தமிழ் படிக்கச் சொல்லும் ஆசிரியர்கள் கெட்டவர்களா?

இன்று விஜய் டீவி, நீயா நானாவில்(இப்போ ஓடிகிட்டு இருக்கு) தமிழ் ஆசிரியர்களால் தொல்லையா போன்ற ஒரு நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது!, தமிழனை தவிர வேறு எவனும் இந்த அவமானத்திற்குள்ளாக மாட்டான்!, என்னாய்யா பாண்ணிட்டாங்க பார்த்தா, தமிழ் படிக்க சொன்னாங்களாம், தமிழில் பேசலாமே என்றார்களாம், தமிழ் நிகழ்ச்சி பார்க்க சொன்னார்களாம், என்ன குறை இதில் கண்டார்கள் என தெரியவில்லை!

எனது தமிழ் ஆசிரியர் பெயர் பன்னீர்செல்வம், இன்று வரை ஞாபகத்தில் வைத்திருக்கிறேன், ம.பொ.சி. யின் மீசை வைத்திருப்பார். யாரையும் அதிர்ந்து பேசியதில்லை. இதை விட உயர்வாக சொல்ல ஒன்றும் இருக்கிறது, நான் அவரிடம் படித்த வரை அவர் யாரையும் பரிட்சையில் தோல்வியடைய வைத்ததில்லை, அது எப்படி சாத்தியம் என கேள்வி வரலாம்!ஆம் அவரை பொருத்தவரை எல்லாரும் நல்லவர்களாகவே பிறந்தார்கள், பிரபஞ்சனுக்கு(எழுத்தாளர்-சித்தன் போக்கு) முன்னரே அனைவரையும் நல்லவர்களாகவே பார்க்கும் பார்வை கொடுத்தது எனக்கு பன்னீர்செல்லம் ஐயா தான்!

தமிழில் பேச சொல்வதால் என்ன தவறு கண்டார்கள் என தெரியவில்லை, அம்மாவை அம்மா என்று கூப்பிடச் சொல்வது தவறாய்யா! அதானே அவர்கள் சொல்வதின் அடிப்படை, உங்கள் வீடு புகுந்தா நீங்கள் எல்லாவற்றிலும் தமிழை பயன்படுத்துகிறார்களா என பார்க்கிறார்கள்!?.

இலக்கியம் என்பதற்கான அர்த்தம் தெரியுமா?, நம் முன்னோர்களின் பண்பாடு, கலாச்சாரம் அவர்களின் வாழ்க்கை முறைகளை எழுத்தாக வடித்தது தானே அது!, அவற்றை தெரிந்து கொண்டார்களா என ஒரு ஆசிரியர் ஆர்வம் காட்டுவதில் என்ன தவறு இருக்க முடியும்!

என் வகுப்பில் பட்டதை போல் என் தமிழ் ஆசிரியர் வேறெங்கும் அனுபவப்பட்டிருக்கமாட்டார்!, நான் ஏன் திருக்குறள் படிக்கனும் என்ற ஒரே கேள்வியில் மட்டும் அவரிடம் இரண்டு வகுப்புகள் விவாதித்திருக்கிறேன்!, உச்சி முகர்ந்து வாழ்த்து சொல்லும் நிலையைப்போல் ஒரு நெகிழ்ச்சியான நிலையில் தனிமையில் என்னை பார்த்து நீ பெரியாளா வருவடா என்றார்!, நான் வர்றேனோ இல்லையோ! மற்ற வகுப்பு ஆசிரியர்கள் போல் அல்லாமல் ”போய் சொன்னதை செய்” என்று சொல்லாமல் விட்டதே எனக்கு அப்பொழுது பெரிய விசயம்!

தமிழ் பேராசியர்கள் கணிணிதுறையினர் மீது பொறாமையில் உள்ளார்கள் என்ற பேச்சு உள்ளது, நிச்சயமாக அப்படி இல்லை, கணிணிதுறையில் உள்ள உங்களுக்கு தான் தெரியும் அதிலுள்ள பொருள்கள் பற்றி, அதற்குறிய தமிழ் பெயர்கள் சூட்டுவது, துறை சார்ந்த கலைச்சொற்கள் தேடுவது என்று எல்லாவற்றிற்கும் ஏன் தமிழ் ஆசிரியர்களையே தேடுகிறீர்கள் என்ற ஆதங்கம் அவர்களுக்கு.

இயலும், இலக்கியமும் கற்று கொடுத்த தமிழ் ஆசிரியன் இன்று மாற்று மொழிப்பாடம் தவிர அனைத்தையும் தமிழிலேயே கற்றுக்கொடுக்க தயாராக இருக்கிறான்! நாம் தானே அதை உணராமல் இருக்கிறோம்!, ஆங்கில உச்சரிப்புக்கு நாம் காட்டும் முனைப்பை தமிழ் உச்சரிப்பு காட்டியிருக்கிறோமா!?

என் உடையை அணிந்து நான் பெருமைப்படுவது எப்படி!? மாற்றான்(நண்பன் என்றே வைத்து கொள்ளலாம்) உடையை அணிந்து பெருமைக்கொள்வது எப்படி? அப்படியானால் நம் உடையை அணிவதில் நாம் சிறுமை கொள்கிறோமா? நமக்கு அதனால் தாழ்வுமனப்பான்மை ஏற்படுகிறது என்றால் தவறு யார் மேல்!

இங்கே தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பலகை தமிழ்நாட்டில் இருக்குமானால் தமிழநாட்டில், தமிழுக்கு, தமிழர்களுக்கு என்ன மரியாதை!. உலகம் கற்றுக்கொடுத்த பெற்றோர்கள் மேல் இருக்க வேண்டிய மரியாதை. பண்பாடும், கலாச்சாரமும் கற்றுக்கொடுத்த தமிழ் மேலும் இருக்க வேண்டியது தானே முறை!

டிஸ்கி:கலாச்சாரம் மீதான விமர்சனத்தை அடுத்தொரு பதிவில் வைத்து கொள்ளலாம்!

50 வாங்கிகட்டி கொண்டது:

எஸ்.கே said...

எனக்கு வந்த எல்லா தமிழ் ஆசிரியர்களும் சுவாரசியமாக பாடம் நடத்துவார்கள். அவர்களின் பாடவேளையை மாணவர்களும் விரும்புவார்கள். எனக்கு தெரிந்து என கூட படித்த எவருக்குமே தமிழ் பிடிக்காமல் இருந்ததில்லை, ஆங்கிலம் மீடியம் மாணவர்களையும் சேர்த்து!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

இன்னா தல நைட் ல பதிவு ...,வீட்ல நெட் connection குடுத்தாச்சா ?

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

தல
இலக்கியம் எல்லாம் அனுபவிக்கனும் தல ...,அதுல போய் காசு கிடைக்குமா தேட கூடாது..,

எஸ்.கே said...

அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன்(ஆனால் கொஞ்சம் முடியப் போகும் சமயம்தான் பார்க்க ஆரம்பித்தேன்).
நான் ஒரு மொழிபெயர்ப்பாளன்(ஃப்ரீலான்ஸ்). எனக்கு வரும் வேலைகளில் பல கலைச்சொற்களுக்கு தூய தமிழ் வார்த்தைகளை கிளையண்ட்ஸ் விரும்புவதில்லை. காரணம் இது சாதாரண மக்கள் படிப்பதற்கு அதனால் ஆங்கில வார்த்தைகளையே தமிழில் எழுதுங்கள் என்கிறார்கள். எனவே அது கிட்டதட்ட பேச்சு தமிழ் போல ஆகிறது. இதனால் தமிழ் அங்கே பெரும்பாலும் காணாமல் போகிறது.
இப்படி வேற்றுமொழி கலந்தே தமிழை அனைவரும் பயன்படுத்துவதா ஒழுங்கான தமிழை படிக்க பலருக்கு பிடிப்பதில்லை/புரிவதில்லை.
இது கால மாற்றத்தில் நிகழ்ந்தது. இதை மாற்றுவது கொஞ்சம் கடினம்தான்!

பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :(( said...

நீங்கள் சொல்வது சரிதான் ...தமிழில் பேசுவது எவ்வளவு சரியோ, அது போல நாம் நம் தேசிய மொழியான ஹிந்தியும் கற்று கொள்வது மிகவும் முக்கியம். ஹிந்தி தெரியாதவன் தமிழ்நாடு எல்லையை தாண்ட முடியாது என்ற என் கருத்தை நான் இங்கே பதிய விரும்புகிறேன்.

கொல்லான் said...

எனது தமிழாசிரியர் இல்லை என்றால் இன்று நான் இல்லை.

Thekkikattan|தெகா said...

நியாயமான கேள்விகள். எல்லாம் பொது புத்தியில ஆங்கிலம் பேசினா, கத்துகிட்டா அவன் பெரிய அறிவாளிங்கிற கருத்து தூவப்பட்டு அது ஆழமா துளிர் எடுத்துருக்கிறதுதான் காரணம்.

அதன் எச்சமே நாம் பார்க்கும் மம்மி, டாடி கலாச்சாரம், அப்படியாக தன் பிள்ளைகள் தங்களை கூப்பிட ஆரம்பித்து விட்டாலே, தானும் ஹிக்கின்ஸ்பர்க்ல் பிறந்ததிற்கான சாபல்யம் கிடைத்துவிடுகிறது. :) - அறியாமை! :))

//ஆங்கில உச்சரிப்புக்கு நாம் காட்டும் முனைப்பை தமிழ் உச்சரிப்பு காட்டியிருக்கிறோமா!?//

கண்டிப்பாக இல்லை என்றே பெரும்பாலான இடங்களிலும் அவதானிக்கும் பொழுது தெரிய வருகிறது. ஆர்வத்தின் பெயரில் கூர்ந்து கவனிக்க ஆரம்பிக்கும் பொழுதுதான் மொழியின் செழுமையும், வீச்சமும் தெரிய வருகிறது. இன்னும் சரியானபடி வாத்தியார்களும், வீட்டிலும் அதற்கான ஆட்கள் இல்லாததுதான் கரணம். இழப்பு என்னவோ நமக்குதான்.

Unknown said...

//தமிழனை தவிர வேறு எவனும் இந்த அவமானத்திற்குள்ளாக மாட்டான்!//
well said!

Karuvepillai said...

இப்போது தமிழ் பேசினால் ஒரு இரு ஆங்கில வார்த்தை சேர்த்து பேசினால் தான் கவனிக்கிறார்கள் என்ன செய்ய...

kumar said...

நண்பரே அல்லது தோழரே உங்களை எப்படி விளிப்பது?நீண்ட காலமாக எனக்குள் இருந்த
ஆதங்கத்தை நீங்கள் வெளிப்படித்தியுள்ளீர்கள்.தமிழ் ஆசிரியர்களுக்கு உண்டான மரியாதை
இன்று வரை கிடைத்த பாடில்லை.ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் பத்தாவது படிக்கும் வரை
எனக்கு அருமையான இரண்டு தமிழ் உபாத்தியாயர்கள் கிடைத்தார்கள்.ஒருவர் பெயர் ஐய்யா
எட்வர்ட்.இன்னொருவர் பெயர் ஐயா சண்முகம்.+ 2 படிக்கும்போது இன்னொரு அற்புதமான ஆசிரியர்.
தமிழ் மணி.ஆஹா பெயரே இப்படி என்றால் ,,, சொல்ல வேண்டியதில்லை.தறுதலை என்று
பெயரெடுத்தபோதும் இவர்கள் மூன்று பேருக்கு மட்டும் நான்மிக இஷ்டமான மாணவன்.அந்த திகட்டாத அன்பு ஒரு கட்டத்தில் என்னை என் மழலைக்கு பெயர் வைக்க தூண்டியது
தமிழழரசி என்று.ஆனால் மன்னிக்கவும் தோழரே,நடைமுறையில் சாத்தியமாகவில்லை.

Unknown said...

