வெக்கபாடாதிங்க பாஸு!!

மனம் திறக்கிறேன்!!!

எனக்கு பிளாக் அறிமுகமானது ஆனந்த விகடன் மூலமாக, அதன் பிறகு சில நாட்கள் பிளாக் படிக்க மட்டுமே செய்தேன், சென்ற வருட நவம்பர் மாதத்தில் ஒரு நாள்(தேதி,கிழமை ஞாபகமில்லை) நானும் ஒரு பிளாக் ஆரம்பித்தேன், அதற்க்கு தற்செயலாகவே வால்பையன் என்று பெயரிட்டேன், சில மொக்கைகளுடன் ஆரம்பித்த எனது பிளாக்கில் இது நூறாவது பதிவு.

ஆனால் சில நாட்களாக இத்தோடு பிளாக்கை விட்டே ஓடி போய் விடலாமா என்று என்னும் அளவுக்கு மனஉளைச்சல். நான் ஏதோ விளையாட்டுக்கு வாதம் செய்ய போய் பன்முனை தாக்குதலில் மாட்டி கொண்ட மான் போல ஆகிவிட்டேன், நான் செய்த தவறு பதிவுலக சிங்கம் லக்கி லுக்கிடம் வாதம் செய்தது.

சில மாதங்களுக்கு முன்னாள் ஒரு பதிவுக்கு வரிசையாக பத்து பின்னூட்டங்கள் போட்டேன் லக்கிக்கு, அதில் ஒன்று மட்டுமே வெளிவந்திருந்தது, உடனே அவரது அலைபேசிக்கு அழைத்து கேட்டேன். அவ்வளவு பின்னூட்டங்கள் தேவையில்லாதது அதனால் ஒன்றை மட்டும் வெளியிட்டேன் என்று லக்கியே கூறினார், அவருக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். அப்பொழுதெல்லாம் அவருக்கு கும்மி பிடிக்காது என்று நினைத்தேன், அவருக்கு என்னையவே பிடிக்காது என்று இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்.

கடைசியாக வந்த சர்ச்சைக்குரிய பதிவில் நான் ஏதும் தவறாக எழுதவில்லை.
ஞாநியின் அந்த கட்டுரையில் இறுதியாக "இந்த கட்டுரைக்கு நீங்கள் கவிதை எழுதி என்னை பெரியாளாக்க வேண்டாம், அதை உங்கள் குத்தூசிகள் பார்த்து கொள்வார்கள்" என்று முதல்வருக்கு எழுதியிருந்தார், நான் பின்னூட்டமாக "என்னடா குத்தூசிகளிடமிருந்து இன்னும் பதிலில்லையே என்று பார்த்தேன் வந்து விட்டது" என்று தான் எழுதியிருந்தேன், அது வரவில்லை நான் எப்பொழுது பின்னூட்டம் இட்டாலும் அதன் பின் வரும் பின்னூட்டங்கள் என் மெயிலுக்கு வருவது போல் மார்க் செய்து விடுவேன், அப்போதும் அதைத் தான் செய்திருந்தேன், மற்ற பின்னூட்டங்கள் மட்டும் வந்ததால், என் பின்னூட்டத்தை வெளியிடுவீர்களா என்று கூட கேட்டிருந்தேன்.

அதற்கு பதில் அவர் வித்தியாசமாய் கொடுத்ததால் அங்கே செய்யும் விவாதத்திற்கு பதிலாக நானே ஒரு பதிவு எழுத வேண்டியதாயிற்று, சமீபத்தில் எழுதிய காண்டு கஜேந்திரனும் ,பாரு நிவேதிதாவும் பதிவில் கூட சுகுணா திவாகர் பின்னூட்டம் எழுத அந்த பதிவில் இருந்து எடுத்து கொண்ட வரிகளையே நானும் தேர்வு செய்து ஒரே ஒரு ஸ்மைலி மட்டும் இட்டிருந்தேன், எனது பின்னூட்டம் வரவில்லை ஆனால் அதன் பின் அந்த பதிவிற்கு வரும் பின்னூட்டங்கள் எனது மெயிலுக்கு வந்தது.

நான் என்ன துரோகம் அவர்களுக்கு செய்தேன், நான் பின்னூட்டம் இடும் இடங்களிலெல்லாம், நான் அனானியாகவும், அதர் ஆப்சனில் பின்னூட்டம் இடுவதாகவும் ஒரு கும்பல் புரளியை கிளப்பி கொண்டு திரிகிறது, எனக்கு வேறு பெயரில் பிளாக் இருப்பதாகவும் சொல்லி வருகிறார்கள்.

அது போல் நான் செய்வதில்லை என்று பலமுறை சொல்லியிருக்கிறேன், என் கருத்துகளை என் பெயரில் வெளியிட்ட முடியாமல் முகத்தை மறைத்து சொல்லும் அளவுக்கு கோழை அல்ல நான்.
இவர்களுக்கு நான் எப்படி தான் நம்ப வைப்பது, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனால் சத்தியம் என்ற வார்த்தை உண்மையுடன் இணைந்துள்ளது என்று நம்புகிறேன், நான் பெற்ற ஒரே மகள் மீது ஆணையாக நான் அனானி பின்னூட்டம் இட்டதில்லை, இடுவதில்லை, இடபோவதுமில்லை. இதற்கு மேல் நம்பினால் நம்புங்கள் நம்பாட்டி போங்கள்.

இந்த வீணாய் போன பிளாக் உலகம் உனக்கு என்ன தந்தது என்று கேட்டால் நல்ல நண்பர்களை என்று சொல்லி வந்தேன், ஆனால் நான் கொஞ்சம் எதிர்பாராத, நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் ஒரு நண்பர், நான் தான் ப்ளீச்சிங் பவுடர் என்று சொல்லி வருவது பெருத்த காயத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது.

எனக்கு வால்பையன் பிளாக்கை தவிர வேறொரு பிளாக் உண்டு. அதுவும் இதே அக்கவுண்டில் தான் இருக்கிறது, எனது வியாபார நிமித்தமாக அதை பயன்படுத்தி வருகிறேன், பல தளங்களிலிருந்து முக்கியமான தகவல்களை தொகுத்து அதில் வழங்குகிறேன், இதற்காக நான் வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்குவதால், அந்த பணத்திற்குன்டான மரியாதையின் பொருட்டு அந்த பிளாக்கை எனது வாடிக்கையாளர்கள் மட்டும் பார்க்குமளவுக்கு மாற்றி வைத்திருக்கிறேன், இது தவிர நான் வேறு எந்த ப்ளாக்கிலும் எழுதுவதில்லை.

பொதுவாக நான் எந்த கட்சிக்கும் ஆதரவாளன் இல்லை, வாழ்க, ஒழிக கோஷம் போடுவது எனக்கு பிடிக்காது, ஆனால் பதிவுலக அரசியல் அதை வி்ட கேவலமாக இருக்கிறது. ஒரு சில நபர்களால் நான் மற்ற நண்பர்களையும் இழந்து விடுவோனோ என பயம் வருகிறது எனக்கு, நான் பதிவு எழுதி எந்த புரட்சியையும் செய்து வி்ட போவதில்லை, சர்ச்சைக்குரிய பதிவுகளில் பின்னூட்டம் இட்டு எனக்கு யாரும் சோறிட போவதில்லை. எனக்கு மன உளைச்சலே மிச்சமாகிறது.

