இரண்டு,மூன்று நாட்களுக்கு முன் தமிழ்மணத்தில் பெருத்த விவாதத்திற்குரிய விஷயம் ஜோதிடம், நண்பர் செந்தழல் ரவி சுப்பையா வாத்தியாரிடம் கேள்வி கேக்க, அவருடைய சூடான பதில்கள் மட்டுமல்லாமல் சிலருடைய பின்னூட்டங்களும் சூடாகவே இருந்தன.
நான் யார் பக்கம் என்று நண்பர்களுக்கு தெரியும், இதற்காக சில மணி நேரங்கள் செலவு செய்து இந்த பதிவை எழுதுகிறேன், இது யாருக்கும் கேட்க்கப்படும் கேள்விகள் அல்ல
வேறு எதற்கு
தலைப்பை பாருங்க தெரியும்
நான் பார்த்தவரை ஜோதிடர்கள் தம்மை ஜோதிட ஆராச்சியாளன் என்றே சொல்கிறார்கள், எது ஆராய்ச்சி என்று புரியாமல் சொல்கிறார்களா என்று தெரியவில்லை, ஏற்கனவே எழுதி வைத்துள்ளதை மீண்டும் எடுத்து படிப்பதற்கு பெயர் ஆராய்ச்சியா, ரிசிகள் எழுதி வைத்துள்ளார்கள் சரி, எந்த எந்த கோள்கள் நம் மீது கதிரை பாய்ச்சும் சரி, தம்மாதூண்டு புதன் கிரகம் நம் மீது பார்வையை ஓட்டும் பொது வியாழன் மற்றும் சனிக்கு எத்தனையே பெரிய துணை கிரங்கங்கள் உள்ளன, அவை ஏன் நம் மீது தன் பார்வையை காட்டுவதில்லை.
சந்திரன் ஒரு துணை கிரகம், அதையும் ஒரு கோளாக பார்க்கிறீர்கள், ஆனால் பூமியையே விட்டுவிட்டீர்களே, சூரியனையும் ஒரு கோளாக கொண்டால் இருப்பத்தேழு நட்சத்திரங்கள் எதற்கு? சனி,ராகு,கேது பாவ கிரகங்கள் என்கிறீர்களே அது என்ன பாவம் செய்தது? யாருக்கு செய்தது?
ஜோதிடம் என்பது மன உளவியல் ரீதியாக உருவாக்கப்பட்டது,
எந்த ஜோதிடரும் அடுத்த வினாடியிலிருந்து உனக்கு நேரம் நல்லாருக்கு என்று சொல்வதில்லை, மூன்று மாதம், ஆறு மாதம் கெடு மட்டுமே கொடுக்க படுகிறது.
அதன் பிறகு அது வரை கண்ணை மூடி கொண்டிருந்த ஏதாவது ஒரு கிரகம் ஒண்ணரை கண்ணில் பார்க்க மீண்டும் மூன்று மாதமோ,ஆறு மாதமோ கெடு.
உங்களின் கூற்றுப்படி எல்லா மனிதர்களும் நீங்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள பண்ணிரண்டு லக்னத்திர்க்குள் தான் பிறக்க வேண்டும் அதற்கு ஒரு பலன்,
வானில் இருப்பத்தேழு நட்சத்திரங்கள் மட்டுமே உள்ளன உங்களுக்கு!? அதற்கு ஒரு பலன்,
அந்த நட்சத்திரம் ஒவ்வொன்றிற்கும் நான்கு பாகம் அதற்கு ஒரு பலன், அந்த நட்சத்திரம் எங்கே இருக்கிறதோ அது தான் ராசி அதற்கு ஒரு பலன், இந்த பலன்கள் யாவும் ஒரு போல் இருப்பதில்லை, ஆனால் ஒரு மனிதனின் மொத்த சராசரி குணங்களும் இந்த நான்கிர்க்குள் அடங்கி விடுகிறது, அப்படியானால் இது உளவியல் ரீதியான டுபாக்கூரா இல்லையா.
