பெரியாரியமும் வெங்காயம் தான்!

ஒரு பெரியாரிஸ்ட் நண்பர் ஒரு பதிவு போட்டார், நான் அதிலிருந்து ஒரு கேள்வி கேட்டேன். உடனே அந்த நண்பர் சொல்றார். பெரியார் எழுதிய புத்தகங்கள் படியுங்கள் தோழர்!
இஸ்லாமியரை கேள்வி கேட்கும் போது குரான் படிக்க சொல்வதற்கும் நீங்க சொல்வதற்கும் என்ன வித்தியாசம் தோழர்னு கேட்டேன். பதிலை காணோம்!
எனது பக்தன், தொண்டன், ரசிகன் ஃபார்முலா படி பெரியாரிஸ்ட் தற்பொழுது தொண்டன் வகையறாவில் இருக்காங்க. நான் பெரியார் என்ற ஆளுமையை மறக்க மாட்டேன். அதற்காக தொண்டரடிபொடிகள் சுயசிந்ந்தனையில்லாமல் பெரியார் அன்னைக்கு பேசியதையே இன்னைக்கு காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருப்பது. மகாகேவலமா இருக்கு அதை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
பெரியாரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவாராக தூக்கிப்பிடிக்கும் போது அவருக்கு புனிதர் பட்டம் கட்டுகிறீர்கள்.என் புரிதல் படி கடவுள் உருவாக்கமே அப்படி தான் தோன்றியது.


புத்தர் நான் கடவுள் என்று சொல்லவில்லை, இயேசு நான் கடவுள் என்று சொல்லவில்லை. அன்றைய காலகட்டத்தில் இருந்த சமூககேடுகளை சுட்டுக்காட்டினார்கள். மக்களிடையே செல்வாக்கு பெற்றார்கள். அதை வைத்து கல்லா கட்டவில்லை.
இன்று இயேசு, புத்தர் பெயரை சொல்லி கல்லா கட்டும் மதவாதிகளுக்கும பெரியார் பெயரை சொல்லி கல்லாகட்டும் வீரமணிக்கும் என்ன வித்தியாசம்?
தமிழ்தேசியத்தை வியாதி என விமர்சிக்க உங்களுக்கு உரிமை உள்ளபொழுது(எனக்கும் விமர்சனம் உண்டு) பெரியாரையும், உங்கள் கொள்கை நழுவல்களையும் கேள்வி கேட்ட பிறருக்கு உரிமை உண்டு தானே.
பெரியார் சொன்னதே எனக்கு போதும் தனியாக சிந்திக்க தேவையில்லை என்ற மனபான்மையில் நீங்கள் தொண்டர்களை உருவாக்கவில்லை. மனபாட்ம் செய்து ஒப்பிக்கும் இயந்திரங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள்!

வெடிக்கட்டும் புரட்சி!

தலிபான்கள் பூமியில்...
மதத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட கொடூரக் கொலைக்கெதிராக ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிளர்ந்தெழுந்திருக்கின் றனர். ஆப்கானிஸ் தானில் பார்குந்தா என்ற இளம் பெண் புனித நூலை எரித்ததாக கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதவெறியர்கள் திரண்டு, அந்த பெண்ணை கடுமையாக அடித்து துன்புறுத்தியிருக்கின்றனர். பின்னர் காபூல் ஆற்றங்கரையில் தீ வைத்து எரித்து அப்பெண்ணை கொலை செய்திருக்கின்றனர். இந்தக் கொடூரம் நிகழ்ந்த பின்னரும், பார்குந்தாவின் இறுதிச் சடங்கில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என அடிப்படைவாத மதவெறியர்கள் மிரட்டியிருக்கின்றனர்.
இதையெல்லாம் கண்டு மனம்வெதும்பிய ஆயிரக்கணக்கான பெண்கள், தங்கள் உயிரையும் துச்சமென மதித்து, பார்குந்தாவின் சவப்பெட்டியை தாங்களே சுமந்து சென்று இறுதிச் சடங்கை செய்திருக்கின்றனர். இதுமத அடிப்படை வாதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.மேலும் பார்குந்தா குர்ஆனை எரித்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந் திருக்கிறது. பார்குந்தா ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கிழித்தது பெர்சிய மொழி புத்தகத்தின் சில பக்கங்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் காபூலில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் திரண்டு ஆப்கானில் பெண்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டும், பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தான் சோசலிச நாடாக இருந்தது. அப்போது பெண்களுக்கு முழுச் சுதந்திரம் இருந்தது. பெண் கல்வி ஊக்குவிக்கப்பட்டது. முகத்தை மூடாமல் பெண்கள் பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றனர். பலதுறைகளிலும் சிறந்து விளங்கினர். சோவியத் ஒன்றிய படைகள் 1989ல் ஆப்கானை விட்டு வெளியேறியது.
அதன் பின்னர் முஜாகிதீன் குழுக்கள் ஆட்சியை பிடித்தன. இந்த குழுக்கள் மிகவும் பிற்போக்குத்தனமாக பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதித்தன. அன்று தொடங்கிய பெண்களுக்கு எதிரான அடக்குமுறையும், அடிமைத்தனமும் இன்றும் கொடூரமாக தொடர்கிறது. அதே நேரம் அங்கு இன்னும் நம்பிக்கை ஒளி பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது. தலிபான்கள் பெண்களுக்கு எதிராக இழைத்த கொடுமைகளை ஆவணப்படுத்தி தைரியமாக வெளியுலகிற்கு அம்பலப்படுத்தியது இடதுசாரி பெண் போராளி மலாலை ஜோயா தலைமையிலான பெண்கள் புரட்சிகர அமைப்பு.


