எங்கே போச்சு போக்குவரத்துத்துறை!

ஒரு வேலையா மதுரைக்கு போனேன், எல்லாத்தையும் முடிச்சிட்டு ஸ்ரீதரை பார்த்துட்டு 10 மணிக்கா பஸ் ஏறலாம்னு ஆரப்பாளையம் பஸ் ஸ்டேண்டு போனா செமக்கூட்டம், சரி நானும் ஈரோடு பஸ் வரும்னு நின்னுகிட்டே இருந்தேன், உள்ளே வரும் போதே ஒரு பஸ் பயங்கர கூட்டமா வந்தது, சரி அடுத்த பஸ்ஸில் போகலாம்னு பார்த்தா அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பஸ்ஸைக்காணோம், திரும்பவும் ஒரு பஸ் வந்தது, இப்போ அதைவிடக்கூட்டமா.

ஒருவேளை வெளியிலேயே ஏறிடுறாங்களோ, நாமளும் அங்கே போய் நிக்கலாம்னு பார்த்தா, கூட்டம் மெயின்ரோடு வரைக்கும் நிக்குது, டீரிஸ்ட் வேன்ளையும், பஸ்ஸுலயும், கோயம்புத்தூர், சேலம்னு கத்தி கத்தி ஆள் ஏத்திகிட்டு இருந்தாங்க, தலைக்கு 300 ரூபா டிக்கெட்டு. சென்னையில் ஆம்னி பஸ்ஸில் 1500 டிக்கெட்னு சொன்னப்ப நான் நம்பல, நேத்து தான் தெரிஞ்சது தமிழ்நாடு முழுவதும் இதே நிலை தானென்று!



நான் இன்று கோவையில் கண்டிப்பாக இருக்கனும், மிகமுக்கியமான வேலைகள் இருக்குது. ஆனாலும் அப்படியே நேரா கோவை போக முடியாத நிலை, சில முக்கியமான டாக்குமெண்டுகள் ஈரோட்டில் தான் இருக்கு, சரின்னு சேலம் போகும் ஒரு வேனில் ஏறி நாமக்கல்லில் இறங்கிக்குறேன்னு பார்கெயின் பண்ணு 250 ரூவாக்கு பேசியாச்சு!

மொத்தம் இருந்தது 21 சீட்டு தான், கடைசியா இருக்கும் சீட்டில் இரண்டு பூசணிக்காய்களுக்கு நடுவில் நசுங்கும் தக்காளி போல் ஒரு சீட்டு கிடைத்தது. அதையும் அனுசரித்து அமர்ந்தாச்சு, நல்ல டயர்டாக இருந்ததால் வண்டி கிளம்பிய கொஞ்ச நேரத்தில் கண்ணசர ஆரம்பித்தேன். ஒரு பத்து நிமிசம் தூங்கியிருப்பேன், உடல் வேர்த்து முழிப்பு வந்தது, பார்த்தா வண்டி ஓரமா நிக்குது, ட்ரைவர் அருகில் இருந்த ஒரு கோவிலில் வெகு தீவிரமாக மணி ஆட்டிகொண்டு இருந்தார், சரி முடிச்சிட்டு வரட்டும்னு இருந்தேன்!

ஒருவழியாக வந்து வண்டி நகர ஆரம்பித்தது, இந்த தடவை அரைமணி நேரம் தூங்கியிருப்பேன், திரும்பவும் வேர்த்து வழிந்து எழுந்தேன். சுத்தியுலும் பார்த்து ஒரு கோவிலும் இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தியாச்சு, எங்கேயா போனாரு ட்ரைவருன்னு கேட்டா, ”இந்தா தூங்குறாரு பாருங்கன்னு” பானட் மேல தூங்கிட்டு இருந்த ஒருத்தரை காட்டுறாங்க, சீக்கிரம் போகனுமேன்னு காசு அதிகமா கொடுத்து வேன்ல ஏறினா அவரு தூங்கிகிட்டு இருக்காரு.

