நேற்று எந்திரன் பட ட்ரைய்லர் ரிலீஸுக்கான விளம்பரம் அல்லது விழா சன்டீவீயில் காண்பிக்கபட்டது!, வீட்டை பொறுத்தவரை தொலைக்காட்சி சேனலை மாற்ற பெரும்பான்மைகே உரிமை! அதனால் அதையே நானும் காண நேர்ந்தது!
ரஜினி, கலாநிதிமாறன், சங்கர் பற்றிய துதிகளையும் தாண்டி என்னை இப்பதிவை எழுத தூண்டியது விவேக் சொன்ன குட்டிக்கதை!
ஒரு முனிவர் 20 ஆண்டுகள் கடும்தவம் புரிந்து!. யோகா, தியானம் போன்ற பல கடின உடற்பயிற்சிகள் செய்து இறுதியில் தண்ணீரில் நடக்கும் வித்தையை கற்றாராம்! ஒருநாள் ஊர்மக்கள் முன்னிலையில் அந்த முனிவர் நீரில் நடந்து காட்டும் போது அவ்வழியே இன்னொரு சித்தர் வந்தாராம், இந்த முனிவரை பார்த்து அவர் சொன்னாராம் இதற்கு எதற்கு 20 வருடம், பேசாமல் பரிசலில் போயிருக்கலாமே என்று!
அரங்கத்தில் இருந்தவர்களுக்கு கதை இன்னும் முடியவில்லை என்ற நினைப்பா அல்லது விவேக்குக்கு ஏண்டா இந்த வேண்டாத வேலை என்ற கவலையா தெரியவில்லை, யார் முகத்திலும் ஈயாடவில்லை!
இருப்பினும் விவேக்கே கேட்டு கைதட்டல் வாங்கி கொண்டார்! நாம் காசு கொடுத்து சினிமாவுக்கு போய் சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்கிறோமே அது போல!
கடும்தவம் புரிந்த முனிவர் செய்தது ஹார்ட் வொர்க்காம், பரிசலில் போக சொன்னது ஸ்மார்ட் வொர்க்காம்!, எதாவது மொன்னை கதைக்கு லாஜிக் தேவையில்லை தான், ஒரு நீதிக்கதை சொல்லும் பொழுதும் லாஜிக் இல்லாமல் தான் சொல்வோம் என்று சினிமாக்காரன் புத்தியை காட்டியிருக்கிறார் விவேக். வேலை அது வேலையாகவே இருக்கிறது, அதன் தேவையை பொருட்டு தான் ஹார்ட் வொர்க்கா, ஸ்மார்ட் வொர்க்கா என்பது முடிவு செய்யப்படுகிறது! அந்த முனிவரின் தேவை தண்ணீரில் நடப்பதா அல்லது ஆற்றை கடப்பதா!. இடையில் சொம்புடன் வந்து கருத்து சொன்ன அந்த பதிவர் ஸாரி சித்தர் யாராக இருக்கக்கூடும்!
ஸ்மார்ட்ய் வொர்க்குன்னா என்ன மாதிரி இருக்கனும்!
நான் ஒரு குட்டி கதை சொல்லட்டா!
ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார், மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்!
நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடைவிடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,.. சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன், ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி என்று கேட்டான்!.. நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன்!
மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை, மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான், மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான், ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை தீட்டி கொண்டிருந்தான்!
ஸ்மார்ட் வொர்க் என்றால் என்ன?
நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொன்னது போல் முதல் நாள் செய்த வேலையை மறுநாள் அதை விட குறைந்த திறனில் முடிக்க போடும் வியூகமே ஸ்மார்ட் வொர்க்! சாத்தியமானது தான் அனைத்து துறையிலும்!.
ஹார்ட் வொர்க் உங்கள் உடல் திறனை காட்டும், ஸ்மார்ட் வொர்க் உங்கள் மூளைத்திறனை காட்டும்!, இரண்டும் சேரும் போது அது உங்களுக்கு வெற்றியை காட்டும்!
