மனிதன், மிருகம், கலாச்சாரம்!

சென்ற பதிவின் தொடர்ச்சியாகவும், வலைப்பதிவுகளில் தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கும் கலாச்சாரத்தை உள்நோக்கும் பார்வையாகவும் இதை வைத்து கொள்ளலாம்!

சென்ற பதிவில் மனிதனுக்குள் மிருகம் என்று தலைப்பிட்டதற்கு சில நண்பர்கள் சொல்லியிருந்தார்கள், அது மிருகத்தை கேவலப்படுத்துவது என்று, விலங்குகளை விட மனிதன் பல மடங்கு மேல் தான் ஆனால் ஒருசில மனிதர்களால் தான் நாம் மிருககுணத்தை இன்னும் விட வில்லை என்பது தெரிகிறது!, மிருகங்களின் வாழ்க்கையை உண்ணிப்பாக கவனித்திருக்கிறீர்களா? பரிணாமம் பற்றி ஆராய பல நாள், பல விலங்குகளின் வாழ்க்கையை கவனித்தவன் என்ற முறையில் சொல்கிறேன், மனிதன் விலங்குகளை விட மேல் தான்!

அனைத்து உயிரினத்திடமும் இருக்கும் இயற்கை உந்துதல் தன் சந்ததியினரை உருவாக்குதல், உயிர் வாழ்வதற்கு நடக்கும் போராட்டத்திற்கு இணையாக நடக்கும் அது என்பது டிஸ்கவரி போன்ற சேனல்களை பார்ப்பவர்களுக்கு தெரியும், இன்னும் அதிகமாக கவனித்தவர்களுக்கு தெரியும் விலங்குகளின் பெரும்பாலான புணர்ச்சி வன்முறையில் தான் நடக்கும் என்பது!. விலங்களுக்கும், மனிதர்களுக்கும் உள்ளது வித்தியாசம், விலங்குகள் அடங்கிப்போய் விடும், மனிதஇனப்பெண்கள் கடைசி வரை போராடுவார்கள்!

உளவியலின் தந்தை சிக்மண்ட் ஃப்ராய்டின் கூற்றுப்படி எல்லா குற்றங்களுக்கும் செக்ஸ் வறட்சி ஒரு காரணம் என்கிறார். கலாசாரம், பண்பாடு என பழமைப்பேசி(அவரில்லையப்பா) மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை தூண்டி விடும் பொறுப்பு சமூகத்தை சார்ந்த நம் அனைவரையும் சேரும்., குழந்தைகள் பாலியல் வன்முறையை பொறுத்தவரை பெரும்பாலும் சற்று வயது முதிர்ந்தவர்களே ஈடுபடுவார்கள், வயதானவுடன் கோவில், குளம் என சுற்றத்தொடங்கும் மனைவி, அருகில் சென்றாலே இந்த வயசில கிழவனுக்கு நினைப்பை பாரு எனும் பொழுது இமேஜ் கருதி விலகி விடுவார்கள், ஆனால் இயற்கை உந்துதல் அவர்களை விடாது, பெண்களுக்கு மோனாபாஸ் ஆனவுடன் கருமுட்டை உருவாகுவது நின்றுவிடும், ஆண்களால் சாகும் வரை இனப்பெருக்கம் செய்ய முடியும்!.



விவாதத்தில் மீதியை தொடரலாம்!
*********************

இன்று திருமணம் என்றாலே நீண்ட கால மகிழ்ச்சி தரும் என்ற விசயத்தை விட, பயங்கரமாக செலவு வைத்து நீண்ட காலம் கடனுக்காக உழைக்க வைக்கும் ஒரு நிகழ்ச்சி என்றே பார்க்கப்படுகிறது, நிம்மதியில்லாத மணவாழ்க்கை, மற்ற விசயங்களிலும் கவனத்தை கெடுக்கும். இதற்காகவே மேலை நாடுகளில் லிவிங் டுகெதர் முறையை பின்பற்றுகிறார்கள்.

லிவிங் டுகெதர் என்றால் என்னவென்று சரியாக புரியாமல் அது கலாச்சார சீர்கேடு, மனிதஇன அழிவு என்ற ரேஞ்சுக்கு சிலர் பேசி கொண்டிருக்கிறார்கள்!, தம்மை தாமே நன்றாக கவனித்து கொள்ள முடிந்த சுந்திர சிந்தனையுடய பெண்களுக்கு சாதகமானதே லிவிங்டுகெதர் கலாச்சாரம்! ஆணாதிக்க சமூகம் அதை எதிர்ப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை தான்!, அந்த தம்பதிகள் மற்ற மணமான தம்பதிகளை போல் தான் வாழ்கிறார்கள், விருப்பப்பட்டால் குழந்தையும் கூட பெற்று கொள்கிறார்கள் மற்றும் அவர்கள் எதை செய்தாலும் அறிந்தே செய்கிறார்கள், அய்யய்யோ தப்பு பண்ணிட்டோமே என மற்ற தம்பதியினர் புலம்புவது போல் அவர்கள் புலம்புவதாக தெரியவில்லை!

5 வருடமாக எனக்கு ஒரு லிவிங் டு கெதர் தம்பதியினரை தெரியும்! அந்த ஆண் அதற்கு முன் மனைவியை அடிக்கும் பழக்கம் உள்ளவர், அந்த பெண்ணின் கணவரும் அதே போல் தான்!, அவர்களுடய பழைய பார்ட்னர் இறந்து சில நாட்கள் கழிந்து சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள், அவர்களுக்குள் சின்ன சண்டை வந்து கூட நான் பார்க்கவில்லை, இருவருக்கும் நன்றாக தெரிந்த ஒரே விசயம், நாம் ஒருவரை நம்பி ஒருவர் இல்லை, நீ இல்லாமலும் என்னால் வாழ முடியும், அதனால் உனது ஆதிக்கத்தை என் மேல் செலுத்த நினைக்காதே!



அதற்காகவே நான் லிவிங் டு கெதர் கலாச்சாரத்தை நான் ஆதரிக்கிறேன்!

95 வாங்கிகட்டி கொண்டது:

நசரேயன் said...

மொத வெட்டா ?

துமிழ் said...

நாம் ஒருவரை நம்பி ஒருவர் இல்லை, நீ இல்லாமலும் என்னால் வாழ முடியும், அதனால் உனது ஆதிக்கத்தை என் மேல் செலுத்த நினைக்காதே!//

அப்படிச் செலுத்தினால் நான் உன்னை விட்டு விட்டு இன்னொருத்தி/இன்னொருத்தனோடு பொய் விடுவேன். அப்படியும் எடுக்கலாமா?

அடுத்து லிவிங் டுகதர் என்பதை வெள்ளைக் காரன் உருவாக்கியதே அரசாங்கத்தை ஏமாற்ற.அதாவது திருமணம் முடித்த பின்பு சில சலுகைகள் அற்றுப் போவதைக்
கொண்டதான சில மேலைத்தேய நாடுகளில் அந்தச் சலூகைகளை தொடர்ந்தும் பெறுவதற்காக உத்தியோக பூர்வமாக (சட்டப்படி) பதிவு செய்யாமால்
ஆனால் அவர்கள் கலாச்சாரப் படி மணமுடித்து வாழ்வதே இந்த லிவ்விங் டுகதர். இப்போது வெள்ளைகாரனே அதை மறந்து தன் இஷ்டப்படி லிவ்விங் டுகதர்
வாழ்க்கையை வாழ்ந்து கெடுத்துக் கொள்கிறான். இதில் இப்போ நாமளுமா?

ஆனால் இந்த லிவிங் டுகதர் வாழ்க்கையைத் தொடங்கியதே நாம்தான் தெரியுமா?

உங்களுக்கு முந்திய இரண்டு தலைமுறைகளை பார்த்தால் நிறையப் பேர் பதிவுத் திருமணம் செய்யாமல் ஆனால் சமய முறைப்படி
தாலி கட்டிக் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். அதுவும் லிவ்விங் டுகதர்தான்.

அந்தக் காலத்தில் பதிவு செய்வதை விட வலிமையான கட்டுக் கோப்பாக இருந்தது தாலி.
ஆனாலும் நாகரிகம் என்ற பெயரிலே அதை இழந்த பின் இப்போது திருமண பந்தத்தைக் காப்பாற்றிக் கொள்ள பதிவு செய்ய
கையெழுத்துக்கள் தீர்மானிக்கப் பட்டுள்ளன.

இப்போது நீங்கள் லிவ்விங் டுகதர் ஏற்றுக் கொள்ளப் படக் கூடியது என்று ஒரு கருத்தை முன் வைத்து உள்ளீர்கள்?

உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்...

ஒரு பெண் திருமணமாகி விவாகரத்துப் பெற்று விட்டால் என்பது சிறந்ததா அல்லது திருமணமாகாமல் யாரோ ஒருவனோடு வாழப்போக
அவன் பிள்ளையைக் கொடுத்துவிட்டு ஏமாற்றிவிட்டுப் போய்விட்டன் என்பது சிறந்தது?

அப்படிப் பிறக்கும் பிள்ளைக்கு முதல் எழுத்து என்ன (இனிசியல்)?

நீண்ட யோசனைக்குப் பிறகு இந்தக் கடைசிக் கேள்வியைக் கேட்கிறேன். பிழையாக இருந்தால் மன்னியுங்கள்.
நீங்கள் ஒரு தந்தையாக இருந்து உங்களுக்கு ஒரு பெண் இருந்து அந்தப் பெண் யாரோ ஒரு நம்பிக்கைக்கு உரியவன்
என்று அழைத்து வந்தால் அவனோடு அவளை மணம்முடிக்கும் முன்னமே உங்கள் வீட்டிலேயே சேர்ந்து வாழ விடுவீர்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடுத்தவருடைய அடிப்படை மனித உரிமைகளைப் பாதிக்காதவரை எது வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம் என்பதே எனது கருத்து. எனவே உங்களோடு முழுமையாக ஒத்துப் போகிறேன் வால்ஸ்... !

Thekkikattan|தெகா said...

வால்ஸ், வாவ்! ரொம்பத் தெளிவா பட்டைய கிளப்பிட்டீங்கப்பூ.

//அய்யய்யோ தப்பு பண்ணிட்டோமே என மற்ற தம்பதியினர் புலம்புவது போல் அவர்கள் புலம்புவதாக தெரியவில்லை!//

இங்க நிறைய பேருக்கு உள்ளர என்ன நடக்கிதுன்னே தெரியல. எல்லாம் வெளியில கரையில நின்னு க்கெஸ் வேல தான்...

அந்த மாதிரி வாழுறவங்களுத்தான் அதில எவ்வளவு பொறுப்போட, சுய ஒழுக்கத்தோட இருக்கணுங்கிறதை உணர்ந்துருப்பாங்க. ஏன்னா, எந்த நேரம் வேணாலும் விசயங்களை நேர் கொள்ளக் கூடிய சாத்தியங்கள் உண்டு. சோ, உண்மையான பாசம் பாசாங்கு இல்லாமல், நேசமாக இருந்தாலே ஒழிய அங்கே சில மேயுறவிங்களுக்கு வேல இல்லை.

இந்தக் கட்டுரை, உண்மையிலேயே நெஞ்சைச் தொட்டுருச்சப்போய்... எனக்கு பத்து வருஷம் ஆனிச்சு நீர் சொன்னதை புரிஞ்சிக்க - யு வார் க்ரேட் மேன்.

குடுகுடுப்பை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடுத்தவருடைய அடிப்படை மனித உரிமைகளைப் பாதிக்காதவரை எது வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம் என்பதே எனது கருத்து. எனவே உங்களோடு முழுமையாக ஒத்துப் போகிறேன் வால்ஸ்... !
//

second it.

வருண் said...

***இன்று திருமணம் என்றாலே நீண்ட கால மகிழ்ச்சி தரும் என்ற விசயத்தை விட, பயங்கரமாக செலவு வைத்து நீண்ட காலம் கடனுக்காக உழைக்க வைக்கும் ஒரு நிகழ்ச்சி என்றே பார்க்கப்படுகிறது, நிம்மதியில்லாத மணவாழ்க்கை, மற்ற விசயங்களிலும் கவனத்தை கெடுக்கும். இதற்காகவே மேலை நாடுகளில் லிவிங் டுகெதர் முறையை பின்பற்றுகிறார்கள்.***

அப்படியா?

ரெண்டுபேரு ரிஜிஸ்டெர் மேரேஜ் பண்ணினால் எவ்ளோ செலவாகும்? ரொம்ப அதிகமோ?

லிவிங் டுகெதெர் எல்லாம் நிம்மதியான வாழ்க்கையா? ப்ரேக் அப் எல்லாம் ஆறதே இல்லையா? இல்லை ப்ரேக் அப் டிவோர்ஸ் ரேட்டை விட கம்மியா??

கொஞ்சம் டேட்டா தரவும், ப்ளீஸ்!

வருண் said...

***5 வருடமாக எனக்கு ஒரு லிவிங் டு கெதர் தம்பதியினரை தெரியும்! அந்த ஆண் அதற்கு முன் மனைவியை அடிக்கும் பழக்கம் உள்ளவர், அந்த பெண்ணின் கணவரும் அதே போல் தான்!, அவர்களுடய பழைய பார்ட்னர் இறந்து சில நாட்கள் கழிந்து சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள், அவர்களுக்குள் சின்ன சண்டை வந்து கூட நான் பார்க்கவில்லை, இருவருக்கும் நன்றாக தெரிந்த ஒரே விசயம், நாம் ஒருவரை நம்பி ஒருவர் இல்லை, நீ இல்லாமலும் என்னால் வாழ முடியும், அதனால் உனது ஆதிக்கத்தை என் மேல் செலுத்த நினைக்காதே!***

அதாவது ஒரு பானை சோத்துல ஒரு சோறு பதம் பார்த்தால் போதும். நீங்க பாத்துடீங்க! முடிவுக்கும் வந்தாச்சு! நல்லது! :)

வால்பையன் said...

//நீண்ட யோசனைக்குப் பிறகு இந்தக் கடைசிக் கேள்வியைக் கேட்கிறேன். பிழையாக இருந்தால் மன்னியுங்கள்.
நீங்கள் ஒரு தந்தையாக இருந்து உங்களுக்கு ஒரு பெண் இருந்து அந்தப் பெண் யாரோ ஒரு நம்பிக்கைக்கு உரியவன்
என்று அழைத்து வந்தால் அவனோடு அவளை மணம்முடிக்கும் முன்னமே உங்கள் வீட்டிலேயே சேர்ந்து வாழ விடுவீர்களா? //

திருமண வயதில் அவளது துணையையும், வாழ்க்கை முறையையும் தேர்தெடுக்கும் உரிமை அவளுக்கு முழுமையாக உள்ளது!

குழந்தைக்கு, இனிசியல் உயிர் காக்கும் பிரச்சனை அல்ல, அது ஒரு அடையாளம் மட்டுமே!

தாலி என்ற ஒரு வஸ்து, வலிமையாக வாழ நம்பிக்கையை தருவது உண்மையென்றால், ஒரு தம்மாதூண்டு வஸ்துவின் மேல் வைக்கும் நம்பிக்கையை ஏன் சம மனிதர்கள் மீது வைக்கக்கூடாது!

வால்பையன் said...

//லிவிங் டுகெதெர் எல்லாம் நிம்மதியான வாழ்க்கையா? ப்ரேக் அப் எல்லாம் ஆறதே இல்லையா? இல்லை ப்ரேக் அப் டிவோர்ஸ் ரேட்டை விட கம்மியா??//

பிரேக் அப் பற்றி அவர்களுக்கு கவலையே இல்லையே!

லிவிங் டு கெதரோ, முறையான திருமணமோ முதலில் இரண்டு பேரும் மனம் உவந்து உள்ளார்களா என்பதே முக்கியம்! ஒருவரிடம் ஒருவருக்கு இருக்கும் சரியான புரிதலே முக்கியம்!

உலகில் யாரும், பார்த்த நொடியே லிவிங் டு கெதராக வாழலாம் என முடிவெடுப்பதில்லை, அவர்களுக்குள் சில வருட நட்புக்கு பின்னே அது நடக்கிறது!

திருமண வாழ்வில் நீங்கள் சொல்லும் பிரேக் இல்லாமல் இருக்கலாம் ஆனால் குடும்பம் வெளி உலகுக்காக நடிந்து கொண்டிருக்கும்! பெரும்பாலோர் வெளியே சொல்வதில்லை அவ்வளவே!

வால்பையன் said...

//அதாவது ஒரு பானை சோத்துல ஒரு சோறு பதம் பார்த்தால் போதும். நீங்க பாத்துடீங்க! முடிவுக்கும் வந்தாச்சு! நல்லது! :)//


உதாரணத்திற்கு தான் சொன்னேன்!
ஒரு சோற்றை வைத்து கல்லா கட்டும் பழக்கம் எனக்கு இல்லை என்பது எனது பதிவுகளை படித்த உங்களுக்கு தெரியாதா!?

எனக்கு முழு ஆதரவு உண்டு என்று சொல்லியிருக்கிறேனே தவிர, திருமண முறைகள் ஒழிக்கப்பட்டு அனைவரும் லிவிங் டு கெதராக வாழ வேண்டும் என்று சொல்லவில்லை!

அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்!

வருண் said...

***வால்பையன் said...

//லிவிங் டுகெதெர் எல்லாம் நிம்மதியான வாழ்க்கையா? ப்ரேக் அப் எல்லாம் ஆறதே இல்லையா? இல்லை ப்ரேக் அப் டிவோர்ஸ் ரேட்டை விட கம்மியா??//

பிரேக் அப் பற்றி அவர்களுக்கு கவலையே இல்லையே!***

ஏன் அது?

They wont miss their partner if he/she cheated her/him and dumped for another new person?

They won't miss their partner with whom they lived for several years and had regular sex???

If it is more like marriage, then break up is as bad as divorce or not?

வால்பையன் said...

@ வருண்

எனக்கு ஆங்கிலம் தெரியாது!

உமர் | Umar said...

லிவிங் டுகெதர் பற்றி ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

லிவிங் டுகெதர் வாழ்முறையை ஆதரிப்பவர்கள், உலகில் இருக்கும் அனைவரும் அதே முறையில் வாழ வேண்டும் என்று கூறவில்லை. அவ்வாறு வாழ முடிவெடுத்தவர்கள், தெளிவாக ஆராய்ந்தே முடிவேடுத்திருப்பர். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்முறையில் பிறர் தலையிடவேண்டாம் என்பதாகவே பேசப்படுவதாக நான் உணர்கின்றேன்.

சுயமாக சிந்திக்கக்கூடிய இரு தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையை மதம்/சாதி/சமூகம் முகமூடியை அணிந்து கொண்டு, கச்சை கட்டி எதிர்ப்பதை தவிர்க்கலாமே.

வருண் said...

OK, vaal, carry on! I could not resist. Dont take this personally just like others. I am just showing the other things which are overlooked here in supporting living together. That is all. I am not saying this worse or better YET! :)

வருண் said...

***வால்பையன் said...

@ வருண்

எனக்கு ஆங்கிலம் தெரியாது!
நவம்பர் 19, 2010 11:39 PM **

கவலையை விடுங்க. எனக்கு தமிழாக்கம் செய்யத் தெரியும். நான் திரும்ப வந்து அதை செய்றேன்.

அப்புறம் லிவிங் டுகெதெர் என்பது தமிழா??? ஏன் அதை மட்டும் புரிஞ்சுக்கிட்டு கட்டி அழுறீங்க? :)

வால்பையன் said...

//அப்புறம் லிவிங் டுகெதெர் என்பது தமிழா??? ஏன் அதை மட்டும் புரிஞ்சுக்கிட்டு கட்டி அழுறீங்க? :) //


அந்த முறையை பற்றி அறிவேன்! பெயரை வைத்து அதன் முழுமையை முடிவு செய்ய நான் யார்!

பெரிய வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருந்தால் படிக்க/புரிய சிரமம்!, நீ ஒன்னு சொல்லி நான் ஒன்னு புரிஞ்சிகிட்டா நல்லாயிருக்காது இல்லையா!

Thekkikattan|தெகா said...

//சுயமாக சிந்திக்கக்கூடிய இரு தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையை மதம்/சாதி/சமூகம் முகமூடியை அணிந்து கொண்டு, கச்சை கட்டி எதிர்ப்பதை தவிர்க்கலாமே.//

இன்னொரு சமூக உளவியல் பின்னணியையும் பிடிச்சிப்போட்டீங்களே... அவ்வ்வ்வ் :))

ம்ம்ம் முன்னேரட்டும் முன்னேரட்டும் பேசப் பேசத்தான் விசயங்களின் ஆழங்கள் வெளியில வரும். நாமும் நம்மை பத்தி தெளிவு பட்டுக்கலாம். அது சொந்த வளர்ச்சிக்கு ரொம்ப உதவும் - சாவுர அன்னிக்காவது.

துமிழ் said...