இருப்பினும் என் மீது அவதூறு பரப்புவதற்கு அவர்களுக்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும், நானே விவாதம் என்ற பெயரில் சுப்பையா வாத்தியார், நண்பர் கூடுதுறையின் நம்பிக்கைகளை கேள்வி கேட்டு மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறேன், அதே போல் வேறு எங்கும் தவறு நடந்திருக்கலாம்,
இந்த இடத்தில் நான் அப்படியேதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று பகிரங்க மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

இவ்வளவு நடந்தும் என் மீது நம்பிக்கை வைத்து என்னை நம்பும், எனக்கு ஆறுதல் சொல்லும் நண்பர்களுக்கு நான் கோடான கோடி நன்றிகடன் பட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

இத்துடன் எனது நூறாவது பதிவு முடிந்தது

ர்ரிவர்ஸபுல்(irreversable) ஒரு புதிய முயற்சி



மச்சி நான் போதையயுல இருக்கேன், ஒங் கையாண்ட நான் ஒரு கத சொல்லணும், அத்த ஏன் உங்கையில சொல்லனும்னு கேக்குறியா, ஏன்னா நாமெல்லாம் யூத்,
இதுவும் ஒரு யூத் கத தான், அப்பால ரொம்பா நா கழிச்சு நம்ம தோஸ்த பாத்தேன்,
வா மச்சி கொஞ்சம் உட்டுக்கலாம்னு கடைக்கு போனோம், எப்டிகீர மச்சின்னு கேட்டேன், நல்லா இருக்கானாம்பா, கல்யாணம் ஆகி ரெண்டு பசங்கலாம்.
அப்போ எல்லாத்துக்கும் வரட்டா!


சரி உடு மச்சி நடந்தது நடந்துடுச்சி, இந்த டாவுகளே இப்பிடித்தான், நீ பேஜாராகாதன்னு ஒரு சால்னா கடையாண்ட போனோம், ரெண்டு பெரும் குறைய குறைய குட்சோம், அவன் எங்கயோ வடக்கால போறேன்னு சொன்னான், எனக்கு மனசெல்லாம் கஷ்டமா போச்சுப்பா, என்ன பொயப்புடா இதுன்னு வந்துட்டேன். அதான் சகா நான் அவங்ககூட கட்சியா சரக்கடிச்சது


மெய்யாலுமே அந்த பொண்ணு சொல்லிருஜ்சுபா! பின்ன சும்மா அய்யனார் அருவா கணக்கா நுப்பது. ஒன் மன்னாரு கழுத்துல கீதுன்னா எந்த பொண்ணு தான் மிர்சலாகாம இருக்கும், அதான் ஜகா வாங்கிருச்சு, எனக்கோ மேட்டர் எதுவுமே தெரியாது.
அவனோ என்னை ஊரெல்லாம் தேடிகின்னு கீறான். கட்சியில புட்சிடான்பா, ஓஓஓஒன்னு ஒரே அழுவாச்சி.


இது தெரியாமல் என் நண்பன் அவருடன் தனியே சென்றிருக்கிறான், ஊருக்கே வெளியே இருக்குமே பஞ்சாபி ஹோட்டல் அங்கே முப்பது பேத்துக்கு நடுவுல நம்ம பையன்,
எல்லார் கையிலயும் அருவாளு, நம்ம ஆளும் நீ முடிஞ்சா வெட்டிக்கோன்னு சவால் விடுறான். சில பெரிய தலைங்கேல்லாம் கெஞ்சி பாத்துருக்காங்க, கடைசியா சொல்லிட்டான், அந்த பொண்ண சொல்ல சொல்லுங்க, நான் விட்டுடுறேன்


எனது நண்பர் ஒருவர், ஊருக்குள் பெரிய ரவுடி என்று சொல்லிக்கொண்டு திரிபவர், அவருடைய உதவியை நாடினேன், நான் என் நண்பனுக்கு செய்ய நினைத்தது உதவி தான். ஆனால் அதுவே அவனுக்கு பெரிய துரோகமாக மாறி விட்டது. நான் அறிமுக படுத்தின நண்பரும், அந்த பெண் வீட்டாரும் ஒரே சாதி. வந்தது அங்கே தான் வினை. பட்சி கட்சி மாறியது.


