பாரு ஸ்டைலில் ஒரு பயணம்!

மன்னையில் நடக்கும் சிறுகவிதை பட்டறை பற்றி அறிந்திருப்பீர்கள், அமெரிக்காவில் அருந்து அம்புலி மாமா அழைத்திருந்தாலும், ஜப்பானில் இருந்து ஜாங்கிட் தம்பி கூப்பிட்டிருந்தாலும் அண்ணன் பைப்புகாரன் மேல் கொண்ட அன்பாலும், வாவ்ராம் பந்தரின் அன்பான உபசரிப்புக்காவும் மன்னை சென்று பட்டறையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது என்று முடிவு செய்தேன்! அது பற்றி எழுதி போன பதிவிலேயே உதவி கேட்டிருந்தேன்(இது வரை வசூல் 35 ருபாய் 45 பைசா). உதவிய நண்பர்களுக்கு நன்றி, நான் வழக்கம் போல் திருட்டு ட்ரெயினிலேயே மன்னை வந்து விடுகிறேன்!

மன்னையில் எனக்காக குளிரூட்டப்பட்ட அறை எடுக்கும்படி நண்பர் பண்டோராவிடம் சொல்லியிருந்தேன், எல்லாம் இருக்கு வாங்க என்றார், எனக்கு அப்போதே சந்தேகம், மன்னையில் எல்லாம் இருக்கு, ஆனால் எனக்கு அங்கு தங்க இடம் இருக்கா என்பதே அது!
டம்பீ சாவியிடம் முதலிலேயே கேட்டேன், தம்பி வந்தால் சரக்கு வாங்கி தருவியா என்று,
“நானே ஓசி கஞ்சி, உனக்கு சரக்கு வேணுமாக்கும்” என்று கடுப்படிக்கிறார்!, நீங்களெல்லாம் வேலைக்கு போய் என்னாத்த சம்பாத்திக்கிறீர் என்ற சந்தேகம் வருகிறது!, என்னை போன்ற பிராபலங்கள் ”ஸாரி டங்க் ஸ்லிப் ஆயிருச்சு”, பிரபலங்கள் வரும்போது செலவு செய்ய கூட முடியலைன்னா என்ன பொழப்பு அது!

ஒருவழியாக ரயிலை பிடித்து சீட்டுக்கடியில் ஒதுங்கினேன்! காதல்பட வில்லன் மாதிரி வந்த ஒரு டீ.டீ.ஆர், என்னை கோலத்தில் இறக்கி விட்டுட்டார், விடுவேனா! அங்கேயே ஒரு லாரிகாரரிடம் கெஞ்சி பானட் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டேன், அவரிடம் பேசியது மட்டுமே நான்கு நாவல்கள் எழுதலாம்! ”ஜீரோ பைசா” என்ற நாவலில் இது பற்றி ஏற்கனவே குறிப்பிடுள்ளேன், கதைகளை எங்கேயும் தேடவேண்டியதில்லை, அது நம்மை தேடி வரும் என்று!, மன்னை வந்து இறங்கியவுடன் நண்பர் பாஸ்கிக்கு மிஸ்டுகால் கொடுத்தேன், அவர் மீண்டும் எனக்கு மிஸ்டு கால் கொடுத்தார்!, மீண்டும் கொடுத்தால் ஒரே ரிங்கில் அட்டன் பண்ணிட்டார், இருந்த ஒருருபாயும் போச்சு!.

இருந்த சில்லரைகளை பொறுக்கி யாருக்காவது போன் பண்ணி கார் கொண்டுவர சொல்லலாம் என்று தேடினேன்! தூங்கி கொண்டிருந்த பர்சிம்மை எழுப்பி நான் வந்திருக்கிறேன் என்று சொன்னேன்! பத்து நிமிடத்தில் ஹோண்டா காரில் வந்தார், உங்களுக்கே தெரியும் நான் பென்ஸை தவிர வேறு காரில் ஏற மாட்டேன் என்று.(என்னாது லாரியில வந்தேனா!, அது நேத்து நான் சொல்றது இன்னைக்கு), முட்டிக்கால் முன்சீட்டில் இடிக்க காலை மடக்கி அமர்ந்தேன்! சிகரெட்டை எடுத்து பத்த வைக்கலாம் என்றால் உள்ளே பிடிக்க கூடாது என்கிறார்!, வெளியே பிடித்தால் போலிஸ் பிடிக்குது, உள்ளே பிடித்தால் பர்சிம் அடிக்கிறார்!, அவ்வ்வ்வ்வ்வ்வ் என்ன கொடும சார் இது!

ஒரு வழியாக சிறுகவிதை பட்டறைக்கு வந்த சேர்ந்தேன்!, அனைத்து நண்பர்களும் குழுமம் குழுமமாக நின்று பேசி கொண்டிருந்தனர், நம்ம பாண்டு சாரும் வந்திருந்தார், இந்த வயதில் எந்த சமீபத்திய கவிதை எழுதி கொல்ல போறாரோன்னு தெரிஞ்சிகலாம் பக்கத்துல போனேன்!, இப்படித்தான் சமீபத்தில் 1967 ல்ன்னு ஆரம்பிச்சார், சார் லைட்டா வயித்த கலக்குது, நீங்க பேசிகிட்டே இருங்க, இந்த வந்துடுறேன்னு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்!
இம்மாதிரியான இடங்களில் மிக்கிய(முக்கிய போட்டால் சுச்சிவேஷன் நாறிடும்) ஆட்களை கவனிக்க தனியாக ஆட்களை ஒதுக்க வேண்டும்!, இல்லையென்றால் ரொம்ப கஷ்டம்!

ஒருவழியா மதியம் வந்தது, செம பசியில் ரெண்டு லெக்பீஸ் முதலில் சாப்பிடலாம்னு தேடினால் இல்லை, வாவ்ராம் பந்தரிடம் கேட்டால் மட்டனில் லெக்பீஸ் போட முடியாதுங்கிறார்! ஒரு முழு ஆட்டை தலைகீழாக தொங்கவிட்டு சுட்டு சாப்பிடும் பரம்பரையை சேர்ந்தவனிடம் சொல்லும் பதிலா அது! சேம் சேம் பப்பி சேம்!,
இருந்தாலும் பரவாயில்லை என்று இரண்டே இரண்டு ப்ளேட் மட்டும் பிரியாணியும், பத்து சப்பாத்தியும் மட்டும் சாப்பிட்டேன்! காரணம் டாக்டர் சொல்லியிருக்கிறார்! குறைவாக சாப்பிடசொல்லி அதான் இப்படி!, சரி நண்பர்களே மீதியை நாளை எழுதுகிறேன்!


********************

டிஸ்கி:பட்டறை ஞாயிற்றுகிழமை(13.09.09), இன்று வெள்ளிகிழமை(11.09.09)

107 வாங்கிகட்டி கொண்டது:

Jeeves said...

கடவுளே... கடவுளே...


அப்படியே அப்பட்டமா அங்க படிச்ச மாதிரியே இருக்கே ஏன் ?

Jeeves said...

ஹை நாந்தான் மீத பஸ்டா ?

SUBBU said...

அடப்பாவி !!! ஆட்டய போடுரதுல அப்பிடி ஒரு சுகம் :)))))

அப்பாவி முரு said...

//அப்படியே அப்பட்டமா அங்க படிச்ச மாதிரியே இருக்கே ஏன் ?//

இன்னும் பத்தாது,

அவ்வா ஆய் அள்ளுனது, பவிங்கிற பேருக்கு டில்லில வீடு கிடைக்காதது, இன்னும் பலது மிஸ்ஸிங்கு...

நாடோடி இலக்கியன் said...

:)

ஜெரி ஈசானந்தா. said...

செம லூட்டி.
[ நானும் வர்றேன் சென்னைக்கு, கட்டாயம் வாலை பார்க்கணும்.}

வால்பையன் said...

//ஜெரி ஈசானந்தா. said...

செம லூட்டி.
[ நானும் வர்றேன் சென்னைக்கு, கட்டாயம் வாலை பார்க்கணும்.}//

வாலை வறைத்து தான் வைத்திருப்பேன்!
பார்த்தே ஆகனும்னு அடம் பிடிக்காதிங்க ப்ளீஸ்!

அமர பாரதி said...

வால்,

கலக்கல்.

Anbu said...

வால் அண்ணே கலக்கல்..

ராம்ஜி.யாஹூ said...

கலக்கல் காமெடி நடை.

பட்டறை மக்களிடம் பரவ உங்களின் நகைச்சுவை பதிவும் உதவும்.

அப்படியே பட்டறையில் என்ன பேசுவாங்கன்னு எழுதிருங்க காமெடி நடைல.

ஜீவன் said...

//மிஸ்டுகால் கொடுத்தேன், அவர் மீண்டும் எனக்கு மிஸ்டு கால் கொடுத்தார்!,//


ha..ha..ha...;;))

க.பாலாஜி said...

//ஒரு முழு ஆட்டை தலைகீழாக தொங்கவிட்டு சுட்டு சாப்பிடும் பரம்பரையை சேர்ந்தவனிடம் சொல்லும் பதிலா அது! சேம் சேம் பப்பி சேம்!,//

அதான தல...இருந்தாலும் நம்ம பரம்பர மானத்த காப்பாத்திட்டிங்க....