****************************
டிஸ்கி:அவசரமா கருத்து சொல்ல டீநகர் வரைக்கும் போகணும், ஆட்டோ வருமா!
55 வாங்கிகட்டி கொண்டது:
இசை வெளியீடு விழாவுலேயே உளரிக்கொட்டுன விவேக்கு இன்னும் திருந்தலையா?
விவேக் சார்பா மொதோ வெட்டு
ம்ம்..ரஜினி அவர்கள் “ட்ரைலரே இப்படின்னா.. மெயின் பிக்சர்” என்று ஒரு அறையில் பேசுவதைப் போன்ற ஒரு காட்சியை, ட்ரெயிலருக்கு அடுத்து காட்டினார்கள். பாவமாக இருந்தது. அவரையும், சன் பிக்சர் இன்னும் என்ன செய்யப்போகிறதோ என்ற கவலை..
நான் எந்தக்காரியம் பண்னாலும், படம் பண்ணாலும் தமிழர்களுக்கு பெருமை தருவதாகத்தான் இருக்கும்!
அருமையான கதை ! விவேக் சொன்ன கதை கடுப்பை கிளப்பியது உண்மைதான்
விவேக் செய்த காரியத்தால் ஸ்மார்ட் வொர்க், ஹார்ட் வொர்க் குறித்து புரிந்து கொண்டேன்.
விவேக்கிற்கு நன்றி.
தொடருங்கள்.
விளக்கம் அருமை தல
"அவசரமா கருத்து சொல்ல டீநகர் வரைக்கும் போகணும், ஆட்டோ வருமா!"
குடும்ப தயாரிப்பையும் அதனோடு தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியையும் நீங்கள் கிண்டல் அடித்து இந்த பதிவை போட்டு இருப்பதால் நிச்சயம் கழக கண்மணிகளின் ஆட்டோ உங்கள் வீடு தேடி வரும் என்பதை உருட்டுக்கட்டையுடன் சொல்லிகொள்கிறோம்
எதையோ சொல்லப் போயி வாய் தவறி உண்மை சொல்லிட்டார் போல. இல்லை படத்துல சான்ஸ் தரவில்லையென்று காலை வாரி விட்டாரோ என தோன்றுகிறது.
நண்பர்கள் மூலம் கேள்விப் பட்ட செய்தி இது. நிகழ்ச்சியில் ரஜினிக்கு சொம்படிப்பதை விட கலாநிதி மாறனுக்குத் தான் (ரஜினி உட்பட) சொம்பு பயங்கரமாக அடிக்கப்பட்டதாமே !!..
பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும் என்பார்கள். உயிரோடு இருக்கும் பிணமான ரசினிகாந்து எம்மாத்திரம் .
அப்புறம் பாஸூ ... அம்பாணி முன்னேறுனது கூட ஸ்மார்ட்டு ஒர்க்குன்னு சொல்லுறானுங்க ... அப்படியா ?.
ஏமன் ல வெள்ளி நாணயத்தை உருக்கி வித்தது முதல் பி.எஸ்.என்.எல் ல திருட்டு கணெக்சன் கொடுத்து 1400 கோடி ஆடைய போட்டது வரைக்கும் எல்லாம் ஸ்மார்ட் நொர்க்கு தான் .
விவேக்..
சத்குரு ஜட்டி தேவுக்கு ஜட்டி துவைக்க ஆள் தேவை நு விளம்பரத்துக்கு போயிட்டு வந்தவன் தான் அந்த நாய்.
துப்பு கெட்டத் ---------- பசங்க ..
ஊர்ல இருக்கவன் காச ஆட்டையப் போட்டுக்கிட்டு பெரிய உழைப்புல உயர்ந்த மயிரு மாதிரி பேசிட்டுத் திரியிறானுங்க ..
செயலலிதா ஆட்சிக் காலத்துல பொம்பளய வச்சி தொழில் பண்ணுனவன் எல்லாம் இன்னைக்கு தொழிலதிபர்... தூ ..
