குவியல்!.....(30.04.09)

சந்தேகமேயில்லை! அதே தான், அவியல் வரிசையில் புதிதாக குவியல்!
நமக்கெல்லாம் வராதுன்னு தான் நினைச்சிகிட்டு இருந்தேன்! முயற்சி செய்து பாருன்னு சொன்ன நண்பர்களுக்கு நன்றி,

*******************************
இந்த வார ஆனந்தவிகடன் பக்கம் 26-ல் நண்பர் லக்கிலுக்கின்(யுவகிருஷ்ணா) சிறுகதை வெளியாகியுள்ளது! கதையின் பெயருகேற்ப முடிவில் ஒரு மர்ம முடிச்சை போட்டிருக்கிறார்.
(அவிழ்க்கவில்லை)

*******************************
டெலிமார்க்கெட்டிங்கில் இருந்து யாராவது போன் செய்தால், முதலிலேயே(பென்ணாக இருந்தால்) குரலாங்க இது என்று சிலாக்கிக்கவும், ஏன் என்று கேட்டால் குரல் இல்லைங்க புல்லாங்குரல் என ஐஸ் வைத்தால், ரூட்டு மாறுதுன்னு போன் கட் செய்யப்படலாம், அல்லது வெயிலுக்கு ஐஸ் நல்லாயிருக்கேன்னு கடலை தொடரப்படலாம். எதுவாக இருந்தாலும் விளைவுகளுக்கு கம்பேனி பொறுப்பல்ல

நன்றி:ரமேஷ் வைத்யா

*********************************

ஒரு சிறிய பதிவர், பதிவர் சந்திப்புக்கு சென்னை சென்றிருந்த போது அனைவரும் இன்னும் சின்னபையனாக எதிர்பார்த்தோம் என சொல்லவே, மனம் வெகுண்டு வெறித்தனமாக தொப்பையை குறைக்க பாடுபட்டு கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் தலைக்கு டை அடிக்கும் எண்ணமும் உண்டாம்.

என்ன பண்ணாலும் வாலை மறைக்க முடியாதே!

************************************

புதிதாக ஆரம்பிக்கப்படுள்ள நெல்லைதமிழ் தமிழ் வலைப்பூக்கள் இணையத் திரட்டியில் இந்த வார முகப்பு பதிவராக நான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளேன், மேலும் அங்கு புதிதாக இணையும் வலைப்பூ நண்பர்களை, ”புதுமுகம், அறிமுகம்” என்ற தலைப்பில் முகப்பில் அறிமுகப்படுத்துகிறார்கள், இயல்பாக இருக்கிறது, இணைந்து பாருங்களேன்

இணைய இதை அழுத்தவும்

**************************************

வெளியூரிலிருந்து சென்னை செல்லும் பதிவர் நண்பர்கள், ஒரு நாளுக்காக அறை எடுத்து தங்க வேண்டியதில்லை, பதிவர் நண்பர்களுக்கு இந்த உதவி செய்வதை பெருமையாக கருதுவதாக சொல்கிறார் அண்ணன் அப்துல்லா! அருமையான அறை, கனிவான கவனிப்பு. அவரது வலைப்பூவில் தகவல் மற்றும் அலைப்பேசி எண் மட்டும் கொடுத்து விட்டால் போதும்

*******************************************

உழைக்கும் அனைவருக்கும் எனது உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

***************************************

எனக்கு இது புதிது, ஆனாலும் ஒரு கவிதை எழுதி தான் ஆகணுமாம்!
மற்றவர்கள் கவிதையை எடுத்து போடுவதை விட நாமே ஒரு கவுஜ எழுதினால் என்ன என்று தோன்றியது!

தொப்பை

கை, கால்கள்
அனைத்துக்குமாய்
சேர்த்து சாப்பிட்டாய்,
நீ மட்டும்
வளர்ந்தாய்,
பிகர்களை இழந்தேன்
அவமானம் அடைந்தேன்.
விட்டேன் சாபம்
கை, கால்களே
அனைத்துக்குமாய் சேர்த்து
அதை சாப்பிடுங்கள்

(எப்படியோ குறைச்சா சரி)

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!




சிறுகதை, கவிதை மட்டுமில்லாமல் உலக சினிமாக்களை சிலாகித்து விமர்சனம் எழுதும் வல்லவர்.
இவரது யதார்த்த சிறுகதைகள் நிச்சியமாக உங்களுக்கு பிடிக்கும்!

அக்டோபர் 2008-ல் ப்ளாக் எழுத ஆரம்பித்த இவர் குறுகிய காலத்தில் நிறைந்த வாசகர்களை கொண்டுள்ளார்,

அத்தகைய தகுதியுடைய தோழி உமாசக்திக்கு இன்று பிறந்த நாள்!

இவரை வாழ்த்துவதில் உங்களோடு நானும் கலந்து கொள்கிறேன்

*****************************************

பின்னூட்டத்தில் தோழியின் வேண்டுகோளுக்கினங்க,
கேட்பவை கொடுக்கப்படுள்ளது, வேண்டியவர் வேண்டியதை எடுத்து கொள்ளலாம்

சாக்லேட்



கேக்



பியர்


ஒயின்


ஆள விடுங்கடா சாமி!

என்ன சாப்பிடுற!

எதாவது சொல்லு!

அது சொல்லுவேண்டா! நீ என்ன சாப்பிடுற!

ரொம்ப காஸ்டிலியா வேணாம்! சிம்பிளா சொல்லு!

பட்ட சாராயம் சொல்லட்டுமா!

அது கிடைக்காதுடா டே!

உன்னோட பெரிய ரோதனைடா! சரி பிராந்தி சாப்பிட்வைல!

சொல்றா!

ஒரு ஆஃப் நெப்போலியன் பிராந்தி, ரெண்டு டம்ளர், ஒரு வாட்டர் பாட்டில் அப்படியே கொறிக்குறது எதாவது கொண்டுவாங்க!

*************************

டே எனக்கு இன்னும் ஊத்துறா பத்தாது!

என்னை மாதிரி கொஞ்சம் கொஞ்சமா ஊத்தி சாப்பிடுறா!

இல்லைடா! பழக்கம் ஆகிறுசு! நிறையா ஊத்து! நான் வேணா அடுத்த ரவுண்டு சும்மா உட்காந்த்துகிறேன்!

ஆளுக்குரு குவாட்டருன்னு நான் கூப்பிட்டு வரல! நீ எவ்ளோ சாப்பிடுறயோ சாப்பிடு, ஆனா மட்டை ஆகிறாதே! ஏன்னா என்னை நீ தான் கூப்பிட்டு போகனும்

**************************

மச்சி வீட்டுல அநியாயத்துக்கு தொல்லைடா!

ஒரு ரவுண்டு அதிகமா போனவுடனே ஆரம்பிச்சிட்டியா!

இல்லைடா! நிஜமா தான் சொல்றேன்! என் பொண்டாட்டி கூப்பிடா வர மாட்டிங்கிறாடா!

டே! நானே காலையிலிருந்து ஊர சுத்தி! ஒரே கதையவே மாத்தி மாத்தி எல்லோருக்கும் சொல்லி நொந்து போய் வந்துருக்கேன்! உயிர வாங்காதே!

டே! உங்ககிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்லுவேன்!

பர்சனல்லாம் சொல்லாதடா!

நீ என் நண்பண்டா! யாரு கிட்ட போய் கொட்டுவேன்

சொல்லி தொல!

ஒரு பிரண்டு என் பொண்டாட்டிக்கு போன் பண்ணி உங்க வாய்ஸ் நல்லாயிருக்குனு சொல்றானாமாடா!

அவங்கூட தண்ணி அடிச்சியா!

டே! உன்னை மாதிரி அவனும் எனக்கு க்ளோஸ் பிரண்டுடா!