மலாலை ஜோயா மதப்பழமைவாதத்தை மட்டும் எதிர்க்கவில்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து போராடி வருகிறார். அதனாலேயே இதுவரை 7 முறை அவரை கொலை செய்வதற்கான முயற்சி நடைபெற்றிருக்கிறது. அதிலிருந்து தப்பித்து பெண் அடிமைத்தனம், ஏகாதிபத்தியம், வறுமை, கல்வியறிவின்மை ஆகியவற்றிற்கெதிராக போராடி வருகிறார்.எப்போதும் மரணத்தை சந்திக்கக் கூடும் என்ற நிலையிலும், “எனக்கு மரணத்தைக் கண்டு பயம் இல்லை; அநீதிக்கு எதிராக மவுனம் காக்கப்படுவதை கண்டே நான் அஞ்சுகிறேன். எந்த நேரமும் என்குரலை நசுக்கவும் என்னைக் கொல்லவும் உங்களால் முடியும்.
ஆனால்நான் வாழவே விரும்புகிறேன். ஒரு பூவைப் பிய்த்து எறிய முடிகிற உங்க ளால், வரப் போகும் வசந்த காலத்தைத் தடுத்து நிறுத்த முடியாது’’ என்றுமதப் பழமைவாதிகளின் செவிட்டில் அறைந்தது போல, தனது மன உறுதியை உரக்கச் சொல்லி, களம் கண்டு வருகிறார். அந்த வழியிலேயே இன்றும் ஆப்கானிஸ்தானில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் மதப் பழமைவாத ஆதிக்கத்திற்கு மத்தியில் சமஉரிமை கேட்டு வீதியில் இறங் கியிருக்கின்றனர். இந்த போராட்டம் வீறு கொண்டு எழும்.
எங்கெல்லாம் மதவெறி ஆதிக்கம் செலுத்துகிறதோ, அங்கெல்லாம் மதத்தின் பெயரால் பெண்களை அடிமைப்படுத்தும் கயமைத்தனம் இந்த நவீன யூகத்திலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, இஸ்லாமிய பழமைவாத கருத்துக்களை விமர்சித்து வருகிறார். அவரை பழமைவாதிகள் விரட்டி வருகின்றனர். அதே போல் சல்மான் ருஷ்டியின் கருத்துக்களை ஆதரித்து பேசிய காரணத்திற்காக தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் மதப் பழமைவாதிகளால், பெண் எழுத்தாளர் சைனுப்பிரியா தாலா தாக்கப்பட்டிருக்கிறார். இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்துமதப் பெண்கள் 10 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என மதத்தின் பெயரால் கட்டளையிடுகின்றனர். நாட்டின் பிரதமரோ கண் மற்றும் காதுகளுடன் வாய்மூடி மவுனியாக இருக்கிறார். அவசரச் சட்டத்திலேயே ஆட்சி நடத்தும் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு அவசரச் சட்டம் கொண்டு வர மறுக்கிறார். காரணம், அதன் பின்னணியிலும், மதப்பழமைவாதத்துடன் கூடிய பெண்ணடிமைத்தனம்தான் முன்னிலையில் இருக்கிறது. பெண் சாமிகள் இருக்கும் கோவில்களில் கூட பெண் கள் கருவறைக்குள் செல்லமுடியாது என்ற அவலம் இன்றும் தொடர் கிறது.மத பழமைவாதத்தின் பெயரால் பெண்களை அடிமையாக வைத்திருக்கும் சமூக அவலத்திற்கெதிரான போராட்டம் ஆப்கானிஸ் தான், இந்தியா என்ற எல்லை வித்தியாசமின்றி உலகெங்கிலும் பரவிட வேண்டும். தலிபான்களுக்கு எதிராக மட்டுமல்ல, தாலி குறித்துப் பேசவே கூடாது என்பவர்களுக்கு எதிராகவும் போராட வேண்டிய தேவை தற்போது உள்ளது. இதை பெண்கள் மட்டுமல்ல, சமூகம் முழுமையும் சேர்ந்து நடத்த வேண்டியுள்ளது.

நன்றி - எம்.கண்ணன்

மிஸ் யூ அப்பா!

2013 மத்தியில் வரை சராசரி குடும்ப பொறுப்புகளுடன் தான் வாழ்க்கை ஓடியது. வீட்டு வாடகை, ஸ்கூல் பீஸ்னு இருந்த கமீட்மெண்டுகள் பத்து வருசமாக பழகிப்போன ஒன்றாகவே இருந்தது. பிரச்சனை ஆனப்பிறகு நான் வீட்டை காலி பண்ணிட்டு அம்மா வீட்டுக்கே வந்துட்டேன்.

எல்லார் வீட்டையும் போல நானும் அப்பாவுடன் பேசுவது குறைவே. ஆனால் அப்பா, அந்த ஃப்ரிஜுல இருக்குற இருக்குற பீர் எடுத்துக்கொடுங்கன்னு சொன்னா அதை ஓப்பன் பண்ணித்தருவார் எங்கப்பா. இளையகவி இப்போ ganesh kumar krish (ஃபேஸ்புக்கில்) நேரில் பார்த்திருக்கான்.

திரும்ப வீட்டுக்கு வந்த போது ஓவர் சரக்காகிபோச்சு எனக்கு, மனச்சிதைவின் விழிம்புவரை போய்ட்டு வந்துட்டேன்.  எங்கப்பா பெரிதா படிக்கல, கையெழுத்து கூட போட தெரியாது. நான் முதல் ரேங்க் எடுத்திருந்தாலும் என் வாத்தியார் இந்த கையெழுத்து நீயே போட்டியான்னு கேட்கிற அளவுக்கு ஒவ்வொரு தடவையும் டிசைன் டிசைனா போடுவார். ஆனால் கடைசி காலத்தில் நன்கு முதிர்ந்த மனிதராக நடந்து கொண்டார். நான் பிரச்சனையில் இருந்து வெளிவந்து சரக்கை விட அவரும் ஒரு காரணம் எனலாம். எத்தனை மணிக்கு வந்தாலும் சாப்டானான்னு கேட்டுட்டு தான் சாப்பிடுவார்.

எப்பவும் உடம்பு சரியில்லைன்னு படுத்து பார்த்ததில்ல, காய்ச்சல் அடித்தாலும் போன் வந்தா ஆட்டோ எடுத்துட்டு போயிருவார். நெஞ்சுவலின்னு படுத்தபோது இவ்ளோ சீரியஸ் ஆகும்னு யாருமே நினைக்கல. ஈரோடு,  மதுரை, சேலம்னு நண்பர்கள் உதவிடன் போராடிப்பார்த்துட்டோம். காப்பாத்த முடியல.

அவர் இறந்து ரெண்டு மாசம் வரைக்கும் கூட பெரியாத குடும்ப சுமை தெரியல, அப்ப்புறம் வந்தது பாருங்க வரிசையா, அங்க குழு, இங்க சீட்டு, அவளுக்கு வட்டி, இவனுக்கு கந்துன்னு டோட்டலா டவுசரை கிழிச்சிருச்சு. நான் வீட்டில் வந்து இருந்தபோது கூட சாப்பாட்டுக்கு இவ்ளோ கொடுன்னு கேட்டு வாங்கியதில்ல, எப்பவாச்சும் வாடகை கொடுக்க, வண்டி டீவ் கட்டன்னு ஆயிரம், ரெண்டாயிரம் கேட்பார் அவ்ளோ தான்.

பிறகு தான் தெரிந்தது. கஷ்டத்தை சொல்லாமல் வெளிய கடன் வாங்கியே வாழ்க்கைய ஓட்டிகிட்டு இருந்திருக்கார். அதை அடைக்க இங்க கடன், இதை அடைக்க அங்க கடன்னு வாழ்க்கைய ஓட்டினாலும் அதற்காக நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவும் தயாராக இருந்தார். ஆட்டோ ஸ்டேண்டில் ஆச்சர்யமா சொல்லுவாங்க. தொடர்சியா ஒரு மணிநேரம் உங்கப்பா வண்டி வண்டி ஸ்டேண்டில் நிக்காதுன்னு.

