வாட்ஸ் அப் அலப்பறைகள்!

நாங்கள் திமுகவிலிருந்து வெளியேற்றப்படவும் இல்லை; வெளியேறவும் இல்லை. -திருமா
# ஈயம் பூசுனமாதிரியும் இருக்கணும்! பூசாத மாதிரியும் இருக்கணும்!

தமிழக அரசு என் பார்வையில் சரியாக இருக்கிறது.-சரத்குமார்
# எதுக்கும் பார்வைய வாசன் ஐகேர்ல செக் பண்ணி பாருங்கண்ணே!

வங்கதேசத்திற்கு 12,600 கோடி கடன்.-மோடி
# யோவ் டூரிஸ்ட்டு! கருப்புப்பணத்தை மீட்கலான்னாலும் பரவால்ல! இருக்கிற பணத்தையாவது விட்டுவையா!!

இந்தியாவின் மதிப்பை உயர்த்தவே சுற்றுப்பயணம் செல்கிறேன் -மோடி 
# கண்ணாடிய திருப்புனா எப்டி பாஸ் ஆட்டோ ஓடும்?

கருணாநிதி இல்லத் திருமணத்தில் திருட்டு.
# பழக்கத்தோஷத்துல தலீவரு வேலைய காட்டிருப்பாரோ?

காங்கிரஸ்,பாஜக,அதிமுக,திமுக ஆகியவையில்லாத அணியில் இடம்பெறுவோம்-தமிழருவி
# எதுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்களேன்

ஏழைகளுக்காக எனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்கத் தயார். -ராகுல் காந்தி
# தம்பி! அங்குட்டு ஓரமா போய் விளையாடுப்பா!!

மீனவர்வீட்டில் மீன்குழம்பை ரசித்து சாப்பிட்டார் ராகுல்- காங்கிரசார் 
# மீன் குழம்புனா ரசிச்சுதான் சாப்பிடுவாங்க, இதெல்லாம் ஒரு பெருமையா பாஸ்?

மோடியின் ஓராண்டு ஆட்சியில் ஊழலே இல்லை -அருண் ஜெட்லி
# நான் ஊரி்லே இல்லைன்னு படிச்சிட்டேன்!!

இலங்கையில் ஆட்சி மாறியும்கூட காட்சி மாறவில்லை. -கருணாநிதி
# தலீவரு எலக்ஷன் டைமு! பீல் ஆயிட்டாப்புள்ள! எலக்ஷன் முடிஞ்சா கூல் ஆயிடுவாப்புள்ள!!

மாற்றுத்துணி எடுக்கத்தான் இந்தியாவுக்கு வருகிறார் மோடி -துரைமுருகன்
# கரடியே காரித்துப்பிடுச்சு!!

4 வாங்கிகட்டி கொண்டது:

தமிழ் பேசும் உலகம் said...

Nice!!!

D. Chandramouli said...

Thanks for making me laugh out loud! 'Pramadham'!

பல்பு பலவேசம் said...

வால் தல ...இசுலாமை காய்ச்சி ஊற்றுவதை நிறுத்திவிட்டீர்களா?அவ்வகையான மத விமர்சன பதிவுகளை மிகவும் ரசிப்பதுண்டு.அதுமாதிரி பதிவுகளை எழுதவும்.

thamizh said...

Last one super

!

Blog Widget by LinkWithin