ஒருவனின் குணத்தை வைத்து அவன் எவ்வாறு வாழ்வில் இருப்பான் என்று சொல்ல முடியும், இப்படி மொத்த குணங்களையும் ஒருவனுக்கே சொல்லும் போது, காலண்டரில் வரும் ராசி பலன் போல எல்லாம் எல்லோருக்கும் தானே பொருந்துகிறது.
ஒருவன் வெளிநாட்டு போக ஜாதகத்தில் யோகம் வேண்டுமென்றால், எல்லா விமானிகளுக்கும், விமான பணி பெண்களுக்கும் அந்த யோகம் இருக்கிறதா.
ஒரு ஆணின் பிரச்சனைக்கு அவனது தந்தையின் ஜாதகம்,சகோதரர்களின் ஜாதகமும் பார்க்கபடுகிறது, ஆனால் பெண்ணிற்கு என்ன செய்கிறார்கள். அவளது மாதவிடாய் தொடங்கும் நாளை ருது ஜாதகம் என்று ஒன்று எழுதுகிறார்கள், ஆண்கள் வயசுக்கு வருவதில்லையா, இல்லை அவன் பிறக்கும் போதே பெருத்த ஆண்மையுடன் பிறக்கிறானா, ஒரு ஆணுக்கு இருதார யோகம்!? இருந்தால் அதற்கு பரிகாரம் சொல்கிறார்கள், அதற்கு பதில் விதவைக்கோ, வாழ்விழந்த பொண்ணுக்கோ வாழ்வளித்தால் புரட்சிகரமான பரிகாரமாக இருக்குமே.
ஒருவனுக்கே ஜாதகம் கணிக்கும் போது அவனது பிறந்த இடம் முக்கியமாக படுகிறது,
அப்படியானால் அவன் அங்கேயே வாழ்வதானால் மட்டுமே அது சரியாக இருக்கமுடியும். ஆனாலும் பிறந்த இடத்தை விட அவன் உருவான இடம் தானே முக்கியம். முக்கால் வாசி பேர் அவர்கள் வீட்டு படுக்கை அறையில் தானே உருவாக்கி இருப்பார்கள், ஒரு ஊரில் உருவாகி வேறொரு ஊரில் பிறக்கும் குழந்தைகள் இல்லையா. மீண்டும் வேறு ஊரில் வாழப்போகும் அவனுக்கு அந்த ஜாதகம் எப்படி சரியாக இருக்கும்.
ஜாதகத்தில் ராகு,கேது மாற்று திசையில் சுற்றுகிறது, அதே போல் சூரிய குடும்பத்தில் இரண்டு கோள்கள் மாற்று திசையில் சுற்றுகிறது என்கிறார்கள், பெரிய ஆராய்ச்சி என மார்தட்டி கொள்ள இது அவர்களுக்கு உதவுகிறது. நான் சொல்கிறேன் வெகு சமீபத்தில் தான் அவ்வாறு மாற்றப்பட்டது, இல்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?
ஜோதிட நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து தானே இருக்கிறது,உங்களை கடவுள் படைத்தான், என்னை ஏன் இப்படி படைத்தாய் என்று அவனுடன் மல்லுக்கு நிற்கிறீர்கள் அப்படியானால் உங்களுக்கே கடவுள் மேல் அவநம்பிக்கை வந்துள்ளது என்று தானே அர்த்தம்,
மேலும் ஆப்பு வைத்தல் தொடரலாம்!
இது எந்த தனி நபருக்கும் எழுதப்பட்ட பதிவல்ல
மொத்தமாக ஜோதிட நம்பிக்கையாளருக்கு எழுதப்பட்டது
தெரிந்தவர்கள் பதிலளிக்கலாம்
தெரியாதவர்கள் பல்லிளிக்கலாம்
36 வாங்கிகட்டி கொண்டது:
///வாங்கிகட்டி கொண்டது:///
நிறைய வாங்கி கட்டிக்கொள்ளவோ அல்லது விட்டுத்தள்ளவோ வாழ்த்துக்கள்
//தெரிந்தவர்கள் பதிலளிக்கலாம்
தெரியாதவர்கள் பல்லிளிக்கலாம்//
நான் இரண்டாவதை தெரிவு செய்கிறேன்.
ஜோதிட நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து தானே இருக்கிறது,உங்களை கடவுள் படைத்தான், என்னை ஏன் இப்படி படைத்தாய் என்று அவனுடன் மல்லுக்கு நிற்கிறீர்கள் அப்படியானால் உங்களுக்கே கடவுள் மேல் அவநம்பிக்கை வந்துள்ளது என்று தானே அர்த்தம், //
:-))), இது.. இது குத்து. இப்பப் பார்க்கலாம் அந்த ஆராய்ச்சி விஞ்ஞானிகள் என்ன சொல்றாங்கன்னு. இருந்தாலும், ஏதானும் கேள்வி கேட்டா, சாமீ கண்ண குத்திப்புடுபுடுமுன்னு அநியாயமா மிரட்டுறாங்கப்பா :-))).
//நான் பார்த்தவரை ஜோதிடர்கள் தம்மை ஜோதிட ஆராச்சியாளன் என்றே சொல்கிறார்கள், எது ஆராய்ச்சி என்று புரியாமல் சொல்கிறார்களா என்று தெரியவில்லை, ஏற்கனவே எழுதி வைத்துள்ளதை மீண்டும் எடுத்து படிப்பதற்கு பெயர் ஆராய்ச்சியா, ரிசிகள் எழுதி வைத்துள்ளார்கள்.
//
Correct question. May be decoding itself requires lots of research!
// சரி, எந்த எந்த கோள்கள் நம் மீது கதிரை பாய்ச்சும் சரி, தம்மாதூண்டு புதன் கிரகம் நம் மீது பார்வையை ஓட்டும் பொது வியாழன் மற்றும் சனிக்கு எத்தனையே பெரிய துணை கிரங்கங்கள் உள்ளன, அவை ஏன் நம் மீது தன் பார்வையை காட்டுவதில்லை.
//
Logical question.
//சந்திரன் ஒரு துணை கிரகம், அதையும் ஒரு கோளாக பார்க்கிறீர்கள், ஆனால் பூமியையே விட்டுவிட்டீர்களே, சூரியனையும் ஒரு கோளாக கொண்டால் இருப்பத்தேழு நட்சத்திரங்கள் எதற்கு? சனி,ராகு,கேது பாவ கிரகங்கள் என்கிறீர்களே அது என்ன பாவம் செய்தது? யாருக்கு செய்தது?
//
Yes, it is left un-explained.
// உங்களின் கூற்றுப்படி எல்லா மனிதர்களும் நீங்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள பண்ணிரண்டு லக்னத்திர்க்குள் தான் பிறக்க வேண்டும் அதற்கு ஒரு பலன்,
வானில் இருப்பத்தேழு நட்சத்திரங்கள் மட்டுமே உள்ளன உங்களுக்கு!? அதற்கு ஒரு பலன்,
அந்த நட்சத்திரம் ஒவ்வொன்றிற்கும் நான்கு பாகம் அதற்கு ஒரு பலன், அந்த நட்சத்திரம் எங்கே இருக்கிறதோ அது தான் ராசி அதற்கு ஒரு பலன், இந்த பலன்கள் யாவும் ஒரு போல் இருப்பதில்லை, ஆனால் ஒரு மனிதனின் மொத்த சராசரி குணங்களும் இந்த நான்கிர்க்குள் அடங்கி விடுகிறது, அப்படியானால் இது உளவியல் ரீதியான டுபாக்கூரா இல்லையா.//
சோதிடக் கலை அவ்வளவு எளிதானதல்ல. இருந்திருந்தால் நாம் சோதிடரை நாடிச் செல்ல வேண்டியதில்லையே. "சோதிடம் ஃபார் டம்மீஸ்" போன்ற நூலை வைத்தே பலன்களை அறிந்து கொள்ளலாமே? நான் அறிந்த வரையில் சோதிடப் பலன்கள் ஒரு ஐந்து/ஆறு பரிமாணங்கள் உள்ள மேட்ரிக்ஸ் போன்றது. அல்லது ஐந்து/ஆறு variables கொண்ட சிக்கலான polynomial ஈக்குவேஷன் போன்றது. These parameters may vary for any two though they might share the same zodiac sign. So, the predictions for each individual in this word born already and in future would always be unique.
Only a person with very good mathematics and fantastic memory could make predictions in a proper way. Rest are dubakoors.
//ஒரு ஆணின் பிரச்சனைக்கு அவனது தந்தையின் ஜாதகம்,சகோதரர்களின் ஜாதகமும் பார்க்கபடுகிறது, ஆனால் பெண்ணிற்கு என்ன செய்கிறார்கள். அவளது மாதவிடாய் தொடங்கும் நாளை ருது ஜாதகம் என்று ஒன்று எழுதுகிறார்கள், ஆண்கள் வயசுக்கு வருவதில்லையா, இல்லை அவன் பிறக்கும் போதே பெருத்த ஆண்மையுடன் பிறக்கிறானா, ஒரு ஆணுக்கு இருதார யோகம்!? இருந்தால் அதற்கு பரிகாரம் சொல்கிறார்கள், அதற்கு பதில் விதவைக்கோ, வாழ்விழந்த பொண்ணுக்கோ வாழ்வளித்தால் புரட்சிகரமான பரிகாரமாக இருக்குமே.//
This is like a placebo. Just to give pshycological boost.
//ஒருவனுக்கே ஜாதகம் கணிக்கும் போது அவனது பிறந்த இடம் முக்கியமாக படுகிறது,
அப்படியானால் அவன் அங்கேயே வாழ்வதானால் மட்டுமே அது சரியாக இருக்கமுடியும். ஆனாலும் பிறந்த இடத்தை விட அவன் உருவான இடம் தானே முக்கியம். முக்கால் வாசி பேர் அவர்கள் வீட்டு படுக்கை அறையில் தானே உருவாக்கி இருப்பார்கள், ஒரு ஊரில் உருவாகி வேறொரு ஊரில் பிறக்கும் குழந்தைகள் இல்லையா. மீண்டும் வேறு ஊரில் வாழப்போகும் அவனுக்கு அந்த ஜாதகம் எப்படி சரியாக இருக்கும். //
The birth place is to determine the location of the planets, stars, satellites at that point of time. That alone determine the predictions of a person.
//
ஜோதிட நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து தானே இருக்கிறது,உங்களை கடவுள் படைத்தான், என்னை ஏன் இப்படி படைத்தாய் என்று அவனுடன் மல்லுக்கு நிற்கிறீர்கள் அப்படியானால் உங்களுக்கே கடவுள் மேல் அவநம்பிக்கை வந்துள்ளது என்று தானே அர்த்தம்,
//
That is a ploy to instill strong belief in astrology.
முத்து முத்தானக் கேள்விகள், நானும் பதில்களை தெரிஞ்சிக்க ஆவலாக இருக்கேன்
வால் பையன் இரசிகர் வட்டைத்தை ஹவாயில் தொடங்கலாம்னு ஒரு ஐடியா...
இந்த போஸ்ட்டுல ரொம்ப பிடிச்ச வரிகள்..
/
தெரிந்தவர்கள் பதிலளிக்கலாம்
தெரியாதவர்கள் பல்லிளிக்கலாம்
/
ஈஈஈஈஈஈஈஈஈ :-D
//நிஜமா நல்லவன் said...
நிறைய வாங்கி கட்டிக்கொள்ளவோ அல்லது விட்டுத்தள்ளவோ வாழ்த்துக்கள்//
எதையும் தாங்கும் இதயம் இருக்கும் போது
கவலை எதற்கு நண்பா
தூற்றுவார் தூற்றட்டும்
போற்றுவார் போற்றட்டும்
வால்பையன்
// நல்லதந்தி said...
//தெரிந்தவர்கள் பதிலளிக்கலாம்
தெரியாதவர்கள் பல்லிளிக்கலாம்//
நான் இரண்டாவதை தெரிவு செய்கிறேன்.//
இந்த இடத்தில் நான் சொல்லியிருப்பது
ஸ்மைலி போட சொல்லி நண்பா
வால்பையன்
//Anonymous said...
:-))), இது.. இது குத்து. இப்பப் பார்க்கலாம் அந்த ஆராய்ச்சி விஞ்ஞானிகள் என்ன சொல்றாங்கன்னு. இருந்தாலும், ஏதானும் கேள்வி கேட்டா, சாமீ கண்ண குத்திப்புடுபுடுமுன்னு அநியாயமா மிரட்டுறாங்கப்பா :-))).//
தப்பு பண்ணவங்கள சாமி கண்ணா குத்தும்னா
நாட்ல யாருக்குமே கண்ணு தெரியாது நண்பா
வால்பையன்
//rapp said...
முத்து முத்தானக் கேள்விகள், நானும் பதில்களை தெரிஞ்சிக்க ஆவலாக இருக்கேன்//
எனக்கும் அதே ஆவல் தான்,
பார்ப்போம் கொஞ்சமாவது அவர்கள் கொள்கையில் அவர்களுக்கு நம்பிக்கை இருந்தால்
பதில் சொல்ல முயற்சிப்பார்கள்
வால்பையன்
Anonymous said...
//Only a person with very good mathematics and fantastic memory could make predictions in a proper way. Rest are dubakoors.//
இது ஜோதிடம் என்பது உண்மை என்ற கூற்றுக்கு தள்ளிவிடும்.
இதில் ஞாபக சக்தி எதற்கு பயன்படும் என்று தெரியவில்லை
அது இறந்த கால சம்பந்தபட்டது, எதிர்க்காலத்தை அது எப்படி கணிக்கும்
//This is like a placebo. Just to give pshycological boost.//
அப்படியே வைத்து கொள்ளலாம்
மனிதனுக்கு உளவியல் ரீதியாக பயன்தராத எந்த ஒன்றும் மனித சமுதாயத்திற்கு தேவையில்லையே
//The birth place is to determine the location of the planets, stars, satellites at that point of time. That alone determine the predictions of a person.//
ஜோதிட கணிதம் வேறு அறிவியல் கணிதம் வேறு,
லீப் வருடம் கூட சமீபத்தில் தான் உருவாக்கப்பட்டது.
பூமிக்கே இப்படியென்றால் நேரில் சென்று பார்க்காத கோள்கள் நம்மை கவனிகின்றன என்று எப்படி கூறமுடியும். நட்சத்திரங்கள் நம்மை விட பல ஒளியாண்டுகள் தள்ளி இருக்கிறது. நாம் பிறக்கும் பொது நம் மீது விழும் கதிர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னரே அங்கிருந்து புறப்பட்டது. அது எவ்வாறு நமக்கானதாகும்
//That is a ploy to instill strong belief in astrology.//
இதன் சரியான தமிழ் அர்த்தம் எனக்கு புரியவில்லை நண்பா
இருப்பினும் சொல்கிறேன், ஜோதிடமும், கடவுள் நம்பிக்கையும் மறுப்பிறப்பு சம்பந்தமுள்ளதாக இருக்கிறது, அப்படியானால் ஏற்கனவே செய்த பாவத்தின் தண்டனை தானே இந்த வாழ்க்கை. அந்த தண்டனையை முழுவதுமாக அனுபவிக்காமல் பரிகாரம் என்ற பெயரில் கடவுளுக்கே லஞ்சம் கொடுத்தால் என்ன அர்த்தம்.
அந்த பெயரில் ஜோதிடர்கள் பிழைக்க செய்த ஏற்பாடு என்று தானே அர்த்தம்.
வால்பையன்
//Natty said...
வால் பையன் இரசிகர் வட்டைத்தை ஹவாயில் தொடங்கலாம்னு ஒரு ஐடியா...
இந்த போஸ்ட்டுல ரொம்ப பிடிச்ச வரிகள்..
/
தெரிந்தவர்கள் பதிலளிக்கலாம்
தெரியாதவர்கள் பல்லிளிக்கலாம்
/
ஈஈஈஈஈஈஈஈஈ :-த//
முதல் வரி
உங்களுக்கு நீங்களே சூன்யம்(ஆப்பு) வைத்து கொள்வதற்கு சமம்
இரண்டாவது நான் சொல்லவந்ததை சரியாக புரிந்து கொண்டீர்கள்
வால்பையன்
//
////Only a person with very good mathematics and fantastic memory could make predictions in a proper way. Rest are dubakoors.//
இது ஜோதிடம் என்பது உண்மை என்ற கூற்றுக்கு தள்ளிவிடும்.
இதில் ஞாபக சக்தி எதற்கு பயன்படும் என்று தெரியவில்லை
அது இறந்த கால சம்பந்தபட்டது, எதிர்க்காலத்தை அது எப்படி கணிக்கும் //
Had you read the lessons of Subbayya ayya, you would have observed that it involves lot of if then conditions and index tables.
I didn't mean memory in the context of past, present and future or birth or rebirth.
It is in the context of computation. If you treat astrology as a complication software application, it would take several parameters (inputs) and execute lot of if-then-else conditions, refers to several indexed tables (a value for each planet or a value for each star, a value for each lagnathipathy, a value for each disha, a value for each rasiathipathy etc) and churn out an output.
All these indexed tables, one have to memorize and recollect in those days when there is no computer (with a software) or book available (for ready reference). So a really good astrologer have to remember all these stuff and use it appropriately.
//
//
ஜோதிட நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து தானே இருக்கிறது,..........................
............................
............................
//
That is a ploy to instill strong belief in astrology.
//
I said, astrology without the support of god, may not sustain much of rational attack. Hence, it binds to god and propogates itself in the name of god, so that any questioning voice can be scarred away.
"எதையும் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை"
நட்டியைப்போல பல்லிளிக்காமல் இதையாவது சொன்ன எனக்கு ஒரு சபாஷ் போடுங்கப்பா...
இதுவெல்லாம் சும்மா டுபாக்கூர் என்று அவர்களுக்கே தெரியும்.
பதில் வராது
தொடருங்கள் உங்கள் பகுத்தறிவுக் கணைகளை.
அனானி நண்பருக்கு,
எனக்கு அவ்வளவாக ஆங்கில புலமை கிடையாது.
போன முறை நீங்கள் கேட்ட கேள்விகளுக்கே
சக ஊழியரிடம் சந்தேகம் கேட்டு
"இதுக்கு தானா உனக்கு சம்பளம்" என்று முறைக்கிறார்.
வாதம் என்று வந்து விட்டால் எனக்கு சோறு தண்ணி வேண்டாம்.
ஆனால் சிரமம் பார்க்காமல் தமிழில் உங்கள் விளக்கங்களை கொடுத்திர்கலேயானால்
சந்தோசமடைவேன்.
ஒன்றே ஒன்று மட்டும் புரிகிறது.
அய்யா சொல்லியுள்ளதை படி படி என்று எல்லோரும் திரும்ப திரும்ப சொல்கிறீர்கள்.
இதற்கு இன்ன பலன் என்னும் உள்குத்துக்கு நான் வரவில்லை
நான் கேட்டிருக்கும் கேள்விகள் அனைத்தும் ஜாதகத்தின் அடிப்படை காரணிகள்
அதற்கே பதில் இல்லையென்றால், பலன்களை பற்றி யாருக்கு என்ன கவலை.
திருப்தி அடையாத மனித சமுதாயம் வாழும் பூமி இது.
நாளை அது கிடைக்கும் யோகும் உனக்கிருக்கிறது என்றால்,
கிடைக்குமோ கிடைக்காதோ இன்று அவன் சந்தோசமாக இருப்பான்.
இது ஒரு வகையான போதை, இந்த போதை தான் ஜோதிடம் என்று நான் சொல்கிறேன்.
இது தெரிந்தும் நீங்கள் அதை படிக்க சொல்கிறீர்கள்.
எந்த ஜோதிடனாவது இது நடக்கும் என்று ஆணித்தரமாக கூறமுடியுமா?
நடக்கலாம் என்று நான் கூட தான் சொல்லுவேன்.
லாட்டரி விற்பவன் சொல்வானே
விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு
அந்த கதை தானே ஜோதிடமும்
வெறும் மன திருப்திக்காக பார்க்கிறேன் என்று தான் முக்கால்வாசி ஜோதிட ரசிகமணிகள் சொல்கிறார்கள், திட மனதுடயவனுக்கு எதற்கு மனதிருப்தி.
மற்ற உயிரினங்களுக்கு ஏன் ஜோதிடம் இல்லை.
எல்லாம் உயிரினம் தானே.
உங்கள் பார்வையில் அதுவும் கடவுள் படைப்பு தானே, அதற்கும் ஒரு ஜாதகம் எழுதி பலன் சொல்லலாமே.
முடிவாக ஒன்று
உங்கள் நம்பிக்கையின் மீது சில கேள்விகள் வரும் போது கோபம் வருவது இயற்கை தான். ஆனால் அதன் நம்பக தன்மையை நிலை நிறுத்தும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. அதை தட்டி கழித்தல் எம்மாதிரியான செயல் என்று எனக்கு சொல்ல தெரியவில்லை, இருப்பினும் அனானியாக வந்து தனது கருத்துகளை பகிர்ந்தும் இன்னும் பகிர போகும் அனானிக்கு எனது நன்றிகள்
வால்பையன்
//ஜிம்ஷா said...
"எதையும் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை"
நட்டியைப்போல பல்லிளிக்காமல் இதையாவது சொன்ன எனக்கு ஒரு சபாஷ் போடுங்கப்பா...//
சபாஷ்
எதையும் நம்புவதற்கு நமக்கு மூளை இல்லை நண்பா!
அதன் உண்மை தன்மையை கண்டறியவே மூளை, பகுத்தறிவு, நாம் கற்றுணர்ந்த பாடம்
வால்பையன்
இரண்டு மணிநேர இடைவெளியில் (உலகம் முழுதும்) பிறக்கும் அனைவருக்கும் ஒரே ஜாதகம் தானாமே? இவர்களுக்கு ஒரேமாதிரியான வாழ்க்கைதானா?
இதையும் சேத்துங்க வாலு !
//புகழன் said...
இதுவெல்லாம் சும்மா டுபாக்கூர் என்று அவர்களுக்கே தெரியும்.
பதில் வராது
தொடருங்கள் உங்கள் பகுத்தறிவுக் கணைகளை.//
கண்டிப்பாக நண்பா!
பகுத்தறிவாளன் எந்த அளவுக்கு சமுதாய அக்கறையுள்ளவன் என்று நிரூபிக்க இது நமக்கு ஒரு வாய்ப்பு.
சம்பந்தப்பட்ட நபருக்கு இரு பின்னூட்டங்கள் இட்டும் எதுவும் வெளியிடப்பட வில்லை.
அவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் விளக்கி சொல்லலாமே.
வால்பையன்
//...நம்பிக்கையின் மீது சில கேள்விகள் வரும் போது கோபம் வருவது இயற்கை தான். ஆனால் அதன் நம்பக தன்மையை நிலை நிறுத்தும் பொறுப்பும் .. இருக்கிறது//
பிடித்த வரிகள்
//சம்பந்தப்பட்ட நபருக்கு இரு பின்னூட்டங்கள் இட்டும் எதுவும் வெளியிடப்பட வில்லை.//
இதென்ன கதை! :(
சரி, அப்படியே இருந்தாலும் அந்தப் பின்னூட்டங்களை இங்கே அல்லது ஒரு தனிப்பதிவாகப் போட்டால் மறுக்கப்பட்டதற்கான காரணங்களை நாங்கள் புரிந்துகொள்ளலாமே..
//குமார் said...
இரண்டு மணிநேர இடைவெளியில் (உலகம் முழுதும்) பிறக்கும் அனைவருக்கும் ஒரே ஜாதகம் தானாமே? இவர்களுக்கு ஒரேமாதிரியான வாழ்க்கைதானா?