உன்னை திருத்தவே முடியாது! யாருகிட்டயாவது என் வண்டி சாவி இல்லாமலே ஓடும்னு சொல்லி பாரேன், ஒருநாள் அவன் ஓட்டி பாக்க ட்ரை பண்ணுவான்

*****************************

பந்த்!.. என்ன நடந்தது?!!!!!!!!!

ஈழதமிழர்களின் மீதான வன்முறையை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவது ஆளும்கட்சியில் பந்த் நடைப்பெற்றது. அமைதியான முறையில் என்பது முக்கியம்.

சரி என்ன நடந்தது? எப்படி நடந்தது என ஈரோட்டில் இருந்து ஒரு வளரும் நிருபரின் கட்டுரை

*காலையில் கிளம்பும் போது தெரிந்து விட்டது இன்று கன்ஃபார்மாக பந்த் தான் என்று, ஒரு கடை கூட திறந்திருக்கவில்லை.

*காலையில் இருந்தே பேருந்து ஓடவில்லை, ஆட்டோ ஓடவில்லை, டாக்ஸி ஒடவில்லை.

*பிரசவவலி கண்டவர்கள், நோயாளிகள், அவசர வேலையாக(இன்று முகூர்த்தம்) வெளியே செல்ல இருந்தவர்கள். மருத்துவமனை, மொய் செலவு மிச்சம் என்று வீட்டிலேயே இருந்து விட்டனர்(சேதாரம் வெளியே வராது-அது ஆளும்கட்சி பந்த்)

*காலை சரியாக பத்து மணிக்கு அனைத்து டாஸ்மாக்குகளும் திறக்கப்பட்டன!
(குடிமகன்கள் தண்ணி அடித்து ஈழமக்களுக்காக வருத்தப்பட)

*காலை சன் தொலைக்காட்சியில் அனைத்து தொடர் நாடகங்களும் நிறுத்தப்பட்டு “திருடா,திருடி” படம் காட்டப்பட்டது, மக்கள் மன்மதராசா பாடலுக்கு ஆடி கொண்டே ஈழமக்களுக்காக வருத்தப்பட்டனர்.

*மதியம் கலைஞர் தொலைக்காட்சியில் “வெள்ளிதிரை” என்ற படம், அடுத்தவனை(ஈழமக்களை)பயன்படுத்தி எப்படி பெரியாளாவது(ஆட்சியை பிடிப்பது) என்று சிறந்த கதையை மக்களுக்கு காட்டியது.(இறுதியில் ஏமாற்றிவன் மெண்டலாக நடிப்பான்,இங்கே என்னாகும்)

*உணவகங்கள் மூடப்பட்டிருந்ததால் மதியம் வரை சாப்பிடவில்லை.
விடுமுறைக்காக மனைவியை ஊருக்கு அனுப்பியவர்கள், மணமாகாதவர்கள் என்னை போல தண்ணிரை குடித்தே நாளை கழித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.(நாமும் உண்ணாவிரதம் இருந்திருக்கின்றோம்).

*பேருந்துகள் இயங்காததற்கு ஆரம்பத்தில் எனக்கும் காரணம் விளங்கவில்லை.
திருப்பூர், பல்லடம் பகுதியில் அரசு பேருந்துகள் தாக்கப்பட்டன என தெரிந்த போது தான் அறிந்தேன். ஒருவேளை பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தால் டாஸ்மாக்கில் வருத்தப்பட்டு பாரம்(தண்ணியடிக்கும்)சுமக்கும் பந்த் ஆதரவாளர்கள் தனியே சிக்கும் பேருந்துக்கு தீ வைத்து அழுகு பார்க்கலாம் எனபதும் ஒரு காரணமாக இருக்கலாம் என!

