ஹாய் ஃப்ரெண்ட்ஸ்!

தொடர்ச்சியான பணியின் காரணமாக முழுமையாக எந்த பதிவையும் உருவாக்கமுடியவில்லை, எல்லாம் பாதி பாதியாக நிற்கிறது, நான் கொஞ்சமாவது ப்ளாக் உலகில் பயணிக்க நீங்கள் தான் உதவ வேண்டும்!

அதுனால கொஞ்சநாளைக்கு நானும் கேள்வி பதில் தொடர் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்!

என்ன வேணும்னாலும் கேளுங்க, எனக்கு என்ன தெரிஞ்சிருக்குன்னு எனக்கு நானே சுயபரிசோதனை பண்ணிகிறேன்!


53 வாங்கிகட்டி கொண்டது:

கும்க்கி said...

தல.,

நீங்க நல்லவரா...இல்ல கெட்டவரா?

(சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி...மனசாட்சிப்படி பதில் சொல்லவும்)

# கவிதை வீதி # சௌந்தர் said...

பதிவுலகில் மொக்கை பதிவு போடுரவங்கள என்ன செய்யலாம்.?

# கவிதை வீதி # சௌந்தர் said...

இரவில் யார் வீட்டு சுவரவாது ஏறி குதித்ததுண்டா..

விவரம் அறிய கவிதை வீதி வாங்க..

ஜாபர் ஈரோடு said...

நல்ல பதிவு, நன்றி தல

revathy rkrishnan said...

உங்களையும் இந்த வியாதி தொத்திக்கிச்சா?

reena said...

எங்களை பார்த்தா உங்களுக்கு பாவமா தெரியலயா?

reena said...

முக்கியமான கேள்வி:பதில் சொல்லியே ஆகணும்


உங்களால ராஜன் கெட்டாரா? இல்லை ராஜனால நீங்க கெட்டீங்களா?

நாங்க நல்லவங்க தானேன்னு மட்டும் சொல்லிடதீங்க

reena said...

உங்களைப் பத்தி ஒரு கிசுகிசு கேள்விப்பட்டேனே? உண்மையா?

GEETHA ACHAL said...

ஆஹா..நேற்று தான் உங்களை நினைத்தேன்...என்னாடா இவர் பதிவு எதுவும் போடலையா..இல்ல என் கண்க்கு தான் உங்க பதிவு தெரியவில்லையா என்று நினைத்தேன்...

சி.கருணாகரசு said...

இன்னைய சந்தை நிலவரப்படி... ஒரு ஓட்டு என்ன விலை?

ஓட்டுக்கு காசு கொடுக்காத கட்சி ஆட்சி அமைக்குமா?

காசு வாங்கிக்கிட்டு ஓட்டு போட்டவனின் அடுத்த அய்தாண்டு நிலை என்னவா இருக்கும்?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வேலைல பிசியா இருக்கேன்னு சொல்லிட்டு ஏன் இந்த வேலையத்த வேலை?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

டோண்டுவை காலி பண்ணி அவர் இடத்தைப் பிடிப்பதற்காகவே இந்த உத்தியைக் கையிலெடுத்திருக்கிறீர்களா?

யோசிச்சுப் பாருங்க, இந்த மாதிரில்லாம் கேள்விகள் வரும். உங்களுக்குத் தேவையா :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரெண்டையும் ரெண்டையும் கூட்டினாலும் நாலுதான் வரும், பெருக்கினாலும் நாலுதான் வரும். ஆனா மூணையும் மூணையும் கூட்டினா ஆறு வரும், பெருக்கினா ஒம்பது வரும். இதுதான் சார் வாழ்க்கைன்னு யாராச்சும் உங்ககிட்ட தத்துவம் சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உங்களுக்குப் பிடிச்ச கதாநாயகி, கதாநாயகன், அரசியல் தலைவர் யார் யார்னு பட்டியல் போட முடியுமா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கொஞ்சம் ‘ஏ’டாகுடமான கேள்விகளையும் இங்கேயே கேட்கலாமா இல்லை தனிமடலில்தான் கேட்க வேண்டுமா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உங்க வாழ்க்கையில் நீங்க எதைப் பெரிய சாதனையாக நினைக்கறீங்க?

பாரத்... பாரதி... said...

என்னடா பதிவு எழுத வந்தோம் என எப்பொழுதாவது நினைத்ததுண்டா?

பாரத்... பாரதி... said...

நீங்கள் ஏன் உங்களை இளமையாக காட்ட "டை" பயன்படுத்துவதில்லை..

பாரத்... பாரதி... said...

உங்களுக்கு பிடித்த அமைச்சர் எ.வ.வாலுவா சாரி எ.வ.வேலுவா?