அது ஒரு மோசமான, மட்டமான முறையில் நடாத்தப்படும் நிகழ்ச்சி

தெரியாமல் அதைப் புகழ்பவர்கள் இங்கே பலர் (இலங்கையில்)

அன்பரசன் said...

//இங்கே தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பலகை தமிழ்நாட்டில் இருக்குமானால் தமிழநாட்டில், தமிழுக்கு, தமிழர்களுக்கு என்ன மரியாதை!//

நச்

செல்வன் said...

வால் பையன், நீங்கள் சொல்வது சரி.
ஜீ, இந்த மட்டமான நிகழ்ச்சியை புகழ்பவர்கள் சிலர் இலங்கையில் இருந்தாலும் தமிழ்நாட்டில் தமிழ் இருக்கும் நிலையை விட சிறப்பாகவே இலங்கையில் இருக்கிறது. தமிழ் மணவர் தமிழிலும், சிங்கள மாணவர் சிங்களத்திலுமே படிக்கின்றனர். தமிழநாட்டில் நிலமையே வேறு. தமிழை ஆங்கிலத்துடன் கலந்து பேசினால் பெருமையாக நினைப்பதை தமிழ்நாட்டு தொலை காட்சி நிகழ்ச்சிகளில் காணலாம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான பதிவு அருண்.
நான் நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை.
இது போன்ற அபத்தத் தலைப்புகள் கொண்டதே நீயா நானா.
அந் நிகழ்ச்சியை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க வேண்டும்.
நாரதர் பணியை அது செய்துக் கொண்டிருக்கிறது

Unknown said...

அதிலும் இலக்கணம் பற்றிய பகடி வேற.. தமிழ் இலக்கணம் மிகவும் வரட்சியாக இருக்கிறதாம். எல்லா மொழியிலும் இலக்கணம் (பாடமாகப் படிக்கும்போது) வரண்டுதான் இருக்கும்

Philosophy Prabhakaran said...

// அம்மாவை அம்மா என்று கூப்பிடச் சொல்வது தவறாய்யா! //
நச்சுன்னு கேட்டீங்க...

தமிழ் வாத்தியார் என்றாலே ஸ்பெஷல்தான்...

சரவணன் said...

பொதுவாக நீயா நானா நிகழ்ச்சியை வெறுப்பவர்கள் இருக்கிறார்கள். அதில் தவரில்லை. அனால் இந்த குறிப்பிட்ட ஒளிபரப்பை அவசியம் பாருங்கள். முதல் பாதி வழக்கம் போல் தேவையற்ற விவாதங்கள். இரண்டாம் பாதி அனைவரும் பார்க்க வேண்டியது. தமிழை சந்தை படுத்தவது எப்படி என்று சிறப்பு விருந்தினரின் நோக்கு அருமை.

என்னது நானு யாரா? said...

எல்லாம் காலத்தின் கோலம்! இப்படி எல்லாம் ஒரு நிகழ்ச்சியா! நான் பார்க்க முடியாத இடத்தில் இருக்கின்றேன். வண்மையான கண்டனங்களை அனைவரும் ஒட்டுமொத்தமாக தெரியபடுத்தினால் தான் இதுப்போன்ற கேவலமான நிகழ்ச்சிகள் இனித் தொடராமல் இருக்கும்.

பணத்துக்காக இதுப்போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடுகின்றன. எந்த இழி நிலைக்கும் செல்லவைக்கிறது பணம்! ஒட்டுமொத்தமாக இதுப்போன்ற நிகழ்ச்சிகளை புறக்கணிப்போம்!

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஆங்கிலம் பிழைக்க வழி செய்ய ஏதுவான மொழியாகிவிட்டது நிஜம்..

ஆங்கிலம் கண்டிப்பாக கற்றுக்கொள்ளணும்..அதே போல ஹிந்தியும் கூட..

ஆனால் தாய்மொழி தமிழை புரக்கணிக்கவோ, நகையாடவோ செய்துதான் தன் வேற்றுமொழி மேன்மையை காண்பிக்க நினைப்பவர்கள் வளர்ச்சியடைதாவர் என பரிதாபப்படலாம்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

f

கோவி.கண்ணன் said...

தாம் ஆதரவற்றோர், பெற்றோர் யார் என்றே தெரியாது என்று சொல்வது அப்படி பிறக்க வைக்கப்பட்ட ஒருவருக்கு எவ்வளவு தாழ்மையான உணர்வோ அந்த உணர்வில் சிறிது கூட இல்லாமல் தமக்கு தாய்மொழி தமிழ் தெரியாது என்று சொல்லும் டமிழர்கள் மிகுந்துவிட்டார்கள்.

Chitra said...

உலகம் கற்றுக்கொடுத்த பெற்றோர்கள் மேல் இருக்க வேண்டிய மரியாதை. பண்பாடும், கலாச்சாரமும் கற்றுக்கொடுத்த தமிழ் மேலும் இருக்க வேண்டியது தானே முறை!

....அரை குறையாய் ஆங்கிலத்தில் பேசினாலும், சிலருக்கு இருக்கும் பெருமை - அழகான தமிழில் பேசும் போது வராதது கண்டு வருத்தமே!

Jackiesekar said...

வால் இதே நிகழ்ச்சி மட்டும்... கன்னட சேனலில் ஒளிபரப்பி இருந்தா நிச்சயம் பெரிய ரகளையாகி இருக்கும்...

அருண் பிரசாத் said...

வருத்தப்பட வேண்டிய விஷயம் மட்டும் அல்ல வால்.. வெட்கப்பட வேண்டிய விஷயமும் கூட

ஹரிஸ் Harish said...

தல..அந்த நிகழ்ச்சியில பரிசு பெற்றவறோட கருத்துக்கள்,தமிழின் சந்தை மதிப்பை அறியாமல் பிற மொழி மோகத்தில் ஓடும் ஆட்டுமந்தைகளுக்கு சாட்டைஅடி..

ஹரிஸ் Harish said...

பண்பாடு,கலாச்சாரத்துடன் மரியாதையையும் கற்று தறுபவர்கள் தமிழாசிரியர்கள்..

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

வருத்தப்பட வேண்டிய விஷயம் மட்டும் அல்ல வால்.. வெட்கப்பட வேண்டிய விஷயமும் கூட
////

சரியா சொன்னிங்க சார்

மங்குனி அமைச்சர் said...

நிறைய ஸ்கூல்ல தமிழ்ல பேசினா பைன் போடுறாங்க தல

மங்குனி அமைச்சர் said...

எனக்கும் செய்யுள்ள அதே டவுட்டு வந்து இருக்கு

ஜோதிஜி said...

இது போன்ற நிகழ்ச்சிகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நிகழ்ச்சியை ஹிட்டாக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் கண்கட்டி வித்தை. மலிவான விபச்சார உத்தி.

கையேடு said...

நீயா நானாவில்,மிகவும் உருப்படியான உரையாடல்களுள் இதுவும் ஒன்றாக இருந்தது.

நன்றி.

ALHABSHIEST said...

$@+#i$# said...

"நாம் நம் தேசிய மொழியான ஹிந்தியும் கற்று கொள்வது மிகவும் முக்கியம்"
இந்தியாவிற்கு தேசிய மொழியே கிடையாது.இந்தி இந்தியாவின் அலுவல் மொழிகளில்[official language] ஒன்று.அதாவது ஒன்று ஆங்கிலம்.மற்றொன்று இந்தி.அது தவிர அந்த மாநிலத்தின் உள்ளூர் மொழி.இவை மூன்றும் அலவலக[official]மொழிகள்."1950 இல் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிற்கு பின், இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கபட்டதற்கு பின்னர் இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கிகாரம் கிடைத்தது. இந்தியாவின் அலுவலக, ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் அறிவிக்கப்பட்டது".[ஆதாரம் விக்கிபீடியா].
தேசிய மொழிக்கும் ஆட்சி மொழிக்கும் வித்தியாசம் உள்ளது.தேவையென்றால் கற்றுக் கொள்ளலாம்.தவறொன்றுமில்லை.ஆனால் தேசிய மொழியே இந்தியாவிற்கு கிடையாது என்பதை இதனை வாசித்த பின்னாவது தெரிந்து கொண்டு அதற்கான காரணத்தையும் தெரிந்து கொண்டு தெரியாதவர்களுக்கு விளக்குங்கள்.
பிரபலமடையும் வரை தமிழனென்று புறக்கணிக்க படுவோம்.பிரபலமானவுடன் இந்தியனாக அங்கீகரிக்க பட்டு விடுவோம்.நாமும் புறக்கணிப்புகளை படிக்கற்களாக எடுத்துக் கொண்டு சந்ததியினரை பற்றிய கவலை இல்லாமல் இந்தியனாக பெருமை கொள்வோம்.
யோவ் வாலு எதுக்கு இந்த வேலை உனக்கு. பேசாம நாயாட நரியாட, மயிரோடு மதினியாட,நானாட நங்கையோட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பற்றி எழுதுவியா?.

Prabu M said...

நல்லதுக்கில்ல இப்படி தலைப்புகள்ல விவாதம் நடத்துறதெல்லாம்....
என்னவோ இது ஒரு பொதுப்படையான விஷயம் மாதிரி மாயையை இது தோற்றுவிக்கும்..

நான் அந்த எபிசோட் பார்க்கவில்லை...
நீங்க சொன்னதன் அடிப்படையில்.. என் எதிர்ப்பையும் பதிவுசெய்துகொள்கிறேன்...
பகிர்வுக்கு நன்றி பாஸ்..

ஹேமா said...

வாலு...நானும் பார்த்தேன்.
வெட்கம்தான்.ஏன் தமிழ்.பள்ளியில்
35 புள்ளி எடுத்தலே போதும் என்கிறார்கள்.இதைவிடத் தமிழரைத் தமிழில் பேசினால் தங்கம் என்றொரு நிகழ்வு !

உமர் | Umar said...

//அந்த திகட்டாத அன்பு ஒரு கட்டத்தில் என்னை என் மழலைக்கு பெயர் வைக்க தூண்டியது
தமிழழரசி என்று.ஆனால் மன்னிக்கவும் தோழரே,நடைமுறையில் சாத்தியமாகவில்லை.//

என் மகள் என்னை அப்பா என்றுதான் அழைப்பார். வாப்பா என்றுதான் அழைக்கவேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தினர். நாம் பேசுவது தமிழ், விளிப்பது மட்டும் ஏன் வேற்று மொழியில் என்று அழுத்தமாக நிராகரித்துவிட்டேன்.

சமூகக் குழுக்களும் மொழியை அழிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. தற்பொழுது வரும் விளம்பரங்களும், ஒரு குறிப்பிட்ட சாரார் பேசும் மொழியையே பெரிதும் பயன்படுத்துகின்றன.

Ramesh said...

உண்மையான பதிவு தல.. நானும் உங்க கட்சிதான்.. பள்ளி ஆசிரியர்கள் முகங்கள்ல.. நினைவில் நிற்பவர் தமிழ் ஆசிரியர் மட்டுமே.. பசுவைப் போன்ற ஒரு நிதானம் தமிழ் ஆசிரியர்களிடம் மட்டுமே பார்க்க முடியும்..

ஆர்வா said...

இன்றைய தலைமுறையினர் தமிழ்பேசுவதை ஏதோ தீண்டாமையை போல் பாவிக்கின்றனர். தமிழாசிரியரை ஏதோ வேற்றுகிரகவாசியை போல் நோக்கும் மனப்பான்மை மாறவேண்டும்..

தேவகோட்டை ஹக்கீம் said...

