Kim-ki-duk இதுவரை 16 படங்களுக்கு கதை எழுதியுள்ளார், அதில் அவர் இயக்கியது 15, அதில் எடிட்டராக பணிபுரிந்தது 6, சொந்தமாக தயாரித்தது 5, சிறு வேடங்களில் நடித்தது 2, இவையில்லாமல் கலை போன்ற துறைகளிலும் இவரது பங்களிப்பு இருக்கும்! அந்த அளவுக்கு சினிமாவை காதலிப்பவர். உணர்வுபூர்வமான சினிமாக்களில் மொத்த உலகத்தையும் கவர்ந்தவர்.
இவரை பற்றி, இவரது படங்களே சொல்லும்.
***************************
பயணங்களின் போது உடன் பயணம் செய்யும் முன்பின் பார்த்திராத ஒருவரை பார்த்து உங்களுக்கு காதல் தோன்றியிருக்கிறதா?.(இனக்கவர்ச்சி தான் காதலில் முதல்ப்படி). உரையாடல் இல்லாத அந்த சூழ்நிலையிலும் பார்வையிலேயே உணர்வின் ஆழம் வரை சென்றதுண்டா! அந்த நபர் நீங்கள் இறங்கும் போது உங்களுடனே வந்துவிட்டால்....
இவைகளெல்லாம் சாத்தியமில்லை என்று சொல்லாதீர்கள்,
உங்களுக்கு சம்பவிக்கவில்லை என்று சொல்லுங்கள்.
அம்மாதிரியான ஒருப்படம் தான்
3IRON. இந்த இயக்குனரின் நான் பார்த்த முதல் படம்.
இந்த படத்தில் நாயகன் செய்யும் சேட்டைகளை தான் லாடம் என்ற தமிழ் படத்தில் நாயகி செய்கிறாளாம்!. இயக்குனரை பொறுத்தவரை முக்கிய கதாபாத்திரங்கள் பேச வேண்டிய அவசியமில்லை என்பது அவரது கருத்து! அதற்காக அவர்கள் ஊமைகள் என்று நினைக்க வேண்டாம். இறுதியில் சில அமானுஷ்ய தன்மைகளுடன் முடித்திருந்தாலும், முடிவில் வரும் டிஸ்கி அவரது கற்பனை திறனை நமக்கு காட்டுகிறது.
அந்த டிஸ்கி:
நீங்கள் வாழ்வது நிஜமா, கற்பனையா என்று அறுதியிட்டு கூற இயலாது!

நான் நிஜத்தில் மட்டுமே தான் வாழ்கிறேன் என்று சொல்பவர்கள் மூளை சரியாக வேலை செய்வதில்லை என்பது என் கணிப்பு!
**********************************
கிராமப்புரங்களில் அதிகமாக சொந்தங்களுக்குள் தான் திருமணம் செய்து வைப்பார்கள், அது ஐந்திலிருந்து எட்டு வயது வித்தியாசம் இருக்கும். சில இடங்களில் என் தம்பிக்காகவே வளர்த்து வர்றேன்னு தாய்மாமனுக்கு மணம் முடித்து வைப்பார்கள், அவர்களுக்கு 15 திலிருந்து 20 வருடங்கள் கூட வித்தியாசம் இருக்கும், அது மாதிரியான ஒரு கதை தான்
the Bow.ஒரு குழந்தையை சிறுமியாய் இருக்கும் போதிலிருந்து வளர்க்கும் ஒரு பெரியவர், ஒரு நதியின் நடுவில் படகில் வாழ்கிறார்கள். அங்கே மீன் பிடிக்க வருபவர்கள் தருவது தான் வருமானம்!
ஒரு குறிப்பிட்ட நாளில் அவளை மணந்து கொள்ள நினைக்கிறார் பெரியவர். அதற்குள் மீன் பிடிக்க வந்த ஒருவன் மேல் காதல் கொள்கிறாள் அந்தப்பெண்! அவள் எனது உடமை என பெரியவர் அவனை விரட்ட,. அந்த பெண் இன்னும் பெற்றோர்களால் தேடப்பட்டு கொண்டிருக்கும் ஒரு தொலைந்து போன குழந்தை என மீண்டும் படகிற்கு வந்து சொல்கிறான். அவனுடன் அனுப்பி வைக்கின்ற பெரியவர் அங்கேயே தற்கொலை முயற்சி செய்கிறார், அதை அறிந்த அவள் அந்த பெரியவரை மணக்க சம்மதிக்கிறாள். ஆனாலும் அந்த பெரியவர் தற்கொலை செய்து கொள்கிறார்!

