எது வேண்டும் உங்களுக்கு!?

எட்டு மாதங்களுக்கு முன் எனக்கு விபத்து ஏற்பட்டு இடது காலில் அடிபட்ட போது தலையில் சிறு ரத்தகாயம் கூட இல்லை. பிறகு பத்து நாள் இயல்பாக தான் இருந்தேன். ஒருநாள் இரவு மாடிபடி ஏறும் போது மயங்கி விழுந்தேன்.

அன்றிரவே எனக்கு முகத்தில் வலதுபக்கம் மற்றும் வலது கரம் இயங்கவில்லை. பேசமுடியவில்லை. எழுதிக்கூட காட்ட முடியவில்லை.

ஈரோடு ஜி.ஹெச்சில் நரம்பு மண்டலம் தொடர்பான வைத்தியம் பார்க்க மருத்துவர்கள் இல்லை. இங்கே அந்த துறையே இல்லை.

தனியார் மருத்துவமனையில் இரண்டு மாசம் சிகிச்சை பெற்ற பிறகு தான் முகமே பார்க்குற மாதிரி ஆச்சு. அதுவரைக்கும் ஒரு பக்கமா இழுத்துகிட்டு இருந்தது.
தனியார்னா செலவை பத்தி உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.

இதை எதுக்கு சொல்றேன்னா.

ஹெல்மெட் ஒரு சுமை அல்ல. அது நம்மை பாதுகாக்கவே. பெரிய காயம் கூட இல்லாம எனக்கு லட்ச கணக்கில் செலவு வச்சிருச்சு. இன்னும் கூட முழுசா பேச்சு வரல்.

இதில் அரசியல் பாராமல் தயவுசெய்து ஹெல்மெட் அணிய பழங்குங்கள். ஹெல்மெட் போட்டால் சொட்டை வரும் என்பதும். எர்வாமார்டின் போட்டால் முடி வளரும் என்பதும் ஒன்னு தான். சரி அப்படியே போகுதுன்னே வச்சுகுவேன்.

என்ன வேணும் உங்களுக்கு?

உசுரா, மசுரா?

3 வாங்கிகட்டி கொண்டது:

பழனி. கந்தசாமி said...

கடைசியா கேட்டீங்களே ஒரு கேள்வி, அதுதான் சூப்பர்.

உடல் நலமில்லாமல் போயிற்று என்று தெரிந்து வருந்தினேன். உங்கள் உடல் நலம் தேறி முன்பு போல் நடமாட ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

Vinoth Subramanian said...

super sir. nalla irukku!

-தோழன் மபா, தமிழன் வீதி said...


மீண்டும் முழுமையாக உடல் நலம் பெற வாழ்த்துகள்.

வீட்டை விட...அலுவலகத்தை விட.. ரோட்டில் அதிக நேரம் பயணம் செய்யும் எங்களை போன்ற ஊடக/மார்க்கெட்டிங் மக்களுக்கு தலைக் கவசம் என்பது இன்றியமையாத ஒன்று. ஹெல்மெட் போடாமல் நான் வண்டியே ஓட்டுவதில்லை.

!

Blog Widget by LinkWithin