பங்கு வணிகத்தில் நட்டம் ஏன்?

வர்த்தகம் என்றாலே லாபமும் நட்டமும் இயல்பு தான். ஆனாலும் வர்த்தகத்தில் வெற்றி பெற சரியான தொலைநோக்கு பார்வை வேண்டும். பெரும்பாலோர் புரிந்து கொள்ளாத விஷயம் வர்த்தகம் ஆரம்பித்த நாளிலிருந்து லாபம் எதிர்பார்ப்பது. எந்த வர்த்தகத்தில் இது சாத்தியம்? பின் ஏன் பங்கு வர்த்தகத்தில் மட்டும் எதிர்பார்கிறார்கள். நான் வர்த்தகத்தில் ஈடுபடுவர்களுக்கு சொல்வது ஒன்றே ஒன்று தான் நீங்கள் எதிர் பார்க்கும் லாப சதவிகிதம் தான் உங்கள் ரிஸ்க் சதவிகிதமும்.

நீங்கள் பூ விற்கலாம், உணவு பொருள் விற்கலாம், பிளாஸ்டிக் பொருள் விற்கலாம். பூ ஒரே நாளில் கெட்டுவிடும், உணவு பொருள் இரண்டு நாள் வரை தாங்கலாம், பிளாஸ்டிக் பொருள் அழியாமல் இருக்கும். அதே அளவு லாப அளவும் இருக்கும் என்பது தான் வியாபார உண்மை. நீங்கள் என்ன வியாபாரம் செய்ய போகிறிர்கள் என்பதில் தான் உங்கள் தொலைநோக்கு பார்வை இருக்கிறது. இன்றே லாபம் வேண்டுமென்றால் அதற்கான ரிஸ்கையும் புரிந்து கொள்ளவேண்டும்.
மார்கெட் குறியீட்டு எண் சரிந்த போதும் பல நிறுவன பங்குகள் நல்ல முறையில் ஏறி கொண்டிருந்தது. தினம் பல செய்தி தளங்களில் அந்த செய்தியும் வருகிறது, அதையெல்லாம் படிக்க நமக்கு ஒரு மணிநேரம் போதுமானது. நான் ஏற்கனவே இந்த பதிவில் சொன்னது போல் உங்கள் முதலீட்டை ஒரு வருடத்தில் இரட்டிப்பாக்கினாலே போதும் பத்தாவது வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர். தெளிவான பார்வை போதும். சரியான திட்டமிடல் போதும்.

சில ஆலோசகர்கள் சரியில்லை அதனால் தான் நட்டமடைந்தேன் என்கிறார்கள். நான் அலோசகார இருந்த பொழுது வர்த்தகத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு சொல்வேன். நான் 5 கால் தருகிறேன் ஒவ்வொன்றும் 1000 லாபம் அதே நேரம் ஸ்டாப்லாஸ் 200௦௦ இருக்கும். 4 கால் தோல்வி அடைந்தாலும் ஒரு காலில் 1000௦௦௦ லாபம். ஆக மொத்தம் 200௦௦ லாபம் தான். ஸ்டாப்லாஸ் போடாமல் நீங்கள் செய்யும் வர்த்தகம் ரிஸ்கானது. அதை புரிந்து கொண்டால் உங்களால் தினசரி வர்த்தகத்திலும் லாபம் பார்க்க முடியும்.

ஆலோசனைக்கு தொடர்பு கொள்க : 9994500540

9 வாங்கிகட்டி கொண்டது:

அருணையடி said...

ஸ்டாப் லாஸ் என்ற பதத்தைப் பற்றி கொஞ்சம் விளக்க இயலுமா?

அருணையடி said...

ஃபாலோ அப்க்காக!

விடுதலை கரடி said...

வியாபார பையன்னு மாத்திடு!ஒரே போர்!ஜாலிய எதனா படிக்கலாம்னா இங்கயும் பணமா?ஆள உடுங்க!

விடுதலை கரடி said...

பீ.ஜேவிடம் காசு வாங்கி கொண்டு நாத்திக கருத்து எழுதுவதை நிறுத்திய ராஜன்!ஐயோ!
http://picturepush.com/public/7090793

வினோத் said...

வால்பையன் அவர்களே..
கமாடிட்டி பற்றி என்ன சொல்கிறீர்கள் ?
என்னுடைய வலை பூவிற்கும் வாருங்கள்
http://mydreamonhome.blogspot.com

Rishvan said...

nice post about share market.... www.rishvan.com

Part Time Jobs said...

Hi i am JBD From JBD

Hi i Read Your Information its Really Very interesting & Usefull!


Visit My Website Also : www.cutcopypaste.co.in , www.indiai365.com , www.classiindia.com , www.jobsworld4you.com

pattukkottai palanivelan said...

Nalla pathivu. Neengal tharpoluthu athigam yeluthuvathillai.

ATOZ FOREX DETAILS said...

நீங்கள் சொல்வது சரியான ஒன்று.

!

Blog Widget by LinkWithin