வாசிப்பும், நானும்!

சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரில் இருந்து ஒரு நண்பர் அழைத்தார். அவரோட தம்பி சரியாக படிப்பதில்லை என்றும் முன்பெல்லாம் கவலையா இருக்கும். இப்பொழுது அந்த கவலை இல்லை. பாடத்தை படிக்காட்டியும் பரவாயில்லை எதாவது படி. படிச்சிகிட்டே இருன்னு சொல்லிட்டேன் தல. நீங்க தான் அதுக்கு இன்ஸ்பிரேசன்னு சொன்னார். இந்த சமூகத்துக்காக என்னத்தையடா கிழிச்சன்னு யாராவது கேட்டா, கிள்ளிபோட்ட இந்த ஒத்த இலையை காட்டிக்கலாம். :)

சமீபத்தில் சீனி அண்ணன் வீட்டில் காமிக்ஸ் புத்தகம் பார்க்கும் போது எனக்கு பழைய ஞாபகங்கள் வந்தது.
எனக்கு எப்படி அறிமுகமானதுன்னு தெரியல. நான் முதல் முதலா வேலைக்கு போனது ஆறாவது படிக்கும் போது இடையில் கிடைக்கும் விடுமுறையில். அப்ப எனக்கு ரெண்டு ரூபா பேட்டா, வாரம் இருபது ரூபா சம்பளம்.

அப்ப வாங்க ஆரம்பிச்சேன். முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ்னு புதுசா எது வந்தாலும். விடுமுறை இல்லாத நாட்களில் வாங்க முடியாம போயிருமேன்னு துண்டுக்கு முடி போட ஆரம்பித்தோம். வாரம் ஐந்து ரூபா கொடுப்பாங்க. அதுலையும் காமிக்ஸ் தான்.

அடுத்த வருசம், தீபாவளிக்கு இரண்டு மாசம் முன்பே எங்கப்பாட்ட கேட்டு பட்டாசு வாங்கிகொடுக்க சொன்னோம். 1000 ரூபா பட்டாசு 500 ரூபாக்கும் குறைவா கிடைச்சது. ஏன்னா இன்னும் சீசன் ஆரம்பிக்கல. ஸ்கூல் விட்டு வந்து அரிசி சாக்கில் கடை விரிப்போம். எங்கப்பா கண்டிசன். தீபாவளிக்கு பட்டாசு கேட்கக்கூடாது. இதை வச்சு என்ன பண்ணுவிங்களோ பண்ணிக்கோங்கன்னு தான்.

ஆனா, இடையிலயே சிலவகை பட்டாசுகள் தீர்ந்து போய் மீண்டும் வாங்கவேண்டியிருந்தது. அப்பொழுதும் முதலில் வாங்கியது காமிக்ஸ் தான். நான்கே வீடுகள் இருந்த காம்புவுண்டுக்குள் குட்டி லைப்ரேரி தொடங்கினோம். காமிக்ஸிருந்து அடுத்த கட்டமாக பூந்தளிர், அம்புலிமாமாக்கு வந்தோம். முன் வீட்டில் இருந்த எம்.ஜி.ஆர்(அவர் பேர் எம்.ஜி.ராமசந்திரன்) ஐடியா கொடுக்க. வீட்டுக்கு இவ்ளோன்னு வசூல் பண்ணி கூடவே குமுதம், ஆனந்தவிகடம்னு வாசிப்பு விரிவாச்சு



அறிவியல் மேல் ஆரம்பித்தில் இருந்தே தீராத தாகம் இருந்ததால் அறிவியல் சம்பந்தபட்ட குறு/நீள நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன். முதல் அம்டெம்டே கொலையுதிர் காலம் என்ற சுஜாதாவின் நாவல். படிக்க ஆரம்பித்தேன். சாப்பிட்டுக்கொண்டே படித்தேன், நடந்து கொண்டே படித்தேன். முடிச்சிட்டு தான் கீழே வைத்தேன்.

பின் எம்.ஜி.சுரேஸின் அனைத்து படைப்புகளையும் வாசித்தேன். பயணங்களில் எப்போதும் எதாவது புத்தகம் கூடவே இருக்கும். இல்லாத பட்சதில் கிடைக்கும் பாக்கெட் நாவல் உடன் பயணிக்கும். வாசித்து என்பதை தவிர இலக்கியம், வெகுஜனம் என்பவற்றில் எனக்கு ஏதும் பரிச்சியம் இல்லாது இருந்தது.

முதல் முதலில் ப்ளாக்கர் அறிமுகமான போது தான் அது வேறு உலகம், அதற்குள் ஒரு அரசியல். திணிப்பு. மூளை சலவை. அடிமைகள் சேர்த்தல்னு ஏகபப்ட்டது இருப்பது தெரிஞ்சது. நண்பர்கள் மூலம் மேலும் பல எழுத்தார்கள் அறிமுகமானார்கள். அதில் ஆரம்பித்தில் இருந்தே எப்போதும் தொடர்பில் இருப்பவர் வா.மு.கோமு அவர்கள்.

இப்போதும் வாசிப்பு சலிப்பு ஏற்படுத்துவதில்லை. முன்பு புத்தகம் போல தற்சமயம் மின் புத்தகமாக வாசிப்பு மாறிவிட்டது. தொலைகாட்சியும், செல்போனின் புத்தகத்தை ஆக்கிரமித்துக்கொண்டது. ஆயினும் பயணங்களில் துணைவன் புத்தகம் மட்டுமே!

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin