படித்ததில் பிடித்தது!

பெரியாரோட சிறப்பு அல்லது நுட்பம் என்பது, இரண்டாயிரம் ஆண்டுகளாக எல்லோரும் கவனிச்சிக்கிட்டிருந்த ஒரு செய்தியை அதுவரையாரும் பார்க்காத கண்ணோட்டத்தில் பார்த்தது.

அதுக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், குசேலன் கதையை சொல்லலாம். சமீபத்தில் வந்த குசேலன் கதையில்லை, ஒரிஜனல் குசேலன்.

ரஜினியின் குசேலன் படத்தை திரையிட்ட தியேட்டர் அதிபர்களில் இருந்து, திருட்டு வி.சி.டி போட்டவர்கள்வரை எல்லாரையும் குசேலனாக மாத்திடுச்சாம் இந்த குசேலன்.

ஆனால் அந்த குசேலன், 24 குழந்தைகளை பெற்றதால் வறுமையில் வாடுகிறான். அதனால் தன் நண்பன் கண்ணனைப் பார்த்து உதவி கேட்க போகிறான். கண்ணன் அவனுக்கு உதவி செய்கிறான் என்பது கதை.

24 குழந்தைகள் என்பது வறுமையை காட்டுவதற்காக புனையப்பட்ட திரைக்கதை.

பெரியார் கேட்டார், “வருடத்திற்கு ஒரு பிள்ளை என்ற வீதம், பெற்றிருந்தாலும் நான்கு பிள்ளைகள் 20 வயதுக்கு மேல் இருக்கும். தோளுக்கு மேல் வளர்ந்த தடிமாடு பிள்ளைகளை வைத்துக் கொண்டு ஒருவன் பிச்சை எடுக்கிறான் என்றால் அவன் யோக்கியதை என்ன? அவனுக்கு பிச்சை கொடுக்கிறானே அவனுடைய யோக்கியதை என்ன? பார்ப்பனர்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உழைத்து சாப்பிட மாட்டர்கள். என்பதற்கு இந்தக் கதையே சாட்சி”

இந்த சிந்தனை முறையை பெரியார்தான் துவக்கி வைக்கிறார். பல தமிழறிஞர்களுக்கும் ஒரு விஷயத்தை எப்படி பார்ப்பது? என்பதை பெரியார்தான் சொல்லித்தருகிறார்.

ஆயிரம் ஆண்டுகளாக யாருக்கும் தோன்றாத சிந்தனைதான் பெரியாரின் சிந்தனை முறை….

*********************
நான் பெரியாரிஸ்ட் இல்ல, இந்த சிந்தனை கோணம் பிடித்திருந்தது, அதனால் பகிர்ந்துகிறேன்.
சமூகத்தில் பெரியாரின் பங்களிப்பின் மேல் மரியாதை கூடுகிறது என்பது வேண்டுமானால் உண்மை!


http://mathimaran.wordpress.com/2011/02/03/article-362/

58 வாங்கிகட்டி கொண்டது:

கொல்லான் said...

அன்பை மட்டுமே பாருங்கள்...

கொல்லான் said...

//அவனுக்கு பிச்சை கொடுக்கிறானே அவனுடைய யோக்கியதை என்ன? //
அன்பை மட்டுமே பாருங்கள்...

கொல்லான் said...

//சமூகத்தில் பெரியாரின் பங்களிப்பின் மேல் மரியாதை கூடுகிறது என்பது வேண்டுமானால் உண்மை!//
பெரியாரை தப்பு சொல்லவில்லை.
மக்களின் வாழ்க்கை முறை என்பது விமரிசனத்திகப்பாற்பட்டது

கொல்லான் said...

படித்ததில் பிடித்தது என்பது 'கான்றோவர்சிக்காகவா?"

வால்பையன் said...

//அவனுக்கு பிச்சை கொடுக்கிறானே அவனுடைய யோக்கியதை என்ன? //

அன்பை மட்டுமே பாருங்கள்... //


பாத்திரம் அறிந்து பிச்சையிடு!

கொல்லான் said...

பாத்திரம் என்பது அவனவன் தராதரம்

வால்பையன் said...

//பாத்திரம் என்பது அவனவன் தராதரம் //

அதை தான் பெரியாரும் சொல்லியிருக்கிறார்!
உழைத்து வாழாமல் பிச்சை எடுத்து வாழ்வதே அவன் தரம்! இனி அது
தரா தரம்

கொல்லான் said...

பெரியாரும் காசியில் பிச்சை எடுத்து உண்டவர் தானே?

வால்பையன் said...

//பெரியாரும் காசியில் பிச்சை எடுத்து உண்டவர் தானே? //

பெரியாருக்கு பிச்சை போட்டவன் கேனப்பயன்னு தான் சொல்வேன்!

raja said...

நான் தீவிரமான இறைநம்பிக்கை உடையவன்.. ஆனால் பெரியார் எழுத்தை மொத்த தொகுப்புகளும் என்னிடம் உள்ளது. பொதுவாக ஒரு கட்டுரையை நான் படிக்கத்தொடங்கினால் இதுவரை நிறுத்தியதில்லை. அவ்வளவு தெளிவு அவரது சிந்தனையில். அதுதான் பெரியார் ஏனெனில் பெரியாருக்கு அவரது கொள்கையினால் அவருக்கு ஏதும் ஆதாயம் கிடையாது. ஆதாயம் அற்றவானே கொள்கையில் தெளிவாகவும் மன உறுதியுடன் இருப்பான். பெரியார் அப்படிப்பட்டவர். எனைக்கேட்டால் பெரியாரின் அத்தனை கருத்துகளையும் கடவுளே ஏற்றுக்கொள்வார். கடவுளால் இந்த பிரபஞ்சத்தை மட்டுமே படைப்பார் மற்றதை சுய சக்திகளான நீங்கள் தான் தேடிக்கண்டையாவேண்டும்.

பாரதசாரி said...

தல - நானும் வரோட பல கருத்துக்களைக் கேட்டு அசந்து போயிருக்கேன்..
"ஒரு வேளை ஒவ்வொரு பிரசவத்துலயும் நாலஞ்சு பொறந்துச்சோ?":-)

Philosophy Prabhakaran said...

// "ஒரு வேளை ஒவ்வொரு பிரசவத்துலயும் நாலஞ்சு பொறந்துச்சோ?":-) //

இதே டவுட் எனக்கும் வந்துச்சு...

Ramani said...

நல்ல பதிவு.புராணக்கதைகளில் உள்ள சிறப்பே
அவரவர்கள் அவர்களுக்குத் தேவையான கோணத்தில்
அதை அர்த்தம் செய்துகொள்ளலாம்.என்பதுதான்
பெரியார் அவருடைய கொள்கைக்கு ஏற்றார்போல
மிக அழகாக அதை கையண்டுள்ளார்.
வாழ்த்துக்களுடன்

bandhu said...

குசேலன் கதை நட்புக்கு ஒருவர் உதவ வேண்டும் - எவ்வளவு பொருளாதார இடைவெளி இருந்தாலும், என்ற கருத்தை முன் வைக்கிறது. எப்போதும் போல், அதில் உள்ள விஷயத்தை விட்டு விட்டு உப விஷயங்களை ஆராய்ந்தால் வருவது விதண்டா வாதம் மட்டுமே! திராவிட ஆட்சிகளின் வெற்று மேடை பேச்சிற்கு மட்டுமே உதவும் இது போன்ற வாதம் !

வருண் said...

எனக்குப் பெரியார் ரொம்பப் பிடிக்கும். நிச்சயம் அவருடைய பகுத்தறிவு சிந்தனைகள் க்ரிட்டிசிஷம் பாராட்டத்தக்கது. அவருக்கடுத்து எம் ஆர் ராதாவை வேணா அடுத்துச் சொல்லலாம். இன்னைக்கு பார்ப்பான்பூராம் ஒண்ணு சேர்ந்து பெரியார் - மணியம்மை அல்லது என்னவாவது ஒர் எழவைச் சொல்லி பெரியாரைக் கேவலப்படுத்த வென்றே அலைகிறானுக. ஆனால் இன்னைக்கும் கமலஹாசன் எனக்கு சொந்தக்காரன்னு சாண்ஸ் கெடைக்கும்போது சொல்லிக்கொண்டு பார்ப்பான் பார்ப்பான் நெட்வொர்க் வச்சுக்கிட்டு இப்படி இருக்கானுகளே, அந்தக்காகலத்தில் இவனுக செய்த அராஜகம் எவ்வளவு இருஎது இருக்கும்.

These bastards are trying to defame him at their level best. They can never appreciate his thoughts (இங்கே சொல்லியிருப்பது போல) just like you do. That itself should tell you how closed-minded and cheap minds these paappaans have (now and then)!

சிட்டி பாபு said...

கதையில் உள்ள நீதி புடிச்சிருக்கு

மங்குனி அமைச்சர் said...

நியாயமான கேள்விதானே .......................

தர்ஷன் said...

ம்ம் ஞாயமான கேள்விதானே பெரியார் கேட்டது

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

நமக்கு ஏன் பிடிச்சிருக்கு என்பதற்கு, அவர் சொன்னது சரி, அது தான் நியாயம் என்பது காரணமேயில்லை! ஒரு விஷயத்தை எப்படித் திரிக்கலாம் என்பதற்கு வழி சொல்லிவிட்டுப் போயிருப்பதாலேயே கூடப் பிடித்திருக்கலாம்!

கம்பனைப் பிழிந்து ரசமாகக் கொடுத்தார் ஒருவர். அவருடைய அன்றைய மன நிலைக்குத் தகுந்த மாதிரிக் காமம் மட்டும் தான்கண்ணில் பட்டது என்பதால் அதையே ரசமாக வைத்து விட்டார். என்ன இப்படி என்று பலநாட்கள் கழித்து அவரிடம் ஒருவர் கேட்டபோது, அதை விட்டுத்தள்ளு, அது அப்போதிருந்த மூடுக்கு எழுதியது என்று சொன்னதாகக் கேள்வி.

பார்வையில் இருக்கு அத்தனை கோளாறும்!

Speed Master said...

Nice

ராஜன் said...

//ஆனால் அந்த குசேலன், 24 குழந்தைகளை பெற்றதால் வறுமையில் வாடுகிறான். //


23வது பொறந்தப்ப எல்லாம் அம்பானியா இருந்தானா!?

ராஜன் said...

24ல எத்தன பெண் குழந்தைகள்?

ராஜன் said...

//வருடத்திற்கு ஒரு பிள்ளை என்ற வீதம், பெற்றிருந்தாலும் நான்கு பிள்ளைகள் 20 வயதுக்கு மேல் இருக்கும்.//


என்னய்யா லூஸுத்தனமா இருக்கு! குசேலனுக்கு பொறந்ததுங்கறதுதான் லாஜிக்! அவன் பொண்டாட்டிக்கே 24ம் பொறக்கணும்னு என்ன இருக்கு!

ராஜன் said...

//தோளுக்கு மேல் வளர்ந்த தடிமாடு பிள்ளைகளை வைத்துக் கொண்டு ஒருவன் பிச்சை எடுக்கிறான் என்றால் //

இதெல்லாம் அர்த்தமற்ற பேச்சு! பொறக்கற புள்ளையெல்லாம் ஆ ராசா மாதிரியே தெறம சாலியாவே பொறக்குமா? சிங்கு மாதிரி பெப்பளத்தானுகளும் பொறக்கத்தான் செய்யும்!

ராஜன் said...

//வனுக்கு பிச்சை கொடுக்கிறானே அவனுடைய யோக்கியதை என்ன? //

பெரியாருக்கு இவ்வளவு தலைக் கனம் ஆகாது! கண்ணனுக்கு எத்தன சம்சாரம் தெரியுமா? இவரென்னமோ ரெண்டு கட்டிட்டார்னு ரொம்ப ஓவரா பேசறாரே?

தயாளன் said...

Indian Express ல உங்களைப்பற்றி (Purva's Fine Dine) ஒரு article வந்திருக்கு

ராஜன் said...

//பார்ப்பனர்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உழைத்து சாப்பிட மாட்டர்கள். என்பதற்கு இந்தக் கதையே சாட்சி”//

கண்டிக்கிறேன்.

இது முழுக்கவும் பொய். எனக்குத் தெரியவே மொத்த பார்ப்பனர்களில் 0.07 சதவீதம் பேர் உழைத்துத் தான் சாப்பிடுகிறார்கள். புள்ளி விபரம் தெரியாமல் பதிவிட வேண்டாம்.

ராஜன் said...

//ஆயிரம் ஆண்டுகளாக யாருக்கும் தோன்றாத சிந்தனைதான் பெரியாரின் சிந்தனை முறை….//

ஆனா பெரியார்னு ஒரு படத்துல சிக்கன் பிரியாணிய வயசான காலத்துல தின்னு லெக் பீஸ் தொண்டைல மாட்டி பெரியார் சாகறதா காட்டுனது ஓவரா இல்ல!

ராஜன் said...

//நான் பெரியாரிஸ்ட் இல்ல, இந்த சிந்தனை கோணம் பிடித்திருந்தது, அதனால் பகிர்ந்துகிறேன்.//


கோணையா இருந்தாலே நமக்கு புடிச்சுடுமே!

வால்பையன் said...

// தயாளன் said...
Indian Express ல உங்களைப்பற்றி (Purva's Fine Dine) ஒரு article வந்திருக்கு//


இமேஜ் கிடைச்சா அனுப்புங்க தல, ப்ளாக்கில் பகிரவும் ஆசையா தான் இருக்கு!

MANO நாஞ்சில் மனோ said...

பெரியார் பெரியவர்தான்ய்யா....

இந்திரா said...

//MANO நாஞ்சில் மனோ said...

பெரியார் பெரியவர்தான்ய்யா....//


அட அட.. எம்மாம் பெரிய தத்துவம்..

இந்திரா said...

//வால்பையன் said...

// தயாளன் said...
Indian Express ல உங்களைப்பற்றி (Purva's Fine Dine) ஒரு article வந்திருக்கு//


இமேஜ் கிடைச்சா அனுப்புங்க தல, ப்ளாக்கில் பகிரவும் ஆசையா தான் இருக்கு!//


அப்டினா அடுத்த பதிவு என்னானு தெரிஞ்சிடுச்சு..

kk said...

அதுக்குத்தான் பெரியாருன்னு பேர் வந்ததுச்சு...

vaan moli said...

ஆக்கபூர்வமான விமர்சனம்!

keviv said...

Hi,

kusela's childs are nontouplets. i.e 3*9 = 27

பாலா said...

பகிர்வுக்கு நன்றி...
followers widget என் தளத்தில் சேர்த்தாகிவிட்டது :)

சி.பி.செந்தில்குமார் said...

தல.. சீரியஸ் பதிவு போல?

VELU.G said...

நல்ல கேள்வி தான்

Philosophy Prabhakaran said...

வால் ஜி... யுத்தம் செய் விமர்சனம் எழுதியிருக்கேன்... எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லுங்க...

http://philosophyprabhakaran.blogspot.com/2011/02/blog-post_163.html

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இதெல்லாம் அர்த்தமற்ற பேச்சு! பொறக்கற புள்ளையெல்லாம் ஆ ராசா மாதிரியே தெறம சாலியாவே பொறக்குமா? சிங்கு மாதிரி பெப்பளத்தானுகளும் பொறக்கத்தான் செய்யும்//
ஹஹா சூப்பர்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பெரியாரின் இந்த சிந்தனை கோணம் தான் அனைவரையும் அவரை ரசிக்க வைக்கிறது

சி. கருணாகரசு said...

வருடத்திற்கு ஒரு பிள்ளை என்ற வீதம், பெற்றிருந்தாலும் நான்கு பிள்ளைகள் 20 வயதுக்கு மேல் இருக்கும். தோளுக்கு மேல் வளர்ந்த தடிமாடு பிள்ளைகளை வைத்துக் கொண்டு ஒருவன் பிச்சை எடுக்கிறான் என்றால் அவன் யோக்கியதை என்ன? அவனுக்கு பிச்சை கொடுக்கிறானே அவனுடைய யோக்கியதை என்ன? பார்ப்பனர்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உழைத்து சாப்பிட மாட்டர்கள். என்பதற்கு இந்தக் கதையே சாட்சி”//

இந்த பார்வையை வியக்கிறேன்... கேள்வி நேர்மையானது.

பாரத்... பாரதி... said...

வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.

Baskar Perumal said...

//பெரியாரும் காசியில் பிச்சை எடுத்து உண்டவர் தானே?//

பெரியார்க்கு காசியில் பிச்சை எடுத்தபோதுதான் இந்து மதத்தைப்பற்றி சிந்திக்க ஆரம்பித்தார்.

நாட்டாமை said...

ஒரு வயித்துக்கு ஒரு வேளைக்கு உழைக்க வக்கத்தவனுக்கும், பிள்ளைகுட்டி பெறாதவனுக்கும் வறுமையைப் பற்றி என்ன தெரியும். அவனுக்கு புரானமும் தெரியாது தமிழும் தெரியாது.

வால்பையன் said...

//ஒரு வயித்துக்கு ஒரு வேளைக்கு உழைக்க வக்கத்தவனுக்கும், பிள்ளைகுட்டி பெறாதவனுக்கும் வறுமையைப் பற்றி என்ன தெரியும். அவனுக்கு புரானமும் தெரியாது தமிழும் தெரியாது. //

பெரியாருக்கு தெரியாது, உங்களுக்கு தான் தெரியுமே, கொஞ்சம் சொன்னா நாங்களும் தெரிஞ்சிகிறோம்!