வாழ்க்கைய நீங்களா கத்துகோங்கன்னு சுதந்திரமா விட்ட அப்பா, இந்த சுமைகளை தாங்குவது எப்படின்னு மட்டுமாவது சொல்லிகொடுத்துட்டு போயிருக்கலாம். எங்கம்மா கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லும் போதெல்லாம் வேலைய பாரும்மான்னு வாயை அடக்கீருவேன். எங்கப்பா இப்ப இருந்தா பொடணி மேல போட்டு இந்நேரம் எதோ பேச்சியம்மாளியோ, ஒச்சாமாரியையோ கட்டி வச்சிருப்பார்.

ஒவ்வொரு நாளும் அவர் போட்டோவை ஆச்சர்யமா பார்க்குறேன். எப்படி இத்தனை சுமைகளையும் தாங்குனார், சமாளித்தார்னு. எனக்கு ஆறு மாசத்துக்கே மூச்சு முட்டுது.

உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் அப்பா! :(

பாலியல் உளவியல்!

டெல்லியில் வன்புணர்வினால் இறந்த நிர்பயாவும், அதனை தொடர்ந்து பிபிசி எடுத்த ஆவணபடமும் தான் இன்னைக்கு talk of the city. குற்றவாளியின் பேட்டியின் மூலமும் அதனை தொடர்து பேட்டி எடுத்தவரின் உரையில் குற்றவாளின் கருத்து தான் இந்தியாவில் பெரும்பான்மையினரின் கருந்தாக இருக்கின்றது என்ற பேச்சும் இந்தியாவுக்கு அவமானம் என்பதே இந்த ஆவணப்படம் தடை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.

கட்டி காக்க இங்கே என்ன மானம் இருக்கென்று இந்த துள்ளல்னு எனக்கு புரியல, ஆவணபடத்தில் சொன்னாலும் சொல்லாடியும் இந்திய ஆண்களில் பெரும்பான்மையினோர் பாலியல் வன்புணர்வுக்கு காரணம் பெண்களே என்று தான் கருத்து தெரிவிக்கின்றனர்.

முருகன் என்ற ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சொல்கிறார். எங்கள் வீட்டிற்கு சொந்தகாரங்க யாராவது வந்தா வீட்டில் இருக்கும் பெண்கள் உள்ள போய் ஒழிஞ்சிக்குவாங்க, இன்னைக்கு அப்படியா இருக்கும் கலாச்சாரம்னு சொல்றார்.
மத அடிப்படைவாதிகள் பத்தி சொல்லவே வேண்டாம். மூடிவைத்த பழங்கள் கெடாது, ஒரு மொபைல் போனை பாதுகாக்க அதுக்கு உறை போட்ற, உன்னை(பெண்ணை) பாதுகாக்க பர்தா போடுன்னு பெண்ணை ஒரு மெட்டீயிரலா(பொருளா)தான் பார்க்குறாங்க.

இதுக்கு பின்னாடி இருக்கும் உளவியல் என்ன? 

ஆண்கள் யாரும் யோக்கியம் கிடையாது, எல்லாரும் பெண்ணை ரசிக்கதான் செய்கிறான். மற்ற உடைகளை விட இருப்பதிலேயே செக்ஸியான உடை சேலை என்பதும் அவனுக்கும் தெரியும். ஆனால் இம்மாதிரியான பாலியல் குற்றங்களின் போது அவனுக்குள் இருக்கும் குற்ற உணர்வு எட்டிபார்க்கிறது. தானே குற்றம் செய்தது போல் பாவிக்கிறான். குற்றத்தை நியாயப்படுத்த பெண்ணின் மீதே பழியை போடுகின்றான்.

