குவாட்டரை குடித்தேன்:உடல்வலி நிவாரணம் 1/4

சென்ற மாதம் எனக்கு காது வலி வந்தது. அதன் விளைவாக நடுவிரல் வீங்கிக் கொண்டது. நீண்ட நேரம் கீழே தொங்க விட்டிருந்தால் வீக்கம் அதிகமாகி ஆயிரம் டைனோசர் கடித்தது போல் வலித்தது; கடுத்தது. விரலை கீழே தொங்க விடாமல் மேல் நோக்கி வைத்திருந்தால் வலியும் வீக்கமும் குறைந்தது. அதனால் நடுவிரலை எப்போதும் மேல்நோக்கி வைத்து மற்ற விரல்களை மடக்கி இருக்கும் ஸ்டைலிலேயே வைத்திருக்க வேண்டி ஆனது. ஆனால் இதை மற்றவர்கள் தங்களுக்குத் தரப்படும் அவமரியாதை என்று எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

என்னை அடுத்து புஜ்ஜிகுட்டிக்கும் காதுவலி வந்து அதற்கும் நடுவிரல் வீங்கியது; ஆயிரம் டைனோசர் கடித்தது போல் கடுத்தது(உனக்கு எப்படி தெரியும்னு கேட்க கூடாது). அது வேறு கத்தல் திலகம் என்பதால் ஒரே ரகளை. (அதுக்கிட்ட கேட்டால் ‘வாலுதான் குரைத்தல் திலகம் ’ என்னும். அது குடிப்பதில்லை என்பதால் அதோட தரப்பு கேட்பார் இல்லாமல் போகிறது). வலியால் அது குரைப்பதை பார்த்துப் பார்த்து சலிப்படைந்து என் வலி பற்றி வெளியில் சொல்வதையே நிறுத்திக் கொண்டேன். ஒயின்ஷாப்பில் கேட்டதில் இந்த வலி சரக்கடித்தால் சரியாகும் என்றார். சரக்கடித்தல் என்பது குவாட்டரா, ஆஃபா, ஃபுல்லா என்று கேட்டதற்கு என்னை ஒருமாதிரி பார்த்து விட்டு “ஓரிரண்டு ஃபுல்கள் ” என்றார்.

மற்ற ஒயின்ஷாப்பில் விசாரித்த போதும் அந்த பதிலே கிடைத்தது. இரண்டு ஃபுல்லை எப்படி அடிப்பது? பல சமயங்களில் ராவா அடிக்கலாமா என்ற அளவுக்கு வலி. இதற்கிடையில் டிசம்பர் 31 அன்று நியூஇயர் கொண்டாட்டத்துக்கு டாஸ்மாக் போய் சரக்க அடிக்கவேண்டும்.

” சரக்கடிக்க வேண்டுமானால் டாஸ்மாக் செல்ல வேண்டுமே; இந்த விரலை வைத்துக் கொண்டு எப்படிச் செல்வது? ” யோசித்தேன்.

எப்படியோ மடக்கி மடக்கி மறைத்து சேர்ந்து விட்டோம். ஒயின்ஷாப் வாசல். சக குடிமகன்கள் சரக்கு வாங்கும் நேரம்.

என்னைப் பார்த்து ” என்னா வேணும்? ” என்று கேட்டார். நான் புஜ்ஜிகுட்டியை சுட்டிகாட்டி ” கடந்த ஐந்து நாட்களாக மாற்றி மாற்றி இதுக்கு கொட்டாவி வந்து நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது சேல்ஸ்மேன். இதை சரிப்படுத்த வேண்டும் ” என்றேன். அப்போதைய பிரச்சினையான காதுவலியை பற்றியும் சொன்னேன்.

” அப்படியா? புஜ்ஜிகுட்டி இதுபற்றி எதுவும் சொன்னதில்லையே? ” என்று சொல்லி விட்டு, கீழே குனிந்து ஒரு உருட்டைகட்டை மாதிரியான ஒரு தடியை புஜ்ஜிகுட்டியின் தலையில் ஒன்னு போட்டார்.

அடுத்து, சில அடிகள் காதில் விழுந்தது. அப்போது காலை மணி பண்ணிரெண்டு. காலையிலிருந்து அவருடைய நடமாட்டங்களை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். காலையிலிருந்தே ஒரு நிமிடம் கூட விடாமல் ராவாக சரக்கு அடித்தது போல் அங்கே ஒரு ஆட்டம், இங்கே ஒரு கும்மாளம் என்று ஆடிக் கொண்டிருந்தார். ஒரு வாய் சைடிஷ் கூட சாப்பிட்டிருப்பாரா என்பது சந்தேகம். இன்னும் பலர் சரக்குவாங்க காத்துக் கொண்டிருந்தார்கள். சரக்கு வாங்கி மீண்டும் பாருக்குள் செல்ல வேண்டும். அநேகமாக இரவு 12 மணிக்குத்தான் அவரால் சைடிஷ் சாப்பிடமுடியும்.

என்னைப் பார்த்து அந்த அற்பமான சிரிப்புடன் “புஜ்ஜிகுட்டிக்கு சரியாயிருச்சு. உனக்கும் ரெண்டு போடட்டுமா? ” என்று கேட்டார்.

“சேல்ஸ்மேன், இன்னும் நீங்கள் காலையிலிருந்து சாப்பிடக் கூட இல்லை என்று நினைக்கிறேன்... ”

“ஆமாம் என்ன இப்போ... ”

என்னதான் சேல்ஸ்மேன் என்றாலும் சரக்கடிச்சா சைடிஷ் சாப்பிடனும் தானே? இருந்தாலும் நாள் பூராவும் சைடிஷ் தண்ணீர் இன்றி குடிமக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தப் மகாகுடிமகன் மீது ஒரு குடிகாரனுக்கு தன் சரக்கின் மீது எத்தனை அன்பும், பாசமும் சுரக்குமோ அப்படி ஒரு உணர்வு ஏற்பட்டு என் மனம் நெகிழ விடை பெற்றேன்.

சொன்னால் நம்பவே மாட்டீர்கள். ஆனால் என் கண்களால் அந்த அதிசயத்தைக் கண்டேன். புஜ்ஜிகுட்டி எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சர்வ சாதாரணமாக தாவி தாவி ஓடியது.

வீடு திரும்பும்போது என் நடுவிரல் நீட்டி கொண்டிருப்பது பற்றி சேல்ஸ்மேனிடம் ஒன்றும் சொல்லவில்லையே என்று நினைத்தேன். மறுநாள் விடிந்ததும் சேல்ஸ்மேனுக்கு ஒரு போன் பண்ணினேன்.

போன் பேசியதும் நேரில் வந்து உருட்டைகட்டையால் காதிலும், கையிலும் செமத்தியா அடித்தார் அன்றே, அந்தக் கணமே காதுவலி சரியாகி விட்டது. நடுவிரலும் கொஞ்சம் கொஞ்சமாகக் மடங்கிப் போனது.

டாஸ்மாக் பார் என்ற பெயரால் அழைக்கப்படும் அந்த அற்புதமான சொர்க்கப்பூமியை நீங்கள் பார்க்க விரும்பினால் தினமும் காலை 10 மணியிலிருந்து மாலை 10 மணி வரை தெருவுக்கு தெரு பார்க்கலாம். அங்கே குடித்து கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுடனும் கலந்து கொள்ளலாம். அவர்களோடு பேசலாம். உங்கள் குடிபிரதாபங்களை சொல்லலாம். அவரது ஆலோசனைகள் பெறலாம். அடிதடி இலவசம்.

தொடர்புக்கு:டாஸ்மாக், ஊரெங்க்கும்


*****************

டிஸ்கி:எங்கேயோ பார்த்த மயக்கம்!

56 வாங்கிகட்டி கொண்டது:

Chitra said...

வீக்கம் அதிகமாகி ஆயிரம் டைனோசர் கடித்தது போல் வலித்தது;..............தண்ணி அடிச்சா jurassic park தெரியும் போல.

Ashok D said...

எங்க தலைவரு அளவுக்கு உங்களுக்கு நய்யாண்டி வரலயே :P

உண்மைத்தமிழன் said...

ஏம்ப்பா இந்த அசோக் தம்பிக்கு யாராச்சும் மண்டகப்படி கட்டுங்கப்பா..! இவர் என்னைக்குத் திருந்தப் போறாரு..? வர்ற ஆளுக எல்லாம் இதே மாதிரி அப்பிராணியாவே வந்தா எப்படி? எத்தினி பேருக்குத்தான் புத்தி சொல்லி புரிய வைக்கிறது..?

Ashok D said...

உ.த. அண்ணே.. நீங்களும் சாருக்கு againsta... ho no... நேத்தே நான் tired ஆகிட்டேன்

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

என்ன இது? மண்ட காயுது...

காலேலையே என்ன மூணு லார்ஜ் போட.... ம்ம்ம்ம் அதுக்கு தான் இங்க வழி இல்லையே!

வால்பையன் said...

//நீங்களும் சாருக்கு againsta.//

அவரு அளவுக்கு நையாண்டி வரலைன்னு புட்டு அவரை போய் எதிரான்னு கேட்டா என்ன அர்த்தம், உங்களுக்கு மட்டும் தான் பகடி வருமா!? அவரு செய்யக்கூடாதா?

காமெடி பண்ணா சிரிக்கண்ணே, சீரியஸ் ஆகாதிங்க!

Ashok D said...

:)))))) ஓக்கேவா.....

பித்தனின் வாக்கு said...

அண்ணே திரிஸ்டார் ஓட்டலுக்குப் போய் மாசம் ஒரு தடவை குடித்தாலும் நிம்மதியா குடிங்க. ஆனா டாஸ்மார்க் மட்டும் போகாதீங்க. மட்டமான சரக்கு. வெறும் கலர்த்தண்ணீல எஸ்சென்ஸ் மற்றும் ஸ்பிரிட்டை ஊத்தி கலப்படம் பண்றாங்க. வயிறு சீக்கிரம் கெட்டுப் போகும். சத்தியமா டாஸ்மார்க் மட்டும் குடிக்காதிங்க. நல்ல பார்ல நல்ல பிராண்ட் அயிட்டமா வாங்கி சாப்பிடுங்க. நன்றி.

ஹேமா said...

வாலு அந்த சரக்கு பேர் சொல்லுங்க.
இங்க யாருக்காச்சும் காது வலி கை வலி வந்தா நான் உங்க பேர்ல வைத்தியம் சொல்லிக் குடுக்கிறேன்.

Ashok D said...

சரக்கு பேரா ஹேமா... கள்ள சாராயம்

பின்னோக்கி said...

போட்டோ போட்டிருக்கலாம். நாங்களும் பார்த்து 1000 டைனோசரா இல்ல கம்மியான்னு சொல்லியிருப்போம்.

Paleo God said...

D.R.Ashok said...
சரக்கு பேரா ஹேமா... கள்ள சாராயம்//

திருட்டு vcd யோட பெரியப்பா தானே ... (நல்ல சாராயம்.. சித்தப்பாவா மாமாவா ??) :))

Ashok D said...

நல்ல சாராயம் வயத்துக்கு நல்லது.. so அது ...பெரியம்மான்னு வெச்சிடலாம்

குடுகுடுப்பை said...

யப்பா நானும் போய் ஒரு ரவுண்டு உட்ரேன்

sathishsangkavi.blogspot.com said...

வாலு இது கொஞ்ச நாளா குடிக்காம இருந்தேன் இதை படிச்சதும் தோணுது......

பூங்குன்றன்.வே said...

என்னை மாதிரி வாழ்க்கைல சரக்கே பார்க்காத ஆளை இந்த இடுகைய படிச்சு சரக்கடிக்க வைச்சுட்டாங்கலே....இதை கேட்க இங்க யாரும் இல்லையா???

Romeoboy said...

யப்பா சாமி உன்னையா மாதிரி ஒரு ஆள பார்த்தது இல்ல. செம காமெடியா இருக்கு பதிவு .. சிரிச்சு சிரிச்சு வயறு வலிக்குது.

காலைலதான் ஒரிஜினல் படிச்சேன்.. இங்க வந்தா டுப்ளிகேட் .. ஹா ஹா ஹா சூப்பர் தல

எறும்பு said...

//D.R.Ashok said...

எங்க தலைவரு அளவுக்கு உங்களுக்கு நய்யாண்டி வரலயே//

ஐயையோ உங்க தலிவர் நையாண்டி பண்ணாரா... நான் கூட ரெம்ப சீரியஸ்னு நினைச்சு படிச்சுட்டேனே..
;))

Thamira said...

இது ஏதாவது எதிர்பதிவா என்ன? மேஜிகல் ரியாலிஸம் மாதிரி இருக்குது..

vasu balaji said...

:)). நடத்துங்க வால்..முடியல:))

Subankan said...

நல்ல ஐடியா வால், நடக்கட்டும்!

கண்ணா.. said...