டென்ஷன் ஆகி பிரயோசனமில்லை, அவரை எழுப்பி சண்டை போடுறதால எழுந்து வண்டி ஓட்டுவார், ஆனா உசுருக்கு உத்திரவாதம் இல்லையே!, காத்தாட கீழே இறங்கி ஒரு சிகரெட்டை எடுத்து பத்த வைச்சிகிட்டேன், கொஞ்ச நேரத்தில் மொத்த வேனுக்குள்ளும் சலசலப்பு ஆரம்பித்தது, எல்லாரும் சேர்ந்து ட்ரைவரை எழுப்பிட்டாங்க, அவரும் வண்டி எடுக்க ரெடியாகிட்டாரு, முகம் கழுவச்சொன்னா, கழுவக்கூடாதுங்கக்கிறார், என்ன லாஜிக்கோ!.

எனக்கு ஒருபக்கம் தூக்கம் வந்தாலும், வண்டி ஒருதினுசா ஓடுறது மாதிரியே ஒரு ஃபீலிங், மாத்தி மாத்தி ட்ரைவர்கிட்ட பேச்சு கொடுத்துகிட்டே கரூர் வந்து சேர்ந்தோம், சரியா மணி 5 அப்போ.
இதுக்கு மேல ஆவாதுன்னு பைப்பாஸ்ல இருந்து ஒரு ஆட்டோ எடுத்து கரூர் பஸ் ஸ்டேண்டு போய் ஈரோடு பஸ் பிடிச்சு வந்தேன்!.

பயணிகள் வாகனம் தனியார் இயக்க தனி பர்மிசன் வேணும், சென்னையிலாவது ஓடும் ஆம்னி பஸ் அதிக கட்டணம் கேட்டது, அழகிரியார் நகரில் மீன்பாடி வண்டி கூட பயணிகள் வண்டியா ஓடுதே, போக்குவரத்துத்துறைன்னு ஒன்னு அங்கே இல்லையா!?, தீபாவளி சமயம் எல்லா ஊர்லயும் ஸ்பெஷல் சர்வீஸ் விடுவாங்க, மதுரை மட்டும் என்ன பாவம் பண்ணுச்சு. தம்மக்கள் சம்பாரிக்கட்டும்னு தலைவன் நினைக்கும் அதே பாணியை அழகிரியாரும் பின்பற்றுகிறாரோ!?

என்னவோ போங்க், வந்து சேர்றதுக்குள்ள எனக்கு தாவூ தீர்ந்துருச்சு!

39 வாங்கிகட்டி கொண்டது:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

paavam neengka. intha kodumai ellaa oorlayum irukku

எல் கே said...

வால், சென்னையிலும் இந்த கொடுமைகள் உண்டு. வார இறுதியில், பெங்களூரு செல்ல, கோவை செல்ல என்று சில தனியார்கள் நடத்துகின்றனர். எல்லாவற்றிலும் இது போல் கொடுமைதான். நமது அவசரத்தை அவர்கள உபயோகப் படுத்திக் கொள்கின்றனர்

ஈரோடு கதிர் said...

||ட்ரைவர் அருகில் இருந்த ஒரு கோவிலில் வெகு தீவிரமாக மணி ஆட்டிகொண்டு இருந்தார்||

வர வர வால்பையன பார்த்து ஒருத்தருக்கும் பயம் இல்லாம போச்சு!

Chitra said...

அய்யோ.....அய்யோ....!

Unknown said...

தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னே மதுரைக்குப் போகாதே! ஒரு வாரம் பின்னே மதுரையிலிருந்து போகாதே! இது புது மொழி!

பண்டிகை சமயம், வாழும் ஊரிலேயே கொண்டாடாமல், ஏன் தான், சம்பாதிக்கும் காசை இப்படி, கண்டவனுக்கும் கொடுத்து விட்டு திண்டாடுகிறார்களோ?

Kumky said...

ஏன் தல.,

அந்த நேரத்துக்கு ஏர்போட் போய் அங்கிருந்து சென்னைக்கு ப்ளைட் புடிச்சு அப்புறம் ஆம்னி பஸ்ல சொகுசா ஈரோடு போயிருக்கலாம்ல....

Kumky said...

தூங்கறத்துக்கு என்னத்துக்கு மணியாட்டிக்கிட்டிருந்தான் அந்தப்பெய....அப்படியே வேன்லருந்து கீழ தள்ளிவிட்டுட்டு வண்டிய எடுத்துவந்திருக்கனும் நீங்க....

ஹரிஸ் Harish said...