ஆன்மா விரும்பியதை அடையாமல் விடாது என்பது போல் அவரது க்ளைமாக்ஸ் காட்சி இருந்தாலும் எனக்கு அதில் உடன்பாடு, இருப்பினும் உணர்வுகளின் அடுத்தகட்ட பரிணாமமாற்றமாக நம்மை நாமே சமாதானப்படுத்தி கொள்ளலாம்.
இப்படத்திலும் அந்த பெண் பேசுவதை காட்ட மாட்டார்!
********************************
பார்த்த முகங்களையே பார்ப்பதற்காக என்றாவது சலிப்படைந்திருக்கிறீர்களா?
ஒரே இடம், ஒரே வேலை, ஒரே மனிதர்கள் என சலித்து மாற்றம் தேடி உங்கள் மனம் ஏங்கியதுண்டா, ஒருவேளை இல்லையென்றால் உங்களுக்கும் இயந்திரத்துக்கும் என்ன வித்தியாசம் என்று உங்களை நீங்களே கேட்டு கொள்ளுங்கள்

காதலன் ஒருவேளை நம்மிடம் சலிப்படைந்து விட்டானோ! அவனுக்கு என்னை பிடிக்கவில்லையோ, என் முகம் அவனுக்கு எரிச்சலை தருகிறதோ என்று தன்னளவில் மன உளைச்சலால் தனது முகத்தை அறுவை சிகிச்சை மூலம் மாற்றி கொள்கிறாள் நாயகி, சலிப்படைவது காலம் சம்பந்தப்பட்டதால் எனவோ இந்த படத்திற்கு
the Time என பெயரிட்டு இருக்கிறார்!
முகம் மாற்றி கொண்ட காதலி, காதலன் இன்னும் பழைய காதலியை தான் நினைத்து கொண்டிருக்கிறான் என அறிகிறாள், சுயத்தை இழந்தவளாய் தன் மீதே கோபம் கொள்கிறாள்.
அவசரப்பட்டுவிட்டோம் என்பதை விட இந்த முகத்துக்கு என்ன குறைச்சல் என்னும் ஏக்கமே அதிகமாகிறது. தான் தான் அவனுடய பழைய காதலி என சொல்லிவிடுகிறாள். கோபமடைந்த காதலன் தானும் முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கிறான். மீண்டும் அவனை எங்கேயும் காண முடியாதவளாக அவள் மாறுவதே இப்படத்தின் கதை!
இப்படத்தில் அனைவரும் பேசி கொண்டாலும், முகம் அறுவை சிகிச்சை செய்து கொண்ட காதலன் அமானுஷ்ய தன்மையுடன் இவளையே கண்காணித்து கொண்டிருப்பது அமானுஷ்யத்தின் மேல் இவருக்கு பற்றை காட்டுகிறது.
*******************************
the Isle என்ற படம் மடிக்கணிணியில் பத்து நாளாக தூக்கி கொண்டிருக்கிறது! இனிமேல் தான் பார்க்கவேண்டும்!
நான் ஏற்கனவே சொன்னது போல் இதில் இரண்டாவது இறுதிகாட்சி தவிர மற்ற படங்கள் மனித உணர்வுகளின் அடுத்தகட்ட பரிணாமமாக பார்க்கிறேனே தவிர, சாத்தியமில்லை என்ற வார்த்தையை இங்கே நிராகரிக்கிறேன்! வெகு அழகாக மெளனத்திலேயே உணர்வுகளை புரியவைப்பதில் வல்லவர் இந்த இயக்குனர்! உலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இவரின் மற்ற படங்களையும் பார்த்துவிட்டு பதிவிடுகிறேன்