இன்றுமுதல் டீ நான்கு ரூபாய்!

டீ இனி 3.50 திலிருந்து நான்கு ருபாய்! ஐம்பது பைசா தானே ஏறியிருக்கிறது என நாம் நினைக்கலாம்! பழைய பேப்பர் வாங்குபவனிடம் நாலணாவுக்கு சண்டை போடும் மார்வாடிகளை பார்த்தும் நமக்கு காசின் அருமை தெரிந்ததில்லை! முதலில் அதை சொல்ல எனக்கு தகுதி இல்லாததால் நேரடியாக விசயத்துக்கு வருவோம்!, செப்டம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து எங்கள் ஊரில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் நடுத்தர, விளிம்பு நிலை மனிதர்களின் அத்யாவிசய புத்துணர்வு பானமான டீ மற்றும் காப்பியின் விலை உயர்ந்துள்ளது!



பாலின் விலை உயர்ந்ததே காரணம் என நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை, சரி வேறென்ன சொல்லப்போறேன்! பசு மாட்டின் பால் இரண்டு ரூபாயும், எருமை மாட்டின் பால் நான்கு ரூபாயும் உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அதை பின் அலசுவோம், இப்ப டீ மேட்டருக்கே வருவோம்! ஒரு டீக்கு ஐம்பது பைசா உயர்ந்துள்ளது, ஒரு லிட்டர் பாலில் நாற்பது டீ போடலாம்!, நான்கு ரூபாய் லிட்டர் பாலுக்கு ஏறியிருக்கிறது, ஆனால் டீ கடைக்கு லாபம் எவ்வளவு மடங்கு!(இதையெல்லாம் உட்கார்ந்து கணக்கு போட்டா உனக்கு மண்டை வெளுக்காம, கருக்கவாடா செய்யும்னு கேக்குற நண்பர்களுக்கு தேங்ஸ்)

ஆவின் என்பது தமிழக் அரசின் கட்டுபாட்டில் இருக்கும் ஒரு நிறுவனம்!, அங்கே வாட்ச்மேன் வேலை கிடைத்தால் போதும் லச்சாதிபதி ஆகிவிடலாம் என கிராமப்புறங்களில் இன்றும் சொல்வார்கள்! அப்படி என்ன தான் நடக்குது அங்கே! விலாவரியாக பார்ப்போம்!

அறிக்கையில் சொல்லியுள்ளது போல், ஆவின் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து லிட்டர் கணக்கில் பால் கொள்முதல் செய்வதில்லை, அனைத்தும் பாலிலிருக்கும் கொழுப்பு(fat) கணக்கை வைத்தே! அதனால் தான் பசும்பால் விலை குறைவாகவும், எருமைப்பால் விலை அதிகமாகவும் இருக்கிறது! பசும்பாலில் குறைந்த பட்சம் இரண்டிலிருந்து அதிகபட்சமாக ஐந்து வரை கொழுப்பு இருக்கும், அதிக கொழுப்பு வரும் பொழுது பாலின் அளவு குறைந்து விடும் என்பது பால் உற்பத்தியாளர்களுக்கு இருக்கும் சாபக்கேடு!, எருமைப்பாலில் நான்கிலிருந்து எட்டு வரை கொழுப்பு இருக்கும், இங்கேயும் அதே அளவு பிரச்ச்னை உண்டு!

கொழுப்பு அளவிடும் எலக்ட்ரானிக் இயந்திரம்!




கடைசியாக் வந்த தகவல்படி கொழுப்புக்கு ஒரு சதவிகிதத்திற்கு 2.60 காசுகள் வீதம் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது! ஆனால் இது வரை அதிகபட்ச கொழுப்பு உள்ளே பாலே தனியார் அளித்த ஆரோக்கியாவின் நாலரை பால் மட்டுமே! அந்த நாலரை அதிலுள்ள கொழுப்பு! தமிழக அரசு அளிக்கும் பாலில் இரண்டையிலிருந்து மூன்றுக்குள் இருக்கும்!
பாலிருந்து கொழுப்பை வெண்ணையாக எடுக்கும் முறையில் அதை எடுத்து தனியாக கிரீம் என்று விற்று விடுவார்கள்!

எட்டு சதவிகதம் கொழுப்பு உள்ள பத்து லிட்டர் பாலில் முழுவதும் கொழுப்பை நீக்கி விட்டு மீண்டும் அதில் நான்கு சதம் கொழுப்பு உள்ள பத்து லிட்டர் பாலை ஊற்றினால் அதில் எத்தனை சதவிகிதம் கொழுப்பு இருக்கும்!, அந்த சக்கையை தாம் நாம் குடித்து கொண்டு இருக்கிறோம்!, இதை பற்றி முழுமையான கணக்குகள் தணிக்கை செய்யப்படுவதில்லை என தகவல்! தகவலறியும் சட்டத்தின் கீழ் கேட்டுப்பெற வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்!

பாலிலிருந்து கொழுப்பை பிரித்தெடுக்கும் இயந்திரம்!




2.60 காசிலிருந்து விலையேற்றப்பட்டாலும் இன்னும் அதற்குறிய சட்டபூர்வ அறிக்கை வரவில்லையாம்! அதனால் பழைய விலைக்கே பால் கொள்முதல் நடைபெறுகிறது, ஆனால் பால் மட்டும் விலையேறிவிட்டது! எது எப்படியோ முன்னருக்கு தற்பொழுது பால் உற்பத்தியாளர்களுக்கு லாபம் தானே என்று கேட்பவர்களுக்கு, மாட்டு தீவனத்தின் விலை உயர்வை எந்த அரசாங்கமும் கண்டுகொண்டதாக தெரியவில்லை!

பால் உற்பத்தியாளர்கள் அடிப்படையில் விவசாய தொழிலை சார்ந்தவர்கள்! விளைச்சல் குறைவாக இருக்கும் நேரத்தில் அல்லது வருமானம் இல்லாத நேரங்களில் இது தான் அவர்களுக்கு உதவியாக இருக்கும்! கிராமப்புறங்களில் ஆவினை யாரும் நம்புவதில்லை, நேரடியாக பால் கறப்பவரிடமே பால் வாங்கி கொள்ளலாம்! நகரப்புறங்களிலும் இதை ஊக்கப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன்!

விவசாயிகளிடம் நாம் செய்யும் நேரடி கொள்முதலே அவர்களுக்கு முழுமையான லாபத்தை தரும்! நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை கூன விட வேண்டாம்!

79 வாங்கிகட்டி கொண்டது:

sriram said...

ஐயையோ வாலுக்கு ஏதோ ஆகிப்போச்சு
சீக்கிரம் ஓடியாங்க...
யார் இத மண்டபத்துல எழுதிக் கொடுத்தாங்க வாலு??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

’’Your comment has been saved and will be visible after blog owner approval.//

அடி ஆத்தி எப்போலேருந்து இந்த கூத்து??

geethappriyan said...

அருமை நண்பர் வால்பையன்
நல்ல பதிவு.
சென்னை மாதிரி ஊர் டீ கடைகளில் பாலில் ஒன்றுக்கு மூன்று தண்ணீர் சேர்ப்பார்கள்.
மேலும் பால் கொழ கொழவென்று இருக்க கலப்பட மாவும் கலபார்கள்.
அது சிறு நீரக கல்லை உருவாக்கும்.
சிங்கிள் டீ நான்கு ரூபாய் ஆனாலும்
மக்கள் டீ கடையில் வாசம் செய்ய த்தான் போகின்றனர்.

தமிலிஷ் தமிழ்மணத்தில் ஒட்டு போட்டாச்சு

Anonymous said...

சூப்பர். எப்படி வாலு இந்த ஆவேஷம் வந்துது?
தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி நாளை எழுதப்போகிறேன். படியுங்கள். உதவி தேவை என்றால் செய்ய தயார். வெட்டி பதிவு போடாமல் உருப்படியான பதிவு போட்டதுக்கு வாழ்த்துக்கள்

கிருஷ்ண மூர்த்தி S said...

தனியார் நிறுவனங்களுடன் ஆவின் தரத்தில் போட்டியிடுவதில்லை. விலை உயர்வில் மட்டுமே, அதுவும், சமீப காலமாக, திமுக அரசின் இன்னொரு சாதனையாக, அதாவது 'சொல்லாமலேயே உயர்த்துவது" சேர்ந்து கொண்டிருக்கிறது. பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்றால், தாழ் தளம், உயர் தளம், அப்புறம் தளமே இல்லாத காற்றுத் தளம், இப்படி ஏதாவது ஒருபெயரில் பஸ்களை இயக்கி, அறிவிக்கப் படாத கட்டண உயர்வு. ஒரு பக்கம் இலவசம், இன்னொருபக்கம் சத்தமே இல்லாமல் பைக்குள் கைவிட்டு பிக்பாகெட் அடிக்கிற மாதிரி ஒரு அரசு நிர்வாகம்!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் வராது! வெறும் மழுப்பலான அறிக்கை தான் வரும்!

ரொம்ப நோண்டினா, உடன்பிறப்போட டாடா சுமோ வரும்!

ப்ரியமுடன் வசந்த் said...

// நகரப்புறங்களிலும் இதை ஊக்கப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன்!//

ரிப்பீட்டு....

ஆமா அண்ணே எப்போல இருந்து இப்பிடி ?

அமர பாரதி said...

பால் விலையேற்றத்துக்கு கவலைப் படுவதற்கு வாழ்த்துக்கள் வால்.