விவேக் சொன்ன கதை ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னது :) அவர் ஒரு அஹம் கொண்ட யோகியை சந்திப்பார் , அந்த யோகி ராமக்ரிஷ்ணரிடம் நான் பனிரெண்டு வருடம் தவமிருந்து தண்ணீரின் மேல் நடக்கும் சித்தியை பெற்றேன் நீ பெரிய யோகி என்கிறார்களே நீ எதாவது செய் என்பார் அதற்க்கு ராமகிருஷ்ணர் சில காசுகளை செலவழித்து சுலபமாக ஓடக்காரர் மூலம் கடக்க வேண்டியதை பனிரெண்டு வருடம் உடலை வருத்தி மூடத்தனமாக இருந்தாய் என்று கூறுவார் .இக்கதையின் கரு தேவ இல்லாத , நோக்கம் இல்லாத விஷயங்களுக்கு . உங்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவிடாதீர்கள் என்று பொருள் .விவேக் மொக்க வர வர தாங்க முடியல .
உங்க கத சரியான விளக்கம் , நன்றி அருண்
விவேக் சொன்ன கதை ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னது :) அவர் ஒரு அஹம் கொண்ட யோகியை சந்திப்பார் , அந்த யோகி ராமக்ரிஷ்ணரிடம் நான் பனிரெண்டு வருடம் தவமிருந்து தண்ணீரின் மேல் நடக்கும் சித்தியை பெற்றேன் நீ பெரிய யோகி என்கிறார்களே நீ எதாவது செய் என்பார் அதற்க்கு ராமகிருஷ்ணர் சில காசுகளை செலவழித்து சுலபமாக ஓடக்காரர் மூலம் கடக்க வேண்டியதை பனிரெண்டு வருடம் உடலை வருத்தி மூடத்தனமாக இருந்தாய் என்று கூறுவார் .இக்கதையின் கரு தேவ இல்லாத , நோக்கம் இல்லாத விஷயங்களுக்கு . உங்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவிடாதீர்கள் என்று பொருள் .விவேக் மொக்க வர வர தாங்க முடியல .
உங்க கத சரியான விளக்கம் , நன்றி அருண்
//நீதிக்கதை சொல்லும் பொழுதும் லாஜிக் இல்லாமல் தான் சொல்வோம் என்று சினிமாக்காரன் புத்தியை காட்டியிருக்கிறார் விவேக். ///
ஹி ஹி ஹி ..!!
அதுக்கு உங்க கதையே நல்லா இருக்கு ..!!
நல்ல விளக்கம்... வர வர விவேக் தொல்ல தாங்க முடியல... எவ்வளவு வாங்கி கட்டினாலும் திருந்த மாட்டாங்க போலிருக்கே...
பார்க்கும் போது எனக்கும் அதே எரிச்சல்தான். எப்படித்தான் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம கை தட்டுங்கன்னு கேட்டு வாங்குறாங்களோ தெரியலை.
வர வர விவேக்கோட பேச்ச கேட்டாலே எரிச்சலா வருது!
நல்ல வேற நேத்து கவிதைங்கற பேர்ல எதையும் உளறி வைக்கல.
விவேக் அந்தக் கதை சொல்லிக் கொண்டிருந்தபோது,ரஜினியின் முக பாவங்களைக் கவனித்தீர்களா? படத்தில் சிரிக்க வைக்க முடியாவிட்டாலும்,அந்தக் கதை மூலம் சிரிக்க வைத்தார் என்பதே உண்மை :-)
ஹார்ட் வொர்க் உங்கள் உடல் திறனை காட்டும், ஸ்மார்ட் வொர்க் உங்கள் மூளைத்திறனை காட்டும்!, இரண்டும் சேரும் போது அது உங்களுக்கு வெற்றியை காட்டும்!
நல்ல தத்துவமுங்க
வால் அருமைய்யா... அப்புறம் பங்குசந்தை பற்றி பரபரப்பா ஒரு கட்டுரை எழுதிட்டுயிருக்கேன்.. wait and see
விவேக் மட்டுமல்ல, பார்த்திபனும் இது மாதிரி பொதுமேடைகளில் மொக்கை போடுவதில் படு கில்லாடியாக இருக்கிறார்.
நீங்க சொன்ன கதை சூப்பர்
விவேக் அந்த மாதிரி மாறி ரொம்ப நாள் ஆச்சுங்க... பலே பாண்டியா காமெடி பாக்கலையா நீங்க ?
தமிழ் மணம் ஓட்டுப் பட்டை ஏனோ என்னுடைய கூகிள் குரோம்-இல் வேலை செய்யவில்லை. ஒவ்வொரு முறையும் IE-இல் வந்து ஓட்டு போட வேண்டி இருக்கிறது...
நீங்க சொன்னது அருமையான கதை நண்பரே...ரொம்ப பிடிச்சிருக்கு.
நல்லா வேள, நான் இருக்குற எடத்துல இந்த மாதிரி பாத்து தான் தொலயனும்ன்னு கட்டாயம் இல்ல . . . தப்பிச்சேன்,
கதயும் உங்க கருத்தும் நல்லா இருந்தது,
சரிங்க, மருதைய பத்தி நாலு வரி எழுதிர்க்கேன், நேரமிருந்தா என்னோட ப்ளாக்ல வந்து பாருங்க . . .
தங்களுடைய பதிப்புகளின் புது வாசகன்... அருமையா எழுதுறீங்க... பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்...
குறிப்பாக இந்த பதிவை அமோதிக்கிறேன்... கருத்தொத்துகிறேன்...
இது இது இதை தான் எதிர்பார்த்தேன். சூப்பர் நண்பா
nice explanation sunil thanks
ஹார்ட் வொர்க.....ஸ்மார்ட் வொர்க்....ரொம்ப ஈசியா புரிய வைச்சிட்டீங்க........வாழ்த்துக்கள்
//அதனால் அதையே நானும் காண நேர்ந்தது!//
எங்க ஏரியா கேபிள் ஆபிஸ்ல பவர் கட். அதனால great escape.
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......
உங்க குட்டிக்கதை அருமையா நீதி சொல்லுது வாலு !
தல ... விவேக் ரஜினியை கடுப்படிக்க சொல்லியிருப்பாரோ ..???
கொஞ்சம் ... நம்ப பக்கம் வாங்க தல ...ஈயாடுது ... கும்மி பாஸ் மட்டுந்தான் வந்தாரு ...
குட் ஸ்டோரி..!
உ.த. சொல்லிட்டாரு ...
ரெண்டு குழந்தை பெத்துக்கறது Hard Work. ரெண்டோட நிறுத்திக்கறது Smart Work..
புரியவேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
மக்கள் எந்த ரியாக்க்ஷனும் இல்லாம இருக்க...இவர் கைதட்ட கேட்டு வாங்கியது... நல்ல காமெடி!
உண்மையான உதாரணம் விளக்கம் இது தான்:
ஹார்ட்வோர்க் என்பது வைகோ செய்த தேர்தல் பிரச்சாரம்- தெரு தெருவாக பொதுக் கூட்டம் , சுவர் விளம்பரம் ஊர்வலம் .
ஸ்மார்ட் வோர்க் என்பது நமது அண்ணன் ரித்திஷ், மாணிக் தாக்கூர் போன்றோர் செய்தது.
எந்திரனில் விவேக் நடிக்கிறாரா.
மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை, மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான், மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான், ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை தீட்டி கொண்டிருந்தான்!
//
கோடாரிய தீட்டும் நேரத்தில. ”ஓய்வில்லாம் மரம் வெட்டிவனின் மரத்தை, எடுத்து நம்ம விறகு கட்டில.. சேர்த்திருந்தால் அதுக்கு பேர் என்ன பாஸ்.. ஹி..ஹி
இது ஒரு வீணாபோன படமாக தெரிகின்றது...ரஜனிக்கு மண்டையில் தான் முடி இல்லை...மூளையிலுமா நரம்பில்லை? மற்றவர் பணத்தை சிலவழிக்கும் இந்த சங்கர் போன்றவர் இருக்கும்வரை, மூடவர் மூடவர் தான். Let wait and see how this movie gonna FLOP. And I believe, Rajni going to learn another lesson from this movie.