Baskar Perumal said...

இதை என் ப்ளாகில் சேர்க்கமுடியுமா?

வால்பையன் said...

எதை சேர்க்கனும் தல!?

Baskar Perumal said...

இந்த பிளாகை, குறிப்பாக இந்த பதிவை நண்பரே ;)

வால்பையன் said...

என்ன வேணுமோ எடுத்துக்கோங்க, என்னை முதற்கொண்டு!

ராஜன் said...

//என்ன வேணுமோ எடுத்துக்கோங்க, என்னை முதற்கொண்டு!//

அடக் கொடுமையே! சாரு மாதிரி ஆயிட்டியே பங்கு!

பலே பிரபு said...

வித்தியாசமான பார்வைதான். பிடித்ததை பகிர்ந்தமைக்கு நன்றி!!

ஞாஞளஙலாழன் said...

ஒரே பெண் 24 குழந்தைகளை பெற்றெடுப்பது நடக்கிற விசயமாகத் தெரியவில்லை. அப்படி பார்க்கும் போது மூத்த குழந்தைக்கு அத்தனை வயசு இருக்க வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும் வயது வந்த குழந்தைகள் திருமணம் முடித்து தந்தையைக் கைவிட்டிருக்கக்கூடும்.
எப்படி இருந்தாலும் பெரியாரின் சிந்தனை கோணம் பாராட்டுக்குரியதே.

வால்பையன் said...

ராஜன் said...
//என்ன வேணுமோ எடுத்துக்கோங்க, என்னை முதற்கொண்டு!//

அடக் கொடுமையே! சாரு மாதிரி ஆயிட்டியே பங்கு!//


என்னைன்னா என் நட்பைன்னு அர்த்தம்!
நம்மளால குப்பியெல்லாம் கொடுக்க முடியாது பங்கு!

நாட்டாமை said...

பதினாறு பிள்ளை பெற்றெடுத்த தம்பதிக்கு தினத்தந்தி பரிசு வழங்கி கெளரவித்த கதையெல்லாம் மறந்து போச்சா? அதிலும் வருசத்துக்கு வருசம் பரிசு பெறுபவர் அதிகமாய் ஒரு கட்டத்தில் கு.க வை காரணம் காட்டி நிறுத்தி விட்டார்கள்.
எனக்கு தெரிந்து 5 வருடத்தில் 6 பிள்ளைகள் பெற்றவர்கள் ஏராளம்.இந்த ரேஞ்சில் கணக்கு போட்டல் 13 வயதில் திருமணம் ஆகி 48 வயதில் 42 குழந்தை பெத்துக்கலாம்.

இஸ்லாமியர்கள் வீடுகளில் 20 குழந்தை என்பது சாதாரணம்

வேலை வாய்ப்பு,இயற்கையின் சதி, குடும்ப அமைப்பு, சமூக அமைப்பு ஆகியவற்றை காலவர்த்தமானம் பார்க்கமா பேசிப் பேசி மூக்குடை படறதே வாடிக்கையா போச்சு.

Thanglish Payan said...

Nalla pathivu..

நாட்டாமை said...

//ஆனால் அந்த குசேலன், 24 குழந்தைகளை பெற்றதால் வறுமையில் வாடுகிறான். அதனால் தன் நண்பன் கண்ணனைப் பார்த்து உதவி கேட்க போகிறான். கண்ணன் அவனுக்கு உதவி செய்கிறான் என்பது கதை.//

குசேலனுக்கு 27 குழந்தைகள் அதைக் கூட சரியா தெரிந்து கொள்ளாமல் கதையடிக்க, அதுக்கு பக்கவாத்தியம் இத்தனையா?.கோனத்தில் கோளாறா?

வறுமை என்பது வேறு, பிச்சை எடுப்பது என்பது வேறு, உதவி கேட்பது என்பது வேறு. நன்பனிடம் உதவி கேட்பதை பிச்சை என்றால் எல்லாப்பயலும் பிச்சைக்காரந்தான்.

27 என்பது நட்சத்திரங்களை ஞாபகம் வைத்துக் கொள்ள ஒரு ஏற்பாடு.
”நன்பனிடம் உதவி கேட்கலாம்”. என்ற கருத்தை விட்டுவிட்டு கேனத்தனமா பார்க்ககூடாது.

!

Blog Widget by LinkWithin