பாமகவும் சாதி, அரசியலும்!

என்னிடம் கேள்வி கேட்க அன்புமணிக்கு தகுதியில்லை என்று சொன்ன ஸ்டாலினை நாம் கேட்கும் கேள்விக்கு பதில் இல்லாமல் பிதற்றும் மதவாதிகளை போலத்தான் பார்க்குறேன், அதே நேரம் ஸ்டாலினின் இந்த பொறுப்பதற்றதனத்தை சுட்டிக்காட்ட வேண்டிய பாமக தொண்டர்கள் மீண்டும் சாதி அரசியல் தான் செய்கிறார்கள். 

நாயுடுக்கு பதவி கொடுப்பிங்க, செட்டியாருக்கு கொடுப்பிங்க. வன்னியர்களை கண்டுக்கொள்வதில்லை என்பது அன்புமணி ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தின் தேவை என்ன என்பதை நமக்கு காட்டுகிறது.  அவர்களை பொறுத்தவரை தமிழகத்தில் பெரும்பான்மையாக இருப்பது வன்னியர்களே!

ஆனால் அவர்களில் பலர் சாதியரீதியான அரசியலில் இறங்காமல் சமூகநீதிக்காக பல கட்சிகளில் இருக்கிறார்கள். திமுக, அதிமுக, காங்கிரஸ் மூன்றும் இதில் பிரதானம். கட்சிக்கு குற்றம் சுமத்துவதின் மூலம் பிரிந்து கிடக்கும் வன்னியர்களை சாதி அரசியல் செய்ய அழைப்பதே பாமகவின் நோக்கம். அதற்கு பதிலடியாக தான் வன்னியர் ஒருவரை கொண்டே அன்புமணிக்கு பதில் அளிக்க வைத்தது திமுக. அரசியலை பொறுத்தவரை ஸ்டாலின் அனுபவம் அன்புமணியின் வயது.

சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் அம்பேத்கார் இட ஒதுக்கீட்டை கொண்டு வரும் போதே, எப்போது எல்லோருக்கும் சமநீதி கிடைக்கிறதோ அப்போது இந்த இட ஒதுக்கீட்டிற்கு தேவையில்லையாமல் போகும் என்றார். ஆனால் ஆதிக்கசாதியினர் பிறர் மீது தாக்குதல் நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

”இப்பெல்லாம் யாரு சார் சாதி பாக்குறா” என்பவர்களை நகர வாழ்வில் அறியாமல் பேசுகிறார்கள் என்று ஒதுக்கிவிட முடியாது. வாடகைக்கு வீடு-பிராமணர்கள்களுக்கு மட்டும் என்பதில் இருக்கும் பார்பனீய விசத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். சைவம் சாப்பிடுகிறவர்களுக்கு மட்டும் என போர்டு வைக்கலாம். பிராமணர்களுக்கு மட்டும் என்பது பிற சாதியினர் எங்களுக்கு தீட்டு, அவர்களுடம் நாங்கள் அன்னம்தண்ணி புழங்க மாட்டோம் என்று அர்த்தம்.

”யாரு சாதி பாக்குறா” வகையறாக்கள் மனதளவில் உயர்சாதிய திமிர் கொண்டவர்கள் தான். நானும் ஒரு நண்பரும் மற்றொரு நண்பரை பார்க்க போனோம்., அங்கே சாதி குறித்தான பேச்சு வந்தது. அவர் என் நண்பரிடம் சாதி கேட்டார். சொல்லியதும் பார்த்திங்களா நான் பேசிகிட்டு தானே இருக்கேன், இன்ன சாதியின்னு பேசாமலா இருக்கேன் என்னார்.

அங்கே சில,பல கெட்ட வார்த்தைகளை உதிர்த்தாலும் இங்கே தவிர்த்து சொல்கிறேன். இவர் எனக்கு பல வருடமாக நண்பர், நான் இவரிடம் ஒருநாள் கூட என்ன சாதின்னு கேட்டதில்லை. சாதி பார்க்க மாட்டேன் என்றால் என்ன சாதின்னு கேட்காமலே பழகனும். சாதி என்னான்னு கேட்டுட்டு நானும் பேசுறேன் பார்த்தியா என்பது உனக்கான மனித உரிமையை நான் உனக்கு பிச்சை போடுறேன்னு சொல்லாமல் சொல்வது. மனதளவில் நான் உயர்சாதி ஆகினும் தாழ்ந்தசாதி இருப்பதாகவும் இருப்பினும் அவர்களுடம் பேசுவதாகவும் எண்ணுவது. சந்தேகமில்லாமல் இதுவும் பார்பனீய விசம் தான் என்றேன்.