ஒரு பெண் திருமணமாகி விவாகரத்துப் பெற்று விட்டால் என்பது சிறந்ததா அல்லது திருமணமாகாமல் யாரோ ஒருவனோடு வாழப்போக
அவன் பிள்ளையைக் கொடுத்துவிட்டு ஏமாற்றிவிட்டுப் போய்விட்டன் என்பது சிறந்தது?//

இந்தக் கேள்வியை ஏன் தவீர்த்து விட்டீர்கள் நண்பரே? //


திருமண வயதில் அவளது துணையையும், வாழ்க்கை முறையையும் தேர்தெடுக்கும் உரிமை அவளுக்கு முழுமையாக உள்ளது!//

அவளுக்கு உரிமை இருக்கிறது என்பது உண்மை. ஆனால் எனது கேள்வி நீங்கள் உங்கள் வீட்டிலேயே வாழ வைப்பீர்களா? அல்லது
ஒரு அப்பாவாக இதனால் மற்றப் பொண்ணுகளுக்கு வாழ்கை அமையாது என்று வேறாக வாழச் சொல்லுவீர்களா?


குழந்தைக்கு, இனிசியல் உயிர் காக்கும் பிரச்சனை அல்ல, அது ஒரு அடையாளம் மட்டுமே!//

ஒத்துக் கொள்கிறேன். ஆனால் உங்கள் வாரிசு உங்கள் அடையாளம் இல்லாமல் இருப்பதை விரும்புவீர்களா?
அடையாளத்தோடு இருப்பதை விரும்புவீர்களா ?
பிறக்கின்ற குழந்தைக்கு அந்த அடையாளத்தை நாம் கொடுத்தே ஆக வேண்டும்.ஏனென்றால் அந்த அடையாளம் வேண்டுமா இல்லையா என்று
தீர்மானிக்கும் வயசு அந்தக் குழந்தைக்கு இல்லை.
அந்தப் பிள்ளை வளர்ந்து எங்கே என் இனிசியல் என்றால் ?

தாலி என்ற ஒரு வஸ்து, வலிமையாக வாழ நம்பிக்கையை தருவது உண்மையென்றால், ஒரு தம்மாதூண்டு வஸ்துவின் மேல் வைக்கும் நம்பிக்கையை ஏன் சம மனிதர்கள் மீது வைக்கக்கூடாது!//



தாலி மீது வைத்த நம்பிக்கை வீணாகிப் போனாலும் அவளுக்கு கிடைக்கு பெயர் வாழாவெட்டி . ஆனால் அவள் குழந்தைக்கு நிச்சயமாக ஒரு

இனிசியல்( அதாங்க அடையாளம்) கிடைக்கும்.

ஆனால் சக மனிதர் மீது வைக்கும் நம்பிக்கை வீணாகிப் போனால் அவளுக்கு வேசி என்றும் அவள் மகனுக்கு வேசி மகன் என்ற பெயருமே கிடைக்கும் .

வால்பையன் said...

அவன் பிள்ளையைக் கொடுத்துவிட்டு ஏமாற்றிவிட்டுப் போய்விட்டன் என்பது சிறந்தது?//

இந்தக் கேள்வியை ஏன் தவீர்த்து விட்டீர்கள் நண்பரே? //

பெண் சம்மதமில்லாமல் ஆண் மட்டும் எப்படி அவளுக்கு பிள்ளையை கொடுக்க முடியும்? அது எப்படி ஆண் ஏமாற்றியதாக ஆகும், மனம் ஒப்ப வில்லையென்றால் எப்போது வேண்டுமானாலும் பிரிந்து கொள்ளலாம் என இருக்கும் போது அதை தெரிந்தே குழந்தை பெற்று கொள்வதும், பின் அதை பாதுகாப்பதும் பெண்ணின் கடமையும், உரிமையும் ஆகிறது!

வால்பையன் said...

//உங்கள் வீட்டிலேயே வாழ வைப்பீர்களா? அல்லது
ஒரு அப்பாவாக இதனால் மற்றப் பொண்ணுகளுக்கு வாழ்கை அமையாது என்று வேறாக வாழச் சொல்லுவீர்களா?//


மற்ற பெண் என்றால் என்னுடய இன்னொரு மகளுக்கா!?

முதல் பெண்ணின் செயலால் அடுத்த பெண்ணின் வாழ்க்கைக்கு பிரச்சனை என்றால் எந்த அளவு இந்த கேடு கெட்ட சமூகம் இருக்குன்னு நினைச்சிக்க வேண்டியது தான்!.

என் மகள் என் வீட்டில் இருப்பதோ, தனியாக இருப்பதோ அவளது உரிமை!

லிவிங் டு கெதர்ன்னா என்னான்னு தெரியும் தானே உங்களுக்கு!?

வால்பையன் said...

//உங்கள் வாரிசு உங்கள் அடையாளம் இல்லாமல் இருப்பதை விரும்புவீர்களா?
அடையாளத்தோடு இருப்பதை விரும்புவீர்களா ?
பிறக்கின்ற குழந்தைக்கு அந்த அடையாளத்தை நாம் கொடுத்தே ஆக வேண்டும்.ஏனென்றால் அந்த அடையாளம் வேண்டுமா இல்லையா என்று
தீர்மானிக்கும் வயசு அந்தக் குழந்தைக்கு இல்லை.
அந்தப் பிள்ளை வளர்ந்து எங்கே என் இனிசியல் என்றால் ?//


இனிசியலை வச்சு என்னாங்க பண்றது?
ஒன்னும் புரியல எனக்கு, பிள்ளை வளர்ந்து எங்கே இனிசியல்னு ஏன் கேட்கனும், அதற்கான தேவை என்ன? அரசு தாயின் இனிசியலை பயன்படுத்தலாம் என சொல்லிய பிறகும்!


//தாலி மீது வைத்த நம்பிக்கை வீணாகிப் போனாலும் அவளுக்கு கிடைக்கு பெயர் வாழாவெட்டி . ஆனால் அவள் குழந்தைக்கு நிச்சயமாக ஒரு

இனிசியல்( அதாங்க அடையாளம்) கிடைக்கும்.

ஆனால் சக மனிதர் மீது வைக்கும் நம்பிக்கை வீணாகிப் போனால் அவளுக்கு வேசி என்றும் அவள் மகனுக்கு வேசி மகன் என்ற பெயருமே கிடைக்கும் . //


வாழாவெட்டி, வேசி, தேவிடியா, வேசி மகன் என்பதெல்லாம் சுற்றியிருக்கும் சமூகம் வைக்கும் பெயர்கள், நீங்கள் உங்களுக்காக வாழ விரும்புகிறீர்களா? அல்லது இந்த சமூகத்திற்காகவா?

சமூகம் பல முகமூடிகளை கொண்டது என்பதால் அதன் பேட்சை நான் கேட்பதில்லை!

Prabu M said...

தப்பு ரைட்டுன்னு எல்லாம் எதுவுமில்ல...
திருமணத்துக்கும் லிவிங் டுகெதருக்கும் பெரிய வித்தியாசமில்லைன்னு நினெச்சாலே திருமணவாழ்க்கை தோற்காது... ஒரு லிமிட்டுக்கு மேலே எதுவுமே இல்ல வாழ்க்கைல... கேபி ரொம்ப அழகா "புதுப் புது அர்த்தங்கள்" சொன்னாரே இருபது வருஷத்துக்கு முன்னாடியே!

துமிழ் said...

எப்போது வேண்டுமானாலும் பிரிந்து கொள்ளலாம் என இருக்கும் போது //



ஆக லிவிங் டுகதர் என்பது பிடிக்காவிட்டால் எப்போது வேண்டுமானாலும் பிரிந்து கொள்ளலாம் என்று சொல்லுகிறீர்கள்.

அப்படியானால் பிடித்தவரை சந்திக்கும் வரை ஜோடியை மாற்றிக்கொண்டிருக்கலாம் ... இதுதானே நீங்கள் ஆதரிக்கும்

இந்தக் கலாச்சாரம் மூலம் நீங்கள் சொல்ல வருவது?



பெண்களைப் பற்றி உங்கள் தவறான என்னத்தை மாற்றுங்கள். எந்த ஒரு பெண்ணும் உடலுரவிலே ஈடுப்று குழந்தையைச்

சுமக்கிறாள் என்றால் அது அவன் காலம் முழுக்க கூட இருப்பான் என்ற நம்பிக்கையிலேயே.எந்த ஒரு பெண்ணும் இவன்
என்னை விட்டுப் பிரிந்து விடுவான் என்று எண்ணிக் கொண்டு பிள்ளையை சுமக்க மாட்டாள்...



அதுசரி என்னங்க இது கொடுமை அவன் விட்டுப் போனால் குழந்தையை வளர்க்கும் கடமை தாயைச் சேருகிறது?

அப்படியானால் குழந்தை பெறுவதில் ஆணின் பங்கு வெறும் உடலுறவு மட்டும் என்றா சொல்கிறீர்கள்?

துமிழ் said...

எப்போது வேண்டுமானாலும் பிரிந்து கொள்ளலாம் என இருக்கும் போது //



ஆக லிவிங் டுகதர் என்பது பிடிக்காவிட்டால் எப்போது வேண்டுமானாலும் பிரிந்து கொள்ளலாம் என்று சொல்லுகிறீர்கள்.

அப்படியானால் பிடித்தவரை சந்திக்கும் வரை ஜோடியை மாற்றிக்கொண்டிருக்கலாம் ... இதுதானே நீங்கள் ஆதரிக்கும்

இந்தக் கலாச்சாரம் மூலம் நீங்கள் சொல்ல வருவது?



பெண்களைப் பற்றி உங்கள் தவறான என்னத்தை மாற்றுங்கள். எந்த ஒரு பெண்ணும் உடலுரவிலே ஈடுப்று குழந்தையைச்

சுமக்கிறாள் என்றால் அது அவன் காலம் முழுக்க கூட இருப்பான் என்ற நம்பிக்கையிலேயே.எந்த ஒரு பெண்ணும் இவன்
என்னை விட்டுப் பிரிந்து விடுவான் என்று எண்ணிக் கொண்டு பிள்ளையை சுமக்க மாட்டாள்...



அதுசரி என்னங்க இது கொடுமை அவன் விட்டுப் போனால் குழந்தையை வளர்க்கும் கடமை தாயைச் சேருகிறது?

அப்படியானால் குழந்தை பெறுவதில் ஆணின் பங்கு வெறும் உடலுறவு மட்டும் என்றா சொல்கிறீர்கள்?

Thekkikattan|தெகா said...

//ஒரு பெண் திருமணமாகி விவாகரத்துப் பெற்று விட்டால் என்பது சிறந்ததா அல்லது திருமணமாகாமல் யாரோ ஒருவனோடு வாழப்போக
அவன் பிள்ளையைக் கொடுத்துவிட்டு ஏமாற்றிவிட்டுப் போய்விட்டன் என்பது சிறந்தது?//>>>>

துமிழு, பெண் என்பவளுக்கு புத்தி வேலை செய்கிறதா இல்லையா? ஆண் என்ன மிருக இனமா - சுய ஒழுக்கம், கட்டுப்பாடு என்பது நமக்கு இல்லவே இல்லையா?