தல, பஸ்ல மேல இருக்குரவங்களுக்கு டிக்கெட் உண்டா?

Unknown said...

//ட்ரைவர் அருகில் இருந்த ஒரு கோவிலில் வெகு தீவிரமாக மணி ஆட்டிகொண்டு இருந்தார்//

:)))

Unknown said...

//எல்லாரும் சேர்ந்து ட்ரைவரை எழுப்பிட்டாங்க, அவரும் வண்டி எடுக்க ரெடியாகிட்டாரு, முகம் கழுவச்சொன்னா, கழுவக்கூடாதுங்கக்கிறார், என்ன லாஜிக்கோ!//

ஒரு வேலை கழுவினா ரூட் கன்பியூஸ் ஆகிடுமோ? :)

butterfly Surya said...

வர வர வால்பையன பார்த்து ஒருத்தருக்கும் பயம் இல்லாம போச்சு!////// அதானே...

அலைகள் பாலா said...

//அந்த நேரத்துக்கு ஏர்போட் போய் அங்கிருந்து சென்னைக்கு ப்ளைட் புடிச்சு அப்புறம் ஆம்னி பஸ்ல சொகுசா ஈரோடு போயிருக்கலாம்ல....//

பேசாம டெல்லி போய் அங்க இருந்து கோயம்பத்துர்க்கு பிளைட் பிடிச்சு, ஒரு இன்னோவா புக் பண்ணி திருப்பூர் வரலாமே,

nellai அண்ணாச்சி said...

ரொம்ப சோகந்தான் உங்க நிலமை

butterfly Surya said...

jokes apart,சென்னையிலும் இதே கொடுமைதான் வால். போக்குவரத்து துறை மட்டுமல்ல. அனைத்து துறையும் இந்த ஆட்சியில் அவலமாகதான் இருக்கிறது.

எப்போதும் பிளக்ஸ் பேனரில் கலைஞர் & Co., அழகாக சிரித்து கொண்டிருக்க மக்கள் வேதனையில் நொந்து கொண்டிருக்கிறார்கள்.

என்னத்த சொல்ல... :( :(

அருள் said...

தீபாவளி நேரத்தில் எல்லா ஊரிலும் இதுதான் பிரச்சனை. மற்ற நேரத்திலும் நெரிசல்தான்.

தனியார் பேருந்துகளுக்கு கூடுதல் வழித்தட உரிமையைக் கொடுப்பதில் அப்படி என்ன சிக்கல் என்று தெரியவில்லை. இதனை எவரும் ஒரு பெரிய விஷயமாக பேசாதது ஏன்? என்றும் புரியவில்லை.

எல்லா ஊர்களிலும் தனியார் பயணிகள் பேருந்து வழித்தட உரிமையை பெற்றிருப்பது அரசியல்வாதிகள் என்பது காரணமாக இருக்கலாம்.

தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகள் எண்ணிக்கையை அதிகமாக்குவது, முடியாவிட்டால் தனியார் பேருந்துகளுக்கு கூடுதல் வழித்தட உரிமையை அளிப்பது, பெருநகரங்களில் அரசு பேருந்துகளை மட்டுமே அதிக அளவில் இயக்குவது - இவையே தீர்வாக அமையும்.

இடையே, மகிழுந்து (கார்) நிறுவனங்கள் ஒரு தடையாக இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால், இதையெல்லாம் யார் எடுத்துப்பேசுவது?

நையாண்டி நைனா said...

என்ன தல இப்படி பொலம்புரீங்க.... உதயகீதம் கவுண்டமணி சொன்ன மாதிரி... இவ்ளோ நாளும் "உள்ளே' இருந்தீங்களா

நையாண்டி நைனா said...

/*ஹரிஸ் said...
தல, பஸ்ல மேல இருக்குரவங்களுக்கு டிக்கெட் உண்டா?*/

பஸ் அப்பீட்டு ஆகிட்டா எல்லாருக்குமே ஸ்ட்ரைட் டிக்கட் தானே

Prabu M said...

அராஜ‌க‌ம்...
ஆனா ஒண்ணும் சொல்லுற‌துக்குக் கூட‌ இல்ல‌யே...

Anonymous said...

அந்த டிரைவரு உங்க பதிவுகள படிச்சிருக்காரு போல.. அதுனால தான் பழிவாங்கிட்டாரு.