தற்பொழுது நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீட்டு முறை என்பது பல சாதிகளை நான்கு வகைக்குள் வகைப்படுத்தி அதன் மூலம் வழங்கிக்கொண்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் பிற்காலத்தில் கால மாற்றத்தால் சாதி பிரிவுகள் மறைந்து போகும் என்ற நம்பிக்கையில் தான் இந்த முறை நடைமுறையில் இருந்து வருகிறது. 

ஆனால் பாமக கேட்பது சாதி ரீதியான மக்கள் தொகை கணக்கெடுத்து அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று. அவர்கள் நிறுவ முயல்வது நாங்கள் தான் தமிழகத்தில் பெரும்பான்மை சாதிகள் என்பதே.

சமீபத்தில் நாங்கள் இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம் என்று மத்தியில் ஆட்சியை பிடித்த பாஜக செய்து கொண்டிருப்பது என்ன? வந்த நாளில் இருந்தே மதமாற்றம், யார் எவ்ளோ குழத்தை பெத்துக்கனும். யார் என்ன சாப்பிடனும் என்பதாகவே இருக்கிறது.

ஆக சாதி அரசியல் செய்து வரும் பாமக ஆட்சியை பிடித்தால் என்ன செய்யும்? ஏற்கனவே பெரும்வாரியாக வன்னியர்கள் இருக்கும் பகுதியை பிரித்து தனி தமிழ்நாடு கேட்கிறார்கள். தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் அணித்து எங்கள் பெண்கள் மயக்குகிறார்கள் என்று அவர்கள் பெண்களையே கேவலப்படுத்திக்கொள்கிறார்கள்.

பாமக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும். என்னை போன்ற சாதி மறுப்பாள்ர்களுக்கும் சமநீதி கிடைக்குமா? நாங்கெல்லாம் சாதி பார்க்கம்மாட்டோம் என்பார்கள். அதுக்கு தான் “யாரு சார்  சாதி பாக்குறா” வின் உள்ளார்ந்த பார்பனீயதனத்தை மேல விளக்கியுள்ளேன்.

சமூகத்தில் மாற்றம் தேவை. நிச்சயமாக திமுகவும், அதிமுகவும் மட்டும் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டிருப்பது மக்களுக்கு ஆபத்து தான். அதற்காக சாதி அரசியலை கையில் எடுத்தது பேராபத்து.

எப்படி பாஜக இந்தியா இந்துக்களுக்கே என்ற விசத்தை விதைக்கிறதோ அதே போல் பாமகவும் தமிழகம் வன்னியர்களுக்கே என்ற விசத்தை பரப்பிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் மதகலவரத்தை உருவாக்க பாஜகவும். தமிழகத்தில் சாதிகலவரத்தை உருவாக்க பாமக தான் முக்கிய காரணமாக இருக்கும்.

சாதி அரசியலை பாமகவால் கைவிடவும் முடியாது. நான் சொல்வதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. வழக்கம் போல் பதில் தெரியாத  மதவாதிகள் போல் இவர்களும் எதாவது உளரி சொல்வார்கள் :)

வழக்கமாக நடபப்து தானே!

1 வாங்கிகட்டி கொண்டது:

ssk tpj said...

சாதி அரசியல் எதற்கு. இவர்கள் எதற்கு மருத்துவம் படித்தார்கள். படித்தும் சாதி அரசியல் நடத்துவது அவர்கள் மனசாட்சியே கேலி செய்யும்.அவலம்.
அம்மா கட்சி அடுத்த தேர்தலில் இருக்காது, எதாவது முடியுமா என்று பார்கின்றனர். சாதி கொண்டு அரசியல் நடத்தும் வரை தலைமைக்கு வர முடியாது. அதற்கு விஜயகாந்த் பல மடங்கு பரவயில்லை.

!

Blog Widget by LinkWithin