*இந்த வருத்தங்களையெல்லாம் நம்மால் வெறும் பதிவாக தான் போட முடியும், உங்கள் சோகங்களையும் பின்னுட்டத்தில் தான் தெரிவிக்க முடியும், அதை நானும் நீங்களும் மாறி மாறி படித்து கொள்ளலாம் என நண்பர் ஒரு பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தது நியாயமான வருத்தமாக இருந்தது. அதனால் இந்த விசயங்களை குறுந்தகவலாக டைப் செய்து எனது அலைபேசியில் இருக்கும் அனைத்து எண்களுக்கும் அனுப்பி விட்டேன். நீங்களும் உங்கள் நண்பருக்கு அனுப்புங்கள்,(ஆளுங்கட்சிக்கு நம்மாளான சேவை)

வேண்டுகோள்:அரசியல் விருப்பமில்லாவிட்டாலும் நண்பர்களிடம் பேசுங்கள்!
பேச பேச உங்களுக்குள் விழிப்புணர்வு ஏற்படும். யாருக்கு ஓட்டு போட போகிறோம் என்பது நமது உரிமை தான். ஆனாலும் பிச்சை போட்டாலும் அதற்கு தகுதியானவனுக்கு பிச்சை போட வேண்டுமல்லவா

குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்கள்


படத்தை கிளிக்கி பெரிதாக்கி பார்க்கலாம்




குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடித்தால் போதுமானது

மாலைவரை பின்னுட்டங்கள் மட்டுறுத்தபடும்

நன்றி:அந்தமான் பாலசந்தர்

புல்லரிச்சு போய் உட்கார்ந்திருக்கேன்!

நான் இவ்வளவு வொர்த்தா!
எனக்கே தெரியலையே


எனக்கு போனில் அழைத்தும், குறுந்தகவல் அனுப்பியும், சாட்டிலும், பதிவிட்டும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைத்து நண்பர்களுக்கு மிக்க நன்றி!

கும்கியின் பதிவு

சுரேஷின் பதிவு

பூர்ணிமாசரணின் பதிவு


மீண்டும் ஒரு முறை நன்றி நண்பர்களே!

மீண்டும் மடல் சீஷன்!


நண்பர் பரிசல்காரன் எனக்கு அவரது பதிவில் பதில் சொல்லியிருக்கிறார்! பதில்பதில் சொல்ல வேண்டும் அது தான் மரியாதை இல்லையா!

அவரது பதிவில் ஒரு ஓரத்தில் தான் வருவேன்! சினிமா துணை நடிகன் போல கடைசி வரை தேடணுமாக்கும்! இதோ லிங்க்.
************************
இனி மேட்டர்!

//வால்பையன்.... என்னைப் புரிந்து கொள்வீர்களா?//

ரெண்டு பேரும் ஓடி போலாமான்னு கேக்குற மாதிரி இருக்கு. நம்ம புரிதலுக்கு என்ன குறைச்சல்! அது நல்லா தான் இருக்கு!

//ஒரு நாளைக்கு 1000 பேர் படிக்கிறார்கள்.. சரி வேண்டாம் 500 பேர் படிக்கிறார்கள்//

ஆமாம் நிறைய நாட்டில் இருந்து வருவார்கள்! ஆனால் எல்லோருக்கும் தமிழ் படிக்க தெரியும் என்று நம்பாதீர்கள்! எதாவது ஒரு ஆங்கில வார்த்தை ரிலேட்டேடாக இருந்தால் கூட செர்ச் உங்களை காட்டிவிடும்.
சரி அப்படியே வந்தாலும் அவர்கள் முழுவதும் படிக்கிறார்களா இல்லை உங்களை மாதிரி ”ஓ ஸாரி” எல்லோரையும் போல தாண்டி தாண்டி ”கங்காரு” விளையாட்டு விளையாடுகிறார்களா என்று உங்களுக்கு எப்படி தெரியும்?