மேலும் இந்த சமூதாயம் பெண்ணை ஆணுக்கு அடிமை என்றே சொல்லி வளர்த்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் எடுத்த சர்வேயில் 10% பெண்களுக்கு ஆர்கஸம் என்றால் என்னவென்றே தெரியாது என புள்ளிவிபரம் சொல்கிறது. இருவரும் ஜெயிக்கும் ஒரே விளையாட்டு செக்ஸ். ஆனால் ஆண் தன் தேவைக்கு மட்டுமே (பெண்ணின்)உடலையும், உறவையும் வைத்துக்கொள்கிறான். அந்த குற்ற உணர்வையும் மறைக்க பெண்ணை கேள்வி கேட்க விடாமல் அடிமை ஸ்தானத்திலேயே வைத்திருக்க முயல்கிறான். நைட்டு வெளிய என்ன வேலை உனக்கு. அதென்ன கண்டபயலுகளுடன் ஊர் சுத்துவது என்பதெல்லாம் ஒரு ஆணுக்கு மட்டுமே கட்டுபட்டவளாக பெண் இருக்கு வேண்டும் என்ற ஆணாதிக்க திணிப்பு,

ரெண்டு தலைமுறைக்கு முன் இந்தியாவில் ரவிக்கை(ஜாக்கெட்) என்பது நாகரீக பெண்கள் மட்டுமே அணிந்திருந்த ஒன்று. ரோசாப்பூ ரவிக்கைகாரி என்ற படத்தில் இதன் உளவியல் அழகாக காட்டப்பட்டிருக்கும். ஒரு பெண் பிரா, ரவிக்கை அணிய விரும்புவதே கலாச்சாரத்துக்கு எதிரான செயலாக பார்க்கப்படும். அப்போதெல்லாம் உடலியல் மீதான வன்முறைகள் ஏன் இல்லை?

மனித உளவியல் படி மறைபொருளின் மீதே உன் ஈர்ப்பு இருக்கும் என்பதே உண்மை. ஆனால் உடை தான் பாலியல் குற்றங்களுக்கு காரணம் என்பது ஒட்டுமொத்த ஆண்களின் பாலியல் வறட்சிக்கும்.குறைபாடுகளையும் மறைக்க ஆண், பெண் மீதே அம்பை திரும்பும் உக்தி. மேலும் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு உடை தான் காரணம் என்போர் வாய் ப்பப்பப்ப தான்.

உலகில் 90$ உயிரினங்கள் உடலுறுவு கொள்கின்றன ஆனால் ஒரு சில இனங்களுக்கு மட்டுமே ஆர்கஸம் என்ற உட்சகட்ட இன்பம் கிடைக்கிறது. உடலறுவு என்பது இனப்பெருக்திற்காக மட்டும் என்பதை தாண்டி கிடைக்கும் இந்த இன்பம் மட்டுமே மனிதனை உடலுறவின் பால் இவ்வளவு நாட்டம் கொள்ள வைக்கிறது. ஆனாலும் மனிதனின் அடிப்படை குணம் உன்னை சந்தோசப்படுத்தி நானும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பது தான். செக்ஸ் ஒன்றை தவிர மற்ற விசயங்களில் இதை கடைபிடிக்கவும் செய்கிறான், ஆனால் இதில் மட்டும் ஆணாதிக்க சிந்தனையும், இயலாமையும் பெண்ணை அடிமையாக வைத்திருக்கவே விரும்புகிறது. 

இன்று, நேற்றல்ல. சமூக அமைப்பான குடும்ப முறை உருவானதிலிருந்தே பெண்ணை ஆண் அடிமையாக தான் வைத்திருக்கின்றான். பொருள்முதல்வாதத்தின் படி என் சொத்து என் உரிமை என்பது எனக்கு பின்னால் என் வாரிசுகளுக்கு என்ற எண்ணம் தோன்றியதில் இருந்து ஆணாதிக்க சிந்தனையும் சேர்ந்தே வளர்ந்து வந்துள்ளது.

பாலியல் குற்றங்கள் அறவே நீங்க மக்களுக்கு கல்வியறிவு வேண்டும், போதிய வயதில் வெளிப்படையான செக்ஸ் கல்வி வேண்டும். சுய விருப்பத்துடன் பாலியல் தொழிலை தேர்தெடுப்பவர்களுக்கு சமூக அங்கிகாரம் அளித்து பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும். பிற்போக்கு தனங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும்.

அய்யோ சுய இன்பம் பண்ணியா, உன் வாழ்க்கையே போச்சேடா பேரண்டி, உன்னை நம்பி வரும் பெண் தெருவில் நிற்பாளேன்னு கதறி சீன் போடும் தாத்தாங்களுக்கு டீவி பொட்டியில் இடம் தர வைக்கும் இது கொஞ்சம் கஷ்டம் தான். அந்த தாத்தாகளை எல்லாம் தூக்கி கொஞ்சநாள் உள்ளவச்சா கொஞ்சமாவது நாடு உருப்பட வழி கிடைக்கும்.

!

Blog Widget by LinkWithin