அவன் போட்ட குட்டி(குழந்தை) அவனுக்கே பாசம் கொடுக்காதா... எப்படி பொறுப்பற்றவனாக வெறும் செக்ஸிற்காகவே அலைவான்? இருந்தாலும் நம்மை இவ்வளவு கேவலப் படுத்திக்க கூடாது :((

ஏன், யோசிக்கும் வயதில் இருக்கும் ஒரு பெண்ணிற்காக இத்தனை பரிந்து நாம் முன் நிற்க வேண்டும். அவளுக்கு அவளை காப்பாற்றிக் கொள்ள முடியுமா, முடியாதா?

வால்பையன் said...

//ஆக லிவிங் டுகதர் என்பது பிடிக்காவிட்டால் எப்போது வேண்டுமானாலும் பிரிந்து கொள்ளலாம் என்று சொல்லுகிறீர்கள்.

அப்படியானால் பிடித்தவரை சந்திக்கும் வரை ஜோடியை மாற்றிக்கொண்டிருக்கலாம் ... இதுதானே நீங்கள் ஆதரிக்கும்

இந்தக் கலாச்சாரம் மூலம் நீங்கள் சொல்ல வருவது?//


பிடிக்காதவருடன் படுப்பது தான் நண்பா உங்கள் சமூகம் தேவிடியாதனம் என்று அழைக்கிறது, ரியலா வாழ பிடித்தவருடன் படுக்கனும்!, அது ஆணா இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி


//பெண்களைப் பற்றி உங்கள் தவறான என்னத்தை மாற்றுங்கள்.//

என்னத்தை எண்ணமாக தான் வைத்திருக்கிறேன், நீங்கள் தான் மாற்றியுள்ளீர்கள்!

//அப்படியானால் குழந்தை பெறுவதில் ஆணின் பங்கு வெறும் உடலுறவு மட்டும் என்றா சொல்கிறீர்கள்?//


யார் வளர்க்க வேண்டும் என்று அவர்கள் இருவரும் தீர்மானிப்பார்கள், ஆணின் விருப்பத்தின் பேரில் குழந்தை பெற்று கொள்ளும் பட்சத்தில் அதை வளர்க்கும் பொறுப்பு ஆணுக்கே சேரும்!

மீண்டும் ஒரு முறை கேட்கிறேன், லிவிங் டு கெதர்ன்னா என்னான்னு தெரியுமா?!

துமிழ் said...

வாழாவெட்டி, வேசி, தேவிடியா, வேசி மகன் என்பதெல்லாம் சுற்றியிருக்கும் சமூகம் வைக்கும் பெயர்கள், நீங்கள் உங்களுக்காக வாழ விரும்புகிறீர்களா? அல்லது இந்த சமூகத்திற்காகவா?

சமூகம் பல முகமூடிகளை கொண்டது என்பதால் அதன் பேட்சை நான் கேட்பதில்லை//



நான் எனக்காகத்தான் வாழ விரும்புகிறேன் . ஆனாலும் எனது பிள்ளையையோ அல்லது பிள்ளையின் பிள்ளையையோ

யாராவது வேசி மகன் என்பதை நான் விரும்பமாட்டேன்.

உங்களுக்கு அப்படி அழைப்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்கிறீர்கள்.

அப்பா சரி விவாதத்தை விட்டு விடுவோம்.



நன்றி நண்பரே !

வால்பையன் said...

//யாராவது வேசி மகன் என்பதை நான் விரும்பமாட்டேன்.
உங்களுக்கு அப்படி அழைப்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்கிறீர்கள்.
அப்பா சரி விவாதத்தை விட்டு விடுவோம்.//

நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்பது குறித்து மிக்க மகிழ்ச்சி!

ஒருவனுட தாய் உண்மையிலேயே விலை மாது என்றே வைத்து கொள்வோம்!

அவனை நாம் எப்படி அழைக்கனும், அவனுடய பெயர் சொல்லி அழைக்கலாம், நண்பனாக இருந்தால் மாமா, மச்சான் என்று அழைக்கலாம்! அதை விட்டு தேவிடியா மகனே என்று தான் அழைப்பேன் என்றால் என்ன அர்த்தம்!

அவனது அடையாளம் அதுவா!?

மற்றவர்கள் அப்படி அழைத்தால் நமக்கு எங்கே போச்சு சுயமரியாதை, முகரையை பெயர்க்க வேண்டாம்!

நீங்க அப்படி தான் கூப்பிடுவிங்களா நண்பா!?

Thekkikattan|தெகா said...

முதலில் பெண்ணைப் பற்றியான புரிதல் சிக்கலே இங்கே தூக்கலாக தெரிகிறது. ஏதோ நாம் (ஆண்கள்) அவர்களை காப்பாற்ற படைக்கப்பட்டவர்கள் போல நினைத்துக் கொண்டு அவர்களுக்கென்று சுயமாக சிந்திக்கும் சத்தியே இல்லையெனவும், சும்மா அப்படி கண்ணடிச்சாலே சாய்ந்து விடுவது போலவும், ஆண் சாலைக் கம்பத்தில் ஒண்ணுக்கு அடிச்சிவிட்டு செல்வதனைப் போன்று குழந்தை உருவாக்க (இந்த நாகரீக உலகில்) பெண்களும் அதுக்காகவே வாழ்வதனைப் போன்றும் உங்கள் வாதம் எடுத்துச் செல்கிறது.

சட்டமிருக்கிறது, மற்றவைகளை அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் - காலப்போக்கில். அது போன்றவர்களுக்கு எது போன்ற சட்ட சிக்கல்களில் எப்படி ஏனைய விடயங்களில் தீர்ப்பு வாங்கி கொடுப்பதென்று... அப்படி ஏதாவது பின்னானடி பிரச்சினை வந்தால்.

துமிழ் said...

பிடிக்காதவருடன் படுப்பது தான் நண்பா உங்கள் சமூகம் தேவிடியாதனம் என்று அழைக்கிறது, ரியலா வாழ பிடித்தவருடன் படுக்கனும்!, அது ஆணா இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி//



ரியலா வாழப் பிடித்தவர் என்றால் என் பிரிய வேண்டும்?





நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் தராமல் சுத்தி மழுப்புவதிலேயே குறியாக இருக்கிறீர்கள்.



மீண்டும் ஒரு முறை கேட்கிறேன், லிவிங் டு கெதர்ன்னா என்னான்னு தெரியுமா?//



நான் இவ்வளவு கதைத்ததே நீங்கள் வெறுமனே ஒரு ஜோடியைப் பார்த்து பிழையான கருத்துக்கு வந்து இருக்கின்றீர்கள் என்று.

நீங்கள் பார்த்தது வெறும் ஒரு ஜோடி ஆனால் தொழில் ரீதியாக நூற்றி இரண்டு ஜோடிகளைப் பார்த்திருக்கின்றேன்.( ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைக்காக அவர்களைச்

சந்தித்தேன்)



அந்த ஆராய்ச்ச்சிக் கட்டுரை நான் பரீட்சைக்காகத் தயார் செய்து கொடுத்தது , எந்த journal ilum வெளிவராத காரணத்தால் அதன் முடிவுகளை என்னால் சொல்ல முடியவில்லை.

முடிந்தால் ethical clearance எடுத்து அந்த முடிவுகளைச் சொல்லுகிறேன்.

அதற்குப் பிறகு உங்கள் எண்ணம் முற்றாக மாறலாம் . .

Thekkikattan|தெகா said...

ரியலா வாழப் பிடித்தவர் என்றால் என் பிரிய வேண்டும்?//

எந்தந்த காரணங்களால் ‘முறைப்படி திருமணம்’ செய்து கொள்கிறவர்கள் பிரியவேண்டுமென்று பிரிகிறார்களோ அந்தந்த காரணங்களுக்காகவும் -ப்ளஸ்-சுரத்தே இல்லாமல் ஒரே வீட்டிற்குள் இருந்து கொண்டு முகம் கொடுத்து பேசிக் கொள்ளமல் ஆண்டுகனக்காக வாழ்வதிலிருந்து தப்பித்து கொள்வதற்கும் -செய்வார்களா இருக்கும். தம்பதிகள் பிரிந்து போக நேரிடும் காரணங்களை நாம் எப்படி அனுமானிக்க முடியும்?

இதற்கு எதிராக பேசுபவர்களிடம் நான் காணும் ஒரே ஒற்றுமை... நம்மூரில் தனிமனித நல்லொழுக்கம் இல்லை... மேய்ந்து கொண்டே திரிவோம், பெண்கள் ஈசியாக ஏமாந்து விடுவார்கள் என்ற முடிவிற்கே வர வைக்கிறார்கள், ஏன் தல அப்படி?

உமர் | Umar said...

//இதற்கு எதிராக பேசுபவர்களிடம் நான் காணும் ஒரே ஒற்றுமை... நம்மூரில் தனிமனித நல்லொழுக்கம் இல்லை... மேய்ந்து கொண்டே திரிவோம், பெண்கள் ஈசியாக ஏமாந்து விடுவார்கள் என்ற முடிவிற்கே வர வைக்கிறார்கள், ஏன் தல அப்படி? //

இதற்கு எதிராக பேசுபவர்களின் எண்ணவோட்டம் இப்படி இருப்பதாக நான் நினைக்கின்றேன்.

இன்றைய கால கட்டத்தில், பெண்கள் நல்ல கல்வி பெற்று நல்ல வேலையிலும் அமர்ந்து பெற்றோரை பொறுப்பெடுத்து பார்த்துக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர். திருமணம் தவிர இதர விஷயங்களில் அவர்களின் முடிவுகளை பெரும்பாலான பெற்றோர்கள் ஏற்றுக்கொள்கின்றனர் அல்லது ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றனர். திருமணம் தொடர்பிலும் பெண்ணே முடிவெடுக்கும் நிலைக்கு வந்து விட்டால், பெண் 'வீட்டுக்கு அடங்காதவள்' ஆகிவிடுகின்றாள். அதிலும், திருமணம் என்ற பந்தத்தை விடவும், இணைந்து வாழ்தல் (Living Together) என்னும் வாழ்முறையை தேர்ந்தெடுத்துவிட்டால், அவள் 'முழுதும்' வீட்டுக்கு அடங்காதவள் ஆகிவிடுகின்றாள். இன்று சமூகத்தில் எங்கோ நடக்கும் இத்தகைய நிகழ்வு, வருங்காலத்தில் தனது வீட்டிலும் நடைபெற்று விட்டால், தான் இவ்வளவு நாள் வளர்த்த மகள் தனக்கு அடங்காதவள் ஆகிவிடுவாள் என்பதே முக்கியக் கவலையாக தெரிகின்றது.

