மணமகள் தேவை!

பெயர்                         : சியாம்சுந்தர்

தந்தை பெயர்                  : ராமச்சந்திரன்

தாயார் பெயர்                  : ஆனந்தம்

சொந்த ஊர்                    : ராஜபாளையம். (தற்போது சென்னையில்)

பிறந்த தேதி                   : 23 June of 1980


படிப்பு                         : டிப்ளமோ (DEEE)
                              தற்போது பி.இ பகுதி நேரமாக (இறுதியாண்டு) அண்ணா    பல்கலைகழகத்தில் படிக்கிறேன்

வேலை                       : Hardware Design Engineer in Cornet Technology India Pvt Ltd, Chennai.

சம்பளம்                       : ஆண்டுக்கு, Rs.350000/

உயரம்                        : 180செமீ

எடை                         : 62 கிலோ

தெரிந்த மொழி                : தமிழ், ஆங்கிலம், தெலுங்கு

உடன் பிறந்தோர்              : தம்பி ஒருவர்.


திருமணத்திற்க்கு பெற்றோர் ஆதரவு : இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம், அதனால் இல்லை என்றே வைத்துகொள்வது நலம்!, அப்பா இல்லை. அம்மா மட்டும் தான்

பெண்ணிடம் எதிர்பார்ப்பது :     சொந்தக்காலில் நிற்க வேண்டும், தாலி, மத சடங்குகளின்றி (குறிப்பாக இந்து மத சடங்குகள்) சாதி மறுப்பு திருமணத்திற்க்கு சம்மதிப்பவராக இருக்கவேண்டும்.
பெண் எந்த சாதி, எந்த மதத்தை சேர்தவராகவும் இருக்கலாம்.


.
*************************


இவரது மேட்ரிமோனியல் ஐடி! அதில் கூட சாதி, மதம் முக்கியமில்லை என்றே தெரிவித்திருக்கிறார்!, அவரது புரோபைலை முதன் முதல் வெளியிடுவதில் பெருமையடைகிறேன்!

*************************

விருப்புமுள்ள நண்பர்கள் உங்களை பற்றிய தகவல்களை அனுப்பலாம்!

18 வாங்கிகட்டி கொண்டது:

கொல்லான் said...

வால்,
எங்களை மாதிரி சீனியர் இளைஞர்களையும் கண்டுக்கிடலாம்ல?

தமிழ் பொண்ணு said...

யோவ் நல்ல நேரம்.. நான் கூட உனக்கு தான் பொன்னு கேட்டியோ நினைச்சு அப்டியே ஷாக் ஆகிட்டேன்..

ஹேமா said...

வாலு....பதிவு வித்தியாசமாயிருக்கு.ஆனா தேவையான பதிவுதான்.
சிலசமயம் நல்லதே நடக்கும்.

நீச்சல்காரன் said...

நண்பரே,
தெழுங்கு/தெலுங்கு

மதுரை சரவணன் said...

புதுஐடியா சூப்பர்... எதிர்பார்க்கும் தகுதியுடைய பெண் கிடைக்க வாழ்த்துக்கள்

vinthaimanithan said...

மொதல்ல "அடப்பாவி சைடு பிஸினஸை இங்கேயே ஆரம்பிச்சிட்டாரா?!" ன்னு நெனச்சிட்டேன். கடசில வெச்சீரு பாரும் விஷயத்த.... நல்ல விஷயங்காணும் ஓய்... அடிக்கிற கூத்துக்கு ஒரு சின்ன பரிகாரம்... நடத்துங்க இந்த மாதிரி தொடந்து! வாழ்த்துக்கள்யா 'வாலு'க்கும் மாப்பிள்ளைக்கும்!

கல்வெட்டு said...

WoW.....
அவருடைய புரபைலில் பார்த்தது...