பாரத்... பாரதி... said...

வால் பையன் - ஏன் இன்னும் வளரவே இல்லை.. (பெயரில்)

சங்கவி said...

நீங்க சரக்கடிக்க உட்கார்ந்தா எத்தனை ரவுண்ட் அடிப்பீங்க?

ஓசில சரக்கடிச்சது உண்டா?

சரக்கை சுட்டு(திருடி) குடித்த அனுபவம் உண்டா?

பாரத்... பாரதி... said...

மீதி கேள்வி.. விளம்பர இடைவேளைக்கு பிறகு...
வளைச்சி வளைச்சி கேட்பமில்லை..

பாரத்... பாரதி... said...

இன்னும் கொஞ்சம் கேள்வி எங்க பதிவில் இருக்கு... முடிஞ்சா பதில் சொல்லுங்க...

கும்மி said...

//கொஞ்சமாவது ப்ளாக் உலகில் பயணிக்க நீங்கள் தான் உதவ வேண்டும்!//

கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம் அப்படின்னு ஒருத்தர் சொல்லியிருக்காரு. அவரைத் தூக்கி கடல்ல போட்டுருவோமா? நீங்க பயணிக்க அவர் உதவுவாரு.

கும்மி said...

//தொடர்ச்சியான பணியின் காரணமாக முழுமையாக எந்த பதிவையும் உருவாக்கமுடியவில்லை, //

இந்த மாதிரி சூழல்ல மீள்பதிவு போடுவீங்களே, இப்ப ஏன் இந்த விபரீத முடிவு?

கும்மி said...

//என்ன வேணும்னாலும் கேளுங்க//

ஒரு அஞ்சு லட்சம் கடன் கேட்கலாம்ன்னு இருக்கேன். எப்படி வசதி?

கும்மி said...

ஜாபர் ஈரோடு said
//நல்ல பதிவு, நன்றி தல//

உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன கொடுக்கல் வாங்கல்? இவ்வளவு பெரிய உள்குத்தா இருக்கு.

கும்மி said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
//பதிவுலகில் மொக்கை பதிவு போடுரவங்கள என்ன செய்யலாம்.?//

இவரோட ட்விட்டர் ஐ.டி. தெரியுமா? யாருகிட்ட வந்து என்ன கேள்வி?

பாரத்... பாரதி... said...

பிரபல பதிவர்க்கும், சாதா பதிவர்க்கும் என்ன வித்தியாசம்?

பாரத்... பாரதி... said...

//உங்களால ராஜன் கெட்டாரா? இல்லை ராஜனால நீங்க கெட்டீங்களா?//

சம்பந்தபட்டவர் தற்போது மேடையில் இருப்பதால்... பதில் சொல்லுங்க ராஜன் சார்..

Speed Master said...

ஒரு சந்தேகம்

1 Japanese yen = 0.552670994 Indian rupees


1 Vietnamese dong = 0.00217855036 Indian rupees

நம் மதிப்பு அதிகமாக உள்ளது ஆனால் பொருளாதாரத்தில் நாம் அவர்களை விட பின் தங்கியிள்ளேம் யாரேனும் விளக்கவும்

கோமாளி செல்வா said...

அண்ணா என்ன கேள்வி கேக்கணும் ?

( ஹி ஹி . என்னோட கேள்வி இதுதான் )

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க ஹோட்டல்ல இது வரைக்கும் எத்தனை பதிவர்கள் ஓசில சாப்படு போயிருக்காங்க?

வெட்டிப்பேச்சு said...

நீங்க ரொம்பத் தெளிவா எழுதரீங்க.

உங்களுடைய சாருவைப் பற்றிய பதிவு அப்பட்டமான உண்மை. ஆனால் இத்தகையோரைப் பற்றி பேச்செடுத்தாலே பிலு பிலுவென பிடித்துக் கொள்ள ஒரு தனி கும்பலே இருக்கிறது.

பரிதாபம் என்னவென்றால் இதுதான் இலக்கியம் என்றும், இலக்கிய கர்த்தா இப்படித்தான் இருக்க வேண்டுமென்றும் இளைய தலைமுறையினர் பலர் நம்புகின்றனர். இது கொடுமை மட்டுமல்ல ஒரு சீரழிவின் அடையாளம்.

உங்களது பதிவுகளுக்கு நன்றிகள்

ராஜவம்சம் said...

என்ன தல ஒன்னுக்கும் பதில காணோம்.

D.R.Ashok said...

ஏன் ஒரு ஆணுக்கு மதுவும் மங்கையும் முக்கியமாக இருக்கிறது கூடவே வெறுமையும்?