சித்திரகுள்ளன் said...

அய்யா, அடுத்த தேர்தல்ல நாம எப்படியும் ஜெயிக்க போறது இல்லைன்னு ஆளும் கட்சிக்கு இப்பவே தெரிஞ்சுபோச்சு. அதனாலதான் மக்களுக்கு எதிரா நடக்கிற இதுமாதிரியான அராஜகங்களை கண்டுகொள்வதில்லை. தனியார் பேருந்துகள்தான் கட்டணம் அதிகமா வசூலிக்குதுன்னு பாத்தா, இந்த கவர்மெண்டு பஸ்சும் அவங்களோட போட்டி போட்டு பணம் பறிக்கிறாங்க.

தமிழ் பொண்ணு said...

தல நலமா... சாரி தல பதிவு பாக்க நேரம் இல்லாம போயிருச்சு...

தமிழ் பொண்ணு said...

// மதுரை மட்டும் என்ன பாவம் பண்ணுச்சு.//

அதனால தான் தல சொல்றேன் வர போற மதுரை தொகுதி தேர்தல் நில்லுங்க... கள்ள ஒட்டு போடு ஜெய்க வச்சுறலாம்.

Menaga Sathia said...

//ட்ரைவர் அருகில் இருந்த ஒரு கோவிலில் வெகு தீவிரமாக மணி ஆட்டிகொண்டு இருந்தார்// பாவம் டிரைவருக்கு உங்களை பத்தி தெரியல..அதான் மணியாட்டியிருக்கார்...

சிவராம்குமார் said...

இதுக்கு பேருதான் பயணக் கட்டுரையா :-)

உமர் | Umar said...

//இதுக்கு பேருதான் பயணக் கட்டுரையா //

இது பயணக் கட்டுரை மாதிரி இல்லை. (உயிர்) பணயக் கட்டுரை மாதிரி இருக்கு.

மோனி said...

..//அந்த நேரத்துக்கு ஏர்போட் போய் அங்கிருந்து சென்னைக்கு ப்ளைட் புடிச்சு அப்புறம் ஆம்னி பஸ்ல சொகுசா ஈரோடு போயிருக்கலாம்ல//..

இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு. :-)

மோனி said...

//வர வர வால்பையன பார்த்து ஒருத்தருக்கும் பயம் இல்லாம போச்சு!////// அதானே... //

என்ன நண்பா ?
உன்னை பாத்து ஆளாளுக்கு பயமில்லைன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க..
வேற வழியே இல்ல - உடனே ஒரு டெர்ரர் பதிவ போடு...

மோனி said...

||ட்ரைவர் அருகில் இருந்த ஒரு கோவிலில் வெகு தீவிரமாக மணி ஆட்டிகொண்டு இருந்தார்||

நல்லா கவனிச்சி பாத்தியா?
அவரு அவசரமா மூச்சா-கீது போயிட்டிருந்திருப்பாரு..

மோனி said...

//எல்லாரும் சேர்ந்து ட்ரைவரை எழுப்பிட்டாங்க, அவரும் வண்டி எடுக்க ரெடியாகிட்டாரு, முகம் கழுவச்சொன்னா, கழுவக்கூடாதுங்கக்கிறார், என்ன லாஜிக்கோ!//

மறுபடியும் என் வாய ... வேணாம் விடு.

மோனி said...

..//நான் இன்று கோவையில் கண்டிப்பாக இருக்கனும்//..

ஓஹோ -
அந்த என்கவுண்டர் நடந்ததுக்கு
நீதான் காரணமா?

மோனி said...

கோவை வந்திருந்தப்ப எனக்கு ஒரு போன் செஞ்சிருக்கலாமே நண்பா - உன்னை சந்திக்கனும்னு ரொம்ப நாளா நெனைச்சிட்டு இருந்தேன்..

சரி - சரி
பிரபல பதிவர்களை சந்திக்கிற அளவுக்கு
நாம என்ன பிரபலமா??

:-(

மோனி said...

அடுத்த முறையாவது கோவை வரும்போது எனக்கு ஒரு போன் செய் நண்பா - 9003704774.

உன்னை நேர்ல சந்திக்கனும்.
(ஆமா நேர்லயும் இதே மாதிரிதானே இருப்பே???)

