கார்ப்ரேட் கைகூலிகள்!

இதுவரைக்கும் நடந்த விவாதத்தில் ஒரு பாஜக அடிமையும் லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் ஒரு நியாயமான காரணம் கூட சொல்லல.
என்ன கேட்டாலும் குவாத்ரோசி, ஆண்ட்சரன்னு காங்கிரஸ் மேல தான் எதிர்கேள்வி வைக்கிறாங்க.

காங்கிரஸ் சரியில்லைன்னு தான் மக்கள் பாஜகவுக்கு ஓட்டு போட்டாங்க, இவிங்களும் அதையே பண்ணறதுக்கு எதுக்கு மண்ணாகட்டி தேர்தல். கார்ப்ரேட்டுக்கு சொம்பு தூக்க எதுக்கு மக்கள் வரி பணத்தில் செலவு.
இதுல இன்னொரு காமெடி, பாஜக ஆட்சிக்கு வர கையில் எடுத்த ஆயுதம் காங்கிரஸின் ஊழல் மற்றும் கருப்பு பணத்தை கொண்டுவருவோம்னு.


ஊழல் பண்ண லலித்மோடியை இந்தியா கொண்டு வந்து விசாரிக்காமல் வெளிநாட்டிலயே இருக்க உதவி பண்ணா அது ஊழலுக்கு ஆதரவு தானே. இவனுங்க எங்கிருந்து கருப்பு பணத்தை கொண்டு வரப்போறானுங்க.
இணைய பாஜக ஆதரவாளர்களுக்கு இப்பவே அடியில் ஐஸ் சொருக்குன மாதிரி இருக்காம். இனிமே தான் மதவெறி குப்பலின் ஆட்டம் ஆரம்பிக்க போகுதுன்னு வேற தகவல் வருது.
தீர்க்கதரிசி அத்வானி இன்னைக்கு சொல்லிட்டார்.
இந்தியாவில் இன்னொரு எமஎஜென்ஸி வர வாய்ப்பிருக்கிறது.
எல்லாரும் டவுசரை கெட்டியா பிடிச்சிக்கோங்க..

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin