ஐஸ்கிரீமை வறுத்து சாப்பிடலாம் வாங்க!

நிஜமாலும்,மெய்யாலும், சத்தியமாலும் இது சீரியஸான பதிவு தான்!

**********************
தற்சமயம் வருத்தபடாத வாலிபர் சங்கத்துல எழுதிகிட்டு இருக்கேன்! இந்த ஒரு மாசம் முழுவதும் அங்கே எழுதனும், அதனால இங்க எழுதுறது குறைவா தான் இருக்கும்!(இல்லாட்டி மட்டும் எழுதி தள்ளிருவனாக்கும்), முதல் முறை வித்தியாசமா சமையல் குறிப்பு! எப்படியிருக்குன்னு செஞ்சு சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க!(கொஞ்சம் வால்தனமா தான் இருக்கும்)

திரும்பவும் சொல்றேன் இது சீரியஸ் மேட்டர்!

தேவையான பொருள்கள்!

தக்கணூண்டு மைதா மாவு!
தக்கணூண்டு கார்ன்ப்ளவர்!

கண்டிப்பா ஐஸ்கீரிம் வேணும்!

அப்புறம் பிரட்ஸ்கிரம்ஸ் ரொம்ப முக்கியம், பேக்கரியில கேட்டாலே கிடைக்கும், இல்லைனா பிரட்டை காய வச்சு உதுர்த்துக்கலாம்!

உப்பு, மொளகாபொடியெலெல்லாம் உங்க வீட்ல இருக்குல்ல, ரைட்டு அதெல்லாம் பத்திரமா அங்கேயே இருக்கட்டும், நமக்கு அதெல்லாம் தேவைப்படாது!

முதல்ல அடுப்ப பத்த வச்சுகோங்க, பச்சதண்ணி மாதிரி இருக்குற எண்ணையில இத செஞ்சா எண்ணை மொத்தமும் வேஸ்டா போயிரும், அதுனால நல்லா சூடா இருக்கனும்!

இப்போ செய்முறை, மைதாவையும், கார்ன்ப்ளவரையும் தக்கணூண்டு தண்ணி விட்டு பசை மாதிரி கலக்கனும், ஐஸ்கிரிமை எடுத்து உருட்டி எல்லா பக்கமும் அந்த பேஸ்ட் படுறாமாதிரி பண்ணனும், ரொம்ப வேகமா பண்ணனும், உங்களால முடியலைனா ரங்கமணிகளை செய்ய சொல்லுங்க! புயல் மாதிரி செயல்படுவாங்க!

இப்போ அப்படியே எடுத்து பிரட்ஸ்கிரம்ஸ்ல உருட்டனும், எல்லா பக்கமும் படுறாமாதிரி, அப்போ தான் ஐஸ்கிரீம் எண்னையில படாம இருக்கும், இப்போ அப்படியே எடுத்து கொதிக்கிற எண்னையில போடனும், ஒண்ணரை நிமிசத்துகுள்ள எடுத்துறனும், அதுக்கு மேல இருந்தா ஏழரை ஆயிரும்! உடனே எடுத்து பரிமாறிரனும், இல்லைனா உருகி போன ஐஸ்கீரிம் தான் மிஞ்சும்!




*********************

இதை செஞ்சு பாருங்க, பிடிச்சிருந்தா (மட்டும்) உங்க பதிவுல போட்டுக்கலாம், கொஞ்சம் உங்க எழுத்து நடைக்கு மாத்திகோங்க!

60 வாங்கிகட்டி கொண்டது:

அகல்விளக்கு said...

சரிதான்...

அகல்விளக்கு said...

அய்யய்யோ...

மீ த பர்ஸ்ட்டா....

விளங்கினா மாதிரிதான்...

Rajan said...

பரந்தாமனுக்கு ஸ்தோத்திரம்

Rajan said...

நீங்க மானத்த கெடுத்துருவீங்க போலயே

அகல்விளக்கு said...

வ.வா. சங்கத்துக்கு வாழ்த்துக்கள் தல...

சிவாஜி said...

:)

வால்பையன் said...

//நீங்க மானத்த கெடுத்துருவீங்க போலயே //

இமேஜுன்னா என்ன விலைன்னு கேக்கனும் தல! இவிங்க எப்ப எதை செய்வாங்கன்னே தெரியலையேன்னு எல்லோரும் மண்டைய பிச்சிகனும்!

வால்பையன் said...

// rajan RADHAMANALAN said...

பரந்தாமனுக்கு ஸ்தோத்திரம்//

பரந்தாமன் யாரு, பரசுராமனுக்கு சொந்தகாரரா?

Rajan said...

அதுக்கில்ல ! ஏற்க்கனவே அப்பிடி இதுல இது வேறயான்னு தான்

வால்பையன் said...

//அதுக்கில்ல ! ஏற்க்கனவே அப்பிடி இதுல இது வேறயான்னு தான்//

நாம சமையல் குறிப்பு எழுதலைனா யாராவது வந்து நம்மை ஆணாதிக்கவாதின்னு சொல்லிருவாங்க தல! டேவிட் வள்ளுவரே சமையல் பத்தி சொல்லியிருக்காராம்!

Rajan said...

என்னன்னு

Rajan said...

//டேவிட் வள்ளுவரே சமையல் பத்தி சொல்லியிருக்காராம்!//
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதடின்னா ?

Unknown said...

ஏன் இப்படி..??

வால்பையன் said...

////டேவிட் வள்ளுவரே சமையல் பத்தி சொல்லியிருக்காராம்!//
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதடின்னா ? //

இருக்கலாம் தல, சரியா தெரியல தேடி எடுத்து தர்றேன்!

Rajan said...

//இருக்கலாம் தல, சரியா தெரியல தேடி எடுத்து தர்றேன்!//

வேணாம் ரெண்டு வார்த்தை திட்டுனா அனானிகளே சொல்வாங்க

Kumky said...

அன்பின் வால் பையன்.,
இடுகையை படித்தேன்.,
உங்களுக்கும் அற்புதமாக சமையல் குறிப்புக்கள் எழுத வருவது குறித்து எமக்கு மிக்க மகிழ்ச்சி.
அன்பு நண்பர் ராதாவை விசாரித்ததாக சொல்லவும்.
வேறென்ன...மீண்டும் மீண்டும் நன்றி.

பின்னோக்கி said...

நெசமாத்தான் சொல்றீங்களா ?

சிவக்குமரன் said...

அய்யய்யோ ! அய்யய்யோ! கொல்றாங்களே?!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அடடே ! நல்லாத்தான் இருக்கு.
ரொம்ப நன்றி வால்.

ஒரு காசு said...

படிக்க நல்ல தான் இருக்கு.
மொதோ நீங்க செஞ்சிட்டு எப்படி வந்திச்சின்னு சொல்லுங்க, வால்.

அகல்விளக்கு said...

//நிஜமாலும்,மெய்யாலும், சத்தியமாலும் இது சீரியஸான பதிவு தான்//

எல்லாஞ்சரி

உண்மையாலுமே சீரியஸான பதிவா தல???

அகல்விளக்கு said...

//பச்சதண்ணி மாதிரி இருக்குற எண்ணையில இத செஞ்சா எண்ணை மொத்தமும் வேஸ்டா போயிரும்,//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அதுக்குத்தான் அடுப்ப பத்த வைக்க சொன்னீங்களா???

ஒரு காசு said...

என்னய்யா இது, ஓட்டுப் போடுறதுக்கு தமிழ் மணத்தில சேறனும் போல இருக்கே ?

அறிவிலி said...

கம்ப்யூடர்ல முட்டிகிட்டு ஸ்க்ரீன் டேமேஜ் ஆயிப்போச்சு வாலு.

cheena (சீனா) said...