சமூகத்தை முன்வைத்து ஒருவர் கவலைப்படுகின்றார் என்றாலே, நாளை தனது வீட்டிலும் அப்படிப்பட்ட ஒன்று நடந்துவிடக் கூடாதே என்னும் பயத்தினால்தான். இங்கே சமூகம் என்றும், வேறு காரணங்களும் கூறி இவர்கள் எதிர்த்தாலும், அடிப்படை ஆதங்கம் என்னவோ, பெண் வீட்டுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்னும் ஆணாதிக்கமே.

.

Thekkikattan|தெகா said...
This comment has been removed by the author.
Thekkikattan|தெகா said...

கும்மி, நீங்க மேலே விட்ட பின்னூட்டத்தை ‘துமிழ்’னு நினைச்சு அவருக்கு பதில் எழுதிட்டு பார்த்தா நீங்க... அதான் எடுத்திட்டேன் :)

vasu balaji said...

வால் இடுகையில் இருக்கிறதை விட உங்கள் பின்னூட்ட விளக்கங்கள் அருமை. கீப் கோயிங் தெ.கா.:)

Unknown said...

இதை எதிர்க்கும் பெரும்பாலானவர்களுக்கு அதன் அர்த்தம் முழுதும் புரியவில்லை.

லிவிங் டுகெதர் என்றால் எதோ விருப்பப்பட்டவர்களுடன் படுத்து எந்திரிப்பது என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு சிறு மஞ்சள் துண்டை கயிற்றில் கட்டி திருமணம் செய்து கொண்டேன் என்று அறிவித்து விட்டு சேர்ந்து வாழ்ந்தால் சம்மதமாம். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சேர்ந்து வாழ்ந்தால் தப்பாம்..

கொடுமையடா சாமி..

வருண் said...

***வருண் said...

***வால்பையன் said...

//லிவிங் டுகெதெர் எல்லாம் நிம்மதியான வாழ்க்கையா? ப்ரேக் அப் எல்லாம் ஆறதே இல்லையா? இல்லை ப்ரேக் அப் டிவோர்ஸ் ரேட்டை விட கம்மியா??//

பிரேக் அப் பற்றி அவர்களுக்கு கவலையே இல்லையே!***

ஏன் அது?


ப்ரேக் உப் உறவு முறிதல்னா கவலையே இல்லை என்பது உங்களுக்கு யார் சொன்னானு தெரியலை.

இந்த உறவில் உள்ள ஒருவர் தன் துணையை ஏமாற்றி இன்னொருமூனாமவருடன் உறவு வைத்து ஏமாற்றுவது இல்லையா? பிறகு இவரை கை கழுவிவிடுவதில்லையா?

கல்யாணம் செய்தவருக்கும் ஒரு உறவில் சேர்ந்து வாழ்பவர்களுக்கும் என்ன வித்தியாசத்தைக் கண்டீர்கள்?

வருண் said...

*** They won't miss their partner with whom they lived for several years and had regular sex???

If it is more like marriage, then break up is as bad as divorce or not?
நவம்பர் 19, 2010 11:37 PM ***

ஒரு துணையுடன் கல்யாணம் செய்யாமல் சில ஆண்டு வாழ்ந்த பிறகு, ஒருவர் இன்னொருவர்மேல் காதல் கொண்டு பிரிந்தால் வலியிருக்கதுனு சொல்றீங்களா?

கல்யாணம்னு சடங்கு செய்து சேர்ந்துவாழ்ந்தால் அந்தபிரிவில் வலியிருக்குமா?

இது ரெண்டு சூழ்நிலைக்கும் என்ன வித்தியாசம் இருக்குனு சொல்றீங்க???

வருண் said...

***முகிலன் said...

இதை எதிர்க்கும் பெரும்பாலானவர்களுக்கு அதன் அர்த்தம் முழுதும் புரியவில்லை.

லிவிங் டுகெதர் என்றால் எதோ விருப்பப்பட்டவர்களுடன் படுத்து எந்திரிப்பது என்று நினைத்துக் கொள்கிறார்கள்.**

இதை புரிந்து கொண்டதாக விவாதம் செய்யும் பலருக்கும் இதன் அர்த்தம் தெரியவில்லைனும் தெளிவாத் தெரியுது.

வருண் said...

***லிவிங் டுகெதர் என்றால் என்னவென்று சரியாக புரியாமல் அது கலாச்சார சீர்கேடு, மனிதஇன அழிவு என்ற ரேஞ்சுக்கு சிலர் பேசி கொண்டிருக்கிறார்கள்!, ***

புரிஞ்சவங்க சொல்லுங்க, உங்அளுக்கு மனதுக்குப் பிடித்த ஒருவரிடம் வருடக்கணக்காக உடலுறவு கொள்றீங்க (ஏதோ செக்ஸ் ஒர் மேட்டர் இல்லைனு பொய் வேற வாய்கூசாமல் சொல்றாங்க)! ஆனா இவ்ளோ ஆராச்ய்ச்சிக்கு அப்புறமும் உங்களுக்கு அவரை மணம் முடிக்க தைரியம் இல்லை! ஏன் அது? நேர்ந்துவாழும் பார்ட்னெர் "மண்மகள்/ன்" ஆக தகுதி குறைய என்ன காரணம்?

விபரம் சொல்லவும்!

வருண் said...

சேர்ந்து வாழ்றதை சரினு கொடிபிடிக்கும் எல்லோரும் எல்லாம் அறிந்த மேதாவிகள்னு உங்களுக்கு நீங்களே அப்பபோ ஒரு சான்றிதழ் வழங்கிக்கிறீங்க. அதுவும் எதுக்குனு தெரியலை!

வருண் said...

பிடித்த ஒருவரை மணம் முடிக்க தில்லு இல்லாமல் வாழும் நீங்க வாழ்க்கைக்கு பயந்த கோழைகள். உங்களுக்கு உங்க பார்ட்னர் மேலே நம்பிக்கை இல்லாத, ஏன் உங்கள் மேலேயே நம்பிக்கை இல்லாத அரைவேக்காடுகள்னு நான் சொன்னா எப்படி இல்லைனு சொல்லுவீங்க?

எங்களுக்கு எல்லாம் வேனும் (செக்ஸ் ரொம்பவே வேணும்) ஆனா, நாங்க கம்மிட்மெண்ட்ஸ் வேணாம் எனறு வாழ்க்கையைப் பார்த்து பயந்து நடுங்கும் கோழைகள் என்னவோ வீர்ம் பேசிக்கிட்டு திரிகிறார்கள்!

பேசுறது "லிவிங் டுகெதெர்" பத்தி, ஆனா தமிழ்லதான் பேசனும்னு வெதண்டாவதாம்.

பலருக்கு தலைப்பைக்கூட தமிழில் சொல்ல வக்கில்லை! ஆனா தமிழ் தமிழ்னு அடிச்சுக்கிறீங்க?

உங்க வெப்சைட் அட்ரெஸ்கூட ஆங்கிலத்தில்தான் இருக்கு! அதியும் ஏதாவது செய்ங்க, தமிழ்புலிகளா!

vasu balaji said...

வருண் said...


// இந்த உறவில் உள்ள ஒருவர் தன் துணையை ஏமாற்றி இன்னொருமூனாமவருடன் உறவு வைத்து ஏமாற்றுவது இல்லையா? பிறகு இவரை கை கழுவிவிடுவதில்லையா?//

ஆமாம். இருக்கலாம். ஆனா கலியாணம் பண்ணது கூலிக்கு ஆள் வெச்சி போட்டு தள்ளுதே. அதை விட இது பரவால்லைன்னு படுது.

// கல்யாணம் செய்தவருக்கும் ஒரு உறவில் சேர்ந்து வாழ்பவர்களுக்கும் என்ன வித்தியாசத்தைக் கண்டீர்கள்?//

இல்லைல்ல. அப்புறம் ஏன் கலியாணம் பண்ணிதான் ஆவணும்னு ஒரு அடம்.:)

வருண் said...

***வானம்பாடிகள் said...

வருண் said...


// இந்த உறவில் உள்ள ஒருவர் தன் துணையை ஏமாற்றி இன்னொருமூனாமவருடன் உறவு வைத்து ஏமாற்றுவது இல்லையா? பிறகு இவரை கை கழுவிவிடுவதில்லையா?//

ஆமாம். இருக்கலாம். ஆனா கலியாணம் பண்ணது கூலிக்கு ஆள் வெச்சி போட்டு தள்ளுதே. அதை விட இது பரவால்லைன்னு படுது.***

யாரோட கல்யாணத்தை பத்தி பேசுறீங்கனு சொல்லுங்க!

வருண் said...

***// கல்யாணம் செய்தவருக்கும் ஒரு உறவில் சேர்ந்து வாழ்பவர்களுக்கும் என்ன வித்தியாசத்தைக் கண்டீர்கள்?//

இல்லைல்ல. அப்புறம் ஏன் கலியாணம் பண்ணிதான் ஆவணும்னு ஒரு அடம்.:)***

வித்தியாசம் இல்லைனா நீங்க ஏன் கல்யான்மனா நடுங்குறீங்க? அதை சொல்லுஙக.

வித்தியாசம் சொல்லத் தெரியலைனா இப்படி வீம்பு பேச வேண்டிய்தில்லை!

vasu balaji said...

வருண் said...

// வித்தியாசம் இல்லைனா நீங்க ஏன் கல்யான்மனா நடுங்குறீங்க? அதை சொல்லுஙக.

வித்தியாசம் சொல்லத் தெரியலைனா இப்படி வீம்பு பேச வேண்டிய்தில்லை!//

எங்கல்லாம் போறீங்களோ அங்கல்லாம் சொல்லீட்டுதான் இருக்காங்க. கலியாணம் பண்றவன் பண்ணிக்கட்டும். இப்படி இருக்குறோம்னு இருக்கிறவன விடுங்கப்பான்னு. இல்ல நீ கலியாணம் பண்ணிதான் ஆவணும்னு அடாவடி அடிக்கிறது நீங்க. நீங்களே ஒத்துக்குறீங்க வித்தியாசம் இல்லைன்னு. அப்புறம் ஏன் இந்த குதி குதிக்கிறீங்கன்ன நீதான் வித்தியாசம் சொல்லணும்னா என்னா இது.

அது சரி! அந்த மொத மேட்டரு சொல்லுங்க சாரே. பேப்பர தொறந்தா அம்மிக்கல்ல போட்டா. ஆளை வெச்சி போட்டு தள்ளிட்டான்னு வருதே ஏன். போறேன்னு போக முடியாத அழுத்தம்தானே. அத ஒத்துக்க ஏன் மனசு வரல.

