திமுக நினைச்சு அசால்டா இருக்காங்க. அது அசால்டு இல்ல, அவுங்களே செதுக்கி வைத்திருக்கும் ஆப்பு.

அதிமுக கூட்டணி அழைக்காமலேயே யோகா செய்ய தயாராய் இருக்கிறார்கள் கணிசமான சிறுகட்சிகள். திமுகவின் இந்த பின்னடைவுக்கு உள்கட்சி பூசலும் ஒரு காரணம். கூடவே இனையத்தில் சவுண்டு விடும் சில உளுந்தம்பருப்புகள் தலைமைக்கு, நாம தான் அடுத்துன்னு ஏத்தி விடுவதும். இவர்கள் கேனகிஷோரை விட மோசமானவர்கள்.

#பேசலாம்

1 வாங்கிகட்டி கொண்டது:

Unknown said...

பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க

!

Blog Widget by LinkWithin