நடுத்தரவயது ஆண் குடும்பத்துக்காகவே ஓடி சாகவேண்டியதா இருக்கே.. அது ஏன்?

(சீரியஸான கேள்விதான் வால் :)

VELU.G said...

மனம், எண்ணம் இரண்டுக்கும் என்ன வேறுபாடு / ஒற்றுமை நீங்கள் அறிந்த வரையில்?

அகல்விளக்கு said...

தனிமனித ஒழுக்கத்திற்கும், சமூக கட்டமைப்பின் வரையறைகளுக்கும் இடையே இருந்த தொலைவு (1900-2000), இருக்கும் தொலைவு (2000 onwards)...

கலாச்சாரம் சாராமல் உங்களுடைய பார்வையில் பதில் எதிர்பார்க்கிறேன்...

ஷர்புதீன் said...

டோண்டுவை காலி பண்ணி அவர் இடத்தைப் பிடிப்பதற்காகவே இந்த உத்தியைக் கையிலெடுத்திருக்கிறீர்களா?

யோசிச்சுப் பாருங்க, இந்த மாதிரில்லாம் கேள்விகள் வரும். உங்களுக்குத் தேவையா :)

I STRONGLY AGREED

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

இது வேறயா?

நசரேயன் said...

//வேலைல பிசியா இருக்கேன்னு சொல்லிட்டு ஏன் இந்த வேலையத்த
வேலை?//

மறுபடி சொல்லிக்கிறேன்

விஜி said...

நீங்கதான் ப்ளாகிலீக்ஸ் குழும ஓனர்ன்னு சொல்றாங்களே உண்மையா?

விஜி said...

வரவர உங்க ஸ்டேட்டஸ் மெசேஜ் ஒரே கொலவெறிக்காதல் கவுஜையா இருக்கே..என்னா மேட்டர்?

sakthi said...

வால் நடத்துங்க நடத்துங்க ::))

Baskar Perumal said...

நண்பரே...என்ன கோபம்? நம்ம பதிவ்ல காணும்? உங்கள்ட்டேருந்து நிறைய தெரிஞ்சுக்கலாம்னு இருக்கேன்....

ராவணன் said...

1.வரும் தேர்தலில் எந்தக் கூட்டணியை ஆதரிக்கலாம்?
2.யார் பதவிக்கு வரலாம்?
3.யார் பதவிக்கு வரக்கூடாது?
4.கவர்ச்சி அரசியல் என்று பேசுவது சரியா?
5.நான் கடவுள் என்றால், என்னிடம் என்ன வரம் கேட்பீர்கள்?
6.நான் கொடுத்த வரம் பலித்தால், நீங்கள் என்னை வணங்குவீர்களா?

சரியான பதில்களை எதிர்நோக்கும்
ராவணன்.

Nanum enn Kadavulum... said...

வாழ்க்கை என்றால் என்னவென்றும் அதை உண்மையிலேயே வாழும் கலையை கற்றவரையும், யாரேனும் கண்டதுண்டா? அறிந்ததுண்டா ?
விளக்கம் அளிக்கும் அறிவு ...உங்களுக்கு உண்டா அல்லது உங்களை வாசிப்போர் யாருக்கேனும் உண்டா ? ....கண்டவர் சொல்லவும் ..ப்ளீஸ்.

சி.பி.செந்தில்குமார் said...

இண்ட்லில இணைச்சிருக்கேன்.. கோவை வர்றப்ப ஏதாவது போட்டுக்குடுத்தா தேவல..

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு ஃபிகர் - கோவை ஃபிகர் எது டாப்? ஏன்>/ இதற்கு படங்கள் தேவை.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க ஹோட்டல்ல இது வரைக்கும் எத்தனை பதிவர்கள் ஓசில சாப்படு போயிருக்காங்க?


சொல்லிடாதீங்க.. வந்துடுவாரு

சி.பி.செந்தில்குமார் said...

>>># கவிதை வீதி # சௌந்தர் said...

பதிவுலகில் மொக்கை பதிவு போடுரவங்கள என்ன செய்யலாம்.?

என்னை இங்கே வந்து கேவலப்படுத்தனுமா>

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

பிரபல பதிவர்க்கும், சாதா பதிவர்க்கும் என்ன வித்தியாசம்?


பிரபல பதிவர்னா அடுத்தவஙக் பிளாக்ல கமெண்ட் போட மாட்டாங்க..

தனி காட்டு ராஜா said...

//ஈரோடு ஃபிகர் - கோவை ஃபிகர் எது டாப்?//

ரெண்டுமே மொக்கை ....கேரளா ஃபிகர் தான் டாப் ...

!

Blog Widget by LinkWithin