//விவசாயிகளிடம் நாம் செய்யும் நேரடி கொள்முதலே அவர்களுக்கு முழுமையான லாபத்தை தரும்// உண்மைதான். ஆனால் நடை முறையில் நகரங்களில் இது சாத்தியமில்லை.

வால்பையன் said...

////விவசாயிகளிடம் நாம் செய்யும் நேரடி கொள்முதலே அவர்களுக்கு முழுமையான லாபத்தை தரும்// உண்மைதான். ஆனால் நடை முறையில் நகரங்களில் இது சாத்தியமில்லை. //

உழவர் சந்தை சாத்தியமாயிற்றே!
எதையும் நேர்மறை எண்ணங்களோடு சிந்திப்போமே!

ஜெட்லி... said...

வால் சென்னையில் ஏற்க்கனவே டீ நாலு ரூபாய் தான்
எனக்கு என்னமோ இங்கே அஞ்சு ரூபாய் ஆக்கிடுவாங்க
நினைக்கிறேன்....

நான் said...

அப்பாடி நம்ம மக்களும் யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க?

Unknown said...

<<<
வால் சென்னையில் ஏற்க்கனவே டீ நாலு ரூபாய் தான்
எனக்கு என்னமோ இங்கே அஞ்சு ரூபாய் ஆக்கிடுவாங்க
நினைக்கிறேன்....
>>>

ஆக்கீட்டாங்க

Sabarinathan Arthanari said...

இன்றைய இடுகை கலக்கல்.


இது போன்ற சமூக பதிவுகளை அடிக்கடி உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள்.

Ashok D said...

//வால் சென்னையில் ஏற்கனவே டீ நாலு ரூபாய் தான் //

பால்?

கூல் டிரிங் 8-10 rs. அசல் விலை: Rs.1.80

வாட்டர் பாக்கெட் 3-4Rs. here in tasmac.
அசல் வி. 25-33 பைசா/பாக்கெட்

நந்தாகுமாரன் said...

4.50 boss and that is one of the reasons why I drink only whiskey

வால்பையன் said...

//4.50 boss and that is one of the reasons why I drink only whiskey //

எனக்கும் டீ, காபி சாப்பிடும் பழக்கமில்லை! காரணம் பால் என்பது கன்றுகளுக்கு என நினைப்பவன் நான்!

இப்போ புரியுதா நான் ஏன் விஸ்கி குடிக்கிறேன்னு!

:)

SUMAZLA/சுமஜ்லா said...

சர்க்கரை விலையேற்றம்?

//எட்டு சதவிகதம் கொழுப்பு உள்ள பத்து லிட்டர் பாலில் முழுவதும் கொழுப்பை நீக்கி விட்டு மீண்டும் அதில் நான்கு சதம் கொழுப்பு உள்ள பத்து லிட்டர் பாலை ஊற்றினால் அதில் எத்தனை சதவிகிதம் கொழுப்பு இருக்கும்!, //

கொழுப்பு ஜாஸ்த்தி ஆயிடுமோ?!

Anonymous said...

ஆமா அண்ணே எப்போல இருந்து இப்பிடி ? :)))

Maximum India said...

சமூக சிந்தனை கொண்ட பதிவு. வாழ்த்துக்கள்!

இந்தியாவில் விவசாயம் பெருமளவுக்கு வளராமல் போனதற்கும், உணவுப் பொருட்களின் விலைவாசி அதிகமாகிப் போய் மக்களில் பலர் கால் வயிறு அரை வயிறு மட்டுமே சாப்பிடுவதற்கும் இடைத்தரகர்களே காரணம். அமுல் மற்றும் ஈ-சௌப்பல் போன்ற திட்டங்களின் வெற்றி, விவாசயிகளிடம் நேரடி கொள்முதல் நாட்டிற்கே நல்லது என்பதை உறுதி செய்கிறது.

நன்றி.

Anonymous said...

ஆமா தம்பி எப்போல இருந்து இப்பிடி ? :))

Admin said...

//அமர பாரதி said...
பால் விலையேற்றத்துக்கு கவலைப் படுவதற்கு வாழ்த்துக்கள் வால்.
//



பால் விலை விலையேற்றத்துக்கு வாழ்த்துக்களா. தாங்க முடியல்ல

Admin said...

இன்று இலங்கையில் நாளுக்கு நாள் எல்லாமே விலையேற்றம். எங்களுக்கு எல்லாமே சகஜமாகிவிட்டது.

பீர் | Peer said...

நானே பால்மாடு வாங்கி நேரடியாக நுகர்வோருக்கு விற்க இருக்கிறேன். எத்தனை பேர் வாங்க தயாராக இருப்பார்கள் என்பது சந்தேகமே. காரணம், கொழுப்பு. நுகர்வோருக்கு அல்ல, பாலில் இருக்கும் கொழுப்பு. பதப்படுத்தப்பட்ட பாலில் அதிக கொழுப்பு இருப்பதால், அதையே நகரவாசிகள் விரும்ப தொடங்கிவிட்டனர், கற்பூர வாசனை தெரியாமல்.. ஆனால் கிராமத்தினருக்கு அதன் அருமை தெரிந்திருக்கிறது.