மோனி said...

கொடைக்கானல்-ல ரோடெல்லாம் விரிசல் விட்டுடுச்சாம்..
பங்காளிய கெளம்பி ஊருக்கே வந்துட சொல்லு நண்பா - அப்புறம், மறுபடியும் பொதுப்பணித்துறையப் பத்தி ஒரு பதிவு போட்டுடாதே...

damildumil said...

நான் தாங்க அந்த ட்ரைவர், நான் வண்டி ஓட்டுன அழகுல வாலுக்கு தானா கடவுள் நம்பிக்கை வந்திருக்கும் ;)

தமிழ் பொண்ணு said...

உங்க பயனமாச்சும் பரவ இல்ல.ஒரு ரெண்டு மாசம் முன்னாடி மதுரைல இருந்து சென்னைக்கு நான் அவசரமாக போக வேண்டிய சூழ்நிலை.டிக்கெட் முன்பதிவு பண்ணல வேற.ஒருத்தன் கே பி என் ட்ரவல்ஸ்ன்னு சொல்லி எங்கள பஸ்ஸ்டாண்ட் வெளிய பஸ் இருக்குனு சொல்லி நான் தேடி பாக்க அங்க கே பி என் ட்ரவல்ஸ் இல்ல.

எங்கடா அவன்கிட கேட்டா ஒரு பஸ் காமிச்சு அதுல முன்னாடி கே பி ன்னு மட்டும் எழுதி இருந்தத காமிச்சான்..அட பாவிங்களா வேற வழி இல்லாம ஏறிபோய் உக்காந்தா என்கிட்ட முப்பது ரூவா வாங்கிட்டு டிரைவர் கிடையும் காசு வாங்கிட்டு போனான்.மதுரைல வண்டி எடுக்க ஆரமிச்சவன் தான்.நேர சென்னை கிண்டில போய் தான் நிறுத்தினான்.எனக்கு செம்ம கடுப்பு.அதுல ரேடியோவ பயங்கர சவுண்ட் ல வச்சுக்கிட்டு நானும் அத நிருதுவானு பாத்து பாத்து சென்னை வந்து சேர்ந்தது தான் மிச்சம்.

அரசாங்க பஸ்ல போன செக்யூரிட்டி இருக்கும் கண்ட இடத்துல நிப்பாட்ட மாட்டான்.இது எதுக்காக சொல்றேன யாரும் நம்மகிட்ட வந்து ஆராச்சும் டிக்கெட் இருக்குனு சொன்ன போயிராதீங்க.அப்புறம் அவ்ளோ தான்.மாறாக முடியாத பயணமா ஆகிரும்.

RAVI said...

இதெல்லாம் சாதாரணமப்பான்னு இனி வருங்கால அனுபவங்கள் சொல்லும்.

//அதனால தான் தல சொல்றேன் வர போற மதுரை தொகுதி தேர்தல் நில்லுங்க...//

தல எஸ்கேப்பாயிரு.

yasir said...

damil dumil,
//நான்தாங்க அந்த டிரைவர் நான் வண்டி ஓட்டுன அழகுல வாலுக்கு கடவுள் நம்பிக்கை தானா வந்திருக்கும்//
இப்ப தெரிஞ்சதா பயத்துலதான் கடவுள் நம்பிக்கை வந்ததுன்னு? இதத்தானே காட்டுமிராண்டி காலத்திலிருந்து சொல்லிகிட்டு வருகிறோம்.

ஹாய் வால் நான் வலைக்கு புதிய வால்,அதனால் நானொரு குட்டைவால். பரிணாமம் பற்றிய தங்களின் கட்டுரைகள் மிக அறுமை. பிறகு பார்க்கலாம் நன்றி வணக்கம்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பண்டிகை கால்த்துல சொந்த ஊருக்கு வரணும்கிறவங்க பாடி ரொம்ப ரொம்ப கஷ்டங்க......



அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

பஞ்சவர்ணசோலை said...

என்னவோ போங்க், வந்து சேர்றதுக்குள்ள எனக்கு தாவூ தீர்ந்துருச்சு!//

ஒவ்வொரு முறை பஸ் ஏறும் போதும் இதே நிலைமை தான் :((

!

Blog Widget by LinkWithin