//50 பேரின் பின்னூட்டத்துக்கு பதில் சொல்வதை விட பின்னூட்டம் போடாமல் படிக்கும் 450 பேருக்காக அடுத்த நாளின் பதிவுக்காக உழைப்பதுதானே ஒரு பதிவனாய் என் கடமை?//


அதாவது மைனாரிட்டிக்கு மரியாதை இல்லை!
இது எப்படி தெரியுமா இருக்கு. ஜெயலலிதா தி.மு.க.வை பார்த்து எதெற்கெடுத்தாலும் மைனாரிடி அரசுன்னு சொல்வாங்களே அதை ஞாபகப்படுத்துது. அதனால் இந்த வார்த்தையை மறுபடி உபயோகப்படுத்தினால் தி.மு.க-வில் சீட்டு கேட்போம் அப்புறம் உங்களிடம் ஓட்டு கேட்போம்.

”சாரு” எதிர்வினை என்ற பெயரில் வரும் கடிதங்களுக்கு பதில் மரியாதை செய்கிறார்! அவருக்கு ஒரு நாளைக்கு நாலு ஹிட்ஸ் தான் கிடைக்குதா! இல்லை.. அவருக்கு கடிதம் எழுதுபவர்கள் குறைவு, ஏன் தெரியுமா?

தமிழில் பிரபலம் என்பார்கள்! மலையாளத்தில் அதற்கு பெயர் செலிபிரட்டி!
அவர்களிடம் போய் நாம் ஆட்டோகிராப் வாங்கினால் போட்டு தருவார்கள்!
நாம் ஒரு புன்னகையை தந்து விட்டு ஒதுங்க வேண்டும்!
அதை விட்டு ”நீங்கள் என்றும் அன்புடன்ன்னு” ஆட்டோகிராப் போட்டிங்களா!
நான் கீழேயே என்றும் வம்புடன்ன்னு ஆட்டோகிராப் போடுவேனாமா!
நீங்க அதுக்கு கீழ உங்க கருத்த சொல்லுனுமாம்னு சண்டை போட்டா அவரு ”கையில் கம்புடன்” அடிக்க வருவார்.

//நானென்ன வேண்டுமென்றா ‘உனக்கென்ன நான் பதில் சொல்வது’ மனோபாவத்தோடு இருக்கிறேன் நண்பா?//


இதிலுள்ள ஒரு வார்த்தை தான் எல்லாவற்றையும் தீர்மானித்தது!
நண்பன்!
யார் நண்பன்? நீங்கள் எனக்கு ஒருவரை அறிமுகம் செய்கிறீர்கள் நான் ஹலோ சொல்கிறேன், அவரும் சொல்கிறார்! அதன் பின் என்றாவது ஒருநாள் அவரை பற்றி பேச்சு வரும் பொழுது நான் எதாவது சொல்ல இருக்கிறதா! அப்படியே சொல்ல வேண்டுமானால் எனக்கு பரிசல் அறிமுகப்படுத்தினார் ஆனால் பழக்கமில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்!

ஆனால் நீங்களும் நானும் அப்படியா!

”வாலை” பற்றி கேட்டால் புட்டு புட்டு வைப்பீர்கள். நான் சனி ஞாயிறு நான் எங்கே இருப்பேன் என்பது முதற்கொண்டு உங்களுக்கு தெரியும்!

உங்களை பற்றி கேட்டாலும் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது!
கம்பெனிக்குள் நுழைந்து விட்டால் நீங்கள் எவ்வளவு கண்டிப்பு என நேரில் பார்த்தவன் நான்!

நண்பர்கள் எப்படி உருவாகிறார்கள்?

பழகி!

நேரில் பழகலாம், போனில் பழகலாம்! தூரம் மற்றும் இருவருக்கும் ஒரே நேரம் ஒத்து வரவில்லை என்பதால் பின்னூட்டத்தில் பழகலாம் என்று தான் நான் அழைக்கிறேன்.

வாங்க பழகலாம் பிடிச்சிருந்தா ஃப்ரெண்ஷா இருப்போம்!
இல்லைன்னா நண்பர்களா இருப்போம்! என்ன சொல்றிங்க!

***********************
படத்துக்கு காரணம் parisalkaran அப்படின்னு ஆங்கிலத்தில் அடித்து தேடினால் இதுவும் கிடைத்தது!

(நாங்களும் தேடுவோம்ல!)
************************
உங்கள் பதிவை படித்த பிறகு சர்வேசனின் லிங்கை பிடித்து விட்டேன். நன்றி.
புரியும் என நம்புகிறேன்.