தினமும் என் வீட்டில் 1 லிட்டர் பசும் பால் வாங்குகிறோம். வீட்டிற்கு வந்து தரப்படுகிறது. அது 1 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்காக. மற்றவர்களுக்கு ஆவின்தான். குடிக்கிற டீ கெட்டியா இருக்கணும்ல... :)

Menaga Sathia said...

//ஐயையோ வாலுக்கு ஏதோ ஆகிப்போச்சு
சீக்கிரம் ஓடியாங்க...
யார் இத மண்டபத்துல எழுதிக் கொடுத்தாங்க வாலு??// ஹா ஹா

நல்லதொரு பதிவு.இப்பலாம் நல்லா எழுதுறீங்க வால்..

puduvaisiva said...

நல்ல பதிவு வாலு வாழ்த்துக்கள் !!!


"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் வராது! வெறும் மழுப்பலான அறிக்கை தான் வரும்!

ரொம்ப நோண்டினா, உடன்பிறப்போட டாடா சுமோ வரும்!"

:-))))

very nice krishnamurthy...

ஊர்சுற்றி said...

//நகரப்புறங்களிலும் இதை ஊக்கப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன்!//

கொஞ்சம் கடினம்தான், ஆனா செய்யமுடியும்னு நினைக்கிறேன்.

@Sriram//ஐயையோ வாலுக்கு ஏதோ ஆகிப்போச்சு
சீக்கிரம் ஓடியாங்க...
யார் இத மண்டபத்துல எழுதிக் கொடுத்தாங்க வாலு??//

ஹிஹிஹி....

Suresh Kumar said...

நல்ல பதிவு விலையேற்றம் என்பது ஒன்றும் புதிது அல்ல . இந்த விலைஎற்றத்தையாவது அறிவித்து செய்தார்களே அது பாராட்ட பட vendiyathu thaan . இல்லையென்றால் பேருந்து கட்டணத்தை போல பொடி மாற்றி டிக்கெட் விலையை கூட்டவில்லையே .

சிந்திக்க வேண்டிய பதிவு

Unknown said...

//இன்றுமுதல் டீ நான்கு ரூபாய்! //


ஓசியில டீ வாங்கி குடுச்சாலும் நாலு ரூவாயா.......??




ஆவலுடன் ,

லவ்டேல் மேடி,
துணை செயலாளர் , ஈரோடு கிளை .
( முன்னாள் துணை செயலாளர் , கேத்தி கிளை , உதகை மாவட்டம் )
த.ஷ.கி.மு.பே ( தலைவி.ஷகிலா.கில்மா.முன்னேற்ற.பேரவை)

NILAMUKILAN said...

உங்க பதிவுகள ஓரமா ஒக்காந்து அமைதியா படிச்சிட்டு வாரேன். இந்த பதிவுக்கு தான் பின்னூட்டம் இடனும்னு தோணிச்சி. பதிவு அப்படி. தலைப்பை பாத்துட்டு இதுவும் ஒரு வெட்டியான வால் பதிவுன்னு நெனச்சேன். படமெல்லாம் போட்டு நல்ல கருத்துள்ள பதிவா போட்டுருக்கீக. வாழ்த்துக்கள்.

அது சரி(18185106603874041862) said...

நாகா மக்கள் கட்சி ஆட்சி செய்யும் நாகாலாந்திலே டீ ஆறு ரூபாய்...காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் டீ ஏழு ரூபாய் முப்பத்தைந்து பைசா..நாட்டின் தலைநகராம் டெல்லியிலே சாதாரண தெருக்கடையில் எட்டு ரூபாய்...பா.ஜ.க ஆளும் கர்நாடகத்திலே ஒரு டீ ஒன்பது ரூபாய்....லண்டனிலே ஒரு டீ நூறு ரூபாய் எழுபத்தைந்து காசு...அமெரிக்காவிலே ஒரு டீ சுமார் எண்பது ரூபாய்...எம்.ஜி.ஆர் ஆண்டபோது தமிழ்நாட்டிலே ஒரு டீ இரண்டரை ரூபாய்...இன்றைய மதிப்பிலே இருபத்தைந்து ரூபாய் என்று பொருளாதார வல்லுநர்கள் சொல்கிறார்கள்...

அதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல், மக்கள் நல கழக அரசு மீது மட்டும் குறை சொல்வது புகைந்த மனங்களின் பொச்செரிச்சல் என்று சொல்லியும் தெரிய வேண்டுமா உடன்பிறப்பே??