//இருந்தாலும் பரவாயில்லை என்று இரண்டே இரண்டு ப்ளேட் மட்டும் பிரியாணியும், பத்து சப்பாத்தியும் மட்டும் சாப்பிட்டேன்! காரணம் டாக்டர் சொல்லியிருக்கிறார்! குறைவாக சாப்பிடசொல்லி அதான் இப்படி!//

யாரந்த டாக்டர்....அவருக்கு பொறாம விடுங்க, அதெல்லாம் மனசுல வைச்சுக்காதிங்க...

//, சரி நண்பர்களே மீதியை நாளை எழுதுகிறேன்!//

மறுபடியுமா................போயிடுங்க எல்லாரும் தப்பிச்சு போயிடுங்க........

sriram said...

ஜூப்பர் நடை வாலு...
என்ன ஆச்சு உனக்கு எழுத்துல ஒரு Transformation தெரியுது..
நல்லா இருக்கு, தொடர்ந்து எழுதவும்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்..

அமர பாரதி said...

//வாலை வறைத்து தான் வைத்திருப்பேன்!
பார்த்தே ஆகனும்னு அடம் பிடிக்காதிங்க ப்ளீஸ்!// இது இன்னும் சூப்பர்.

கிரி said...

ஹா ஹா ஹா இன்னும் கொஞ்சம் பேரை சேர்த்து இருக்கலாம்

டம்பி மேவீ said...

"ஜெரி ஈசானந்தா. said...
செம லூட்டி.
[ நானும் வர்றேன் சென்னைக்கு, கட்டாயம் வாலை பார்க்கணும்.}"


த்ரிஷா வந்தாலாவது 400 ரூபாய் தரலாம் ...... வாலை பார்த்து என்ன அகபோகுது....

டம்பி மேவீ said...

"டிஸ்கி:பட்டறை ஞாயிற்றுகிழமை"


பட்டறை எல்லோருக்கும் இருப்பது தானே .... அன்று மட்டும் என்ன ஸ்பெஷல்

(பட்டறை - எதாவது உள் அர்த்தம் இருக்கிறதா வால்ஸ்)

டம்பி மேவீ said...

"சிறுகவிதை பட்டறை"


ada kodumaiyaa

வெ.இராதாகிருஷ்ணன் said...

நல்லா நகைச்சுவையா எழுதறீங்க. பட்டறைக்குப் போகமின்னமே அலப்பறையா?

பல வார்த்தைகள் ரசிக்க வைத்தன.

டம்பி மேவீ said...

கோமா ரூபா கதைகள் பற்றி ஏன் சொல்லவில்லை இந்த பாரு

கிருஷ்ணமூர்த்தி said...

சிறுகதையைப் பட்டறை போடறது, பட்டறை போடறதுன்னு சொன்னது இதைத்தானா:-))

பட்டறைக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே இப்படீன்னா......பட்டறை நடக்கும் போது, முடிஞ்சா பொறவு எத்தனை பேர் பைத்தியக்காரனா ஆகப் போறாங்கன்னு...

....இப்பவே கண்ணக் கட்டுதே:-))

டம்பி மேவீ said...

இதற்க்கு பயமேகன் எதிர் பதிவு விரைவில் எழுதுவார் .... ஹீ ஹீ ஹீ

டம்பி மேவீ said...

சிறுகதை பட்டறை சிறுகோதை பட்டறை ஆகமால் இருந்தால் சரி

கிருஷ்ணமூர்த்தி said...

பட்டறை நடத்துறவங்க இதைப் படிச்சாங்கன்னா, சொல்லப்போவது:

"ஒத்துக்கறேன்! பட்டறை நடத்தறதுக்கு கூப்பிட்டது, இடத்தை மாத்தினது, எல்லாமே தப்புத்தான்னு ஒத்துக்கறேன்!"

வேற வழி:-)))

T.V.Radhakrishnan said...

கலக்கல்.
:-))

Vidhoosh/விதூஷ் said...

:))

--வித்யா

எம்.எம்.அப்துல்லா said...

;)

அகல் விளக்கு said...

//செம பசியில் ரெண்டு லெக்பீஸ் முதலில் சாப்பிடலாம்னு தேடினால் இல்லை, வாவ்ராம் பந்தரிடம் கேட்டால் மட்டனில் லெக்பீஸ் போட முடியாதுங்கிறார்! ஒரு முழு ஆட்டை தலைகீழாக தொங்கவிட்டு சுட்டு சாப்பிடும் பரம்பரையை சேர்ந்தவனிடம் சொல்லும் பதிலா அது! சேம் சேம் பப்பி சேம்!,//


அடப்பாவிங்களா...