அரசனுக்கும், ஆண்டிக்கும் தான் பிரச்சனையில்லை நானும் இரண்டுமாக இருந்தேன், இதெற்கெல்லாம் வேட்டு வைத்தது அவனது காதல், இவன் கொடுத்த கடிதம் அவர்கள் வீட்டில் சிக்கி விட்டதாம், அவளை எங்கேயோ மறைத்து விட்டார்களாம் தேடி கண்டுபிடிக்கணுமாம், நாம தான் பழக்கத்துக்கு எத வேணும்னாலும் செய்வோமே. தேடினோம்.


இதுக்கு முன் அவன் என்னிடம் அவளை பற்றி பேசியதில்லை, ஒரு நாள் நான் அவன் வீட்டிக்கு செல்லும் பொழுது வழியில் அவளுடன் பேசி கொண்டிருப்பதை பார்த்தேன்.
நான்கு வருடமாக காதலிப்பதாக சொன்னான். பெண் வீட்டில் வசதி குறைவாக இருந்தாலும் சாதி பற்றுள்ளவர்கலாம்.


அவ்வளவு வசதிமிக்க பாருக்கு அதற்கு முன் நான் சென்றதில்லை,
நானும் இருக்கிறேன் என்று ஒளித்து கொண்டிருக்கும் ஒரு குண்டு பல்பின் கீழே அமர்ந்தோம், வசதியாக இருக்கிறானாம், சொந்த தொழிலாம், உனக்கும் வேலை தருகிறேன் என்றான், வாங்கி கொடுத்த பீருக்கு மண்டையையாவது ஆட்டனுமே ஆட்டி தொலைத்தேன்.


நீண்ட நாட்கள் கழித்து அவனை பார்கிறேன், கொஞ்சம் சதை போட்டிருக்கிறான் ,
பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொண்டான், பீரடிக்கும் போது நண்பர்களுடன் அவனையும் பார்த்திருக்கிறேன், பேசியிருப்பதாக கூட ஞாபகம், பரஸ்பர புன்னகை விசாரித்தல் முடிந்ததும். ஃபிரியா இருந்தா வா போகலாம் என்றான். அப்போதெல்லாம் யாருடா கூப்பிடுவான் என்று அலைந்து கொண்டிருந்ததால் கூடவே சென்றேன்.

ஞாநியும், கருணாநிதியும் இன்ன பிற நண்பர்களும்

கருத்து சுதந்திரத்தை யாரேனும் கண்டுபிடித்து கொடுத்தால் அவருக்கு இந்த வார பூச்செண்டு நான் கொடுப்பேன்.
ஞாநியை திட்டினால் திராவிடன்
கருணாநிதியை திட்டினால் ஆரியன்.


இது இரண்டும் இல்லையென்றால் தமிழனுக்கு பைத்தியம் பிடித்து விடுமோ என்ற பயம் வந்துவிட்டது எனக்கு. இதை ஏன் இனத்தாக்குதலாக பார்க்க வேண்டும், அதிகார மையத்திற்கு எதிரான கருத்துகள் என்று ஏன் யாரும் சொல்லவில்லை.
ஓருவேளை அவர்கள் பிடித்து தொங்க அந்த அதிகார கொம்பு தேவைப்படலாம்.

என்னைபோல் சாமானியனுக்கு அரசியலை தெரிய வைத்தது, ஞாநி மற்றும் பாமரனின் எழுத்துகள் தான். அணு மின்சாரம் மற்றும் சேது சமுத்திர திட்டம் பற்றிய ஞாநியின் கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில்கள் யாரும் சொல்லவில்லை. பதில்கள் இல்லையென்றால் யாரை நம்புவது, ஞாநியையா அல்லது நமது நேர்மையான அரசியல்வாதிகளையா!