(இப்படியெல்லாம் உங்க பேர சொல்லாம கலக உடன்பிறப்பு ஒரு கடுதாசி எழுதனுமா தல?? யார்க்கிட்ட கணக்கு கேக்கிறீங்க?? கணக்கு பத்தி யாரு பேசினாலும் புடிக்காது...தெரியுமில்ல??)

அப்துல்மாலிக் said...

ஒரு லிட்டர் பாலுக்கு சமமா ஒரு லிட்டர் தண்ணீர் சேர்ப்பது அதிலே உள்ள கொழுப்பை எடுக்கதானோ??

ஹேமா said...

நல்ல சமூகச் சிந்தனை.ஓ...பால் விலை கூடிப்போச்சா?அதுக்கு 4-5 ரூபா கொடுத்து ஒரு தேநீர் வாங்கினா என்ன ஆகும்.ஒரு நாளைக்கே எவ்வளவு ஆகிப்போகும்.வீட்ல வச்சுக் குடிச்சா கொஞ்சம் மலிவா இருக்கும்தானே !அதுக்காக விஸ்கி குடிக்கலாமோ வாலு.

thamizhparavai said...

நல்ல பதிவு... நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டேன்...நன்றி...

செல்லாதவன் said...

இந்த விலை உயர்வுக்கு மைனாரிட்டி தி.மு.க அரசுதான் காரணம் என்று அம்மா சொல்லாமல் இருந்தால் சரி.

Unknown said...

அருமையான பதிவு தல..

//.. மாட்டு தீவனத்தின் விலை உயர்வை எந்த அரசாங்கமும் கண்டுகொண்டதாக தெரியவில்லை ..//

வாங்கும் பால் காசில், பாதி தீவனத்திற்கு(இங்கு தீவனம் என்பது தவிடு, புண்ணாக்கு மற்றும் பருத்திக்கொட்டை மட்டுமே) போகிறது..

மீதி உள்ள காசில், இதர தீவனங்கலான சோளத்தட்டு, வைக்கோல் பில் மற்றும் கடலைக்கொடிக்கு போக ஒன்றும் மிஞ்சுவதில்லை..

கீழை ராஸா said...

ஒரு ரூபாய்க்கு அரிசி தரும் போது ஒரு ரூபாய்க்கு டீ தந்தால் என்ன?

Vidhoosh said...

சரியான நேரத்தில் சரியான பதிவு.

ரொம்பவே நன்றாக எழுதியுள்ளீர்கள் அருண். :) வாழ்த்துக்கள்.
(comment moderation - சபாஷ்)
--வித்யா

அகல்விளக்கு said...

//விவசாயிகளிடம் நாம் செய்யும் நேரடி கொள்முதலே அவர்களுக்கு முழுமையான லாபத்தை தரும்! நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை கூன விட வேண்டாம்! //

செம மேட்டரு வாலு...

Raju said...

\\உழவர் சந்தை சாத்தியமாயிற்றே!
எதையும் நேர்மறை எண்ணங்களோடு சிந்திப்போமே!\\

எங்க ஊர்ல உழவர் சந்தை பல வருஷமா பூட்டித்தான் கெடக்கு...!
தலைவர் வந்து, தொறந்து வச்சதோட சரி.

மணிஜி said...

/பாலிலிருந்து கொழுப்பை பிரித்தெடுக்கும் இயந்திரம்!//

வாலிலிருந்து??

SUBBU said...

சிந்திக்க வேண்டிய விஷயம் :((((

SUBBU said...

//கீழை ராஸா said...
ஒரு ரூபாய்க்கு அரிசி தரும் போது ஒரு ரூபாய்க்கு டீ தந்தால் என்ன?
//

இதுவும் ஓகே தான் :)))))))

ஈரோடு கதிர் said...

விவசாயிகள் மேல் கொண்ட அக்கறைக்கு ஒரு ராயல் சல்யூட் நண்பா

தினேஷ் said...

//நாகா மக்கள் கட்சி ஆட்சி செய்யும் நாகாலாந்திலே டீ ஆறு ரூபாய்...காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் டீ ஏழு ரூபாய் முப்பத்தைந்து பைசா..நாட்டின் தலைநகராம் டெல்லியிலே சாதாரண தெருக்கடையில் எட்டு ரூபாய்...பா.ஜ.க ஆளும் கர்நாடகத்திலே ஒரு டீ ஒன்பது ரூபாய்....லண்டனிலே ஒரு டீ நூறு ரூபாய் எழுபத்தைந்து காசு...அமெரிக்காவிலே ஒரு டீ சுமார் எண்பது ரூபாய்...எம்.ஜி.ஆர் ஆண்டபோது தமிழ்நாட்டிலே ஒரு டீ இரண்டரை ரூபாய்...இன்றைய மதிப்பிலே இருபத்தைந்து ரூபாய் என்று பொருளாதார வல்லுநர்கள் சொல்கிறார்கள்...

அதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல், மக்கள் நல கழக அரசு மீது மட்டும் குறை சொல்வது புகைந்த மனங்களின் பொச்செரிச்சல் என்று சொல்லியும் தெரிய வேண்டுமா உடன்பிறப்பே?? //

ஹா ஹாஹா கண்டிப்பா கடிதம் வரும் தல ..

இளைய கவி said...

//ஐயையோ வாலுக்கு ஏதோ ஆகிப்போச்சு
சீக்கிரம் ஓடியாங்க...
யார் இத மண்டபத்துல எழுதிக் கொடுத்தாங்க வாலு??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

September 9, 2009 9:39 PM//

கன்னா பின்னா ரிப்பிட்டூ, மாப்பி உனக்கு விஜயகாந்த் வேசம் ஒத்து வராது டா

கலையரசன் said...

சரக்கு விலை ஏறுனா சொல்லுங்க பாஸ்..

சுரேஷ்குமார் said...

நல்ல பதிவு.வாழ்த்துகள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாலு, நல்லா பாலு ஆத்தி இருக்கியள்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஆவின் பால் மதுரையிலே ஆறாக ஓடும்...!

ஆனந்த காட்சி...

வெண்ணெய் நெய் பால் பொருட்கள்...

விலைகளும் குறைந்ததடி...

ஆவின் பொருள் எல்லாம்...

நாவின் நயம் வாந்ததடி...

ஆவின்.. ஆவின்...

Anbu said...

நல்லா இருக்கு அண்ணே..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சிங்கையில் ஆவின் பால் தடை செய்யப் பட்டிருக்கிறது.

நீண்டகாலமாக கிடைப்பதில்லை.

அதற்காக,

நுகர்வோர் நலன் குறித்து, நம்பிக்கை எற்படும் வண்ணம் ஆவின் செய்தது என்ன?

இழந்த மார்க்கெட்டை பிடிப்பது எப்படி என்று ஆவின் காராளுக்கு சொல்லுங்கப்பா!

அவுங்க கல்லாவுக்கில்லை...

அப்பவாவது தேநீர் விலையை குறைக்கிறானா என்று பார்க்கலாம்.

Cable சங்கர் said...

சென்னையில் டீ 4ரூபாய் ஆகி ரொம்ப நாள் ஆச்சு

ஆரூரன் விசுவநாதன் said...

" எவ்வளவு கொழுப்பு" என்று தலைப்பு வைத்திருக்கலாம்.

நல்ல தகவல்கள்..... படங்களோடு...

வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்

நாடோடி இலக்கியன் said...

நல்ல இடுகை.

லோகு said...

இப்பத்தா 4 ரூபாயா.. எங்க ஊர்ல (திருப்பூர்) அஞ்சு ரூபாய்.. நாங்க எதுலையுமே பர்ஸ்டு தான்..

ers said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில்
மதிப்பு மிக்க பதிவரான தங்களது பதிவு தானாகவே இணைந்துள்ளது...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....



உங்கள் படைப்பை பார்க்க

தமிழ்செய்திகளை இணைக்க

உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

யோ வொய்ஸ் (யோகா) said...

ஐயா இலங்கையில டீ 25.00 ரூபா மற்றும் அதை ஹோட்டலில் குடித்தால் 10 வீத சேவைக்கட்டணம்.

நீங்க என்னான்னா 50 காசுக்கு இந்த கணக்கு பார்க்கிறீங்க

தீப்பெட்டி said...

மிகச்சிறந்த இடுகை..
நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள உதவியது.. நன்றி..

//இதை பற்றி முழுமையான கணக்குகள் தணிக்கை செய்யப்படுவதில்லை என தகவல்! தகவலறியும் சட்டத்தின் கீழ் கேட்டுப்பெற வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்!//

மிகச்சிறந்த எண்ணம்..
வாழ்த்துகள்..

S.A. நவாஸுதீன் said...

நிறைய அலசி இருக்கீங்க வா(பா)ல்பையன்.

விவசாயிகளிடம் நாம் செய்யும் நேரடி கொள்முதலே அவர்களுக்கு முழுமையான லாபத்தை தரும்! நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை கூன விட வேண்டாம்!
**********************************
கன்னாபின்னாவென்று ஆமோதிக்கிறேன்.

சுந்தர் said...

//கொழுப்பு அளவிடும் எலக்ட்ரானிக் இயந்திரம.// அண்ணே ! மனுஷன் கொழுப்பை அளக்க மிசின் இருக்கா ?

கார்ல்ஸ்பெர்க் said...

அண்ணன் பால்(ப்)பையன் வாழ்க!!!

Anonymous said...

பால் உற்பத்தியாளர்கள் அடிப்படையில் விவசாய தொழிலை சார்ந்தவர்கள்! விளைச்சல் குறைவாக இருக்கும் நேரத்தில் அல்லது வருமானம் இல்லாத நேரங்களில் இது தான் அவர்களுக்கு உதவியாக இருக்கும்! கிராமப்புறங்களில் ஆவினை யாரும் நம்புவதில்லை, நேரடியாக பால் கறப்பவரிடமே பால் வாங்கி கொள்ளலாம்! நகரப்புறங்களிலும் இதை ஊக்கப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன்!

விவசாயிகளிடம் நாம் செய்யும் நேரடி கொள்முதலே அவர்களுக்கு முழுமையான லாபத்தை தரும்! நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை கூன விட வேண்டாம்

தரமான பதிவு யோசிக்க வைக்கிறது...

ம்ம்ம்ம்ம்ம் செவி சாய்க்குமா சம்பந்தபட்ட இலாகா?

AK said...

நல்ல கட்டுரை. எப்போதோ ஒரு மருத்துவர் சொன்னது நினைவுக்கு வருகிறது.
தனியாக நேரிடையாக பால் வாங்கும்போது ஒன்று (அ) இரண்டு மாட்டு பால் தான் கிடைக்கும். அந்த மாட்டுக்கு ஏதேனும் நோய் இருந்தால் அது நமக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. (என்னதான் சூடு செய்தாலும்). அதே சமயத்தில் ஆவின் போன்ற பால் வாங்கும்போது பலநூறு மட்டு பால் கிடைப்பதாலும் மேலும் standardisation செய்வதாலும் இந்த வாய்ப்பு குறைவு.

(ஆனால் அந்த இயந்திரத்தில் குறை இருந்தால் ஒரு ஊரே பாதிக்கப்படும். but the there is also a quality control Dept. And I hope Govt mixes some vitamins etc in AAVIN milk which otherwise we wont get from other sources)

RAMYA said...

அச்சச்சோ இனிமேல் டீ குடிக்கக்கூடாதா :-)

அதெல்லாம் இருக்காட்டும்,

அருமையான பதிவு வாலு,

பாலின் தரம் குறித்து பலரும் பலமாதிரி கூறுகிறார்கள்
சில ஊர்களில் வெள்ளையாக இருக்குமாம் ஆனால் அது பாலே இல்லையாம்
இப்படி இல்லாம் நான் கேள்வி பட்டு இருக்கிறேன்.

அதனால் எது எப்படியோ விலை ஏற்றம் இருந்த போதிலும் தரமான பாலாக இருந்தாலே போதுமானது:)

வால்பையன் said...

ஆவின் விட்ட மீனெல்லாம் சேர்க்காது!

பால் கெட்டு போகாமல் இருக்க அதில் கெமிக்கல் கலப்பதாக பல புகார்கள் உண்டு!

நமக்கு தான் சொரணை செத்து ரொம்ப வருசமாச்சே!

க.பாலாசி said...

//விவசாயிகளிடம் நாம் செய்யும் நேரடி கொள்முதலே அவர்களுக்கு முழுமையான லாபத்தை தரும்! நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை கூன விட வேண்டாம்! //

எங்க தலைவர் சொன்னா சரியாதான் இருக்கும்...

நல்ல சிந்தனைப்பகிர்வு தலைவா....

உங்கள் ராட் மாதவ் said...

//பால் உற்பத்தியாளர்கள் அடிப்படையில் விவசாய தொழிலை சார்ந்தவர்கள்! விளைச்சல் குறைவாக இருக்கும் நேரத்தில் அல்லது வருமானம் இல்லாத நேரங்களில் இது தான் அவர்களுக்கு உதவியாக இருக்கும்! கிராமப்புறங்களில் ஆவினை யாரும் நம்புவதில்லை, நேரடியாக பால் கறப்பவரிடமே பால் வாங்கி கொள்ளலாம்! நகரப்புறங்களிலும் இதை ஊக்கப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன்!//

நல்ல கருத்துள்ள பதிவு... இதுபோல் பயனுள்ள பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.. வால் பையன் அவர்களே...

AK said...

http://www.energymanagertraining.com/dairy/MilkProcessing.htm

http://in.answers.yahoo.com/question/index?qid=20090119001105AASSLmV

I dont know what AAVIN is doing.
we use AMUL (in Ahmedabad)
:-)

மெலோடி மனசு said...

அட இம்புட்டு மேட்டர் இருக்கா இதுல யோசிக்க வேண்டியது தான்

நட்புடன் ஜமால் said...

துவக்கத்திலேயே உள்ள உங்கே நேர்மை பிடிச்சிருக்கு பாஸ்

--------------

நல்ல விழிப்புணர்வு.

sriram said...

ஐயா ஜாலி, இன்னிலேருந்து நானும் ரவுடி, என்னோட பின்னூட்டத்தயும் Quote பண்ணி 3 பேர் பின்னூட்டம் போட்ருக்காங்க.. நானும் ரவுடிதான்
பாத்துக்குங்க..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்..

அறிவிலி said...