இங்கே பின்னூட்டம் இட்ட பலபேரும் அந்த நிகழ்ச்சியை பார்க்காமலேயே கேவலமான நிகழ்ச்சினு சொல்லுறாங்க.தயவு செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.உண்மையிலேயே 'நீயா?நானா'வில் கேவலமான நிகழ்ச்சிகள் போடும்போது பேசாம இருந்திட்டு ஒரளவிற்கு நல்ல நிகழ்ச்சி போடும்போது குறை சொல்லுவது கடுப்பதான் கிளப்புது.இந்த குறிப்பிட்ட ஒளிபரப்பை அவசியம் பாருங்கள். முதல் பாதி வழக்கம் போல் தேவையற்ற விவாதங்கள். இரண்டாம் பாதி அனைவரும் பார்க்க வேண்டியது. தமிழை சந்தை படுத்தவது எப்படி என்று சிறப்பு விருந்தினரின் நோக்கு அருமை.

லிங்க்:- http://www.rajtamil.com/2010/11/neeya-naana-07-11-10-vijay-tv-show.html

Please Watch it.

சி.பி.செந்தில்குமார் said...

super vaal

>>>இலக்கியம் என்பதற்கான அர்த்தம் தெரியுமா?, நம் முன்னோர்களின் பண்பாடு, கலாச்சாரம் அவர்களின் வாழ்க்கை முறைகளை எழுத்தாக வடித்தது தானே அது!,>>>

என்னைக்கவர்ந்த வரிகள்

ஜோதிஜி said...

தேவகோட்டை ஹக்கிம் உங்களுக்கு நன்றி. கூகுள் பஸ்ஸில் பகிர்ந்துள்ளேன். நீங்கள் ஆதங்கப்பட்டது சரிதான்.

ராவணன் said...

தல ஹிந்தி கத்துக்கோங்க.....

நெறய மேதைங்க ஹிந்தி கற்றுவிட்டு நோபல்ல்லு பரிசு எல்லாம் வாங்கியுள்ளார்கள். மேலும் உங்களுக்கு அஸ்கரு,புஸ்கரு என்ற அவார்ட் எல்லாம் கிடைக்கும்.

வெளிநாடுகளில் ஒங்களுக்கு வீடு, மணிக்கு 500km வேகத்தில் செல்ல மாட்டுவண்டி எல்லாம் கிடைக்கும்.

தல ஹிந்'தீ' படிங்க...ஒடனே...

(ஹிந்திக்காரனுக்குப் பிறந்தவர்கள் ஹிந்தி படித்தால் நல்லது என்பார்கள்)

இ.வெள்ளத்துரை said...
This comment has been removed by the author.
இ.வெள்ளத்துரை said...

நிகழ்ச்சிய கவனமாப் பார்த்தவங்க..பார்ப்பவங்க.. அந்த நிகழ்ச்சியைக் குறை சொல்ல மட்டாங்க..நீயா நானாவில் எடுத்து விவாதிக்கப்படும் ஒவ்வொரு தலைப்பும்...இவ்வாறும் ஒரு உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறதா...என்று நம்மை வியப்புக்குள்ளாக்கும் நிகழ்ச்சிகளே...மானாட மயிராட..போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்த நம் கண்களுக்கு இந்த நீயா நானா மட்டமான நிகழ்ச்சியாகத்தான் தெரியும்....பொத்தாம் பொதுவாக நீயா நானாவைக் குறை கூறுவதை விட்டு விட்டுங்கள் நண்பர்களே...i

Anonymous said...

நல்ல கருத்துக்கள்... என்னுடைய நண்பர்கள் நெறைய பேர் கிட்ட இத தான் சொல்லிட்டு இருக்கேன்... கொஞ்சம் கொஞ்சமா தமிழ்லேயே பேசுறாங்க இப்ப..

அறியாத பசங்க.. நாம தான் சொல்லி புரிய வைக்கணும் :)

Thekkikattan|தெகா said...

வால்ஸ்,

நானும் இணைப்பை பிடிச்சு நீயா? நானா? பார்த்தேன். இந்த தலைப்பின் பின் பகுதியில் நிறைய ஆக்கப்பூர்வமாக பேசியிருக்கிறார்கள். ஏன் இங்க நிறைய பேரு கண்டனம் அது இதுன்னு பேசியிருக்காங்க?

suneel krishnan said...

