பங்குவணிகமும் கமாடிட்டியும்!

போன வருடம் நான், பாஸ் கார்த்திக் ஆபிஸில் வேலை செய்து கொண்டிருந்த சமயம், ஒரு நண்பர் அவரது நண்பரை அழைத்து வந்திருந்தார் ஒரு உதவிக்காக. சொல்லுங்க சார் என்றோம். அவர் சொல்ல ஆரம்பித்தார், சார் நான் வீ.ஆர்.எஸ் வாங்கி அதில் வந்த பணத்தை ஒரு வங்கியில் டெபாசிட் பண்ண போனேன். அந்த வங்கி மேலாளர் அந்த வங்கி பங்குகள் 1000 த்தை என் தலையில் கட்டிவிட்டார்(ஆம் அப்படியே தான் சொன்னார்), அது என்னாச்சுன்னு பாருங்க ப்ளீஸ்.

என்ன விலைக்கு சார் வாங்குனிங்க?

அப்ப தான் வெளியிட்டாங்க, ஒரு பங்கு பத்து ரூபாய் வீதம் 1000 பங்குகள், மொத்தம் பத்தாயிரம் புடுங்கிட்டார்.

ஒரு நிமிசம் பார்த்து சொல்றோம் இருங்க, சாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆர்.........

என்னாங்க ஆச்சு?

இன்னைக்கு அந்த பங்கின் விலை 495 ரூபாய் சார்.

நிஜமாலுமா?

நீங்களே பாருங்க சார்!

*

முழுக்க முழுக்க நடந்த உண்மை, அதை விற்று கொடுக்கவும் பாஸ் கார்த்திக் தான் உதவி செய்தார், ஆனால் இன்னைக்கு வித்திருந்தா இன்னும் அவர் சந்தோசப்பட்டிருப்பார். ஏனென்றால் இன்று அந்த பங்கின் விலை 762 ரூபாய். சென்ற வருடம் இதே நேரம் 495. அந்த நிறுவனம் bank of baroda.

பங்கு வணிகம் என்பதை முழுமையாக அறியாமல் சிலர் அதை சூதாட்டம் என்கின்றனர், பத்து பேர் சேர்ந்து ஆரம்பிக்கும் ஒரு நிறுவனத்தில் சில வருடங்கள் கழித்து ஒருவர் மட்டும் தனது பங்கை எப்படி விற்றுவிட்டு வெளியேற முடியுமோ அதே போல் தான் இதுவும், சிறு நிறுவனங்கள் பத்து பேரை வைத்து தொழில் ஆரம்பிக்கின்றன, பெரு நிறுவனங்கள் பல்லாயிரம் பேரை வைத்து தொழில் ஆரம்பிக்கின்றன. தொழில் பற்றிய சிறிய அறிவு மற்றும் தினம் செய்திதாள் வாசிப்பே உங்களை பங்கு வர்த்தகத்தில் வெற்றிபெற வைக்கும்!


பங்கு வணிகத்தின் மூலமே உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன வாரன் பப்ஃபெட்


**************************

பங்குவர்த்தகத்தை விட அதிகமாக விமர்சிக்கப்படுவது விலைபொருட்கள்(கமாடிட்டி) சந்தை. டோண்டுவின் இந்த பதிவில் ரமணா என்பவர் என்னிடம் கேட்ட கேள்விக்கு இங்கேயே பதிலும் சொல்லி விடுகிறேன்.

உங்கள் பாட்டியிடம் போய் உங்கள் காலத்தில் பவுன்(சவரன்) என்ன விலை என்று கேட்டு பாருங்கள், 300 என்பார். உங்கள் அம்மாவிடம் இதே கேள்வியை கேளுங்கள் 3000 என்பார். அப்படியானால் நம் காலத்தில் பவுன் 30000 தானே இருக்க வேண்டும், ஆனால் இல்லையே. காலம் காலமாக விலையேற்றம் மாற்ற முடியாத ஒன்று.(புதிய தலைமுறை பத்திரிக்கைக்காக லக்கி என்னிடம் விலையேற்றம் பற்றி பேட்டி எடுத்த போது நான் சொன்ன பதில் இது, எல்லாரும் ஆமாம் மாபெரும் விலையேற்றம்னு அம்மணமா ஓடுறாங்க, நீங்க மட்டும் கோவணம் கட்டினா எப்படின்னு அந்த பேட்டியை வெளியிடவில்லை ) ஆன்லைன் வர்த்தகத்தால் தான் விலையேறியது போன்ற கூற்றுகள் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவது தான்.

தங்கம் ஆபரணமாக மட்டுமில்லாமல் முதலீட்டுபொருளாகவும் மாறி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது, முன்பெல்லாம் ஒரு நாட்டின் தங்க இருப்பை வைத்தே அவர்கள் பணம் வெளியிட வேண்டும். இன்று அவ்வாறு இல்லை இதுவே பணவீக்கத்திற்கு முதல் காரணம். பங்கு வணிகத்தில் சிறு சறுக்கல் ஏற்படும் போது முதலீட்டாளர்கள் மாற்று முதலீட்டு பொருளாக தேர்ந்தெடுப்பது தங்கத்தை தான், காரணம் விலைபொருட்கள் என்றும் கைவிடாது என்ற நம்பிக்கை.

தங்கம் விலையை நிர்ணயம் செய்ய பல கூறுகள் இருக்கின்றன, உலக பொருளாதாரநிலை, சப்ளை & டிமாண்ட், நாட்டின் பெரு வங்கிகள் இருப்பு பணத்தை தங்கமாக மாற்றி சேமித்து வைத்தல்(டன் கணக்கில்) மற்றும் போர் பதட்டம் போன்றவை மொத்தமாகவே விலைபொருட்களின் விலையை மாற்றும், ஆன்லைன் வர்த்தகத்தால் தான் விவசாய பொருட்கள் விலையேறுகிறது என்றால் ஆன்லைனில் இல்லாத பொருட்கள் ஏன் விலையேற வேண்டும்? ஒரு சிலர் சொல்வதை மட்டும் வைத்து முடிவு செய்யாதீர்கள், ஆற்றில் இறங்காமல் நீச்சல் அடிக்க முடியாது, வர்த்தகத்தில் இறங்காமல் அதை பற்றி தெரிந்து கொள்ள முடியாது.

கமாடிடியில் 8 கிராம் தங்கம் வாங்கி உங்கள் வர்த்தகத்தை ஆரம்பிக்கலாம்.


வாரன் பற்றிய புத்தகம் கிழக்கு வெளியீட்டில் கிடைக்கிறது!


*************

இது தான் நான் வேலை செய்யும் நிறுவனம். விதிகளுக்கு உட்பட்டு செபியில் ரிஜிஸ்டர் செய்யபட்டது. நமது நிறுவனத்தில், ஷேர், கமாடிட்டி, கரன்சி ட்ரேடிங்கை ஒரே ப்ளாட்ஃபாரத்தில்(trading portal) செய்யலாம்.  இந்தியாவின் முன்னணி வங்கிகள் 17 ல் கணக்கு வைத்திருக்கிறார்கள், நீங்கள் அப்ளை செய்த ஒரே நாளில் உங்களது லாபப்பணம் உங்களது வங்கிக்கே ஆன்லைன் மூலம் ட்ரான்ஃபர் ஆகிவிடும் . இந்தியாவிலேயே மிக மிகக்குறைந்த ப்ரோக்ரேஜ்(கமிசன் தொகை)(இது என் பொறுப்பு).

தமிழகமெங்கும் சப்-ப்ரோக்கர்கள் வரவேற்கப்படுகிறார்கள். ஷேர், கமாடிட்டி, கரன்சி மூன்றுக்குமாக சேர்த்து மிகக்குறைந்த திருப்பி கொடுக்கப்படும் முன்பணம்(refundable deposite). சிறந்த நிபுணர்களை கொண்டு  உங்கள் ஊரில் ஃப்ரீ செமினார் மற்றும் டெக்னிக்கல் வகுப்புகளை நாங்களே இலவசமாக எடுக்கிறோம் . சந்தை நிலவரங்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு தினம் அனுப்பப்படும்.

முதலீடு செய்ய ஆர்வமுள்ளவர்கள் மற்றும் ஏதேனும் சந்தேகம் உள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்

அருண் - 9994500540


**********

இந்திய பொருளாதார வளர்ச்சியை நமது நாட்டு பங்கு வணிகமே நிர்ணயம் செய்கிறது, முதலீடு செய்வோம், இந்தியாவின் வளர்ச்சியில் பங்கெடுப்போம்!

65 வாங்கிகட்டி கொண்டது:

rajamelaiyur said...

அருமையான பதிவு

rajamelaiyur said...

இன்று என் வலையில் ...

பாவம் நடிகர் விஜய்

SURYAJEEVA said...

சூதாட்டம் சூதாட்டமே, பத்து ரூபாய்க்கு பங்கு வாங்கப்பட்ட நிறுவனம் பூஜ்யம் ரூபாயாக ஆகவும் வாய்ப்பு இருக்கிறது...

eg: reliance

SURYAJEEVA said...

உங்கள் லாபத்திற்காக [commission] மக்களை ஏமாற்ற வேண்டாமே...

வால்பையன் said...

நீங்கள் நஷ்டம் அடையும் நிறூவனத்தில் தான் முதலீடு செய்வீர்களா சூர்யாஜீவா?

வங்கிகள், பொதுவுடமைக்காப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா?

பாஸிடிவா யோசிங்க நண்பா!

இந்திரா said...

பலே பலே..
ஆலோசனை சொல்ற மாதிரி விளம்பரமும் குடுத்துட்டீங்களே...

Raja said...

வால் , பிரச்சனை என்னன்னா பங்கு சந்தைய தீர்மானிக்கிற சக்தி சிறு முத்லீட்டலர்கிட்ட இல்லவே இல்ல...ஒரு பொருளோட உண்மைதிப்பைவிட பலமடங்கு ஊதிபெருக்கிவிட்டுட்டு சிறு முத்லீடாலர்கள போண்டியக்கிவிட்டுரங்க சூதாடிகள்.....மிகபெரிய பங்குவர்த்தக சூதடிங்க தான் ஒவ்வுறு பங்கின் விளையவே தீர்மநிக்குரங்க அப்படீங்கரப்போ ஒரு சிறு முதலீட்டலன் எப்படி நம்பிக்கையோட உள்ள வருவான்....daily trading ஒன்னே போதும் , பங்கு சந்தைய சூதாட்டம்னு சொல்ல...ஒருத்தன் 10 ரூபாய வச்சிக்கிட்டு 1000 ரூபாய் வியாபாரம் எப்படி எங்க பண்ண முடியும்...சூதட்டதுல மட்டும் தான் முடியும்....

வால்பையன் said...

சூதாட்டம் என்பது என்ன?

அறிவையும், தகவல்களையும் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி விளையாடுவது.

சூதாட்டத்திற்கு செய்தித்தாள் படிக்க வேண்டியதில்லை, கையில் பணமும் பேராசையும் மட்டும் போதும்.

வணிகம் அப்படியல்ல, நிறுவனத்தை பற்றிய அறிவு, சந்தை நிலவரம், உலக பொருளாதார நிலை போன்ற பல விசயங்கள் இருக்கின்றன.

நல்ல நேரம் பார்த்து முதலீடு பண்ணேன், எல்லாம் போச்சு. அவன் சொன்னான், இவன் சொன்னேன்னு போட்டேன் போச்சு என்பவர்கள் தான் வணிகத்தை சூதாட்டம் என்பார்கள்.

பங்கு வணிகத்தில் திறமையாக முதலீடு செய்து உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் வாரன் பஃப்பட் போட்டோ கூட பதிவில் போட்டிருக்கிறேனே. அவரை பார்த்தால் சூதாடி மாதிரியா தெரியுது!?.

பதிவிலேயே சொல்லியிருக்கிறேன், கொஞ்சம் தொழில் அறிவும், தினம் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் இருந்தாலே போதும் பங்கு சந்தையில் சம்பாரிக்கலாம் என.

சரிவை சந்திக்கப்போகும் நிறுவனங்கள் பற்றி செய்திதாள்களில் முன்னரே செய்திகள் வந்து விடுகின்றன, நிறுவனங்களை குறை சொல்வதை விட நாம் என்ன தவறு செய்தோம் என கண்டறிவதே சிறந்த வர்த்தகருக்கு அழகு.

ஏனென்றால் லாபமும் நஷ்டமும் பங்கு வணிகத்தில் மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா தொழிலிலும் உண்டு!

வால்பையன் said...

@ராஜா

இன்னைக்கு கூட சென்செக்ஸ், நிஃப்டி இறங்கியிருக்கு, ஆனா பாருங்க இன்ஃபோசிஸ் ஏறிகிட்டு இருக்கு, ஏன்?

அந்த நிறுவனத்தின் காலாண்டு நிதி அறிக்கை 11% லாபத்தை காட்டுது.

நான் முதலீடு செய்யப்போகும் நிறுவனத்தை நாமே தேர்வு செய்கிறோம். அதே பெரு முதலீட்டாளர்களார் பல லட்சம் சம்பாரித்தவர்களும் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்களா என தெரியவில்லை.

சந்தையில் இறங்கும் முன் ஒரு மாதம் பயிற்சி எடுப்பது நல்லது. இலவசமாக நாங்களே அதையும் செய்கிறோம், விருப்பம் இருப்பின் தொடர்பு கொள்ளவும்!

Raja said...

உங்க வாதப்படியே வச்சிக்குவோம். எந்த பொருளாவது பங்கு சந்தைல அதோட உண்மையான மதிபில விக்கபடுதா? அப்படின்னா என்ன அர்த்தம்...ஒரு பொருளோட விலை செயற்கைய ஏத்தி ஏத்தி வணிகம் நடக்குது...ஒரு கட்டத்துல அந்த குமிழி உடயரப்போ கடைசியா எவன் அத பங்க வச்சிருக்கானோ அவனுக்கு நஷ்டம் வருது....சுறுக்கம சொன்ன ஒருத்தரோட நஷ்டம் என்னோருத்ரோட லாபம்....இதுதான் உண்மையான வணிகமா..

Raja said...

நான் கேள்வி கேட்பது என்னுடைய புரிதலை சரிபார்துகொள்ளவே...nothing personal :)

baleno said...

பல விடயங்களை மேலும் அறிந்து கொள்ளதக்கதாக உங்கள் பதிவு இருந்தது.

வால்பையன் said...

@ ராஜா

ஒரு பொருள் 10 ருபாய் செலவில் தாயாரிக்கப்படுகிறது, அது வியோகிஸ்தர்களுக்கு மேலும் லாபத்திற்கு விற்கப்படுகிறது, அவர்களால் பெருவியாரிகளுக்கு, பின் அது சிறு வியாபாரிகளுக்கு விற்கப்படுகிறது.

இப்படி பல கை மாறும் போது நிறுவனத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே அதன் மதிப்பு ஏறுகிறது, அதன் எதிர்கால திட்டத்தை கருத்தில் கொண்டே நாம் அதை வாங்குவதும் விற்பதும்.

எந்த செய்தியும் இல்லாமல் ஒரு பங்கின் விலை இப்பொழுதெல்லாம் ஏறுவதில்லை, நல்ல ஆர்டர் கையில் கிடைத்தால் ஏறும், ஆர்டர் கைவிட்டு போனால் இறங்கும்!

அரசு நிலத்திற்கு ஒரு விலை நிர்ணயத்துள்ளது, அது பேஸ் வேல்யூ(பங்கு வணீகத்திலும் உண்டு), ஆனால் நாம் அரசு நிர்ணயத்த விலைக்கா வாங்குகிறோம், மார்க்கெட் வேல்யூவிற்கு தானே வாங்குகிறோம், அதானால் நாம் நட்டம் அடைந்து விட்டோம் என சொல்ல முடியுமா?

நிலத்தில் எந்த நம்பிக்கையில் முதலீடு செய்கிறோமோ அதே நம்பிக்கை இங்கேயும் காப்பாற்றும்!

*****

இதற்கு முன் நாம் விவாதித்தது மாதிரி கூட எனக்கு நியாபகம் இல்லையே தல! எதுல எங்க இருக்கு பர்சனல்!?

வால்பையன் said...

//.ஒருத்தன் 10 ரூபாய வச்சிக்கிட்டு 1000 ரூபாய் வியாபாரம் எப்படி எங்க பண்ண முடியும்...சூதட்டதுல மட்டும் தான் முடியும்.... //


சிறு வியாபாரிகள் ஏஜென்சியிடமிருந்து பொருட்களை கடனாக பெறுகின்றன, அது கூட சூதாட்டம் ஆகிறுமா தலைவா!
காண்ட்ராக்ட் முடியும் போது நாம் டெலிவரி எடுக்க நினைத்தால் எடுக்கலாம் தானே, பின் எப்படி அது சூதாட்டம் ஆகும்!?

வால்பையன் said...

//.சுறுக்கம சொன்ன ஒருத்தரோட நஷ்டம் என்னோருத்ரோட லாபம்.//

எந்த பங்கு அதன் வெளீயிட்டு விலையிலிருந்து கீழே வர்த்தகம் நடந்து கொண்டிருக்கிறதோ அப்போது தான் அது வெளிப்படையான நட்டம், உடனே வாங்கி உடனே விற்கனும் போன்ற அவசர கால வர்த்தகத்தில் நாம் இரண்டையும் சந்தித்து தான் ஆகனும்!

நீங்கள் காய்கறி மார்க்கெட்டிற்கு போய் பாருங்கள், காலையில் பத்து ரூபாய்க்கு விற்கும் தக்காளி நேரம் ஆக ஆக குறைந்து மாலையில் எந்த விலைக்கு வந்தாலும் தள்ளிவிடும் நிலையில் இருக்கும், கடன் வாங்கி வியாபாரம் செய்பவர்கள், அன்றே அடைத்தாக வேண்டும், வந்த வரை லாபம், மீதியை நாளை பார்த்து கொள்ளலாம் என நினைப்பவர்கள், லாப, நஷ்டத்தை ஒரே மாதிரி தான் பார்ப்பார்கள்!

புதுகை.அப்துல்லா said...

// இந்திய பொருளாதார வளர்ச்சியை நமது நாட்டு பங்கு வணிகமே நிர்ணயம் செய்கிறது

//
இது 101% உங்களது தவறான புரிதல்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் காரணிகள் நிறைய்ய்ய உண்டு. பங்குச்சந்தை அதில் ஒரு சிறுகூறு மட்டுமே.

வால்பையன் said...

அப்துல்லா அண்ணே!

நான் குறியீட்டை தான் குறிப்பிடுகிறேன், பொருளாதார சறுக்கல் ஏற்படுகையில் மொத்த பங்கு வர்த்தகமும் சரிந்து உலக நாடுகளுக்கு நாம் சறுக்கி கொண்டிருகிறோம் என்பதை காட்டுகிறது, மேலும் புது புது நிறுவனங்கள் IPO வெளியிடுவதற்கேற்ப புது புது முதலீட்டாளர்களும் உருவாவதே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சமமாக இருக்கும் என்பது என் கருத்து.

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை இருந்தும் நாம் பணக்கார நாடு இல்லையே ஏன்? பணம் குட்டி போடாது அண்ணே, முதலீடு தான் குட்டி போடும்!

அதை குறிப்பிடவே அந்த வார்த்தையை பயன்படுத்தினேன்!

Paleo God said...

வாழ்த்துகள் அருண்.

PAISAPOWER said...

தமிழர்களாகிய நாம் பல பழைய நாள்பட்ட சித்தாந்தங்களில் இருந்து வெளியே வரமாட்டேனென்று அடம் பிடித்தே நிறைய இழந்திருக்கிறோம். அவற்றில் ஒன்றுதான் பங்கு வர்த்தகம்.

பங்கு வர்த்தகம் சூதாட்டமில்லை.நுட்பங்கள் புரிந்தால் பணம் சம்பாதிக்க இதை விட எளிதான முழு நேரத் தொழில் வேறெதுவும் இருக்க முடியாது.

என்னுடைய இருபது வருட அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். சரியான முன் தயாரிப்போடு அணுகினால் இந்த தொழிலில் வெற்றி நிச்சயம்.
.
வாழ்த்துக்கள் அருண்.

Unknown said...

நல்ல கட்டுரை..
வணிகத்தில் ஈடுபட அழைப்பு விட்டுரிக்கிரீர்கள். இது சூதாட்டம் இல்லை என்பதுசரிதான் அனால் சூதாட்டம் என்பதற்கான வரையறைக்குள் அது இருக்கிறது.

எது மேலே ஏறுகிறது எது கீழே இறங்குகிறது என்று ஒவ்வொரு நாளும் பார்த்து படித்து தெரிந்து கொண்டு வாங்கி விற்கிறீர்கள். அதில் ஒட்டு மொத்த அதிர்ஷ்டம் இல்லையென்றால் ... எப்படி? யாரோ வேலை செய்கிறார்கள். யாரோ லாபம் பார்க்கிறார்கள். அதில் நேரம் பார்த்து நாமும் வாங்கி விற்று லாபம் பார்க்கலாம். நமக்குத் தெரியாமல் அந்தக் கம்பெனி மோசம் பொய் விட்டால்... நாமும் மொத்தமாகப் போக வேண்டியதுதானே. சத்யம் நல்ல கம்பெனிதான்னு சொன்னாங்க...

பங்கு வாங்கி விற்று மோசம் போன பலரை நாம் குறிப்பிட முடியும்.
சரி - இது உங்கள் வணிகம் -
இலாபம் பெற வாழ்த்துக்கள்.

PAISAPOWER said...

தமிழர்களாகிய நாம் பல பழைய நாள்பட்ட சித்தாந்தங்களில் இருந்து வெளியே வரமாட்டேனென்று அடம் பிடித்தே நிறைய இழந்திருக்கிறோம். அவற்றில் ஒன்றுதான் பங்கு வர்த்தகம்.

பங்கு வர்த்தகம் சூதாட்டமில்லை.நுட்பங்கள் புரிந்தால் பணம் சம்பாதிக்க இதை விட எளிதான முழு நேரத் தொழில் வேறெதுவும் இருக்க முடியாது.

என்னுடைய இருபது வருட அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். சரியான முன் தயாரிப்போடு அணுகினால் இந்த தொழிலில் வெற்றி நிச்சயம்.
.
வாழ்த்துக்கள் அருண்.

- சரவணக்குமார்

வால்பையன் said...

உங்க பதிவில் இருக்கும் விட்கெட்டெல்லாம் நீங்கள் செய்ததா?
நான் யூஸ் பண்ணீக்கலாமா?

PAISAPOWER said...

பேராசைப் படுகிறவனே எல்லாவற்றையும் இழக்கிறான். இது பங்குச் சந்தைக்கு மட்டுமில்லை எல்லாத் தொழிலுக்கும் பொருந்தும். எந்த வித அடிப்படை தெளிவும் இல்லாமல் பணத்தைக் கொண்டு போய் பங்குச்சந்தையில் போட்டு பணத்தை தொலைத்து விட்டு தன்னுடைய இயலாமையை மறைக்க பங்குச் சந்தையை குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

-சரவணக்குமார்

வால்பையன் said...

@ அப்பு

//பங்கு வாங்கி விற்று மோசம் போன பலரை நாம் குறிப்பிட முடியும். //

மளிகை கடை வைத்து நட்டம் பட்டவனும் இருக்கான் அண்ணே!
ஏன் உணவகத்தில் கூட எனக்கு நட்டம் தான், அதற்காக உணவக தொழிலையே நான் மோசமாக கருதிவிட முடியாதல்லவா? நான் என்ன தவறூ செய்தேன் என ஆராய்வதே சிறந்ததாக கருதுகிறேன்!

Unknown said...

@ வால் பையன்

நீங்க கோடீஸ்வரரான ஒருத்தரை திர்ம்பத் திரும்ப சொன்னதுனால சொன்னேன்.

PAISAPOWER said...

நான் அறிந்த தகவல்களை எல்லோருக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டியே எனது பதிவில் தொகுத்து வைத்திருக்கிறேன். தாராளமாய் ப்யன் படுத்திக் கொள்ளலாம்.

மீண்டும் சொல்கிறேன். பங்கு வர்த்தகம் என்பது நேர்த்தியான பொருளியல் மற்றும் உளவியல் சார்ந்த தொழில். ஆர்வம் உள்ள எவராலும் இதை வெற்றிகரமாய் செயல்படுத்த முடியும். ஒரே ஒரு அடிப்படை தகுதி மிக முக்கியம்.அதாவது நிறைய உழைக்க தயாராக இருக்க வேண்டும் அவ்வளவே!

உழைப்புக்கேற்ற வெகுமதி நிச்சயம் உண்டு.

வால்பையன் said...

@ அப்பு

வாரன் ஒரு உதாரணம் மட்டுமே, இன்னும் நிறைய பேர் இருக்காங்க, பங்கு வர்த்தகம் சூதாட்டம், அதில் வெற்றி பெற்றவர்கள் இல்லை என்று பல தளங்களில் எனக்கு வந்த கேள்விக்காகவே அவரை உதாரணமாக குறீப்பிட்டேன்!

எத்தனையோ மியூச்சுவல் ஃபண்டுகள் குறைந்தபட்ச (அவர்கள் செலவு போக) கேரண்டியில் நமது முதலீட்டை திரும்ப தருகிறன, அவர்கள் நமது பணத்தை முதலீடு செய்வது பங்கு வர்த்தகத்தில் தான் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றூ நம்புகிறேன்.

அவர்கள் பல நிபுணர்களை வைத்து பல கோடிகளை கையாள்கிறார்கள், நம்மால் சில ஆயிரங்களை கையாளமுடியாது என நினைக்கிறீர்களா?

VIJAY said...

வாழ்த்துகள் அருண் !!

சந்தை சூதாட்ட விடுதி அல்ல, இதற்கு தேவை கொஞ்சமே கொஞ்சம் பணமும் , நிறைய Fundamental & Technical Analysis.
ஒரு பங்கின் விலை ஏறுமா இறங்குமா என அறிய FundamentalAnalysis , மற்றும் அவ்வாறு ஏறும் பங்கு எங்கிருந்து எது வரை ஏறும் என்பதை அறிய Technical Analysis .
தங்கம் வெள்ளி உச்சத்தில் இருந்த சமயம் , தீபாவளிக்குள் இன்னும் ஏறிடும் என முதலீடு செய்ய நினைத்தவர்கள் நிறையவே இருந்திருப்பார்கள் !! அனால் நடந்தது என்னவோ 65000 இருந்து 3 நாட்களில் 45000 வரை இறங்கியது.
மேற்பார்வையாய் பார்பவர்களுக்கு இது சூதடடின் உச்ச கட்டம், ஆனால் இந்த விலையில் சரிவு நடக்க வேண்டியது என்பது TechnicalAnalysisஇன் கூற்று.

முறையான அணுகுமுறை உலகில் எல்லா தொழிலுக்கும் தேவை, அவ்வாறே தான் சந்தையும்!!

வால்பையன் said...

சரியா சொன்னிங்க விஜய்!

தங்கத்தின் இறக்கத்தை நானும் கணித்திருந்தேன்!

Unknown said...

gud post

naren said...

எந்த ஒரு முதலீட்டிலும் risk factor என்று ஒன்று இருக்கும். அதை ஒவ்வொரு முதலீட்டாளரும் கருத்தில் கொள்ளவேண்டும்.
பங்குச் சந்தையில் முதலீடு செயபவர்கள் எளிமையாகச் சொன்னால், முதலீடு செய்யும் நிறுவனத்தின் ஒரு பங்குதாரர்கள் ஆவார்கள். அதனால் முதலீடு செய்யும்போது அந்த நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் வியாபாரம் மற்றும் நிறுவனத்தின் அடிப்படை ஆகியவைகளை அறிந்து வைத்து முதலீடு செயவது.
தங்களால் முடியாதவர்கள் நேர்மையான ஆலோசகர்களை நாடுவது நன்று.

முதலீட்டின் முடிவு ஊகிப்பது நம் கையில் இருப்பதால், பங்கு முதலீடு ஒரு சூதாட்டம் என்பது மிகைப்படுத்தலே ஆகும். வாழ்க்கையில் எல்லா விஷ்யத்தில் ஒரு அளவேனும் chances எடுக்கத்தான் வேண்டும்.

நீச்சல்காரன் said...

தின வர்த்தகத்தில் ஒரு பங்கு ஏறுவதும் இறங்குவது அந்த நிறுவனத்தின் அன்றைய செயல்பாட்டில் நடப்பதில்லை, அந்த பங்கை வாங்க நினைப்பவர்களுக்கும், விற்க நினைப்பவர்களுக்கும் இடையேயான demandயே தீர்மானிக்கிறது[காய்கறி மார்கெட் போல சீரான விலை இறக்கம் ஏற்படுவதில்லை]. இந்த demand எந்த அறிவியல் காரணங்களாலோ/நுட்பங்களாலோ ஏற்படுவதில்லை யூகத்தின் அடிப்படையிலேயே நடக்கிறது. தினவர்த்தகம் என்பது 90% சுதாட்டம் என்பது எனது கருத்து

Ramachandranwrites said...

நண்பரே - என்டமுறி வீரேந்திரநாத் எழுதிய பணம் என்ற புத்தகத்தை படியுங்கள். நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

bandhu said...

புதிய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். முதலீடு செய்யுமுன் அதிலுள்ள ரிஸ்க் எவ்வளவு என்று தெரிந்து , அதில் எவ்வளவு அடி தாங்குவோம் என்றும் தெரிந்து, முதலீடு செய்தால் பிரச்சனை இல்லை..

வவ்வால் said...

வால்,
நீங்கள் பிரான்சைஸ் எடுத்துள்ளீர்கள், வாழ்த்துகள், ஆனால் பங்குவர்தகம், கம்மோடிடி என்பது ஒரு ஃபால்ஸ் லாஜிக்கில் நடைபெறும் வர்த்தகமே, இதை என்னால் நிருபிக்கவும் முடியும்!
//அரசு நிலத்திற்கு ஒரு விலை நிர்ணயத்துள்ளது, அது பேஸ் வேல்யூ(பங்கு வணீகத்திலும் உண்டு), ஆனால் நாம் அரசு நிர்ணயத்த விலைக்கா வாங்குகிறோம், மார்க்கெட் வேல்யூவிற்கு தானே வாங்குகிறோம், அதானால் நாம் நட்டம் அடைந்து விட்டோம் என சொல்ல முடியுமா?//

நிலம் பேஸ் வேல்யு விட கீழான விலைக்கு போவதில்லை. மேலும் நிலத்தில் முன் கூட்டியே அரசு புக் பில்டிங் என விலை ஏற்றுவதுமில்லை!

நீங்கள் சவுகரியமாக ஐபிஓ வெளியிடும் போது புக் பில்டிங் என்ற பெயரில் அதிக விலை நிர்ணயம் செய்வதை தவிர்த்தது ஏனோ? லீட் ரன் மேனஜர்ஸ் அன்ட் கம்பெனிகள் இடையே உள்ள ஒப்பந்தமே இதற்கு காரணம்.

கூடுதல் விலைக்கு ஐபிஓ வெளியிட்டு அது சந்தையில் பட்டியல் இட்ட அன்றே விலை குறைந்து ஐபிஓ வாங்கியவர்களின் கையை கடிப்பதேன்?

இப்போது தான் செபி விழித்துக்கொண்டு அப்படி செய்யாமல் இருக்க கட்டுப்பாடு கொண்டு வர உத்தேசித்துள்ளது. இது தான் இந்த மாத நிலவரம், சமீப காலமாக செய்தித்தாள் படிப்பதில்லையோ?

ஏன் எனில் இந்த ஆண்டு மட்டும் ஓவர் வால்யு ஐபிஒ வெளியீடுகளால் ஏகப்பட்ட நட்டம்,இப்போ பல ஐபிஓ வெளியிடுகள் தள்ளியே வைக்கப்பட்ட்டுள்ளது.

ஒருவர் கடன் வாங்கி தொழில் தொடங்குகிறார் , அவர் லாபம் அடைந்தாலும் நட்டம் அடைந்தாலும் கடன் வாங்கியதை முழுதாமாக கட்ட வேண்டும் இல்லையா?

ஆனால் பங்கு சந்தையில் நான் 10 ரூ முக மதிப்பீலான பங்கை 100 ரூ க்கு வெளியிட்டு நிதி திரட்டலாம் , நட்டம் காரணமாக கம்பெனியை மூடினால் 10 ரூ மட்டுமே திருப்பி தருவேனாம், இது தான் பங்கு சந்தை நியதி, இப்போ இந்த நியதி யாருக்கு சாதகமா இருக்குனு நீங்களே சொல்லுங்க!

நீங்கள் பங்கு சந்தையைப்பற்றி தெரியாதவங்க சூதாட்டம் சொல்றாங்கணு சொல்றிங்கா, ஆனால் நல்லா தெரிஞ்சவங்களுக்கு அது சூதாட்டம்னு தெரியும் ஆனால் அதை சொல்ல மாட்டாங்க என்பதே உண்மை! ஆட தெரிஞ்சவன் கெலிக்கிறான், தெரியாதவன் தோக்கிறான் என்பதே உண்மை!

வவ்வால் said...

வால்,

//எத்தனையோ மியூச்சுவல் ஃபண்டுகள் குறைந்தபட்ச (அவர்கள் செலவு போக) கேரண்டியில் நமது முதலீட்டை திரும்ப தருகிறன, அவர்கள் நமது பணத்தை முதலீடு செய்வது பங்கு வர்த்தகத்தில் தான் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றூ நம்புகிறேன்.//

கடந்த சில வருடங்களுக்கு முன் யுடிஐ மியுட்சுவல் ஃபண்ட் கதை என்ன ஆனது என்று அறீவீர்களா?
பின்னர் யுடிஐ மூடப்பட்டு ஆக்சிஸ் வங்கியானதும் வரலாறு. வரலாறு முக்கியம் வால்!
பல வருடம் போட்டு வைத்திருந்தும் முதலுக்கும் கீழான தொகையே திரும்ப கிடைத்தது போஸ்ட் ஆபிஸ், வங்கி பிக்செட்டில் போட்டில் இருந்தால் கூட அசலும் வட்டியும் கிடைத்திருக்கும், இந்த ஆண்டு கூட பலர் மியுட்சுவலில் இருந்து துண்டை காணோம் துணியைக்காணோம் என ஓடி விட்டதாக செய்திகள் வந்தததே பார்க்கவில்லையா?

இப்போதும் எஸ்பிஐ மியுட்சுவலில் யுலிப் , இன்ன பிற வகையறாக்கள் அடி வாங்கியுள்ளது, சுமார் 3 ஆண்டுகளாக முதல் 1 லட்சம் அதற்கும் கீழான nav வேல்யுவிலேயே உள்ளது(நான் போட்டுளேன்), முதலீடு செய்தவர்களை கேட்டுப்பாருங்கள், குத்து மதிப்பாக சொல்லாதீர்கள்.

வால்பையன் said...

@ வவ்வால்

//நிலம் பேஸ் வேல்யு விட கீழான விலைக்கு போவதில்லை. மேலும் நிலத்தில் முன் கூட்டியே அரசு புக் பில்டிங் என விலை ஏற்றுவதுமில்லை!//

நிலம் பேஸ் வேல்யூவிற்கு கீழாக இந்தியாவில் போகவில்லை, அமெரிக்காவில் ஏற்பட்ட சப் ப்ரைம் கிரிஸிஸின் போது அங்கே நிலம் மதிப்பு இறங்கியது!
அரசு தீர்மானிப்பதில்லை மார்க்கெட் விலையை, நிறுவனமும், அதில் முதலீடு செய்பவர்களும் தான்!


//பங்கு சந்தையில் நான் 10 ரூ முக மதிப்பீலான பங்கை 100 ரூ க்கு வெளியிட்டு நிதி திரட்டலாம் , நட்டம் காரணமாக கம்பெனியை மூடினால் 10 ரூ மட்டுமே திருப்பி தருவேனாம், இது தான் பங்கு சந்தை நியதி, இப்போ இந்த நியதி யாருக்கு சாதகமா இருக்குனு நீங்களே சொல்லுங்க!//

அனைவருக்கும் தெரிந்த விவகாரம் தானே, நான் ஒரு பொருளை அதன் மதிப்பை விட கூடுதலாக கூறீ ஏலம் விடுகிறேன், அதன் மதிப்பு தெரிந்தவர்கள் வாங்கி கொள்ளலாம், ஆனால் கட்டாயம் இல்லை தானே!

//இப்போது தான் செபி விழித்துக்கொண்டு அப்படி செய்யாமல் இருக்க கட்டுப்பாடு கொண்டு வர உத்தேசித்துள்ளது. இது தான் இந்த மாத நிலவரம், சமீப காலமாக செய்தித்தாள் படிப்பதில்லையோ?//

கட்டுபாடு வரப்போகிறது என்பது சந்தையில் அனைவருக்கும் தெரிந்த விசயம் தான்!

வால்பையன் said...

// எஸ்பிஐ மியுட்சுவலில் யுலிப் , இன்ன பிற வகையறாக்கள் அடி வாங்கியுள்ளது, சுமார் 3 ஆண்டுகளாக முதல் 1 லட்சம் அதற்கும் கீழான nav வேல்யுவிலேயே உள்ளது(நான் போட்டுளேன்), முதலீடு செய்தவர்களை கேட்டுப்பாருங்கள், குத்து மதிப்பாக சொல்லாதீர்கள். //

நட்டம் அடைந்த நிறூவனத்தை மட்டுமே உதாரணமாக வைத்து பேசுவதென்றால் என்ன சொல்ல என்ன இருகிறது, நீங்க அதை தவிர வேறு எதில் முதலீடு செய்துள்ளீர்கள் என சொன்னால் பேசலாம்!

வால்பையன் said...

@ ராமசந்திரன்

சோம.வள்ளியப்பன் எழுதிய அள்ள அள்ள பணம் படியுங்கள், மொத்தம் ஐந்து பாகம்.

நீங்கள் சொல்வதை விட இது புது வெர்ஷன்!

வால்பையன் said...

// தினவர்த்தகம் என்பது 90% சுதாட்டம் என்பது எனது கருத்து //


நிறுவனத்தின் செயல்பாட்டை பார்க்காமல் இன்று மழை வருமா, வராதான்னு பந்தயம் கட்டுபவர்களை பற்றி நான் பேசவில்லை நண்பரே!

தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்று கூட தான் சூதாட்டம் நடக்கிறது, அதற்காக தேர்தல் தவறு என்றாகி விடுமா?

நான் முதலீடு செய்பவர்களை ஊக்குவிக்கவே எழுதுகிறேன், பேராசை படுபவர்களுக்கு அல்ல நிச்சயமாக!

வவ்வால் said...

வால்,
//அனைவருக்கும் தெரிந்த விவகாரம் தானே, நான் ஒரு பொருளை அதன் மதிப்பை விட கூடுதலாக கூறீ ஏலம் விடுகிறேன், அதன் மதிப்பு தெரிந்தவர்கள் வாங்கி கொள்ளலாம், ஆனால் கட்டாயம் இல்லை தானே!//

இது தெரியாத விடயம் என்று சொல்லவில்லை, முதலீடு செய்யுங்கள் என்று அறிவுரை சொல்பவர்கள் இதெல்லாம் சொல்லாமல் அவ்வளோ லாபம் கிடைக்கும், இவ்வளவு கிடைக்கும்னு லாபத்தை மட்டு சொல்வார்கள் என்பதால் இதை சொன்னேன்.

பங்கு சந்தையில் ப்ரைமரி மார்கெட், செகண்டரி என்று உள்ளது, நான் பேசுவது ப்ரைமரி மார்கெட்டில் ஐபிஓ ஆக வரும் போதே புக் பில்டிங்கில் விலை ஏற்றம் செய்வதை.

ஏன் எனில் எல்லாப் பங்குகளுமே இப்படி எடுத்ததும் பிரைமரி மார்கெட் அளவிலேயே விலை ஏற்றம் செய்யப்படுகின்றன, கட்டாயம் இல்லை என்றாலும் எதை வாங்கினாலும் அதுவும் கூடுதல் விலைக்கே வாங்க வேண்டியுள்ளது இது மறைமுகமாக கட்டாயம் தானே. இங்கே வாங்குபவர்களுக்கு ஆப்ஷனே இல்லை. பேரம் பேசவும் முடியாது.

இந்த ஆண்டு மட்டும் 10 ஐபிஓ வெளீயிட்டால் அதில் 8 பட்டியல் இட்ட அன்றே 50% சரிவடைந்த்உ டிரேட் ஆகியுள்ளது.

அமெரிக்காவில் சப்பிரைம் பிரச்சினையால் ரியல் எஸ்டேட் விலை குறைந்தது ஆனால் ஒட்டு மொத்தமாக அல்ல நகர்ப்புர ரியல் எஸ்டேட் விலை குறையவேயில்லை. நியுயார்க்கில் ஒரு சதுர அடி கூட வாங்க முடியாது !

மேலும் இந்தியாவில் தானே முதலீடு செய்யறோம், இப்போ இந்தியாவில் என்னிக்கு நிலம் வாங்கிய விலையை விட குறைந்து விற்று இருக்கு?

என்னோட கேள்வி எல்லாம் ஏன் புக்பில்டிங் என்று முதலிலேயே விலை ஏற்றம் செய்கிறார்கள் என்பது தான்? செகண்டரி மார்கெட்டில் பங்கு வந்தபின் டிமாண்டிற்கு ஏற்ப விலை போனால் அதை யார் குற்றம் சொல்லப்போகிறார்கள்.
இந்த முறை 1996 அல்லது அதற்கு முன்னர் கிடையாது என்ற்பதை அறிவீர்களா? இது மன்மோகன் அன்ட் பி.சி கொண்டு வந்த மோசடி திட்டம். மேலும் பி.நோட் மூலம் பங்கு சந்தைக்கு ஏற்படும் தீங்குகளையும் அறிவீர்கள் தானே, இதுவும் பி.சி செய்த வேலை தான்.

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர்.எம்.கே.நாராயணன் கூட பி நோட் தடை செய்ய ஆலோசனை வழங்கினார்.

வால்பையன் said...

// முதலீடு செய்யுங்கள் என்று அறிவுரை சொல்பவர்கள் இதெல்லாம் சொல்லாமல் அவ்வளோ லாபம் கிடைக்கும், இவ்வளவு கிடைக்கும்னு லாபத்தை மட்டு சொல்வார்கள் என்பதால் இதை சொன்னேன்.//

அவ்வாறு நான் என் சொந்த சகோதரனுக்கு கூட வாக்குறுதி தரமாட்டேன், சந்தையை சொல்லி தருவது தான் என் முதல் வேலையாக இருக்கும்!

//பங்கு சந்தையில் ப்ரைமரி மார்கெட், செகண்டரி என்று உள்ளது, நான் பேசுவது ப்ரைமரி மார்கெட்டில் ஐபிஓ ஆக வரும் போதே புக் பில்டிங்கில் விலை ஏற்றம் செய்வதை.//

ஆரம்பத்தில் எல்லா நிறுவனங்களும் அதை செய்யவில்லை. சந்தையின் போக்கே அவர்களை செய்யவைத்து விட்டது!


//அமெரிக்காவில் சப்பிரைம் பிரச்சினையால் ரியல் எஸ்டேட் விலை குறைந்தது ஆனால் ஒட்டு மொத்தமாக அல்ல நகர்ப்புர ரியல் எஸ்டேட் விலை குறையவேயில்லை. நியுயார்க்கில் ஒரு சதுர அடி கூட வாங்க முடியாது !//

அண்ணே, நம் பேச்சு அரசு நிர்நயித்த விலையிலிருந்து குறைந்ததா இல்லையா என்பது தான், எந்த ஏரியா என்பதல்ல!

// இந்தியாவில் தானே முதலீடு செய்யறோம், இப்போ இந்தியாவில் என்னிக்கு நிலம் வாங்கிய விலையை விட குறைந்து விற்று இருக்கு?//

இந்தியாவில் குறைந்துள்ளது மார்க்கெட் விலை மட்டுமே, அரசு நிர்னயித்த விலை அல்ல, ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றத்தின் போதும் நில விலை குறைவது சந்தையில் சகஜம், நீங்கள் ரியல் எஸ்டேட் செய்பவராக இல்லையென்றால் சற்று பொறுங்கள், மீண்டும் விலை ஏறும்!

வால்பையன் said...

//என்னோட கேள்வி எல்லாம் ஏன் புக்பில்டிங் என்று முதலிலேயே விலை ஏற்றம் செய்கிறார்கள் என்பது தான்? செகண்டரி மார்கெட்டில் பங்கு வந்தபின் டிமாண்டிற்கு ஏற்ப விலை போனால் அதை யார் குற்றம் சொல்லப்போகிறார்கள்.
இந்த முறை 1996 அல்லது அதற்கு முன்னர் கிடையாது என்ற்பதை அறிவீர்களா? இது மன்மோகன் அன்ட் பி.சி கொண்டு வந்த மோசடி திட்டம். மேலும் பி.நோட் மூலம் பங்கு சந்தைக்கு ஏற்படும் தீங்குகளையும் அறிவீர்கள் தானே, இதுவும் பி.சி செய்த வேலை தான்.

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர்.எம்.கே.நாராயணன் கூட பி நோட் தடை செய்ய ஆலோசனை வழங்கினார். //

இதில் அரசியல் இழுக்க வேண்டாமென்று நான் அதை பேசவில்லை தல,
அன்னிய முதலீடு தான் காளையையும், கரடியையும் ஆட்டுவிக்கிறது என்பதை அறிவேன், இல்லையென்றால் சீரான அதே நேரம் நிச்சயமான லாபம் உத்தரவாதமாக இந்திய முதலீட்டில் கிடைக்கும், ஆனால் உலக பொருளாதார சந்தையில் அன்னிய முதலீடு தவிர்க்க முடியாதது, சந்தை நிலவரம் குறித்த அறிவு, பொறுமை, ஒரே செக்டாரில் இல்லாமல் பல செக்டாரில் பிரிந்து முதலீடு செய்தல் போன்ற செயல்கள் என்றும் நம்மை தோல்வி அடையச்செய்யாது!

வவ்வால் said...

வால்,

//நட்டம் அடைந்த நிறூவனத்தை மட்டுமே உதாரணமாக வைத்து பேசுவதென்றால் என்ன சொல்ல என்ன இருகிறது, நீங்க அதை தவிர வேறு எதில் முதலீடு செய்துள்ளீர்கள் என சொன்னால் பேசலாம்!//

நான் எஸ்பிஐ மட்டும் சொல்லவில்லை பொதுவாக அனைத்து மியுட்சுவலும் சரிவுடனே உள்ளது. சுமார் 7 லட்சம் பேர் கடந்த சில மாதங்களில் மட்டும் மியுட்சுவலில் இருந்த்உ வெளியேறியதாக செய்தி படித்தேன்.
அப்புறம் சில்வெர் மினி யில் போட்டுள்ளேன் சீல்வர் கதை தான் தெரியுமே ஹி..ஹி!

வால்பையன் said...

//நான் எஸ்பிஐ மட்டும் சொல்லவில்லை பொதுவாக அனைத்து மியுட்சுவலும் சரிவுடனே உள்ளது. சுமார் 7 லட்சம் பேர் கடந்த சில மாதங்களில் மட்டும் மியுட்சுவலில் இருந்த்உ வெளியேறியதாக செய்தி படித்தேன்.
அப்புறம் சில்வெர் மினி யில் போட்டுள்ளேன் சீல்வர் கதை தான் தெரியுமே ஹி..ஹி! //


மியூச்சுவல் ஃபண்ட் மூன்று விதமாக செயல் படுகிறது

கடன் பத்திரம்

கடன் பத்திரம் + பங்கு

பங்கு

இதில் எது ரிஸ்க் அதிகம் என்றூ உங்களுக்கு தெரியும்!

***

சில்வர் ஏறிய போதெல்லாம் விட்டுட்டு ஏறி முடித்த பின் முதலீடு செய்திருப்பீர்கள், சினிமாவின் கடைசி காட்சிக்கு உள்ளே செல்வது போல்.

தப்பா நினைக்கலைன்னா எந்த இடத்தில் வாங்கி வைத்துள்ளீர்கள் என சொல்ல முடியுமா?

arunero@gmail.coam
பர்சனல் மெயில் ஐடி இது!

வவ்வால் said...

வால்,

இதில் தப்பா நினைக்க என்ன இருக்கு , அட்வென்சர்ஸ் இந்தியா என்ற முகவரிடம் செய்துள்ளேன்.அப்புறம் silver, gold like precious metal எப்போதும் நல்லா போகும் நன்ற நம்பிக்கையில் அப்படி செய்து பார்த்தேன்

வால்பையன் said...

தல நான் கேட்டது எப்போ பொஸிசன் இருக்கா?
என்ன விலையில் இருக்குன்னு, என்னால ஏதும் உதவ முடியுதான்னு பார்க்கத்தான் கேட்டேன் தல!

எனக்கு கமாடிட்டியில் மட்டுமே எட்டு வருட அனுபவம்!

Ramachandranwrites said...

வால் - நான் அதுவும் படித்து இருக்கிறேன். சட்டத்தின் படி சரி என்பதற்கும், தர்மத்தின் படி சரி என்பதற்கும் உள்ள ஒரு வேறுபாட்டை பணம் நன்கு விளக்கும். உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். படித்துப் பாருங்கள். மற்றப் படி நான் பங்கு சந்தையில் பங்கு பெறாத ஒருவன்.

வவ்வால் said...

வால்,

இப்போ சரக்கடுச்சிட்டு இருக்கேன் வந்து பேசுகிறேன்!

வவ்வால் said...

வால்,

நீங்க கேட்ட பொசிஷன் டீடெயில் எல்லாம் சொல்றேன், ஆனால், இது எனக்கு தெரிந்தே செய்தேன், ரொம்ப நாளா கம்மோடிடி செய்ய ஒரு ஆசை அவ்வளவு தான்!

63கே இருக்கும் போது செய்தது!

Ashok D said...

பதிவுலிருந்து.. கடைசி பின்னூட்டங்கள் வரை படிக்க சரியாக 44 நிமிடங்களாயிற்று (நடுவுல போய் பேப்பர் வாங்கிட்டு வந்தேன்)..

இம்புட்டு நாலட்ஜ வெச்சிகிட்டு.. சரி சரி இனிமே பொழைப்ப பாப்போம்.. :)

Cheerssssssss

மாலதி said...

அருமையான பதிவு...சூதாட்டம் சூதாட்டமே...

MADURAI NETBIRD said...

அருமையான பதிவு தோழரே.நண்பர்களே அவன் சொன்னான் இவன் சொன்னான் சொல்லி எதுல முதலீடு பன்னினாலும் அதோட லாப நட்டம் நம்மைதான் சாரும். ஒரு நிறுவனத்தோட நிலை இப்போ இப்படி இருக்கு அதோட செயல்பாடு எப்படி அதோட திட்டங்கள் எப்படி என்ற அறிவுபூர்வமான அணுகுமுறையைத்தான் எந்த ஒரு வணிகத்துக்கும் ஏற்றதா இருக்கும். தங்கத்தோட தரத்தை தங்க விற்பனையாலரிடமோ அல்லது தங்க நகை செய்பவரிடம் தான் கேட்கலாம். நீங்க பலசரக்கு கடையில கேட்ட................. பின்ன சூதாட்டம் என்றுதான் சொல்லுவீங்க.

மரா said...

தலைவா..வாழ்த்துக்கள்.நேச்சுரல் கேஸா வாங்கி வாங்கி டடுசர் கழண்டுருச்சு
சாமி :-)

வால்பையன் said...

நேச்சுரல் கேஸை விட கச்சாஎண்ணையின் பயன்பாடு அதிகம், அதில் ட்ரேட் பண்ணியிருக்கலாம், அல்லது எனக்கு ஒரு போன் பண்ணியிருக்கலாம்!

பல்பு பலவேசம் said...

யோவ இதை தமிழ் ப்ரீ ஆட்ஸ் என பெயர் மாற்றம் செய்து விடு!!செம மொக்க!!

வவ்வால் said...

தல,

மறுபடியும் இந்த பதிவ இப்போ தான் பார்க்கிறேன், அப்பவே சொல்லணும் நினைச்சேன், மறந்துடுச்சு, வால்ஸ்ட்ரீட் மூட சொல்லி அமெரிக்காவில போராடுராங்களே பார்த்திங்களா?

பங்கு சந்தை என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை குறிக்காதுனு சில வருடங்கள் முன்ன என்னோட சென்செக்ஸ் பரமபத விளையாட்ட பதிவுல சொல்லி இருப்பேன். இப்போ ஆனானப்பட்ட அமெரிக்காவிலயே பங்கு வணிகம் மேல மக்கள் காண்டாயிட்டாங்க.

ஏன் எனில் சந்தை பொருளாதாரத்தின் ஊற்றுக்கண்ணே அமெரிக்கா தானே!

பங்குவணிகம் என்பது போக்கர் போல தான், போக்கர் ஆடவும் அறிவு தேவை தானே!

இந்திரா said...

புது விளம்பரம் எதையும் காணோம்????

பல்பு பலவேசம் said...

பாரு நிவேதிதாவின் காமெடியை பாருங்க!!ஐயோ என்னால முடியல!!
http://charuonline.com/blog/?p=2617

Naran said...

கனிமொழிடம் காசு வாங்கி குறி சொல்லிய பீரு நிவேதிதா!!
http://charuonline.com/blog/?p=2620

பல்பு பலவேசம் said...

தனுசின் பொறுக்கி கதாபாத்திரங்களும் கொலைவெறி பாட்டை பிரபலமடைய வைத்த ஏமாற்று வித்தையும்
http://gnani.net.in/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/?cat=8

nandu said...

HELO FRND UNGA PADIVA PADICHAN .DHUNICHALA NA ,AAKAPORVAMANA SINDANAI .ADAVIDA SALIKAMA EALARUKUM PORUMAIYA ,AAKAPORVAMA REPLY PANI IRUKARADU HUM.. PEARIYA VISHAYAM .NALA PADIVU NANDRI VALTHUKALUDAN NANDU

ATOZ FOREX DETAILS said...

போரெக்ஸ் மார்க்கெட் மிகப் பெரிய சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.இந்த மார்க்கெட்டில் பணம் பண்ணுவது சற்று கடினம் என்றாலும் முறையான சந்தை நிலவரங்கள் தெரியும் பட்சத்தில் பணம் சம்பாதிப்பது பெரிய விஷயம் அல்ல. பலர் போரெக்ஸ் மார்க்கெட் ஒரு சூதாட்டம் என்கிறார்கள், இது ஒரு முட்டாள் தனமான கூற்று. ஏனெனில் சூதாட்டம் என்பது அதிர்ஷ்டம் சம்பந்தமான விஷயம் ஆனால் மார்க்கெட் என்பது அறிவு சம்பந்தப்பட்ட விஷயம். அதிர்ஷ்டத்தை நம்பி மார்கெட்டில் நுழைந்தால் எல்லா நாளும் பணம் சம்பாதிக்க இயலாமல் போவதுடன் மிகப்பெரிய நஷ்டத்தையும் சந்திக்க நேரிடும்.

ATOZ FOREX DETAILS said...

கட்டாயம் ரிஸ்க் எடுக்க வேண்டும் :

ஓட்டுனர் எப்படி ரிஸ்க் எடுக்கிறார் பார்த்தீர்களா? தன் உயிரையே அடமானம் வைக்கிறார் தன் தொழிலுக்காக,மாணவன் தன் படிப்பிற்காக(தொழில்), தன் சின்னச் சின்ன ஆசைகளை எல்லாம் தியாகம் செய்கிறார்கள், இதுவும் ஒருவகை ரிஸ்க் தான், நோயாளி தன் வியாதி சரியாகத் தன் உடம்பையே ஒரு டாக்டரிடம் கொடுக்கிறார் அறுவை சிகிச்சைக்காக, இதுவும் ஒருவகை ரிஸ்க் தான். சாப்பிடும் போது கூட அடைத்துக் கொண்டு இறந்தவர் உண்டு, ஆனாலும் நாம் சாப்பிடாமலா இருக்கிறோம்? விமானம், ரயில், வாகனத்தில் செல்கிறோம் ஒருவரை நம்பித்தானே ரிஸ்க் எடுக்கிறோம்? ஆனால் இந்தவகை ரிஸ்க் எல்லாம் தேனில் நனைத்த மருந்து மாதிரி, ரிஸ்க் ரிஸ்க் தான் . எடுத்துதான் ஆக வேண்டும்.

அதுபோல்தான் மார்க்கெட்டிலும் கட்டாயம் ரிஸ்க் எடுத்துத்தான் ஆக வேண்டும். ரிஸ்க் இல்லாமல் இவ்வளவு எடுக்கலாம், அவ்வளவு எடுக்கலாம் என்று யார் சொன்னாலும் தயவு செய்து...மறுபடியும் உங்கள் மேல் அக்கறையோடு சொல்கிறேன், தயவு செய்து நம்பாதீர்கள். ரிஸ்க்கின் அளவைக் குறைக்கலாமே ஒலிய, கண்டிப்பாக ரிஸ்க் எடுக்காமல் டிரேடில் பணம் சம்பாதிக்கவே முடியாது.

ரிஸ்க் என்பது என்ன?

ஒரே வரியில் சொன்னால் வரலாம்,வராமலும் போகலாம், நடக்கலாம் நடக்காமலும் போகலாம்,படித்தவுடன் வேலை கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்,காப்பாற்றலாம் இல்லை காப்பாற்றாமல் கூடப் போகலாம். இது தான் ரிஸ்க்.
நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால், 30% ரிஸ்க் என்பது 30,000 ரூபாய். இந்த 30,000 ரூபாய், 31,000.....32,000....33,000...40,50,60, 70,000 ரூபாய் லாபமாகக் கூட மாறலாம் அல்லது 29,000...28,0000....27,20,15,5000.....500...100...என்று நஷ்டத்தின் மேல் நஷ்டம் வந்து 30,000 ரூபாயும் இல்லாமல் கூட போகலாம். ஓபன் ஆகச் சொன்னால் இதுதான் ரிஸ்க் என்பது. நான் ஓபன் ஆகச் சொல்லிவிட்டேன், மற்றவர்கள் தேன் கலந்து கொடுப்பார்கள் நம்ப வேண்டாம்.

இதுதான் ரிஸ்க் என்பது, நீங்கள் முதலீடு செய்யும் போதே கட்டாயம் இவ்வளவு சதவீதம் தான் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதைச் சொல்லவும், இவ்வளவு ரிஸ்க் எடுத்தால் என்ன லாபம் கிடைக்கலாம் என்பதைக் கேட்கவும் கட்டாயம் மறக்கக் கூடாது. இதை விட முக்கியமான விஷயம் உங்கள் முதலீடு உங்கள் பெயரில் தான் 100% இருக்க வேண்டும்,நிறைய பேர் ஏமாருவது இங்குதான். என்னதான் வாக்குறுதி கொடுத்தாலும் நம்ப வேண்டாம். பாஸ்வோர்ட் விபரங்கள் கண்டிப்பாக உங்களிடமும் இருக்க வேண்டும், மெயில் ஐ டி ( MAIL ID ) உங்களுடையதாக இருக்க வேண்டும், அப்பொழுது தான் நீங்கள் கண்காணிக்க முடியும். ஒருவேளை அவர்கள் பாஸ்வோர்ட் மாற்றினால் கூட உங்கள் மெயில் ஐ டி-க்கு வந்து விடும். உங்கள் மெயில் ஐ டி பாஸ்வோர்ட் கட்டாயம் கொடுக்கக் கூடாது. காண்டாக்ட் நம்பர் கூட உங்கள் நம்பராகத் தான் இருக்க வேண்டும். நான் ஏன் சொல்கிறேன் என்றால் அக்கௌன்ட் உங்கள் பெயரில் இருந்தால் தான்,பணம் எடுக்கும் பொழுது உங்கள் பேங்க் அல்லது டி மேட் அக்கௌன்ட்க்கு பணம் வரும். அது மட்டுமின்றி, உங்களால் தினமும் கண்காணிக்க முடியும், ஒருவேளை உங்கள் டிரேடர் 30% க்கு மேல் ரிஸ்க் எடுத்தால் நீங்கள் போதும் என்று நிறுத்தி,உங்கள் மீதம் உள்ள 70% பணத்தையாவது மேலும் நஷ்டம் இல்லாமல் காப்பாற்ற முடியும். சந்தேகம் இருப்பின் என்னை மொபைலில் அழைக்கலாம். முடிந்தவரை அவர்களின் ஆலோசனையுடன் நீங்களே டிரேடு செய்வதே நல்லது. இல்லையெனில் நீங்கள் கற்கும் வரை அவர்கள் டிரேடு செய்ய அனுமதிக்கலாம். ஆனால் தினம் தோறும் கண்காணிக்க வேண்டும்.

நான் மறுபடியும் சொல்கிறேன் ரிஸ்க் இல்லாமல் டிரேடு செய்வதோ, லாபம் பெறுவதோ கட்டாயம் முடியாவே முடியாது. ஆனால் உங்கள் ரிஸ்க் அளவை 100% முன்கூட்டியே நிர்ணயம் செய்யலாம்.

நீங்கள் ஒரு 30% ரிஸ்க் எடுக்கத் தயார் என்றால் என்னால் ஒரு மூன்று முதல் நான்கு வருடங்களில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க முடியும்.

50% ரிஸ்க் எடுக்கத் தயார் என்றால் இரண்டு முதல் மூன்று வருடங்களில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க முடியும். ஆனால் மாதம் மாதம் இவ்வளவு கிடைக்கும் என்பதை என்னால் 100% உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில் மார்க்கெட் ஒவ்வொரு மாதமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இது என்னைப் பொறுத்த வரை மட்டுமே . மற்ற டிரேடர் பற்றி கருத்துச் சொல்ல நான் விரும்ப வில்லை. ஆனால் நீங்கள் தான் எவ்வளவு ரிஸ்க் எடுப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும். ரிஸ்க் இல்லாமல் பணம் கொட்டும் என்று யார் தேன் குழைத்து சொன்னாலும் நம்ப வேண்டாம்.

ATOZ FOREX DETAILS said...

பங்குச் சந்தை பற்றிய மாறவே மாறாத உண்மைகள்:

1. பங்குச் சந்தை என்பது நூறு சதவிகிதம் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.

2. எங்க டிப்ஸ், இண்டிகேட்டர், ரோபோட், சாப்ட்வேர் யூஸ் பண்ணுங்கள் ரிஸ்க் இல்லாமல் பணம் பண்ணலாம் என்பவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள். ரிஸ்க் கட்டாயம் இருக்கிறது. எவ்வளவு ரிஸ்க் எடுகிறோமோ அவ்வளவு பணம் பண்ணலாம் என்பதே உண்மை. ரிஸ்க் என்பதைக் கட்டாயம் தவிர்க்க முடியாது, ஆனால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதை வேண்டுமானால் முன்கூட்டியே முடிவு செய்ய இயலும்.

3. எங்க இண்டிகேட்டர் நூறு சதவீதம் லாபம் தரும் என்பதும் ஆயிரம் சதவீதம் பொய். மார்கெட் பேஸ்டு ஆன் வால்யுமே ஒலிய இண்டிகேட்டர் அல்ல. அதாவது ஒரு இண்டிகேட்டர் பை காட்டினாள் பை பக்கமோ,அல்லது ஒரு இண்டிகேட்டர் செல் காட்டுவதால் மார்கெட் செல் பக்கமோ செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி ஒரு விஷயம் துல்லியமாக இருந்தால் அந்த விசயத்திற்கு அந்த நபர் அல்லது அந்த நிறுவனம் காபிரைட் வாங்கி இருக்கும். நூறு ரூபாய் போட்டால் தினம் நூறு ரூபாய் கிடைக்கும் என்றால், எல்லா நிறுவனங்களும் முதலீட்டு நிர்வாகிகளை (fund managers ) வீட்டுக்கு அனுப்பி இருக்கும். அந்த இண்டிகேட்டர் அல்லது சாப்ட்வேர் மட்டும் போதுமே. தயவு செய்து யாரும் கண்டுபிடிசுடாதீங்காப்பா, எங்களுக்கு வேலை போய்டும். ஹா,ஹா,ஹா.... ஒரு இண்டிகேட்டர் அல்லது எதுவும் லாபமும் தரும் நஷ்டமும் தரும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

4. தினமும் கட்டாயம் இவ்வளவு லாபம் பார்க்கலாம் என்பதெல்லாம் காதுல பூ, சுனாமில கூட அவங்கல்லாம் சும்மிங் போவாங்க போல. ஓவர் ஆல் நீங்கள் எடுக்கும் ரிஸ்க்கின் ,மறுபடியும் சொல்கிறேன் ரிஸ்க்கின் அளவினைப் பொருத்து லாபம் பெறலாம் என்பதே உண்மை. கட்டாயம் லாபம் பார்க்க இயலும் ஆனால் எல்லா நாளும் எல்லா டிறேடிலும் இல்லை .

5. 90 % மேல் டிரேடர்கள் நஷ்டம் மட்டுமே பெறுகிறார்கள். காரணம் அவர்கள் பங்குச் சந்தையினை தொழிலாகப் பார்ப்பது இல்லை.

6. பணத்தை அதிகம் இழப்பவர்கள் தினசரி வர்த்தகம் மற்றும் ஸ்டாப் லாஸ் வைத்து டிரேடு செய்பவர்கள். கண்மூடித் தனமாக ஒரு பங்கில் அல்லது துறையில் முதலீடு செய்பவர்கள்.

7. நான் இதுவரை சொன்ன உண்மை புரியவே பலருக்கு பல ஆண்டுகள் ஆகிறது.

8. வெற்றியாளர்கள் நாளுக்கு ஒரு இண்டிகேட்டர், நாளுக்கு ஒரு டிரேடிங் சிஸ்டம் பாலோ செய்வது இல்லை.

9. ப்ரோக்கர் தரும் அதிகமான மார்ஸின் ஆபத்தானது. வெற்றியாளர்கள் அவர்களின் முதல் தொகையினை வைத்து மட்டுமே வர்த்தகம் செய்வார்கள், பெரும் பாலும் அவர்கள் ப்ரோக்கர் தரும் மார்ஸின் பயன் படுத்துவது இல்லை. ஏன் எனில் உங்களுக்கு லாபம் வந்தாலும், நஷ்டம் வந்தாலும் ப்ரோகருக்கு கட்டாயம் கமிசன் வந்து விடும்.

10. நூறு ரூபாயில் லாபம் பார்க்க இயலாதவர்கள் நூறு கோடி கொடுத்தாலும் லாபம் பார்க்க இயலாது.

11. சரியான டிரேடிங் மனநிலை ( trading psychology) இல்லாதவர்கள் வெற்றி அடைந்ததாக சரித்திரம் இல்லை.

12. பங்குச் சந்தை பணம் காய்க்கும் மரம் அல்ல. ஒரு நியாமான தொழிலில் என்ன வருமானம் கிடைக்குமோ அதை விட அதிகம் எதிர்பார்த்து பங்கில் வர்த்தகம் செய்வது ஆபத்தானது.

மேலும் அறிய:
http://atozforexdetails.blogspot.in/2014/03/blog-post.html

!

Blog Widget by LinkWithin