வால், பால் மேட்டர் சூப்பர். சொன்னா மாதிரி விஸ்கிதான் பெட்டர்.

@அது சரி :)))))))))))

सुREஷ் कुMAர் said...

கிராமங்கள்ல பால் கொள்முதல் பண்ணுரதபத்தி நிறைய சொல்லவேண்டி இருக்கு..

வலைச்சரம்ள மற்றும் அலுவலகத்தில் வேலை ஜாஸ்த்தியா இருக்கறதால பொறுமையா இங்க பின்னூட்ட முடியலை..

அடுத்தவாரம்தான் போருஅயா வரமுடியும்.. மன்னிக்கவும் வாலு..

பஜ்ஜி மாஸ்டர் - நாகநாதர் டீ ஸ்டால் said...

நூலு எங்கூர்ல ஒரு வருசமா டீயி 4ரூபாய்யா, ஏன் இப்படி தப்பான சேதிய சொல்லுதே? வாங்கிக்கவே ஒரு மைனசு

"உழவன்" "Uzhavan" said...

விவசாயிகளிடம் நாம் செய்யும் நேரடி கொள்முதலே அவர்களுக்கு முழுமையான லாபத்தை தரும்! நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை கூன விட வேண்டாம்!//
 
ஹேட்ஸ் ஆஃப்

உண்மைத்தமிழன் said...

ஐய்.. ஆமாம்.. பதிவைப் படிக்காமயே கமெண்ட்டை போட்டுட்டு போயிரலாம் போலிருக்கே..!

ஆமா இது எதை பத்தின பதிவு..?

என்ன எழுதியிருந்தா என்ன? வாலு எழுதியிருக்குல்ல.. கண்டிப்பா கிறுக்குப் பிடிச்ச வேலையாத்தான் இருக்கும்..

சூப்பர்ன்னு சொல்லிட்டு எஸ்கேப்பாகுறேன்..!

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm



அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm



என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!

கிரி said...

அருண் எப்படி இப்படி எல்லாம்.. உங்க கணக்கு கேட்டு எனக்கு தலை சுத்தி விட்டது..நான் கணக்குல எலி

புலவன் புலிகேசி said...

நீங்க ஒரு அறிவு டெபோண்னே!!!!

வால்பையன் said...

நன்றி ஸ்ரீராம்
நன்றி கார்த்திகேயன்
நன்றி திரவியநடராஜன்
நன்றி கிருஷ்ணமூர்த்தி
நன்றி பிரியமுடன் வசந்த்
நன்றி அமரபாரதி
நன்றி ஜெட்லி
நன்றி கிறுக்கன்
நன்றி ராதாகிருஷ்ணன்
நன்றி மஸ்தான்
நன்றி சபரிநாத்
நன்றி அசோக்
நன்றி நந்தா
நன்றி சுமஜ்லா
நன்றி மயில்
நன்றி மேக்ஸி
நன்றி சந்ரு
நன்றி பீர்
நன்றி Mrs.Menagasathia
நன்றி புதுவை சிவா
நன்றி ஊர்சுற்றி
நன்றி சுரேஷ்குமார்
நன்றி லவ்டேல் மேடி
நன்றி நிலாமுகிலன்
நன்றி அதுசரி
நன்றி அபுஅஃப்ஸர்
நன்றி ஹேமா
நன்றி தமிழ்பறவை
நன்றி செல்லாதவன்
நன்றி பட்டிகாட்டான்
நன்றி கீழைராசா
நன்றி விதூஷ்
நன்றி அகல்விளக்கு
நன்றி ராஜூ
நன்றி தண்டோரா
நன்றி சுப்பு
நன்றி கதிர்
நன்றி சூரியன்
நன்றி இளையகவி
நன்றி கலையரசன்
நன்றி சுரேஷ்குமார்
நன்றி ஜோதிபாரதி
நன்றி அன்பு
நன்றி கேபிள்சங்கர்
நன்றி ஆருரன் விசுவநாதன்
நன்றி நாடோடி இலக்கியன்
நன்றி லோகு
நன்றி மிக்ஸ்
நன்றி யோவாய்ஸ்
நன்றி தீப்பெட்டி
நன்றி உலவு.காம்
நன்றி நவாஸுதீன்
நன்றி சுந்தர்
நன்றி கார்ல்ஸ்பெர்க்
நன்றி தமிழரசி
நன்றி AK
நன்றி ரம்யா
நன்றி பாலாஜி
நன்றி ராம்மாதவ்
நன்றி மெலோடி மனசு
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி அறிவிலி
நன்றி சுரேஷ்குமார்
நன்றி உழவன்
நன்றி உண்மைதமிழன்
நன்றி கிரி
நன்றி தங்கமணி பிரபு
நன்றி புலவன் புலிகேசி


தாமாதமான நன்றி நவில்தலுக்கு மன்னிக்கவும்!

!

Blog Widget by LinkWithin