வாலு எங்க கத்துக்கிட்டே - நானு கேள்விப்பட்டதே இல்லையே

நல்லாருக்கு - அடுத்த தடவ ஈரோட் வரச்ச் நீ பண்ணிணாலும் சரி - வூட்ல தங்க்ஸ் பண்ணினாலும் சரி - எனக்கு வேணும் - சரியா

நல்வாழ்த்துகள்

Chitra said...

உப்பு, மொளகாபொடியெலெல்லாம் உங்க வீட்ல இருக்குல்ல, ரைட்டு அதெல்லாம் பத்திரமா அங்கேயே இருக்கட்டும், நமக்கு அதெல்லாம் தேவைப்படாது!
............ vaalu touch!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

//இங்க எழுதுறது குறைவா தான் இருக்கும்!(இல்லாட்டி மட்டும் எழுதி தள்ளிருவனாக்கும்)//
என்ன தல,
சபைல சால்னா உடைச்சுடீங்க?

ஜெட்லி... said...

வறுத்த ஐஸ்சா???

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

rajan RADHAMANALAN said...///வேணாம் ரெண்டு வார்த்தை திட்டுனா அனானிகளே சொல்வாங்க///
இல்ல, ஐஸ் கிரீம்ல முட்டை இருக்கும், அதனால எப்படி நீ பதிவு போடலாம்? என்று இன்னும் கொஞ்ச நேரத்துல அனானி எல்லாம் வந்துடுவா.
நோக்கு ஏண்டா அம்பி கவலை?
வந்தோமா, காபி சாப்டோமா, போய்க்கோ,
மச மசன்னு நின்னுண்டு இருக்க...

சங்கர் said...

நிஜமாவே நல்லா இருக்குமா? நான் Try பண்ணி பாக்க போரேன்.........



-நவநீதசங்கர்

- இரவீ - said...

இங்கன வாழபழத்துல பஜ்ஜி போட்டு வெருப்பேத்துரானுங்க ...
அதுக்கு பழி வாங்க உங்க உதவி தேவை தல எனக்கு...

ஹேமா said...

வாலு எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு.செய்து பாக்கணும்.
அப்புறம்தானே இருக்கு உங்களுக்கு !

அது சரி....தக்கணூண்டுன்னா என்ன ?

vasu balaji said...

ஒரு வேளை சூட்டுல இளகிட்டா ஃப்ரீசர்ல வைக்கலாமா வால்:)

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

இருந்தாலும் இருக்கும். ஒரு நாளைக்கு செய்துப்பார்த்துட வேண்டியதுத்தான். ஆனா அதுக்கு முன்னாடி ஒரு ஹாப் அடிச்சாத்தான் தைரியம் வரும் போல!

Anonymous said...

அய்யோடா :-( .

நட்புடன் ஜமால் said...

இது நிஜமா நிஜமா
அல்லது
நிஜமா நிஜமில்லையா

------------------

மலேசியாவில் ஐஸ்கிரீம் கோரிங்ன்னு விக்கிறாங்க - சாப்பிடத்தில்லை

(கோரிங் = ஃபிரை)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

சைவகொத்துப்பரோட்டா said...

வருத்த ஐஸ் க்ரீம் நல்லா இருக்கும். நான் சாப்பிட்டு இருக்கேன். இது மெய்யாலுமே "வறுத்த"
ஐஸ் க்ரீம் செய் முறைதானா?

பித்தனின் வாக்கு said...

ஆகா என்னது இது. ஜஸ்கிரீமை எண்ணெய்யில் பொரிக்கனுமா? நல்லவேளை சோத்தில இதை பிசைந்து சாப்பிடவும் சொல்லலை. ஆனா நல்ல வால் பதிவு தலைவா.
என்ன ஆச்சு இப்ப எல்லாம் நம்ம பதிவு பக்கம் வருவது இல்லை. கோவமா தல.

வால்பையன் said...

//என்ன ஆச்சு இப்ப எல்லாம் நம்ம பதிவு பக்கம் வருவது இல்லை. கோவமா தல. //

உங்களுடய வெள்ளிகிரிமலை ஆன்மீகபதிவு முடிஞ்சதும் வருவேன் தலைவா! புரியும்னு நினைக்கிறேன்!