வால்

குவாட்டரை பத்தி நீங்க அடிக்கடி எழுதுவதால்/பின்னூட்டுவதால் ஓரு வித சலிப்பு தோன்றுகிறது.

மற்றவிஷயங்களையும் எழுதுங்கள்

பிகு:

நான் சொம்பை தூக்கிட்டு வரவில்லை..

VISA said...

MAN MAN MAN U R THE MAN


ஐயோ வால் உங்க கைய கொடுங்க.
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பிளாஸ்டிங் பதிவு உங்க கிட்டேருந்து.
சாருவோட அந்த கன்ட்ராவி சாமியார் விளம்பரத்த
பாத்த உடனே ஏதாவது எழுதியே தீரணுமுன்னு இருந்தேன்.
பிறகு ஒரு குவாட்டர் அடித்து குப்புற படுத்ததில் பாதி கோபம் போய்விட்டது. இப்போது உங்கள் பதிவை படித்த பிறகு பரம் திருப்தி.வாழ்க வால்.

கண்ணா.. said...

ஆஹா...இது ஏதோ எதிர்பதிவா.......

இது தெரியாம நான் வேற குறுக்க புகுந்திட்டேனே...

நடத்துங்க...நடத்துங்க..........

ஆனா புரியிற மாதிரி லிங்கு கொடுத்திட்டு நடத்துங்க........

Unknown said...

வனக்கம், நல்ல பதிவு
இப்பத்தான் ஆரம்பம்

கண்ணா.. said...

இப்போதான் பார்த்திட்டு வார்ரேன்..

செம கலக்கல் வால்.

இதுல அவரு சிஷயபுள்ளைக வந்து அவரு தலைவரு அளவுக்கு இல்லைன்னு வீராப்பு வேற..

:)))

தாரணி பிரியா said...

அவ்வ் இது எதிர்பதிவா பின்னூட்டம் எல்லாம் படிச்சாதான் பதிவே புரியுது என்ன கொடுமை வால் இது :)))

வினோத் கெளதம் said...

Ethirppathivunu mattum teriyuthu..aana enna matternu antha pathivai paartha thaan teriyum..! :)

Unknown said...

//.. அவ்வ் இது எதிர்பதிவா பின்னூட்டம் எல்லாம் படிச்சாதான் பதிவே புரியுது என்ன கொடுமை வால் இது :))) ..//

டிஸ்கி போட்ட நீங்க ஒரு முன்னுரை போட்டா குறஞ்சா போய்டுவிங்க..

தர்ஷன் said...

பின்னூட்டங்களைப் பார்த்தால் இப்போதெல்லாம் சாருவுக்கு நிறைய ஹிட்ஸ் கிடைப்பதில்லை என்றே தோன்றுகிறது.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

நச்!

அப்துல் சலாம் said...
This comment has been removed by the author.
அனானி(32 கேள்வி கேட்பவர்) said...

:))))))))))

அகல்விளக்கு said...

டேக்ஸ் பேயர்சுக்கு ஒரு சங்கம் ஆரம்பிச்சிடலாம் போல.....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

Iyappan Krishnan said...

"பட்டை"ய கெளப்பிட்ட வாலு.. சும்மா "ஜின்"னுன்னு இருந்துச்சு. சும்மா ராவா படிச்சு முடிச்சுட்டேன்.

Thekkikattan|தெகா said...

:))) செம லூட்டி ... அந்த நடுவிரல் மேட்டர் கூடுதல் சிறப்பு ;-)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ரைட்டு.

thamizhparavai said...

ஒரிஜினல் படிக்காததால, இது ஒரு நல்ல புனைவு மாதிரி இருந்தது...படித்துவிட்டு வருகிறேன்...

thamizhparavai said...

இதன் மூலத்தையும் படித்துத் தொலைத்துவிட்டேன்...
இவரு இதுக்கெல்லாம் எவ்வளவு ஃபீஸ் வாங்குறாருன்னு தெரியலையே.. நான் சாருவைச் சொன்னேன்...

Prabhu said...

ஒரிஜினல் படிச்சப்போயே காமெடியா இருந்தது!

Unknown said...

//தமிழ்ப்பறவை said...
இதன் மூலத்தையும் படித்துத் தொலைத்துவிட்டேன்...
இவரு இதுக்கெல்லாம் எவ்வளவு ஃபீஸ் வாங்குறாருன்னு தெரியலையே.. நான் சாருவைச் சொன்னேன்...

//

இளையராஜாவைப் பத்திப் பேசுறதுக்கே 2000 ரூபா கேக்குறாரு. இதுக்கு எவ்வளவு வாங்கியிருப்பாரோ தெரியல.

நசரேயன் said...

ஒரு ரவுண்டு போனாத்தான் இடுகை புரியும்

sarvan said...

ஐயோ! சான்சே இல்ல . செம நக்கல்!

சைவகொத்துப்பரோட்டா said...

அண்ணாத்த, "அத்த" படிச்சதக்கு அப்பால மறுக்கா இத்த படிச்சேன், சரியான எதிர்கும்மி,
இதுதான் சாபமா?

அப்துல் சலாம் said...

தல சாரு.. சாரு... என்று கூறியவுடன் சாருஹாசன் என்று நினைத்துவிட்டேன் இது வேற யாரோவாம்.....

Marimuthu Murugan said...

அவரையும் விட்டுவைக்காம
பட்டயக் கெளப்புறீங்களே.......
(நல்ல வேளை...எதேச்சையா ஒரிஜினலைப் படிச்சுட்டு இங்க வந்ததால புரிஞ்சுது...)

மேவி... said...

kavithai nalla irukku

(ithu cut copy paste pinnottam illai )

மேவி... said...

link thanthu irukkalam

Marimuthu Murugan said...

டிஸ்கி யில "சத்தியமா இது ஒரிஜினல் சரக்கு இல்லை" ன்னு இருந்தா நல்லா இருக்கும்.

Thenammai Lakshmanan said...

புரியுது ஆனா புரியல வால்பையன்

என்னது இது இப்படி ஒரு இடுகை???

கல்வெட்டு said...

வாவ் என்ன அருமையான சேல்ஸ்மேன் வாய்த்திருக்கிறார் உங்களுக்கு. :-)))


வால்,
நீங்கள் காய்ச்சும் பட்டைச் சாராய சரக்கை அமெரிக்கா , அய்ரோப்பாவில் உங்கள் சேல்ஸ்மேன் விற்றுத்தறுவாரா? ஏன் கேட்கிறேன் என்றால் , வலைப்பதிவில் ஒருவர் அவர் எழுதிய சில கதைப்புத்தகங்களை ஒரு சாமியாரின் அருளால் அமெரிக்கா , அய்ரோப்பாவில் மார்க்கெட்டிங் செய்ய முயற்சி செய்தார். அது பலித்துவிட்டது. அப்ளிகேசன் போட்ட 3 வாரத்தில் சரக்கை விற்க ஏற்பாடு செய்யப்படும்.

பார்க்க அருள்வாக்கு:

http://charuonline.com/Sep2009/KadavulaiKanden.html

நான் கேட்ட வரம் இதுதான்: ஸீரோ டிகிரி என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். அது ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது. டெஹல்கா போன்ற முக்கியமான பத்திரிகைகளில் அது பற்றிய உற்சாகமான மதிப்புரைகள் வந்துள்ளன. ஆனால் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் அதை எடுத்துச் செல்ல ஆள் இல்லை.

இந்த வரத்தைக் கேட்டு மூன்று வாரங்களுக்குள் உலகின் மிக முக்கியமான, 200 ஆண்டுகள் பழமையான ப்ரிட்டிஷ்/அமெரிக்கப் பதிப்பகம் ஒன்றிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது.

ந.ஆனந்த் - மருதவளி said...

வால், மறுபடியும் தண்ணி அடிக்க தொடங்கி விட்டீரே..உம்மை என்ன செய்வது?

கெட்ட பையங்க (யாரையும் குறிப்பிட்டு இல்ல) கூட அதிகமா சேராதீர்கள். வேறென்ன சொல்வது?

Radhakrishnan said...

ஹா ஹா! மிகவும் ரசித்தேன். வலி நீங்கியதன் விவரம் அருமை.

RADAAN said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

வால்பையன் said...

கலாய்த்ததில் பங்கெடுத்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

Unknown said...

தான் பேரு வச்ச நாய்களுக்கு (நாய்-ன்னு சொன்னா அவருக்கு கோபம் வருமாம்!!!) யாருமே சோறு வைக்கலைன்னு ஒரு எழுத்தாளர் குவாட்டர் அடிச்சி புலம்பறாரே, அது பத்தி உங்க கருத்து?

!

Blog Widget by LinkWithin