ஞாநி குறிப்பிட்டு தமிழக முதல்வரை பற்றி மட்டும் எழுதுகிறார் என்று சில நண்பர்கள் எழுதுவது, நகைப்புகுள்ளாவதாக இருக்கிறது. ஓருவேளை அவர்கள் அதற்கு முன்னாள் ஞாநியின் எழுத்துகளையே படித்ததில்லையோ என்ற எண்ண தோன்றுகிறது. இந்தியாவின் நிரந்தர இளைஞராக மக்கள் கொண்டாடும் அப்துல் காலாமை கூட ஞாநி விட்டுவைக்கவில்லை.

நந்திகிராம் பிரச்னையை எழுதவில்லையா, ஆங்கிலத்தில் பாடத்திட்டம் இருந்ததால் படிக்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்ட மாணவன் பற்றி எழுதவில்லையா, திருநங்கைகளுக்கு சம அங்கிகாரம் வேண்டும் என்று எழுதவில்லையா, விஜயகாந்த், சரத்குமாரின் கோமாளித் தனத்தை எழுதவில்லையா,

ஜெயலலிதா ஆட்சியின் போது தேர்தலில் நடந்த அராஜகமும், தற்போது உள்ளாச்சி தேர்தலில் நடந்த அராஜகமும் ஞாநியின் ஒரே வாயால் தானே கண்டிக்கப்பட்டது.

ஜெயலலிதா, சசிகலாவுக்கு மாலை போட்டதை அவர்களது தனிப்பட்ட விஷயம் என்று சொன்னதால், ஆரிய ஆதரவாளன் பட்டம் வாங்கிய ஞாநி. எந்த இடத்திலேயும் நாலு கல்யாணம் செய்வது திராவிடனுக்கு அழகா என்று கேட்கவில்லை.
நமது சக பதிவர் தான் அதையும் கேட்டார்(கார்க்கி என்று நினைக்கிறேன்)


படம்:நன்றி இட்லிவடை

ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வை ஞாநி நோன்டியதில்லை.
வயதான காலத்தில் தன்னையறியாமல் மூத்திரம் போகும் வயதில் கூட பொது வாழ்வில் ஈடுபட வேண்டுமா என்ற கேள்வி இருந்ததே தவிர, கருணாநிதி ஒய்வு எடுக்க போவதால் ஞானிக்கு யாரும் கட்சியின் தலைவர் பதவி தந்துவிடப் போவதில்லை.

கடைசியாக ஒரே ஒரு கேள்வி, உடன்பிறப்புகள் எதைப் பார்த்து கழகத்துடன் இணைந்துள்ளார்கள், கழகத் தலைவரின் பகுத்தறிவுக்கா?
ஆரியனாய் பிறந்தாலும் சாதி,மதத்தை எதிர்த்து ஜோதிடம், கடவுள் மூட நம்பிக்கைகளை சாடி வரும் ஞாநி பகுத்தறிவு வாதியா. இல்லை மஞ்சள் துண்டை போட்டுகொண்டு, சாதி ஓட்டை பெற சாதிக்காரரை தொகுதியில் நிறுத்தும் கழகத் தலைவர் பகுத்தறிவு வாதியா

ஒரு ரூபாய் அரிசியும், இலவச தொலைக்காட்சியும் நமத்து போனாலும், இன்றும் அதை சாதனையாக தலையில் தூக்கி கொண்டு ஆடும் உடன்பிறப்புகள், என்று கடிவாளத்தை துறந்து சுதந்திர மனிதர்கள் ஆவார்கள்.
காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

அவர்களுது குடும்ப அரசியலை பற்றி கோட்ட எழுதலாம்!
நான் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை என்பதாலும்.
அதை பற்றி கேட்க வேண்டியது அந்த கட்சி தொண்டர்கள் தான் என்பதாலும்,
அதாவது அவர்களுடைய குடும்ப விசயத்தில் நான் தலையிட விரும்பவில்லை.
அவ்ளோதாம்பா

இந்த பதிவு
வருங்கால பெருந்தலைவர் சின்னகுத்தூசிக்கு சமர்ப்பணம்

!

Blog Widget by LinkWithin