தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜ் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை "பாக்கலாம்!" அவரை பொறுத்தவரை அதன் அர்த்தம், அந்த செயலை முடிந்த பின் நீங்கள் வந்து பார்க்கலாம் என்பது தான், அதனால் தான் அவருக்கு அடைமொழி கர்மவீரர்(செயல்வீரர்), ஆனால் இந்த "பார்க்கலாம்" என்ற வார்த்தை எல்லா சூழ்நிலையிலும் அதே அர்த்தத்திலும் பயன்படுத்தப்படுகிறதா என யோசித்து பார்த்தால் இல்லை என்றே தோன்றுகிறது!,அவரவர் சூழ்நிலை, மனநிலை என அனைத்தையையும் சார்ந்து தான் நமது வார்த்தைகள் வெளிப்படுகிறது என்றாலும் அதை உள்வாங்கி கொள்ளும் நபரின் சூழ்நிலை என்னவாக புரிந்து கொள்ளப்படும் என்பதும் மிக முக்கியமானது தான்!
பொதுவாக ”லாம்” என்று முடிந்தாலே அதில் ஒரு ஸ்திர தன்மை இல்லை என்பது நிரூபணமாகிறது, அதில் "பார்க்கலாம்" என்ற வார்த்தையும் ஒன்று. "லாம்" ஒற்றை சொல்லாக இல்லாமல் முன் சில வார்த்தைகள் இருந்தால் கூட சிலசமயம் ஒரு நம்பிக்கை கலந்த வார்த்தையாக மாறும், உதாரணமாக "நாளை சினிமா பார்க்கலாம்" என்றால், அதில் பார்க்ககூடிய சாத்தியகூறுகள் அதிகம் எனத்தெரிகிறது!, "நாளை சினிமாவுக்கு போகலாமா?" என்ற கேள்விக்கு "பார்க்கலாம்" என்றால் அங்கே நம்பிக்கை குறைந்த குழப்ப சூழ்நிலையே மிஞ்சும்!
"பார்க்கலாம்" என்ற வார்த்தை சொல்லும் தொனியில் கூட மாறலாம்! உதவி கோரி செல்பவருக்கு பார்க்கலாம் என்ற வார்த்தை சொல்பவரின் அலட்சியதன்மையை காட்டும்!, " I will try" or "I will try my level best" போன்ற வார்த்தைகளை நிச்சியமாக ”பார்க்கலாம்” என்ற வார்த்தையுடன் ஒப்பிட முடியாது, அங்கே முயற்சியாவது இருக்கிறது, ஒரு விசயம் நடக்கும் நடக்காது என்ற எந்தவித உத்திரவாதமும் இல்லாத பட்சத்திலும் முயற்சியாவது இருந்ததே என்ற சமரசமாவது இருக்கும், ஆனால் "பார்க்கலாம்" என்றாலே நம்பிக்கை இழுக்கும் சூழல் தான் உருவாகும்!
வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் அனுபவத்தால் சாத்தியகூறுகளை பற்றி ஆராய்ந்தவர்கள், பார்க்கலாம் என்ற சொல்லை வேறு மாதிரி பயன்படுத்துவர், அவர்களிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இருக்காது, எது நடந்தாலும் சரி என்ற வெற்றிடதன்மையில் இருப்பார்கள், வந்தால் நன்று இல்லையென்றால் எனகு ஒன்றும் நட்டமில்லை என்ற தன்மை! அவர்கள் அளவில் அதுசரி தான் என்றாலும் கேட்கும் நபரும் அதே போல் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையில் இருப்பாரா என்பது சந்தேகமே!
தட்டிக்கழிக்கும் சொல்லாகவும் இந்த சொல் பயன்படும், முன்னரே சொன்னது போல் அலட்சியபோக்காகவும் இல்லாமல் எதிர்பார்ப்பும் இல்லாமல், தனது முன்முடிவுகளை மாற்ற எந்தஒரு யோசனையும் எடுக்காத பட்சத்தில் அவர்கள் உபயோகிக்கும் சொல் பார்க்கலாம்! தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் குறித்த எதிர்கால நோக்கு பார்வை ஏற்கனவே வைத்திருக்கும் திட்டத்துக்கு மாற்றாக எதையும் சட்டென்று முடிவெடுக்க முடியா நிலை என சொல்லலாம்!
எங்கேயும் யாரையும் எதிலும் குறைசொல்ல முடியாது, அவரவர் சூழ்நிலை பொறுத்த வாழ்வே அவரது மனநிலைக்கும், நிலை குறித்த திட்டத்திற்கும் சாத்தியமாகிறது, நேர்மறை சிந்தனைகள் எதையும் சமாளிக்கும் திறனை கொடுக்க மட்டுமே செய்யாது, சில சமயங்கள் வேறு பல வாய்ப்புகளை தேடிச்செல்லும் திறனையும் குறைக்கும்!
வாழ்கையை பலர் வாகனத்துடன் ஒப்பிடுவர், அவ்வாறு கொண்டால் வாகனத்தை நாமாக செலுத்துவது அல்லது அதன் போக்கில் விடுவது என்ற இருநிலை வருகிறது, அனுபவமும் அறிவும் செலுத்தும் தகுதியை தந்தாலும், சிலநேரங்களில் அதன் போக்கும் சுராஸ்யம் தரும்!, ஆனாலும் என்னார்வமெல்லாம் என்னால் என்ன செய்ய முடிகிறது என அறிவதே! நசுங்கி அடிபட்டு தகரடப்பா போல் என் வண்டி இருந்தாலும் என்னால் செலுத்தப்படும் பொழுது எனக்கு பெருமையாக இருக்கிறது!
"பார்க்கலாம்" என்ற வார்த்தையை எதிர்கொள்ளும் திறன், பலரைப் போலவே எனக்கும் குறைவு, "பார்க்கலாம்" என் திறன் எப்படி மாறுகிறது என்று!
டிஸ்கி: இப்படியே எத்தனை நாளைக்கு தான் மொக்கை போட்டு கொல்லுவ பார்க்கலாம் என நினைக்கும் நண்பர்கள் பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க!. "லாம்" என்பது பன்மைச் சொல் எனினும் எனது வசதிக்காக "ஸ்திரத்தன்மை இல்லாத தன்மை" குறித்து பேசுவதாக மட்டும் பயன்படுத்திக் கொண்டுள்ளேன். தமிழ் பெருந்தகைகள் மன்னிக்கவும்
49 வாங்கிகட்டி கொண்டது:
பாக்கலாம்!
//பொதுவாக ”லாம்” என்று முடிந்தாலே அதில் ஒரு ஸ்திர தன்மை இல்லை என்பது நிரூபணமாகிறது,//
இஸ்லாம்! அவ்வ்வ்வ்!
//பொதுவாக ”லாம்” என்று முடிந்தாலே அதில் ஒரு ஸ்திர தன்மை இல்லை என்பது நிரூபணமாகிறது,//
இஸ்லாம்! அவ்வ்வ்வ்!
தண்ணி போடறத நிறுத்தாதேன்னு சொன்னேன் கேட்டீங்களா பங்கு! இப்ப பாருங்க நல்லா இருந்த மனுசன் .........................
ஸ்டார்ட்டிங்கே நாம தானா! தல இன்னைக்கி ஒரு ஃபிகர் உன் கடைக்கி வராது பாத்துக்கோ!
உஸ்ஸ்ஸ்சப்ப்பா...
பாக்காலாம் என்று சொன்னால் உதடுகள் மட்டும்தான் ஒட்டும் அதுவே...........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
எதுக்கு வம்ப்பு வேணாம் விடுங்க!
//.. ஸ்டார்ட்டிங்கே நாம தானா! ..//
இல்லனா மட்டும் என்னமோ வரிசைல நிக்கற மாதிரி..??!!
//.. எதுக்கு வம்ப்பு வேணாம் விடுங்க! ..//
அப்புறம் எதுக்கு இவ்ளோ கேப்பு..??
பார்க்கலாம் என்ற சொல் உண்மையிலேயே அதிகமாக முடியாது என்ற கருத்தைக் கூறவே பயன்படுத்தப் படுகிறது அப்படின்னு நினைக்கிறேன் ..!
இந்த பதிவு ரொம்ப மொக்கையா இருக்கு அதனால நாளைக்கி பாக்கலாம்..அவ்வ்வ்வவ்...
பாத்துகிட்டே இருங்க........
சரக்கடிக்கும் நேரத்தை மிச்சப்படுத்தி எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
பார்க்கலாம் என்பது பற்றி ஆராய்ந்து விட்டீர்கள்...
அடுத்தது "பார்" செல்ல"லாம்" என்பது பற்றிய ஆராய்ச்சியா தல ?
பாக்கலாம்.. பாக்கலாம்.. பாத்துகிட்டே இருக்கலாம்...
rembavae analyse panni irukeenga.
naan adikadi upayoka paduthum varthai, en keel valai parkum paniyalarklodu..
rembave en mananilayil parkum pothu neegal ezhuthi ullathu ellam sathiyam
என்னை பொருத்த வரையில் பார்க்கலாம் என்பது ஒரு செயலை தள்ளிப்போடுவதற்க்காக சொல்லப்படுவது.
இப்படியோ கொஞ்ச நாளைக்கு உங்க பாணியை மாத்திப் பாருங்களேன்.
//டிஸ்கி: இப்படியே எத்தனை நாளைக்கு தான் மொக்கை போட்டு கொல்லுவ பார்க்கலாம் என நினைக்கும் நண்பர்கள் பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க!. //
என்ன, எங்க உயிர் பொறமட்டும்தானே கொல்லமுடியும்!
என்னமோ எழுதி இருக்கீங்க அது என்னான்னு பார்க்கலாம் என்று பாத்தா கண்ணு மங்களா தெரியுது , சரி டாக்டர பார்க்கலாம் என்று பார்த்தா அவருக்கும் கண்ணு சரியா தெரியலைன்னு இன்னொரு டாக்டர பாக்க போயிட்டாராம் , சரி நாமளும் போய் அந்த கண் டாக்டர பார்க்கலாம் அப்படின்னு பாத்தா ..................................... (போதும் , வேணாம் ..................அழுதுடுவேன் )
பார்த்துட்டாலும் ::))))
பார்க்கலாம்
"நல்லாத் தானே போய்கிட்டு இருந்துது?"