ஸ்ரீ said...

சரிதான்,கிளம்புறதுக்கு முன்னாடியே ஆரம்பிச்ச்சாச்சா ........அலப்பறைய.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

எதோ எங்க ஊருக்கு நெருக்கமான விழயமாப் பேசுறிய ஒன்னும் அடிய புடிய,கொலைவெறித் தாக்குதல் இல்லையே!?

அப்ப சந்தோழம்!

தண்டோரா ...... said...

முந்திகிட்டேயடா குடிகாரா...

தருமி said...

//மிஸ்டு கால் கொடுத்தார்!, மீண்டும் கொடுத்தால் ஒரே ரிங்கில் அட்டன் பண்ணிட்டார், இருந்த ஒருருபாயும் போச்சு!.//

//மட்டனில் லெக்பீஸ் போட முடியாதுங்கிறார்!//

fantastic .......!

கலையரசன் said...

நீயுமா தல.....?

கார்ல்ஸ்பெர்க் said...

கட்டய பிளப்பிட்டீங்க!!! :)

சூர்யா said...

அந்த டாக்டர் கிடக்கறார் வால், யாரு கண்ணு பட்டதோ கொஞ்சமா சாப்டுர்க்கு புள்ள . முதல உங்களக்கு சுத்தி போடனும்

Srini said...

’மஸ்தான் பக்கர்’ பற்றியும் அவர்தம் லீலைகள் பற்றியும் எழுத மறந்து விட்டீர்களே சுவாமி?!

ஜெஸ்வந்தி said...

//இருந்தாலும் பரவாயில்லை என்று இரண்டே இரண்டு ப்ளேட் மட்டும் பிரியாணியும், பத்து சப்பாத்தியும் மட்டும் சாப்பிட்டேன்! காரணம் டாக்டர் சொல்லியிருக்கிறார்! குறைவாக சாப்பிடசொல்லி அதான் இப்படி!, //

இப்பிடி டயட் பண்ணினால் உடம்பு எதுக்கு ஆகும். அந்த டாக்டர் கிடக்கட்டும். நீங்க சாப்பிடுங்க வால்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

:-))

ஹர்ஷினி அம்மா said...

/இரண்டே இரண்டு ப்ளேட் மட்டும் பிரியாணியும், பத்து சப்பாத்தியும் மட்டும் சாப்பிட்டேன்! டாக்டர் சொல்லியிருக்கிறார்! குறைவாக சாப்பிடசொல்லி /

என்னங்க இது ... இவ்வளவு குறைவாவ சாப்பிடறது.!!!!

எவனோ ஒருவன் said...

:))))

லவ்டேல் மேடி said...

சுக்கு காப்பி குடிக்கிற நாயிக்கு நெஸ் காப்பி கேக்குதா.....?? டைட்டன் வாட்ச் மண்டையா .....!!

அமுதா கிருஷ்ணா said...

//நண்பர் பாஸ்கிக்கு மிஸ்டுகால் கொடுத்தேன், அவர் மீண்டும் எனக்கு மிஸ்டு கால் கொடுத்தார்!, மீண்டும் கொடுத்தால் ஒரே ரிங்கில் அட்டன் பண்ணிட்டார், இருந்த ஒருருபாயும் போச்சு!.//

தனியே உட்கார்ந்து சிரித்துக் கொண்டு இருக்கிறேன். என் பையன் அப்பாவிற்கு மிஸ்டு கால் கொடுத்துக் கொண்டு இருக்கிறான்..என்னை பற்றி சொல்ல......

அமுதா கிருஷ்ணா said...

//நண்பர் பாஸ்கிக்கு மிஸ்டுகால் கொடுத்தேன், அவர் மீண்டும் எனக்கு மிஸ்டு கால் கொடுத்தார்!, மீண்டும் கொடுத்தால் ஒரே ரிங்கில் அட்டன் பண்ணிட்டார், இருந்த ஒருருபாயும் போச்சு!.//

தனியே உட்கார்ந்து சிரித்துக் கொண்டு இருக்கிறேன். என் பையன் அப்பாவிற்கு மிஸ்டு கால் கொடுத்துக் கொண்டு இருக்கிறான்..என்னை பற்றி சொல்ல......

Anonymous said...

இதுல இன்னொரு புது கூத்து என்னன்னா, தனக்கு இதய ஆபரேஷன் செஞ்சது டாக்டர்கள் பணம் சம்பாதிக்கத்தான் என்ற புது நாடகம். ஆனா நீங்க அந்த ஆபரேஷன் நாட்களின் பதிவை போய் படிங்களேன், ஐயோ பாவம் இந்த மனுஷன் என்ன இப்படி கஷ்டபடுரரே என்று இருக்கும். இப்படி ஒரு பிழைப்பு தேவைதான?