இதில அதுக்கு வழியில்லாம பேசி பார்த்து முடியலைன்னா சரி போய்ட்டு வான்னு சந்தோஷமா அனுப்பறது குறைஞ்ச பட்சம் உசிருக்கு கேரண்டி. உயிர்ப்பயம் இல்லைங்கறதே பெரிய வித்தியாசம் இல்லையா?

vasu balaji said...

(தொடர்ச்சி) இப்படி நடக்கறது நீங்க ஏழை நாட்டுல இது சாத்தியமில்லைன்னு சொல்ற சமூகத்து அடித்தட்டு/ மக்கள் கிட்டதான் அதிகமா இருக்கு.

வருண் said...

ஆமா, உங்க லிவிங் டுகெதெர் பார்ட்னெரை, தமிழ்ல எப்படி சொல்லுவீங்க?

மனைவி/கணவன்னு சொல்ல முடியாது.

வப்பாட்டி/வைப்பட்டனானு சொல்ல முடியாது!

வேசி/வேஷனா? னும் சொல்ல முடியாது.

என்னானு சொல்லுவீங்க??

சீக்கிரமா சொல்லுங்க! :)))

தோழன்/தோழினா?

இல்லையே தோழன் தோழியிடம் உடலுறவு கொள்ளனும்னு அவசியம் இல்லையே? அது ஒத்து வராது.

உடலுறவு வைத்துக்கொள்ளுகிற தோழி தோழன் னா?

தமிழ் மேதைகள் வரவும்! என் தமிழ் தாகத்தை தீர்க்கவும்!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அவர்களுடய பழைய பார்ட்னர் இறந்து சில நாட்கள் கழிந்து சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள்,
//

எப்படீண்ணே இறந்தாங்க?...

வருண் said...

***எங்கல்லாம் போறீங்களோ அங்கல்லாம் சொல்லீட்டுதான் இருக்காங்க. கலியாணம் பண்றவன் பண்ணிக்கட்டும். இப்படி இருக்குறோம்னு இருக்கிறவன விடுங்கப்பான்னு***

நான் எண்டுக்கு வித்தியாசம் கேட்டேன். பதில் சொல்ல முடியலையா?

மறுபடியும் கேக்கிறேன்!

வருண் said...

***// கல்யாணம் செய்தவருக்கும் ஒரு உறவில் சேர்ந்து வாழ்பவர்களுக்கும் என்ன வித்தியாசத்தைக் கண்டீர்கள்?//***

என்ன வித்தியாசம்னு சொல்லுங்க!! தெரியலைனா ஏதாவௌ மீட்டிங் போட்டு உங்க தோழர் தோழரை விசாரித்து சொல்லவும்.

தெரிலைனு கூட சொல்லாம்! :)) பூசி மழுப்ப வேணாம்!

vasu balaji said...

சகி, சகான்னு வச்சிக்குங்களேன். அத விட இது ராஜன், சுஜாதான்னு சொல்லிட்டு போவாங்க.அது அவங்களுட சுயம். அவங்க ஃப்ரண்டா, புருசன் பொண்டாட்டியா, பார்ட்னரானு தெரிஞ்சிதான் என்ன பண்ண போறீங்க. :))

வருண் said...

***வானம்பாடிகள் said...

சகி, சகான்னு வச்சிக்குங்களேன். ***

நான் தமிழன்! தமிழ்ல என்னனு கேட்டேன் சமஸ்கிரதத்தில் இல்லை. நீங்க ஏன் சமஸ்கிரத்துக்கு தாவுறீங்க??? தமிழ் தெரியாதா உங்களுக்கும்???

vasu balaji said...

எண்ட்னு யாருங்க தீர்மாணிக்கணும். நீங்களா அவங்களா? எண்ட்னா எதோட எண்டு. அதுல என்ன வித்தியாசம். ங்கொய்யால அய்யோ என்ன விட்டு போய்ட்டீங்களேன்னு அழும். சரி வாடி போகலாம்னு பிணம் எழுந்து கூப்பிட முடிஞ்சா யார்னா அப்புடி அழுவாங்க. இல்ல கூட வரேன்னு போவாங்களா.கேக்குறாரு டீட்டேயிலு. எண்டாம்ல.

vasu balaji said...

/நான் தமிழன்! தமிழ்ல என்னனு கேட்டேன் சமஸ்கிரதத்தில் இல்லை. நீங்க ஏன் சமஸ்கிரத்துக்கு தாவுறீங்க??? தமிழ் தெரியாதா உங்களுக்கும்???/

இங்க போய் தமிழ் அகர முதலில பாருங்க
http://tamilvu.org/library/dicIndex.htm. சகின்னா தோழன் தோழின்னு இருக்கு.

ஆமாம் வருண் தமிழ் பேரா. அத மாத்திக்கிட்டு வந்து இங்க அலம்பலாம். சரியா.

vasu balaji said...

பட்டா தமிழ் சொல்லிக்குடுங்கப்பா இவருக்கு.:))

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

***வானம்பாடிகள் said...

/நான் தமிழன்! தமிழ்ல என்னனு கேட்டேன் சமஸ்கிரதத்தில் இல்லை. நீங்க ஏன் சமஸ்கிரத்துக்கு தாவுறீங்க??? தமிழ் தெரியாதா உங்களுக்கும்???/

இங்க போய் தமிழ் அகர முதலில பாருங்க
http://tamilvu.org/library/dicIndex.htm. சகின்னா தோழன் தோழின்னு இருக்கு.

ஆமாம் வருண் தமிழ் பேரா. அத மாத்திக்கிட்டு வந்து இங்க அலம்பலாம். சரியா.

November 20, 2010 5:17 AM***

இப்போ சகி, சகா ங்கிறது தமிழா இல்லை சமஸ்கிரதமானு மட்டும் சொல்லுங்க. ஒண்ணு ஒண்ணா பேசுவோம்.

என்னக்ங்க முக்கியமான ஒரு உறவுக்கு தமிழ்ப் பேரை சொல்ல முடியலை. எனக்கு மனதுக்கு சங்கடமாயிருக்கு!

ஒரு ரிசேர்ச் கம்மிட்டியை (ஆராய்ச்சி கூட்டம்) கூட்டுவோம்!

கண்டுபிடிப்போம். நாலு பேர் கேட்டா மனைவினா இல்லைனா கணவன்னா அசிங்கமா சொல்ல முடியும். இது புனிதமான உறவாச்சே? இல்லையா?

vasu balaji said...

/இல்லையே தோழன் தோழியிடம் உடலுறவு கொள்ளனும்னு அவசியம் இல்லையே? அது ஒத்து வராது./

ஆஹா. கலாச்சாரத்த இத விடக் கேவலப்படுத்த முடியாதுங்க. அப்ப உடலுறவு ஒன்னுக்குதான் கலியாணம்.இந்த லாஜிக் படி பார்த்தா கலியாணம் பண்ண ஒரு 70வயசுக்காரங்க செக்ஸ் இல்லாட்டி கணவன் மனைவி இல்லையா?

இந்த ஒத்துவராதுக்கு அதாரிட்டி யாருங்க. இங்க டேட்டிங் வந்தாச்சிங்கோ. சுப்ரீம் கோர்ட்டே சொல்லிட்டான் வயசுக்கு வந்த 2 பேரு திருமணத்துக்கு முன்பான உடலறவு வெச்சிக்கலாம். அது அவங்க சுதந்திரம்னு நீர் ஏன் ஓய் அலறுறீரு ஒத்து வராதுன்னு.

vasu balaji said...

தமிழ் அகரமுதலிங்கரேன் திரும்ப கைய புடிச்சி இழுத்தியான்னே கேட்டா? ஆமாம் புனிதம்னா என்னாங்க? நாளைக்கே ஒரு சட்டத் திருத்தம் வந்து இந்துத் திருமணச் சட்டத்துல 7 D சேர்ந்து வாழ்தல்னு ஒரு விதிவிலக்கு வந்தாச்சின்னா இது புனிதமாயிடுமா. இப்ப குப்பைன்னு யாரு சொன்னாங்க?

வருண் said...

***வானம்பாடிகள் said...

/இல்லையே தோழன் தோழியிடம் உடலுறவு கொள்ளனும்னு அவசியம் இல்லையே? அது ஒத்து வராது./

ஆஹா. கலாச்சாரத்த இத விடக் கேவலப்படுத்த முடியாதுங்க. அப்ப உடலுறவு ஒன்னுக்குதான் கலியாணம்.இந்த லாஜிக் படி பார்த்தா கலியாணம் பண்ண ஒரு 70வயசுக்காரங்க செக்ஸ் இல்லாட்டி கணவன் மனைவி இல்லையா?

இந்த ஒத்துவராதுக்கு அதாரிட்டி யாருங்க. இங்க டேட்டிங் வந்தாச்சிங்கோ. சுப்ரீம் கோர்ட்டே சொல்லிட்டான் வயசுக்கு வந்த 2 பேரு திருமணத்துக்கு முன்பான உடலறவு வெச்சிக்கலாம். அது அவங்க சுதந்திரம்னு நீர் ஏன் ஓய் அலறுறீரு ஒத்து வராதுன்னு.
நவம்பர் 20, 2010 5:25 ***

இந்த உறவில் உள்ளவங்களுக்கு தமிழ் பெயர் கண்டுபிடிக்க வேண்டியது உங்க வேலை! என்னவோ நான்ந்தான் இதுக்குப் பொறுமாதிரி என் தலையில் கட்டுறீங்க?

உங்களுக்கு எந்த பொறுப்புமே இல்லை. ஆனா, உறவுக்கு ஒரு துணை மட்டும் வேண்டும்.- எந்த நேரம்னாலும் தூக்கி எறிய வசதியா!! ரொம்ப கஷ்டம்தான்!

வருண் said...

***வானம்பாடிகள் said...

தமிழ் அகரமுதலிங்கரேன் திரும்ப கைய புடிச்சி இழுத்தியான்னே கேட்டா? ஆமாம் புனிதம்னா என்னாங்க? நாளைக்கே ஒரு சட்டத் திருத்தம் வந்து இந்துத் திருமணச் சட்டத்துல 7 D சேர்ந்து வாழ்தல்னு ஒரு விதிவிலக்கு வந்தாச்சின்னா இது புனிதமாயிடுமா. இப்ப குப்பைன்னு யாரு சொன்னாங்க?***

இருங்க இருங்க!!!

ச்கா, சகி தமிழா இல்லை சமஸ்கிரதாம்னு மட்டும் சொல்லுங்க்! நான் உங்களை நம்புறேன் :)

vasu balaji said...

யப்பா சாமி ஆளை விடும். தமிழ் பல்கலைக்கழகத்து அகராதியே நம்பமாட்டேன்னு சொல்ற ஆளு என்ன நம்பினாத்தான் என்ன நம்பாட்டி என்ன?

வருண் said...