பெங்களூர் சந்திப்பு!

வேலை நிமித்தமாக வந்திருந்தாலும் ஒரு முக்கிய சந்திப்பு நடத்துவதே எங்கள் திட்டமாக இருந்தது!

அது ரங்கமணிகள் பாதுகாப்பு சங்கம்!

கலந்து கொள்ள இருந்தவர்கள்

ஜீவ்ஸ்
T.B.C.D
அரவிந்தன்
லக்சுமனன்(பட்டாம் பூச்சியின்கணவர்)
நானும்

முதலில் ஜீவ்ஸ் வீட்டுக்கு தான் போனேன்!

அவர் வெளியே சொல்ல அனுமதி கேட்டார்.

ஒரே முறைப்பு தான் அப்படியே அமைதி ஆகிட்டார்.

அங்கிருந்து வந்து அரவிந்தனுக்கு போன் செய்தேன்!
வருகிறேன் என்று சொன்னவர் விசயத்தை சொன்னதும் வீட்டில் கேட்க வேண்டும் என்று ஜகா வாங்கினார்.

பட்டாம் பூச்சியின் கணவருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கபடவில்லை அதனால் அவரை அழைக்கமுடியவில்லை.

தெரிந்திருந்தால் கண்டிப்பாக வந்திருப்பார். அவ்வளவு கஷ்டமாம் அவருக்கு

கடைசியாக நானும் T.B.C.D மட்டும் சந்திக்க வேண்டியதாகி விட்டது.


ரெண்டு பேர் சேர்ந்து ஒரு கூட்டமா என்று தள்ளி வைக்கப்பட்டது.
இருப்பினும் ஆண்கள் பாதுகாப்பு சங்க(ஆபாச)தலைவர் ஆதிமூலகிருஷ்ணன்(தாமிரா) தலைமையில் விரைவில் ஒரு கூட்டம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அங்கே சில விசயங்கள் விவாதிக்கப்படும், முக்கியமாக

நம்மை நோக்கி வரும் பூரிக்கட்டையோ, பாத்திரமோ அதிலிருந்து லாவகமாக தப்பிப்பது எப்படி

வியர்வை சிந்தாமல் சமைப்பது எப்படி

அழுக்கு போக சீக்கிரம் துவைப்பது எப்படி

தங்கமணி வாங்கிவர சொல்லும் பொருள்களை மறக்காமல் வாங்கி வருவது எப்படி

என்று விவாதிக்கப்படும்

ரங்கமணிகள் வீட்டிற்குள்ளும் ஹெல்மட்டோடு இருக்க அனுமதி கேட்டு அரசிடம் மனு கொடுக்க வேண்டும் என்று ஜீவ்ஸ் ஏற்கனவே சொல்லியிருந்தார்!

ஒருபக்கம் வீக்கிய மண்டைய பார்க்கும் போது தான் காரணம் தெரிந்தது.

T.B.C.D யிடம் கேட்டதற்க்கு தங்கமணியிடம் கேட்காமல் தான் எதையும் சொல்லமுடியாது என்று சொல்லிவிட்டார்.

பாவம் அடி பலம் போல!

வரவிருக்கும் ரங்கமணிகள் பாதுகாப்பு சங்கத்தில் சேர அனைவரும் தகுந்த பாதுகாப்புடன் முன் வரவேண்டும். மற்றவைகளை தலைவர் ஆதிமூலகிருஷ்ணன் பார்த்து கொள்வார்.


பெங்களூர் பற்றி அடுத்த விசயங்கள் இனி வரும் பதிவுகளில்!

குடும்ப படம்! (family photo)




படத்தை பார்க்க இன்னும் கீழே போங்க நண்பர்களே
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|







சிரிக்க மட்டுமே!
சிந்திப்பது உங்கள் இஷ்டம்!



!

Blog Widget by LinkWithin