முடியாதுன்னு மூஞ்சிக்கு நேரா மறுக்க முடியாத நேரத்தில் பார்க்கலாம் என்று நான் உபயோகிப்பது என் பழக்கம்
பதிவெல்லாம் எங்கெல்லாம் செல்லலாம் என்று பார்க்கலாம்.
ராஜன் said...
//இஸ்லாம்! அவ்வ்வ்வ்!///
ஓடலாம், ஓடலாம், ஓடிக்கொண்டே இருக்கலாம்.
/நம்பிக்கை இழுக்கும் சூழல் தான் உருவாகும்!/
இழக்கும் என்பது இழுக்கும் என்று வந்துள்ளதோ?
ஆனாலும் சரியாக பொருந்திப்போகிறது!
வித்தியாசமான அலசல்தான்!
பார்க்கலாம்.. :)
நல்ல அலசல் தான்.
//"ஸ்திரத்தன்மை இல்லாத தன்மை" குறித்து பேசுவதாக மட்டும் பயன்படுத்திக் கொண்டுள்ளேன். தமிழ் பெருந்தகைகள் மன்னிக்கவும்//
மன்னிப்பாங்களா தெரியலை. ஸ்திர என்பது தமிழ் இல்லை
பா(ர்) க்க லாம் அப்ப்டி தானே பார்க்கலாம் ... நல்ல அலசல்... வாழ்த்துக்கள்
ராஜன் said...
தண்ணி போடறத நிறுத்தாதேன்னு சொன்னேன் கேட்டீங்களா பங்கு! இப்ப பாருங்க நல்லா இருந்த மனுசன் .........................
//
ரிப்பீட்டு....
" அனுப்புங்கள் பார்க்கலாம் " என்றால்?..
பார்க்கலாம் பார்த்துக்கிட்டோம்.:)
//இப்படியே எத்தனை நாளைக்கு தான் மொக்கை போட்டு கொல்லுவ பார்க்கலாம்//
ஹா ஹா ஹா
comment போடுறது பத்தி அப்புறம் நேரம் இருந்தால் பார்க்கலாம்
பாக்கலாம்!பாக்கலாம்!
ஒரு முறை இந்த பதிவை பார்க்கலாம்
//எங்கேயும் யாரையும் எதிலும் குறைசொல்ல முடியாது, அவரவர் சூழ்நிலை பொறுத்த வாழ்வே அவரது மனநிலைக்கும், நிலை குறித்த திட்டத்திற்கும் சாத்தியமாகிறது//
முடியாது, இல்லை, கிடையாது, மாட்டேன்... என்று எதிர்மறையான பதில்களுக்கு பதிலாக ”பார்க்கலாம்” என்ற சொல் எவ்வளவோ மேலானது.
//முகிலன் said//
என் இனமடா நீ..
இன்னொரு பதிவ போடுங்க, சரியா அப்பறம் பார்க்கலாம் . . .
"பார்க்கலாம் " என்று சொல்லும்போதே அவருக்கு இந்த விஷயத்தில் நாட்டம் இல்லை என்பதை நாம் தெரிந்து கொண்டு மாற்று வழியை யோசிப்பது நலம்!
அவர் எப்பொதுமே ”ஆகட்டும் பார்க்கலாம்” என்று சொன்னதாக என் தந்தையார் பல வருடங்களுக்கு முன்பு சொன்னதாக நினைவு...கவனிக்க சமீபத்தில் அல்ல!
பேசிக்கலாம் விடுங்க.
ராஜனுக்கு இஸ்லாம் பற்றி குறைகூராவிட்டால் கக்கூஸ் வராதோ
இந்த லின்க் பாருங்கள் காமராஜர் பற்றி...
http://www.saravanakumaran.com/2010/04/blog-post_29.html
யோசித்து பார்க்கலாம்...
கட்டுரை மிக அருமை
ஏழுகடல் தாண்டி, ஏழு மலைத் தாண்டி போனால் தான் முடியும் என்ற ரீதியில் எங்களை பயமுறுத்தினார்கள்... வலைப்பூ-வை உருவாக்க வேண்டும் என துவங்கியப்போது. இருந்தபோதிலும் மிக எளிது என நம்பிக்கையூட்டிய "நண்பேன்டா"களின் உதவியால் இன்று bharathbharathi.blogspot.com என்ற தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.
தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம். இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. மேலும் ஆலோசனைகளைத் தாருங்கள்.
இந்த வலைப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்க. இது சின்னஞ்சிறு மனிதர்களின் உலகம். தவறுகளை புறக்கணித்து வாழ்த்துங்கள்.. கருத்துரைகளை ஆவலாய் எதிர் நோக்குகிறோம்..
வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...
நன்றி..
அன்புடன்...
பாரத்பாரதி-க்காக
எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...
Post a Comment