//
i am independent, open minded, straight forward, i respect human values and respect others views, i hate any kind of social discrimination (like economic, religious, caste, gender & racial, etc..) i believe women has equal right in family & society.

i am an atheist, rationalist (my family is hindu), and i m against the dowry system.
i hate Brahmanical customs and rituals. i hate hinduism as it is origin of caste system
i believe, the caste system could abolished only by inter-caste marriages. so i am looking for inter-caste marriage.
i dont follow any religious rituals in my life! i would like to do marriage with out any Hindu rituals. (i ve strong negation of marriage markers such as mangal sutra/thali, sindoor, etc.. since these markers are male chauvinistic, and only for women.)
Also i am a communist sympathizer.

i m working as Hardware Design engineer in Cornet Technology India Pvt Ltd.

its really a tedious job to describe your self. Drop me a mail to know better half......

i m searching for a Special friend who s not a stubborn, curious, with social concern, talkative :) horoscope seekers, religious fanatic's please excuse!
//

ஆச்சர்யமான மனிதர்..
சிறப்பாக வாழவேண்டும் வாழ்த்துகள்

பொன் மாலை பொழுது said...

வால்!
ரொம்ம்ப நல்ல செய்திதான். ஆனால் எல்லோரும் நினைப்பது போல நம் பெண்கள் இன்னமும் இது போன்ற மன நிலைக்கு வரவில்லை. இந்த ப்ரோபைலை கண்ட எந்த ஒரு நேர்மையாளரும் (பெண்கள்) சற்று திகைத்துத்தான் போவார்கள் அவர்கள் நினைத்தாலும், விரும்பினாலும் அவர்களால் இதற்கேற்ற முடிவை எடுக்க இயலாது. ஏனெனில் நம் பெண்கள் இன்னமும் தங்களின் அறிவற்ற அல்லது புரிந்து கொள்ளுதல் இல்லாத தன்மைக்கு அடிமைகளாகவே உள்ளனர்.
சுடிதார் போட்டுகொல்வதும், செல் போனில் பேசியபடி இருப்பதும், கம்பூட்டர் கம்பெனியில் வேலை செய்வதும், சக ஆண்களுடன் சகஜமாக பழகுவதாக "பாவ்லா " செய்வதும், அட்சய திருதியை நாளில் பொன் நகை வாங்குவதும், தோழிகளுடன் சினிமா, ஹோட்டல் என்று சுற்றுவதும் மட்டுமே மட்டுமே விடுதலை என்ற இந்த பொய்யில் அவர்களுக்கு மன நிறைவு உண்டு. மற்றபடி இது போன்ற ஒரு சந்தர்ப்பம் எதிரில் வந்தால் விலகி நிற்கும் கோழைகள்தான்.
திரு ஜெயகாந்தன் அவர்கள் சொன்னது முற்றிலும் உண்மை. வழிவிட்டாலும், ஒதுங்கி நின்றாலும் கூட நம் பெண்களுக்கு இன்னமும் இந்த திடமும் பக்குவமும் வளரவில்லை. அதற்க்கு நிறைய புறக்காரணிகள் உள்ளன. அவைகள் என்னவென்று
வால் பையனுக்கு சொல்லிதேரியவேண்டுவதில்லை. ஆனாலும் இந்த முகம் தெரியாத அன்பருக்கு அவரின் விருப்பம் போல வாழ்கை துணை அமைய வேண்டும் என மனமார விரும்புகின்றேன். நலமே வாழ்க.

பனித்துளி சங்கர் said...

புதுமை தீ பொறி . தொடருங்கள் நண்பரே வாழ்த்துக்கள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

தொடருங்கள் நண்பரே வாழ்த்துக்கள்

சௌந்தர் said...

நல்லது தல

மங்குனி அமைச்சர் said...

அடுத்த படி ..................

கண்ணா.. said...

நல்ல ஆரம்பம் வால்..

சியாம்சுந்தருக்கும் அவர் தேடும் பெண் விரைவில் அமைய வாழ்த்துக்கள்

சீனு said...

வால்,

இத முக்கியமா சொல்லனும்.

Partner Preference Specifications:
Marital status: Unmarried, Widow

காலப் பறவை said...

வாழ்த்துக்கள்

செல்வநாயகி said...