பிரியமுடன்...வசந்த் said...

வழக்கம்போல் வாலின் அட்டகாசம்

அங்கயாவது வாலை சுருட்டி வச்சுக்கிடுவீங்களா?

ஜோசப் பால்ராஜ் said...

வாலண்ணே,
அடிச்சு ரவுண்டு கட்டி ஆடிட்டீரு.
அர்ந்த ராத்திரி தனியா சிரிச்சுக்கிட்டு இருக்கேன் போங்க.

அறிவிலி said...

அருமை...:))))))))))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

என்னைப் பந்தர் என்று சொல்கிறவர்களுக்கு கடுமையான கண்டனங்கள் :)

வால் இருப்பவர்கள்தானே பந்தராயிருக்க முடியும் :) :) :)

Arun Kumar said...

சூப்பரு வாலு சார்

பீர் | Peer said...

பல வரிகளில் விழுந்து :)))

குட்டி பிரபு said...

கலக்கல்

அபுஅஃப்ஸர் said...

பட்டறை பட்டய கிளப்புது

ஹேமா said...

//இரண்டே இரண்டு ப்ளேட் மட்டும் பிரியாணியும், பத்து சப்பாத்தியும் மட்டும் சாப்பிட்டேன்! காரணம் டாக்டர் சொல்லியிருக்கிறார்! குறைவாக சாப்பிடசொல்லி அதான் இப்படி!,//

உங்க ஊர்ல இதைக் கொஞ்சம்ன்னா சொல்லுவாங்க.அச்சோ....!

சந்ரு said...

எப்படி எல்லாம்................

முடியல்ல...........

பட்டிக்காட்டான்.. said...

கலக்கிட்டிங்க தல..

ஜெகநாதன் said...

பாரு: யாருய்யா அவன் வால்​பையன்? இப்படி கிழிகிழின்னு கிழிக்கிறான்

இவர்கள்: க​தை கவி​தை கட்டு​ரை இப்படி எது எழுதினாலும் அதுக்கு எதிர் எழுதறவரு.. அவ்வ்வ்

பாரு: நா​னெல்லாம் ​​சொந்தமா ​வெப்​​ஸைட் வச்சிருக்கிறவன்.. இரு அவனை என் ​வெப்​ஸைட்ல கிழிக்கிறேன்

இவர்கள்: ஆனா.. அதுக்கும் எதிர் ​போடுவா​ரே!??

​டோ​ரோ & பருப்பு: வவ்.. வவ்..!!!

R.Gopi said...

ஆ...ஹா... வாலு

இப்போ மாட்டுனது "பீரு புவேஜிதா"வா??

கதிர் - ஈரோடு said...

//35 ருபாய் 45 பைசா//

செம கலக்ஷன் போங்க

கலக்கீட்டீங்க கால்பையன்... ஓ சாரி வால்பையன்

RAD MADHAV said...

பாத்தூங்க.... நீரு சாவேதா... ஆட்டோ... அனுப்பப் போறாரு..... :-)

ஜெட்லி said...

//ஒரு முழு ஆட்டை தலைகீழாக தொங்கவிட்டு சுட்டு சாப்பிடும்//

ஹாஹா அவனா நீ...

அ.மு.செய்யது said...

பெயர் மாற்றங்கள் செம்ம காமெடி.....

ரசித்த வரிகள்.

ஊர்சுற்றி said...

ஹாஹாஹா....கலக்கலான பின்னூட்டங்கள். வாங்க வாங்க. சென்னைக்கு வாங்க!

Eswari said...

// என்னை போன்ற பிராபலங்கள் ”ஸாரி டங்க் ஸ்லிப் ஆயிருச்சு”, //

பிங்கரிங் ஸ்லிப் ஆயிடுச்சு ன்னு சொல்லுங்க

தமிழ்ப்பறவை said...

:-)த்தேன்...

S.A. நவாஸுதீன் said...

ரொம்பா நாளாச்சு தல உங்க ஸ்டைல்ல இந்த மாதிரி படிச்சு. அலப்பரையா இருக்கு

ஸ்ரீராம். said...

மன்னை....மன்னார்குடி? நடை...எழுத்து நடைங்க.....நல்லா இருக்கு...

மதி இண்டியா said...

விகடன்ல ஒரு பையன் எழுதுவானே , அது நீர்தானோ ?