எனக்கு யார் மேலயும் கோவம் வராது தல!

ஆரூரன் விசுவநாதன் said...

மலேசியாவில் இப்படி ஒரு ஐஸ்கிரிம் போண்டா சாப்பிட்டேன், நன்றாகத்தான் இருந்தது. செய்முறை பற்றி தெரியவில்லை...

Rajan said...

//மலேசியாவில் இப்படி ஒரு ஐஸ்கிரிம் போண்டா சாப்பிட்டேன், நன்றாகத்தான் இருந்தது. செய்முறை பற்றி தெரியவில்லை...//

எனக்கு தெரியும் அதோட பேரு
குலு குளு கூழ் !

ஜில் ஜில் ரோஜாமணி வீட்ல சாப்பிட்டு இருப்பீங்க

Rajan said...

அய்யய்யோ செய் முறை தெரிஞ்சிக்கறது ரொம்ப நல்லது ! மொதல்ல அத தெரிஞ்சுக்குங்க .... வால் பையன அணுகுங்க !

Anonymous said...

/எனக்கு யார் மேலயும் கோவம் வராது தல!//

சரக்கு மட்டும் வாங்கி கொடுத்தா அவரே கூட ஆன்மீக கட்டுரை எழுத ஆரம்பிச்சுடுவார்.

Rajan said...

//சரக்கு மட்டும் வாங்கி கொடுத்தா அவரே கூட ஆன்மீக கட்டுரை எழுத ஆரம்பிச்சுடுவார்.//

சரியா சொன்னீங்க

Ashok D said...

//அது சரி....தக்கணூண்டுன்னா என்ன ?//

ஹேமா தக்கணூண்டுன்னா தம்மாதுண்டு இது தெரியாதா

Ashok D said...

ஏன் வறுக்கனும் அப்படியே சாப்பிடலாமே..

Ashok D said...

me the 50th

Ashok D said...

50 அடிச்சதுக்கு கைதட்டுங்களபா..

Rajan said...

//ஏன் வறுக்கனும் அப்படியே சாப்பிடலாமே..//

வாங்க ! நேத்து தேடுனீங்க போல .... சாரி வூட்டுக்கு போயிருவேன் ஆறு மணிக்கு !

Ashok D said...

அப்போ வேலை நேரத்தல மட்டும் வேலைய பாக்கறன்னு சொல்லுங்க

Anonymous said...

ஆமாங்க நானும் சென்னையில் ஸ்கைவாக் என்ற காம்ப்ளக்ஸ்ல பார்த்தேன் சாப்பிடலை....

கலையரசன் said...

சரி.. சாப்டாச்சு.. அடுத்தது என்ன இப்ப???

Rajan said...

//சரி.. சாப்டாச்சு.. அடுத்தது என்ன இப்ப???//

சூப்பர் கேள்வி ! பதில் சொன்னா என்ன இன்டீசன்ட் பெலோன்றாங்க ..... இன்னாபா பண்றது !

Anonymous said...

:-)
அவினாசி ராஜசியாமளன்

அண்ணாமலையான் said...

"எல்லா பக்கமும் படுறாமாதிரி,"
இத சச்சின்ல விஜய், பிபாஷா உருண்ட மாதிரின்னு சொல்லலாமா?

Rajan said...

//அவினாசி ராஜசியாமளன்//

யாரோ பழைய மொக்க பிகர் விலாடுதுன்னு நெனைக்கறேன் தல !

Anonymous said...

எங்க மதத்தை சடியதாள இன்னிள இறுந்து அது மாரீ அசட்டுத்தனத்தை எள்ளாம்
நிருத்துற வறைக்கும் உன் பேச்சு கா

thamizhparavai said...

//நீங்க மானத்த கெடுத்துருவீங்க போலயே//
நான் மட்டும் தனியா வேறென்ன சொல்ல...நம்பிப் பதிவப் படிச்சது என் தப்பு....

வால்பையன் said...

பின்னுட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

!

Blog Widget by LinkWithin