கார்பரேட் மாஃபியா!

சாலை பாதுகாப்பு மசோதா பற்றி நேற்று வாட்ஸ் அப்பில் ஒரு விவாதம் நடந்தது. நண்பர் ஒருவர், கார்பரேட் கையில் கொடுத்தா என்ன தப்புன்னு கேக்குறார். கார்பரேட் மாதிரியே சிந்திக்க போறேன்னு பெருமையா வேற சொல்றார்.

அடிப்படையில் இந்தியா ஒரு விவசாய நாடு. 65% பேர் விவசாயம் சார்ந்த தொழில் தான் செய்கிறனர் அல்லது செய்தனர். ஜப்பான் நாட்டில் வெறும் 6.5% மட்டுமே விவசாயதொழில். ஒருமுறை ஜப்பான் அரசு உணவு பொருட்கள் இற்க்குமதி செய்தது. அந்த 6.5% விவசாய மக்களும் ஜப்பான் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பிரதமர் இறங்குமதி செய்தது தப்பு தான்னு மன்னிப்பு கேட்கும் வரை போராடினர்.

நம்நாட்டில் பொருட்கள் வாரியாக இறங்குமதி நடக்குறது. உணவு எண்ணைய் மட்டும் 65%, இன்ன பிற தானியங்கள் 45% வரை. உள்நாட்டில் விவசாயிக்கு நியாயமான கூலி கிடைக்க வழிசெய்யாத, வக்கில்லாத அரசு ஏன் இறங்குமதியை ஊக்குவிக்கிறது தெரியுமா? அவை அத்தனையும் கார்பரேட் நிறுவனங்கள்.

அமெரிக்கா, பிரேசில் போன்ற நாட்டில் எத்தனால் எரிபொருளை பயன்படுத்த தொடங்கின. அதனால் கச்சா எண்ணெயின் தேவை குறைந்தது. உள்நாட்டு உற்பத்தி பெருகியது. மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருந்தும். விவசாய நிலம் இருந்தும் எத்தனால் உற்பத்தியை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் நிலத்தை அபகரித்து பெரு முதலாளிகளுக்கு கொடுப்போம் என சொல்லக்காரணம் அம்பானி போன்ற கார்பரேட் நிறுவனங்கள்.

காங்கிரஸும் சரி பாஜகவும் சரி பெரு முதலாளிகளின் ஆட்டலுக்கு ஆடும் குரங்குகளாக தான் இருக்கிறார்கள். மக்களும் மாறி மாறி குரங்காட்டத்தை ரசித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் frown emoticon

1 வாங்கிகட்டி கொண்டது:

taruada said...

Don't write without any knowledge. Vajpayee govt was instrumental in setting up 100+ bioethanal plants in countries. Modi's agenda includes upgrading the local technologies in agriculture. You can't ask better than this.

Taru

!

Blog Widget by LinkWithin