இப்படிக்கு,
-வீணாபோனவன்.
//முதல் நாள் செய்த வேலையை மறுநாள் அதை விட குறைந்த திறனில் முடிக்க போடும் வியூகமே ஸ்மார்ட் வொர்க்! சாத்தியமானது தான் அனைத்து துறையிலும்!.//
ஸ்மார்ட்.... வாழ்த்துகள் தல
கோடாலிக் கதை
ரொம்ப நல்லாயிருந்தது!
பாராட்டுகிறேன் வால் இந்த இடுகையை,
அடிக்கடி இந்த மாதிரி எழுதுங்க.
வாழ்த்துகள்
ஒரு சாதாரண ரசிகனை எப்படியெல்லாம் ஏமாற்றி பணம் சம்பாதிப்பது என்பதை சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் நுணுக்கமாக அறிந்துள்ளார். திரைப்படத்திற்கு விளம்பரமாக வெளியிடப்படும் டிரெயிலருக்கே விழா எடுத்து வசூல் செய்தவராயிற்றே..
விழாவும் அதற்கான காரணமுமே அபத்தமானதாக இருக்கும்போது மற்றவற்றை நாம் என்னவென்று சொல்வது??
//ரஜினி, கலாநிதிமாறன், சங்கர் பற்றிய துதிகளையும் தாண்டி //
உக்கார உடமாட்டீங்கறானுகப்பா!
//தண்ணீரில் நடக்கும் வித்தையை கற்றாராம்! //
நாமதான் தண்ணில பைக்கே ஓட்டுவமே தல!
//பேசாமல் பரிசலில் போயிருக்கலாமே என்று!//
பரிசல் காரன் ரொம்ப்ப பிஸியா இருக்கற ஆளு ! அவர்லாம் டிராப் பண்ண மாட்டாரு!
//இருப்பினும் விவேக்கே கேட்டு கைதட்டல் வாங்கி கொண்டார்!//
அவர் கலைஞ்சரின் உடன் பிறப்பால்லவா!
//சொம்புடன் வந்து கருத்து சொன்ன அந்த பதிவர் ஸாரி சித்தர் யாராக இருக்கக்கூடும்!//
பதிவர்ல சொம்ப்பும் கருத்துமா அலையறதுக்கு ரெண்டு பேரு இருக்காங்க தல! ஆனா சித்தர்ன்னா அதுல ஒருத்தருக்கு மட்டும் லின்க் இருக்கலாம்!
//முதல் நாள் செய்த வேலையை மறுநாள் அதை விட குறைந்த திறனில் முடிக்க போடும் வியூகமே ஸ்மார்ட் வொர்க்! சாத்தியமானது தான் அனைத்து துறையிலும்!.//
இரண்டு குழந்தைன்க்களோட நிறுத்திடுங்க தல விலைவாசியெல்லாம் எகிறிகிட்டு இருக்கு!
//ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை தீட்டி கொண்டிருந்தான்!//
இத வேற எதானும் பலான மேட்டருக்கு பொருத்திப் பாத்து கெக்கே பிக்கேன்னு சிரிக்கக்கூடாது!
நல்ல கதை தல , அப்புறம் என்ன ஆச்சு ???
அந்த முனிவரின் தேவை தண்ணீரில் நடப்பதா அல்லது ஆற்றை கடப்பதா! // நச்!
ரசித்துப் படித்தேன்.
கலக்கல் போஸ்ட்.
;)
நான் எட்டாம் classil படிக்கும் போதே வாலு சொன்ன கதையை காலை ப்ரயரில் சொல்லிடாங்க
arumaiyana padhivu mr.arun avargaley
rajesh.v
Post a Comment