பாரு யாரை பாராட்டி எழுதினாலும் அவரை ஆறு மாசம் கழித்து கேவலப்படுத்துவது நிச்சயம்

Mahesh said...

என்னன்னே பிரியலயே .... :(

சங்கா said...

சாரு!, சூப்’பாரு’!

மங்களூர் சிவா said...

/
Jeeves said...

கடவுளே... கடவுளே...


அப்படியே அப்பட்டமா அங்க படிச்ச மாதிரியே இருக்கே ஏன் ?
/

எங்க படிச்ச மாதிரி இருக்குன்னு சொல்லியிருந்தா அதையும் படிச்சிறலாம்
:))

adaleru said...

ஐயோ அண்ணா,
அதுக்குள்ள பட்டறை பத்தின பதிவா, இந்த பதிவ படிச்சதுல இருந்து என்னால சிரிப்ப அடக்கவே முடில.நான் அடலேறுனு சொன்னதும் அடல்ட் கதையா எழுதறீங்கன்னு டக்குன்னு கேட்டதுல இருந்து ஆரம்பிட்ச உங்க நக்கல் , நானும் சுட்டபழமும் சொல்லி சொல்லி சிரிச்சோம். உங்கள சந்திச்சதுல ரொம்ப சந்தோசம் திருட்டு ரயில் மாப்ளை சார்

PITTHAN said...

Good vaalu nice artickle, athu enna rendu plate briyani, enakkum serthu sapidingala?

யோ வாய்ஸ் (யோகா) said...

யப்பா யாரையாவது கலாய்ப்பது எப்படி என உங்களிடம் படிக்கலாம் என இருக்கேன் வால்..

ஈ ரா said...

தல

உங்களோட முன்னூத்தி அறுபத்தஞ்சாவது துரத்தி(??) நான்.....

கும்க்கி said...

லெக் பீஸ் கெடச்சுதா இல்லையா....?

தமிழரசி said...

வால் பையன் என்று சும்மாவா பேர் வச்சாங்க.. நல்ல நகைச்சுவை பதிவு....கற்பனை கலக்கல்

கோவி.கண்ணன் said...

//ஆனால் எனக்கு அங்கு தங்க இடம் இருக்கா என்பதே அது!//

தங்க இடம் தான் வேண்டுமா ? வெள்ளி இடம் கொடுத்தால் எடுத்துக் கொள்ள மட்டிங்களா ?

Bleachingpowder said...

//பத்து நிமிடத்தில் ஹோண்டா காரில் வந்தார், உங்களுக்கே தெரியும் நான் பென்ஸை தவிர வேறு காரில் ஏற மாட்டேன் என்று//

பாரு கட்டுரையை படிச்சவுடன், படிக்காதவன் படத்தில் விவேக் தனுஷிடம், நம்ம எப்படி ட்ரவல் பண்ண போறோம் கிங் ஃபிஷ்சரா ஜெட் ஏர்வேஸான்னு கேட்டுட்டு கடைசியில ட்ரெயின்ல வித்தவுட்ல கக்கூஸ்ல போறது தான் நியாபகம் வந்துச்சு

mix said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

clayhorse said...

கூட வந்த குஸ்மான் பத்தர் பத்தி ஒண்ணுமே போடல..

வலைஞன் said...

கொன்னுட்டீங்க வால்!
இதிலே சொல்லியிருக்கிறது
யாரு யாரு யாரு என சிந்திக்க வச்சுட்டீங்க!

வால்பையன் said...

//Jeeves said...
கடவுளே... கடவுளே...

அப்படியே அப்பட்டமா அங்க படிச்ச மாதிரியே இருக்கே ஏன் ?//

அதே நினைப்புல இருந்தா அப்படித்தான்!

வால்பையன் said...

//SUBBU said...

அடப்பாவி !!! ஆட்டய போடுரதுல அப்பிடி ஒரு சுகம் :)))))//

நான் எதையும் ஆட்டைய போடலையே!

வால்பையன் said...

//அப்பாவி முரு said...

//அப்படியே அப்பட்டமா அங்க படிச்ச மாதிரியே இருக்கே ஏன் ?//

இன்னும் பத்தாது,

அவ்வா ஆய் அள்ளுனது, பவிங்கிற பேருக்கு டில்லில வீடு கிடைக்காதது, இன்னும் பலது மிஸ்ஸிங்கு...//


இது பட்டறை சம்பந்தமான பதிவு என்பதால், அதை பற்றி எழுதவில்லை!
இனிமேல் ஒரு வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும்!

வால்பையன் said...

நன்றி நாடோடி இலக்கியன்
நன்றி அமரபாரதி
நன்றி அன்பு
நன்றி ராம்ஜி(எழுதிருவோம்)
நன்றி ஜீவன்
நன்றி பாலாஜி

வால்பையன் said...

sriram said...

ஜூப்பர் நடை வாலு...
என்ன ஆச்சு உனக்கு எழுத்துல ஒரு Transformation தெரியுது..
நல்லா இருக்கு, தொடர்ந்து எழுதவும்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்..//

அந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் என்ன தல!

வால்பையன் said...

//கிரி said...

ஹா ஹா ஹா இன்னும் கொஞ்சம் பேரை சேர்த்து இருக்கலாம்//

பட்டறைக்கு யார் யார் வர்றாங்கன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா சேர்ந்திருக்கலாம் தல!

வால்பையன் said...

//டம்பி மேவீ said...

"ஜெரி ஈசானந்தா. said...
செம லூட்டி.
[ நானும் வர்றேன் சென்னைக்கு, கட்டாயம் வாலை பார்க்கணும்.}"


த்ரிஷா வந்தாலாவது 400 ரூபாய் தரலாம் ...... வாலை பார்த்து என்ன அகபோகுது....//


உனக்கு ஏன்யா இப்படி புத்தி போகுது!

வால்பையன் said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...

நல்லா நகைச்சுவையா எழுதறீங்க. பட்டறைக்குப் போகமின்னமே அலப்பறையா?

பல வார்த்தைகள் ரசிக்க வைத்தன.//

அலப்பறை பண்ணனும்னு முடிவு பண்ணிட்டா முன்னாடி என்ன பின்னாடி என்ன தல!

வால்பையன் said...

//டம்பி மேவீ said...

கோமா ரூபா கதைகள் பற்றி ஏன் சொல்லவில்லை இந்த பாரு//

அதை படிச்சவங்க எல்லாம் கோமாவுல படுத்துருக்காங்கலாம், நான் வேற என்ன சொல்ல!?

வால்பையன் said...

//கிருஷ்ணமூர்த்தி said...

சிறுகதையைப் பட்டறை போடறது, பட்டறை போடறதுன்னு சொன்னது இதைத்தானா:-))

பட்டறைக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே இப்படீன்னா......பட்டறை நடக்கும் போது, முடிஞ்சா பொறவு எத்தனை பேர் பைத்தியக்காரனா ஆகப் போறாங்கன்னு...

....இப்பவே கண்ணக் கட்டுதே:-))//

ஏற்கனவே இருக்குற ஒருத்தர் பத்தாதா தல!(நான் என்னைய சொன்னேன்)

வால்பையன் said...

T.V.Radhakrishnan said...

கலக்கல்.
:-))//

நன்றி தல!

வால்பையன் said...

நன்றி விதூஷ்
நன்றி அப்துல்லா அண்ணே!
நன்றி அகல்விளக்கு
நன்றி ஸ்ரீதர்
நன்றி ஜோதிபாரதி
நன்றி தண்டோரா
நன்றி தருமி
நன்றி கலையரசன்(நானே தான்)
நன்றி கார்ல்ஸ்பெர்க்

வால்பையன் said...

//சூர்யா said...

அந்த டாக்டர் கிடக்கறார் வால், யாரு கண்ணு பட்டதோ கொஞ்சமா சாப்டுர்க்கு புள்ள . முதல உங்களக்கு சுத்தி போடனும்//

ஆமா தல சரியாவே சாப்பிட முடியல!

வால்பையன் said...

/’/Srini said...

’மஸ்தான் பக்கர்’ பற்றியும் அவர்தம் லீலைகள் பற்றியும் எழுத மறந்து விட்டீர்களே சுவாமி?!//

மஸ்தான் டவுசர் தான் கிழிஞ்சு தொங்குதே தல!

வால்பையன் said...

//ஜெஸ்வந்தி said...

//இருந்தாலும் பரவாயில்லை என்று இரண்டே இரண்டு ப்ளேட் மட்டும் பிரியாணியும், பத்து சப்பாத்தியும் மட்டும் சாப்பிட்டேன்! காரணம் டாக்டர் சொல்லியிருக்கிறார்! குறைவாக சாப்பிடசொல்லி அதான் இப்படி!, //

இப்பிடி டயட் பண்ணினால் உடம்பு எதுக்கு ஆகும். அந்த டாக்டர் கிடக்கட்டும். நீங்க சாப்பிடுங்க வால்.//

உங்க வீட்டுக்கு தான் வரணும், லெக்பீஸ் போட்டு மட்டன் பிரியாணி செஞ்சு வையுங்க!

வால்பையன் said...

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்
நன்றி ஹர்சினி அம்மா
நன்றி எவனோ ஒருவன்
**

லவ்டேல் மேடி said...