ஆச்சர்யமான மனிதர்..
சிறப்பாக வாழவேண்டும் வாழ்த்துகள்.

முகமூடி said...

// i believe, the caste system could abolished only by inter-caste marriages. so i am looking for inter-caste marriage. //

இதை கண்டவுடன் இது போன்றதொரு நிகழ்வு ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு இணைய புரட்சியாளர் தனது கல்யாணத்திற்கு நண்பர்கள் மூலமாக பெண் தேடினார். இணையத்திலும் தான் விரும்பும் பெண் தகுதிகள் குறித்து இப்படி சொல்லியிருந்தார். அதாவது தான் ஒரு சாதி மறுப்பாளன் என்பதால் கலப்பு மணத்தை எதிர்நோக்குவதாகவும் கண்டிப்பாக பெண் தன் சாதியல்லாதவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். பின்பு திருமணம் முடிந்தவுடன் தன் துணைவி குறித்த குறிப்பு ஒன்றில் தன் நோக்கம் நிறைவேறியதாகவும், அதிலும் அப்பெண்ணின் தாய் தந்தையர் கலப்பு மணம் செய்தவர்கள் என்றும் அப்பெண்ணின் நெருங்கிய சொந்தம் (தாய்மாமன்?) முற்றிலும் வேறுபட்ட சாதியை சார்ந்தவர் என்றும் பெருமையாக குறிப்பிட்டிருந்தார். சாதி மறுப்பாளன் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அவர் எத்தனை பேரின் சாதியை ஆராய்ந்து இருக்கிறார் என்பதில் உள்ள முரண்பாடுகள் புரிகிறதா?

**

ஆக சாதி மறுப்பாளர்களும் ஏன், தன் சாதியை தவிர்த்த ஏனைய சாதிகளில் பெண் தேடுகிறார்கள். இங்கும் ஏதோ ஒரு விதத்தில் சாதி என்பது வெளியே வருகிறதே? “பெண்ணில் சாதி அறிய ஆர்வமில்லை” என்று சாதியை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் தன் மனதிற்கு விருப்பப்படும் பெண் - திருமணத்திற்கு பிறகு மட்டுமே அவர் தன் சாதி என்பது அறிய வந்தால் கூட அதை கண்டு கொள்ளாமல் - வேண்டும் என்பதாக மட்டும் தேடுவது இயலாதா?

**

உங்களின் இக்குறிப்பிலுள்ள மணமகனுக்கு அவரின் கொள்கைகளுக்காக பாராட்டுகளும், தோழமையுடன் இருக்க ஒரு துணை வேண்டும் என்று தேடும் அவர் விருப்பம் நிறைவேறி நல்லதொரு வாழ்க்கை துணை கிடைத்து திருமணத்திற்கு பின்பு தோழமையா கொள்கையா என்று சிக்கலான நிலைப்பாடு வரும் காலகட்டங்களில் கொள்கை என்ற வறட்டு பிடிவாதத்தில் நிற்காமல் தோழமைக்கு மதிப்பு கொடுத்து சந்தோஷமாக வாழ்க்கை அமைய வாழ்த்துக்களும்...

முகமூடி said...

முந்தைய பின்னூட்டத்தில் நான் தொட்டுச்சென்ற திருமணம் குறித்த சுட்டி - http://suguna2896.blogspot.com/2008/02/blog-post.html

இப்போதுதான் கூகிள் சர்ச்சில் கண்டுபிடித்தேன். நான் கேட்ட கேள்வியை ஏற்கனவே மறுப்பாளரை சிலர் கேட்டிருந்தனராம்.. ஆனால் அதை தனக்கு சாதகமான ஒரு வகையில் புரிந்து கொண்டு வித்தியாசமான ஒரு பதில் சொல்லியிருக்கிறார். நான் இங்கு கேட்டிருக்கும் கேள்வி அவரின் புரிதலில் இருந்து வேறுபட்டது என்பது என் புரிதல்.

!

Blog Widget by LinkWithin