***வானம்பாடிகள் said...

தமிழ் அகரமுதலிங்கரேன் திரும்ப கைய புடிச்சி இழுத்தியான்னே கேட்டா? ஆமாம் புனிதம்னா என்னாங்க? நாளைக்கே ஒரு சட்டத் திருத்தம் வந்து இந்துத் திருமணச் சட்டத்துல 7 D சேர்ந்து வாழ்தல்னு ஒரு விதிவிலக்கு வந்தாச்சின்னா இது புனிதமாயிடுமா. இப்ப குப்பைன்னு யாரு சொன்னாங்க?**

எனக்கு இந்த சகா, சகி புடிக்கலை! ஏன் "வருண்' கூட பிடிக்கலை! அந்தப் பேரை நான் வைக்காதனால ஒண்ணும் பண்ண முடியாது!

நீங்க இந்த உறவில் உள்ளவங்களுக்கு ஒரு அழ்கான தமிழ் பேர் சொல்லுங்க என் காது குளிர. யாருக்கும் எந்த சந்தேகமும் வரக்கூடாது (இடையில் உடலுறவு உண்டா இல்லையானு)!

சொல்லுங்க பார்ப்போம்! :))

vasu balaji said...

புருஷன்னா ஒத்துக்கமாட்டிங்களா வருண்:)

வருண் said...

///Patricia Turner, Charles Russell Coulter - 2001 - Fiction - 608 pages
... Saci, Saki (Sanskrit), Shakrani (Sanskrit). Indrani, the goddess of sexual pleasure, is the daughter of ...///

வருண் said...

**வானம்பாடிகள் said...

புருஷன்னா ஒத்துக்கமாட்டிங்களா வருண்:)

November 20, 2010 5:38 AM***

இதெல்லாம் அநியாயம், நீங்க கல்யாணம் பண்ண மாட்டீங்க ஆனா, புருசன், பொண்டாட்டினு சொல்லிக்குவீங்க??

உங்களுக்கே இதெல்லாம் நல்லாயிருக்கா?

உங்களை சட்டப்படி தப்புனு சொல்லுவாக!

ஒரு உறவை கண்டுபிடிச்ச நீங்க, அதுக்கு ஒரு பேரை கண்டுபிடிக்க இப்படி திண்றுறீங்களே!! :(((

பாவமா இருக்கு உங்களை பார்த்தால்! :(((

வருண் said...

சரி, பார்க்கலாம், பாலா ஐயா! நான் புறப்படுகிறேன்! டாட்டா :)))

வருண் said...

***வானம்பாடிகள் said...

எண்ட்னு யாருங்க தீர்மாணிக்கணும். நீங்களா அவங்களா? எண்ட்னா எதோட எண்டு.***

ஐயோ ஐயோ, அது எழுத்துப் பிழை! என்ன வித்தியாசம்னு வரனும். :(

வருண் said...

கும்மி said...

லிவிங் டுகெதர் பற்றி ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

லிவிங் டுகெதர் வாழ்முறையை ஆதரிப்பவர்கள், உலகில் இருக்கும் அனைவரும் அதே முறையில் வாழ வேண்டும் என்று கூறவில்லை. அவ்வாறு வாழ முடிவெடுத்தவர்கள், தெளிவாக ஆராய்ந்தே முடிவேடுத்திருப்பர்.***

அப்படியா? தெளிவா ஆராய என்ன இருக்கு இங்கே? கழட்டிவிட வசதியா இருப்பதுதானே இந்த உறவின் "பெருமை" "தனித்துவம்" எல்லாம்.

என்னவோ தெளிவா இருக்கதா கதை விடுறீங்க. தெளிவு இல்லாததாலதான் இந்த உறவேனு தெளிவாக தெரிந்து கொள்ளவும்!

***அவர்களுடைய தனிப்பட்ட வாழ்முறையில் பிறர் தலையிடவேண்டாம் என்பதாகவே பேசப்படுவதாக நான் உணர்கின்றேன்.***

இப்போ யாரும், வ்ருணோட தனிப்பட்ட வாக்கையிலோ, உங்க (கும்மியா)வாழ்க்கையையோ பேசவில்லை, லிவிங் டுகெதெர் னு ஒரு மேலைநாட்டுக் கலாச்சாரத்தைப் பத்தி விமர்சிக்கிறாங்க. இது யாரோட தனிப்பட்ட வாழ்வும் இல்லை. ஒரு ஆங்கில வார்த்தை. அப்புட்டுத்தான்!

சும்மா தனிப்பட்ட வாச்க்கையை விமர்ச்சாங்கனு பொய் குற்றச்சாட்டு வேணாம்

வருண் said...

***அதுசரி என்னங்க இது கொடுமை அவன் விட்டுப் போனால் குழந்தையை வளர்க்கும் கடமை தாயைச் சேருகிறது?

அப்படியானால் குழந்தை பெறுவதில் ஆணின் பங்கு வெறும் உடலுறவு மட்டும் என்றா சொல்கிறீர்கள்?***

யு எஸ் ல லிவிங் டுகெதெர் ல வாழ்ற பொண்ணு கர்ப்பமானால், டி என் எ டெஸ்ட் மூலம் அப்பாவை கண்டு பிடிச்சா. அவர் அந்தக் குழந்தைக்கு தேவையானதை செய்யனும். செய்யலைனா உள்ளே போகனும்.

நம்ம ஊர்ல சட்டம் எப்படினு வால் சொல்லுவாரு! கேட்டுக்கோங்க! :)

K.MURALI said...

for follow up.
லிவிங் டுகதர் = வாங்க பழகலாம்.(தமிழில்.)
:)

மோனி said...


ரொம்பவும் ஜாலியா இருக்கு
நல்லா குஷியா நேரம் போகுது

அடுத்து பார்ட் 2 - கில்லிங் டு கெதர்

மோனி said...

Cohabitation in India had been taboo since British rule. However, this is no longer true in big cities (such as Mumbai, Chennai, Delhi and Bangalore), but is not so often found in rural areas with more conservative values. Live-in relationship in India is not illegal in India, however it is considered to be a deviant behavior and looked down upon.

செல்வா said...

///எனக்கு முழு ஆதரவு உண்டு என்று சொல்லியிருக்கிறேனே தவிர, திருமண முறைகள் ஒழிக்கப்பட்டு அனைவரும் லிவிங் டு கெதராக வாழ வேண்டும் என்று சொல்லவில்லை!

அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்!///

அருமைங்க ..!!

suneel krishnan said...

பின்னூட்ட விவாதங்கள் அருமை ,இது குறித்து சிந்தனை செய்ய வைக்கிறது

Katz said...

adihcu aadunga...

suneel krishnan said...

அருண்
எல்லாம் சரி .
குழந்தை பிறந்து விடுகிறது .அதற்க்கு பின் அவர்கள் பிரிய நேரிடிகிறது என்று வைத்து கொள்ளுவோம் ,அக்குழந்தை அம்மாவிடமோ அப்பாவிடமோ வளர்கிறது ,எப்படி பார்த்தாலும் யாரேனும் ஒருவரின் அரவணைப்பை ,அல்லது உறவை அது இழக்கிறது ,இது சரியா ? இதற்க்கு யார் பொறுப்பேற்பது ?வாரம் ஒரு முறை ஓவுட்டிங் ,என்றும் ஒரு மாதம் இங்கு ஒரு மாதம் அங்கு என்று நாம் திட்டங்கள் போடலாம் ,ஆயினும் கூட அக்குழந்தையின் உள சிக்கல்கள் இங்கு இரண்டாம் பட்சம் ஆகி விடுகிறது .திருமணத்திற்கு பின் விவாகரத்திலும் இதுவே நேரும் .
ஆக குழந்தை என்று முடிவு செய்யும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசிக்க வேண்டும் ,ஓரளவுக்கு இந்த உறவு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்று நம்பிக்கை வந்தால் தான் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன் ,
குடும்பம் எனும் அமைப்பு (அதில் சில பல மோசமான அடக்குமுறை இருந்தாலும் கூட )வயோதிகர்களை பற்றிய அக்குழந்தையின் பார்வை வருங்காலத்தில் எப்படி இருக்கும் ?

Thekkikattan|தெகா said...

//திருமணத்திற்கு பின் விவாகரத்திலும் இதுவே நேரும் .
ஆக குழந்தை என்று முடிவு செய்யும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசிக்க வேண்டும் ,ஓரளவுக்கு இந்த உறவு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்று நம்பிக்கை வந்தால் தான் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன் ,
குடும்பம் எனும் அமைப்பு (அதில் சில பல மோசமான அடக்குமுறை இருந்தாலும் கூட )//

டாக்டர், நல்ல சிந்திக்க வைக்கும் கேள்வி. ஒரு சமூதாயத்தில் இது போன்ற ஏற்ற இறக்கங்கள் தவிர்க்க முடியாதது. நீங்கள் கூறியபடியே இது முறைப்படி திருமணம் செய்து கொண்டு வாழ்பவர்களுக்கானாலும் சரி, அல்லது இணைந்து வாழ்பவர்களிடையே ஏதோ உறவுச் சிக்கல் ஏற்பட்டு பிரிய நேர்ந்தால் இது போன்ற குழந்தைகள் தொட்டு பல கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

இந்த நிலையில்தான் அந்த சமூக கூடலில் ஈடுபடுவர்களின் பக்குவ முதிர்ச்சியைக் கொண்டு குழந்தை வளர்ப்பில் இன்னும் கூடுதல் கவனம் தேவைப்படலாம். அது போன்ற கேசுகள் பரவலாக அனுபவப் படும் பொழுது ஓரளவிற்கு இந்த பிரிதலுக்குபின்னான பின் விளைவுகள் நம் யாவருக்கும் தள முறையில் எப்படியாக கையாள்வது என்பதும் பட்டறிவின் மூலமாக கை வரப் பெறுகிறோம்.

ஒன்றை யோசிக்க வேண்டும், நம் சமூகத்தில் முறைப்படி திருமணம் செய்து ஏதோ பிரச்சினையால் ‘விரட்டி அடிக்கப்படும்’ தம்பதிகளில் ஒருவர் குழந்தைகளை தனக்கே தனக்கானதாக ஆக்கிக்கொண்டு மற்றொரு பெற்றோருக்கு எந்த ஒரு உறவுசார் அனுபவங்களை குழந்தைக்கும் கிடைக்காமல் அந்த பெற்றவருக்கும் கிடைக்காமல் செய்வது கண்கூடு... இல்லையா?

அப்படியில்லாமல் குழந்தைகளின் ஷுக்களில் இருந்து இருவரும் சமமாக பொறுப்பெடுத்து அதுகளுக்கு தேவையானதை தொடர்ந்து அளித்து வருவது மிகமிக அவசியம்.

Unknown said...