சுக்கு காப்பி குடிக்கிற நாயிக்கு நெஸ் காப்பி கேக்குதா.....?? டைட்டன் வாட்ச் மண்டையா .....!!//

உங்க பின்னூட்டம் இல்லாம என் பதிவு முழுமை அடையாது தல!

வால்பையன் said...

//அமுதா கிருஷ்ணா said...

//நண்பர் பாஸ்கிக்கு மிஸ்டுகால் கொடுத்தேன், அவர் மீண்டும் எனக்கு மிஸ்டு கால் கொடுத்தார்!, மீண்டும் கொடுத்தால் ஒரே ரிங்கில் அட்டன் பண்ணிட்டார், இருந்த ஒருருபாயும் போச்சு!.//

தனியே உட்கார்ந்து சிரித்துக் கொண்டு இருக்கிறேன். என் பையன் அப்பாவிற்கு மிஸ்டு கால் கொடுத்துக் கொண்டு இருக்கிறான்..என்னை பற்றி சொல்ல......//

ஆமாங்க தனியா உட்கார்ந்து சிரிச்சிகிட்டு இருந்தா அப்படி தான் சந்தேகபடுவாங்க!

வால்பையன் said...

//Anonymous said...

இதுல இன்னொரு புது கூத்து என்னன்னா, தனக்கு இதய ஆபரேஷன் செஞ்சது டாக்டர்கள் பணம் சம்பாதிக்கத்தான் என்ற புது நாடகம். ஆனா நீங்க அந்த ஆபரேஷன் நாட்களின் பதிவை போய் படிங்களேன், ஐயோ பாவம் இந்த மனுஷன் என்ன இப்படி கஷ்டபடுரரே என்று இருக்கும். இப்படி ஒரு பிழைப்பு தேவைதான?//

அண்ணே அந்த மேட்டர்லாம் நான் இழுக்கவேயில்ல!

வால்பையன் said...

//பிரியமுடன்...வசந்த் said...
வழக்கம்போல் வாலின் அட்டகாசம்
அங்கயாவது வாலை சுருட்டி வச்சுக்கிடுவீங்களா?//

வாலை சுருட்டி வச்சிகிட்டா எப்படி தல நான் வாலாவேன்!

வால்பையன் said...

//ஜோசப் பால்ராஜ் said...

வாலண்ணே,
அடிச்சு ரவுண்டு கட்டி ஆடிட்டீரு.
அர்ந்த ராத்திரி தனியா சிரிச்சுக்கிட்டு இருக்கேன் போங்க.//

பாத்துண்ணே பக்கத்துல பயந்துர போறாங்க!

வால்பையன் said...

அறிவிலி said...

அருமை...:))))))))))/

நன்றி தல!

வால்பையன் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...

என்னைப் பந்தர் என்று சொல்கிறவர்களுக்கு கடுமையான கண்டனங்கள் :)

வால் இருப்பவர்கள்தானே பந்தராயிருக்க முடியும் :) :) :)//


தல, பந்தருக்கு அர்த்தம் தெரியாம போட்டுட்டேன் தல!
உண்மையிலேயே நான் தான் பந்தர்!

வால்பையன் said...

//Arun Kumar said...

சூப்பரு வாலு சார்//

என்ன தல சாரு, மோருன்னு!

வால்பையன் said...

//பீர் | Peer said...

பல வரிகளில் விழுந்து :)))//

பார்த்து தல அடிபட்டுற போகுது!

வால்பையன் said...

நன்றி குட்டிபிரபு
நன்றி அபுஅப்ஸர்
நன்றி ஹேமா
நன்றி சந்ரு
நன்றி பட்டிகாட்டான்
நன்றி ஜெகநாதன்
நன்றி கோபி
நன்றி கதிர்
நன்றி ராம் மாதவ்
நன்றி ஜெட்லி
நன்றி அ.மு.செய்யது
நன்றி ஊர்சுற்றி
நன்றி ஈஸ்வரி
நன்றி தமிழ்பறவை
நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி ஸ்ரீராம்
நன்றி மதி இந்தியா
நன்றி மகேஷ்
நன்றி சங்கா
நன்றி மங்களூர் சிவா
நன்றி அடலேறு
நன்றி பித்தன்
நன்றி யோவாய்ஸ்
நன்றி ஈ ரா
நன்றி கும்க்கி
நன்றி தமிழரசி
நன்றி கோவி கண்ணன்
நன்றி ப்ளீச்சிங் பவுடர்
நன்றி மிக்ஸ்
நன்றி தமிழினி
நன்றி clayhorse
நன்றி வலைஞன்

!

Blog Widget by LinkWithin