நீயா நானா சில நேரம் ஏமாற்றம் அளித்தாலும் ,அவர்கள் ஒரு பொருளை விவாததிற்கு இழுத்து வருகின்றனர் , இது நல்ல விஷயம் .
தமிழ் ஆர்வலர்களுக்கு மற்ற துறைகளில் மேல் பொறாமை என்பது எல்லாம் மிகை

geethappriyan said...

இனி வரும் சந்ததியினர் ஹிந்தி படிக்கவே வேண்டியதில்லை,ஹிந்திகாரர்களே தமிழ்நாட்டில் அதிக சம்பளமும்,அதிக செலவில்லாத அமைதியான வாழ்க்கை முறையும்,நல்ல கல்வியும் கிடைக்கிறதென்று இங்கே படையெடுக்கிறார்கள்.இப்போ அசுத்த காமெடி செய்யாதீர்கள்.

ஒருவருக்கு அனாதை மொழி ஹிந்தியை படித்தே தீரவேண்டுமென்றால் படித்துக்கொள்லுங்கள்,அது தேசிய மொழி என்று முட்டாள்தனமாக பொய்பிரச்சாரம் செய்யாதீர்கள்,அது விபச்சாரத்துக்கும் கீழானது.

ஹிந்தியை நம் மீது திணிக்கப்பார்த்தபோது நாம் அடிபணியாமல் இருந்ததால் ஒன்றும் குடி முழுகிப்போய்விடவில்லை.எல்லா மாநிலங்களைவிடவும் அறிவும் ஆற்றலும் நிறைந்தே இருக்கிறோம்.

ஹிந்தி ஒரு பகல் கொள்ளைக்காரர்களின் மொழி.அதற்கு இனி எதிர்காலமே இல்லை,
=====
எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்று சொல்கிறேன்.தமிழனுக்கு தான் தாய் மொழிப்பற்று அதிகம் இருக்கிறது,தெலுங்கர்கள்,மராத்திகள்,மலையாளிகள்,கொங்கனிகள்,கன்னடிகாக்கள்,குஜரத்திகள்.எல்லோருமே அனாதை மொழியான ஹிந்தியை பேச மிகவும் ஆர்வமாயிருக்கிறார்கள், அவர்கள் அத்தனை பேருமே ஹிந்தி தான் தேசிய மொழி என்று ஏமாந்தவர்கள்,ஏமாற்றப்பட்டவர்கள்,நாம் புத்திசாலிகள்.இனி எவனும் வேலை தேடி டெல்லி,மும்பை என போகபோவதில்லை.நம் தமிழ் நாட்டிலேயே அவ்வலவு வேலைவாய்ப்பு இருக்கிறது.

அமீரகத்தில் ஷார்ஜாவில் இருக்கும் எனக்கு ஹிந்தி தெரியாது,எனக்கு டாக்ஸி பிடிக்க மட்டுமே ஹிந்தி தேவையாயிருக்கிறது.ஏனென்றால் டாக்ஸி ஓட்டுபவர்கள் முழுக்க பாகிஸ்தானிகள்,அவர்களும் தங்கள் உருது மொழியை மறந்து அனாதை மொழியான ஹிந்தியில் பேசவேஎ விரும்புகிறார்கள்.உங்களுக்கு தரித்திர ஹிந்தியை தேவைப்பட்டால் மட்டும் கற்றுக்கொள்ளுங்கள்

தமிழ் அழிவதை தடுக்க சில வழிகள்:- ஹிந்தி தேசிய மொழி அல்ல என புரிந்துகொள்வோம்,| நம்மை யாரும் ஹிந்தி கற்றுக் கொள்ளச்சொன்னால் அவர்களை தமிழ் கற்றுக்கொள்ள சொல்லுவோம்,|அல்லது ஆங்கிலத்தில் பேச கற்றுகொள்ள சொல்லுவோம்.| தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம்,| பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம்.| தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழிலேயே சேட்டிங்கில் கதைப்போம்,| தமிழில் அதிகம் தேடிப் படிப்போம்.| தமிழிலேயே பின்னூட்டுவோம்.| தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்

!

Blog Widget by LinkWithin