'லிவிங் டுகெதர்' வாழ்க்கை முறையின் வெற்றி அல்லது பாதுகாப்பு என்பது, அதில் சம்பந்தப்பட்டவர்களின் நேர்மை, தனிமனிதஒழுக்கம் சார்ந்தது. ஏன் எந்த திருமண முறையிலுமே அப்படித்தான். அதில் மொழி, கலாச்சார, மத பண்புகளோ, விதி முறைகளோ தாக்கம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

suneel krishnan said...

தேகா சார்
இறுதியாக ,திருமணமோ இனைந்து வாழ்வதோ -இரு தனி மனிதர்களின் குணாதிசயங்கள் ,மனப்பக்குவம் இவை தான் முடிவு செய்கின்றன .
மறுபடியும் தனி மனித ஒழுக்கம் மற்றும் தனி மனித பொறுப்புணர்ச்சி ஆகியவை மிக முக்கியம், அது எத்தகைய உறவுமுறையில் இருந்தாலும் .

சி.பி.செந்தில்குமார் said...

சார்,பதிவு சூப்பர்,பதிவின் கருத்தை விட பின்னூட்டங்களுக்கு பதில் அளித்தீர்களே அதை வைத்து சொல்றேன் நீங்க வக்கீலா போக வேண்டிய ஆளு,மிகச்சிறந்த வாதத்திறன் உங்களுக்கு இருக்கு.

RAVI said...

இந்த கலாச்சாரமெல்லாம் வந்து ரொம்ப நாளாச்சுவோய். இப்பதான் ஆரோக்கியமா விவாதம் பண்ணுறோம். எது எப்படியோ நாட்டாம வாலோட தீர்ப்பு ரொம்ப சரி.
நான் முழு மனதோடு ஆதரிக்கிறேன்.

Denzil said...

ஒரு அருஞ்சொற்பொருள்:
லிவிங் டுகெதர் - சேர்ந்து வாழுதல்
கல்யாணம் - சேர்ந்து வாழ வைக்கப்படுதல்
(இதுக்காக என்னை ஜீப்பில் ஏத்திராதீங்க, நான் நடுநிலைமைவாதிங்க)

♔ℜockzs ℜajesℌ♔™ said...

நான் இதுவரை என்னோடைய எந்த பதிவையும் வந்து படியுங்கள் என்று யாரையும் அழைத்தது இல்லை . ஆனால் என்னுடைய , சாதி = எய்ட்ஸ் (part- 1),சாதி = எய்ட்ஸ் (part- 2) பதிவை படிக்க தாழ்மையுடன் அழைக்கிறேன் . நேரம் இருந்தால் வாருங்கள் நண்பரே .

http://rockzsrajesh.blogspot.com/2010/11/1.html

பணிவுடன் ,
ராக்ஸ் . . . .

வால்பையன் said...

//Cohabitation in India had been taboo since British rule. However, this is no longer true in big cities (such as Mumbai, Chennai, Delhi and Bangalore), but is not so often found in rural areas with more conservative values. Live-in relationship in India is not illegal in India, however it is considered to be a deviant behavior and looked down upon. //


அடுத்த தடவை பார்க்கும் போது இதுக்கு செமத்தியா வாங்குவ பங்கு!
நான் இங்கிலிபீஷ் பேசினா நீ தாங்க மாட்ட!

NONO said...

//பேசுறது "லிவிங் டுகெதெர்" பத்தி, ஆனா தமிழ்லதான் பேசனும்னு வெதண்டாவதாம்.

பலருக்கு தலைப்பைக்கூட தமிழில் சொல்ல வக்கில்லை! ஆனா தமிழ் தமிழ்னு அடிச்சுக்கிறீங்க?//

வருண் துய தமிழில் இப்படி வேண்டுமானல் அழைத்துக் கொள்ளளாம் துய தமிழ்ச்சொல் வாழ்கை துனை(வி/வன்)
Cohabitation(live together) - ஒனறாய் சேர்ந்து வாழுதல்.

கல்யாணம் செய்தவருக்கும் ஒனறாய் சேர்ந்து வாழ்பவர்களுக்கும் மற்றபடி பெரிய வித்தியாசம் இல்லை கட்டுப்பாடு மற்றும் பொறுப்பு ஒன்றுதான்.

வருண் said...

*** கல்யாணம் செய்தவருக்கும் ஒனறாய் சேர்ந்து வாழ்பவர்களுக்கும் மற்றபடி பெரிய வித்தியாசம் இல்லை கட்டுப்பாடு மற்றும் பொறுப்பு ஒன்றுதான்.
நவம்பர் 22, 2010 12:58 ***

அப்படிங்களா?

இப்போ ரம்லத்தும் பிரபு தேவாவும் "லிவிங் டுகெதரா" இருந்து இருந்தால், ரம்லத்தை கழட்டிவிடுறது ஈஸினு நான் சொல்றேன்.

ஐயா என்ன சொல்றீக?

ரம்லத்க்கு இப்போ உள்ள சப்போர்ட் இருக்காது. ரம்லத்தை பிரபு தேவா என்னவேணா சொல்லலாம்.

--------------

அதேபோல் சரிகாவையும், வாணியையும் லிவிங் டுகெதெரா இருந்து கழட்டிவிட்டு இருந்தால், கழட்டிவிடும்போது கமலஹாசனுக்கு இப்போ ஆகிற நஷ்டத்திலே 20%தான் ஆயிருக்கும்.

சும்மா ஏதாவது பொய் பொய்யா ரெண்டும் ஒண்ணுனு சொல்லிக்கிட்டு திரியாதீங்க!

புரியுதா வித்தியாசம்?

மோனி said...

[ma]நமக்குள்ள என்ன பங்கு .. இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகக் கூடாது . [/ma]

மோனி said...

[ma]நமக்குள்ள என்ன பங்கு .. இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகக் கூடாது . [/ma]

K.MURALI said...

NONO said...
//
வருண் துய தமிழில் இப்படி வேண்டுமானல் அழைத்துக் கொள்ளளாம் துய தமிழ்ச்சொல் வாழ்கை துனை(வி/வன்)
Cohabitation(live together) - ஒனறாய் சேர்ந்து வாழுதல்.
//
தற்காலிக வாழ்கை துனை(வி/வன்) என்பதே சரி.

Anonymous said...

//திருமணம் என்றாலே நீண்ட கால மகிழ்ச்சி தரும் என்ற விசயத்தை விட, பயங்கரமாக செலவு வைத்து நீண்ட காலம் கடனுக்காக உழைக்க வைக்கும் ஒரு நிகழ்ச்சி என்றே பார்க்கப்படுகிறது//

திருமணத்திற்கு இப்படியும் விளக்கம் சொல்லலாமோ..!!!

எண்ணங்கள் 13189034291840215795 said...

நாம் ஒருவரை நம்பி ஒருவர் இல்லை, நீ இல்லாமலும் என்னால் வாழ முடியும், அதனால் உனது ஆதிக்கத்தை என் மேல் செலுத்த நினைக்காதே!//

இதேதான் என் கருத்தும்.,..

மேலும் எல்லா தம்பதியினரும் இணைந்து வாழ்தலாக ஒப்புக்கொள்ளப்படமாட்டாது..

அதற்கென சில ஒப்பந்தம்/கட்டுப்பாடுகள் உண்டு..


The Supreme Court in the case of D. Velusamy v.D. Patchaiammal [6] held that, a ‘relationship in the nature of marriage’ under the 2005 Act must also fulfill the following criterias (a) The couple must hold themselves out to society as being akin to spouses. (b) They must be of legal age to marry. (c) They must be otherwise qualified to enter into a legal marriage, including being unmarried. (d) They must have voluntarily cohabited and held themselves out to the world as being akin to spouses for a significant period of time, and in addition the parties must have lived together in a ‘shared household’ as defined in Section 2(s) of the Act. Merely spending weekends together or a one night stand would not make it a ‘domestic relationship’. It also held that if a man has a ‘keep’ whom he maintains financially and uses mainly for sexual purpose and/or as a servant it would not, in our opinion, be a relationship in the nature of marriage’.

NONO said...

//இப்போ ரம்லத்தும் பிரபு தேவாவும் "லிவிங் டுகெதரா" இருந்து இருந்தால், ரம்லத்தை கழட்டிவிடுறது ஈஸினு நான் சொல்றேன்.

ஐயா என்ன சொல்றீக?

ரம்லத்க்கு இப்போ உள்ள சப்போர்ட் இருக்காது. ரம்லத்தை பிரபு தேவா என்னவேணா சொல்லலாம்.

--------------

அதேபோல் சரிகாவையும், வாணியையும் லிவிங் டுகெதெரா இருந்து கழட்டிவிட்டு இருந்தால், கழட்டிவிடும்போது கமலஹாசனுக்கு இப்போ ஆகிற நஷ்டத்திலே 20%தான் ஆயிருக்கும்.

சும்மா ஏதாவது பொய் பொய்யா ரெண்டும் ஒண்ணுனு சொல்லிக்கிட்டு திரியாதீங்க!

புரியுதா வித்தியாசம்?//

நீங்கள் கூறுவது தனிமனித ஒழுங்கம் பற்றியது! இந்த வாதத்துக்கு என்னை பொறுத்தவரை சற்றும் பொருந்தாதது. நீங்கள் "தறுதலையாகதான் திரிவேன்" என்றால் கட்டினால்தான் என்ன, ஒன்றாய் சேர்ந்து வாழ்ந்ததான் என்ன? எல்லாத்தையும் வெட்டி விடுவது நன்று! இதுக்கு மாற்றாக One-night stand அல்லது sex partner போதுமே.
எனக்கு என்னவோ நீங்க "live together" மற்றும் "sex partner" போட்டு குழப்புவதாக படுகின்றது. எனது தனிப்பட்ட அனுபவத்தில் கூறுகிறேன் ஒன்றாய் சேர்ந்து வாழ்வது, திருமணவாழ்கைக்கு ஒப்பானது, ஆனால் இங்கு வேற்றுமை என்ன வென்றால் சட்டப்படியோ, மதப்படியோ, கலாச்சார விழுமியங்களின்படடியோ ஒப்புதல் பெறப்படவில்லை.

//தற்காலிக வாழ்கை துனை(வி/வன்) என்பதே சரி.//

முரளி; வாழ்கையில் ஏதுவும் நிரந்தரம் அல்ல!

கையேடு said...

"துணைவன் - துணைவி" சரியா வருதுங்க..

மாணவன் said...

என்னமோ சொல்ல வர்றீங்க நமக்கும் ஒன்னும் அவ்வளவா புரியலை...
ஆனால் சொல்ல வந்தத தெளிவா சொல்லியிருக்கீங்கன்னு மட்டும் புரியுது

ஹிஹிஹி.....

பகிர்வுக்கு நன்றி சார்

!

Blog Widget by LinkWithin