இதையும் சேத்துங்க வாலு ! ///
நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள்
சொன்னால் தானே தெரியும், அவர்கள் வேறு ஏதோ சப்பை கட்டு கட்டி கொண்டிருக்கிறார்கள்
வால்பையன்
//முக்கால் வாசி பேர் அவர்கள் வீட்டு படுக்கை அறையில் தானே உருவாக்கி இருப்பார்கள், ஒரு ஊரில் உருவாகி வேறொரு ஊரில் பிறக்கும் குழந்தைகள் இல்லையா. //
:-))
இந்தியாவுல உருவாகி அமெரிக்காவுல கூட நெறய கொழந்தைக பொறக்குது..
அமெரிக்காவுல உருவாகி இந்தியாவுல கூட நெறய கொழந்தைக பொறக்குது..
அப்ப அதுக்கு எப்படி சாதகம் இருக்கும் ??
இதுக்கு யாராவது பதில் சொல்றாங்களானு பாப்போம்..
///நான் பார்த்தவரை ஜோதிடர்கள் தம்மை ஜோதிட ஆராச்சியாளன் என்றே சொல்கிறார்கள், எது ஆராய்ச்சி என்று புரியாமல் சொல்கிறார்களா என்று தெரியவில்லை, /////
மேற்கத்திய வானியல் பாடத்தை சென்ற நூற்றாண்டில் தமிழில் மொழி பெயர்க்கும்போது கோள்களுக்கு ஜோதிடத்தில் ஏற்கனவே இருந்த கோள்களின் பெயர்களை சூட்டியாகி விட்டது. இதனால் நாம் 1500 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்த கோள்களை இன்று அறிவியல் உறுதி செய்துள்ளது என்று போருள்கொள்ளமுடியுமா? பெயர் இரவல் கொடுத்தால் பிள்ளை பெற்றதுக்கு ஒப்பாகுமா?
///அதன் பிறகு அது வரை கண்ணை மூடி கொண்டிருந்த ஏதாவது ஒரு கிரகம் ஒண்ணரை கண்ணில் பார்க்க மீண்டும் மூன்று மாதமோ,ஆறு மாதமோ கெடு.////
சதுரங்க ஆட்டத்தில் காய்களை பீச்சாங்கையில் இடம் மாற்றுவது போல் கோள்களை மாற்றி விடுவார்கள் போலிருக்கு.
இதற்கு தொடுப்பு கொடுத்து பதில் அளியுங்கள்
http://scssundar.blogspot.com/2008/07/blog-post_12.html
வணக்கம்
//வழிப்போக்கன் said...
இந்தியாவுல உருவாகி அமெரிக்காவுல கூட நெறய கொழந்தைக பொறக்குது..
அமெரிக்காவுல உருவாகி இந்தியாவுல கூட நெறய கொழந்தைக பொறக்குது..
அப்ப அதுக்கு எப்படி சாதகம் இருக்கும் ??
இதுக்கு யாராவது பதில் சொல்றாங்களானு பாப்போம்..//
பதில் இருந்தா தானே சொல்வதற்கு
வால்பையன்
மோகன் கந்தசாமி அய்யா!
தெரிஞ்சுகிட்டே கேள்வி கேக்குறிங்க பார்த்திங்களா
எப்படி பார்த்தாலும் நேரடியான பதில்கள் வரவில்லை யாரிடம் இருந்தும்
வால்பையன்
// கூடுதுறை said...
இதற்கு தொடுப்பு கொடுத்து பதில் அளியுங்கள்
http://scssundar.blogspot.com/2008/07/blog-post_12.html
வணக்கம்//
கண்டிப்பாக எனது அடுத்த பதிவு உங்கள் பதிவுக்கு பதில் தான்
வால்பையன்
//இந்தியாவுல உருவாகி அமெரிக்காவுல கூட நெறய கொழந்தைக பொறக்குது..
அமெரிக்காவுல உருவாகி இந்தியாவுல கூட நெறய கொழந்தைக பொறக்குது..
அப்ப அதுக்கு எப்படி சாதகம் இருக்கும் ??
இதுக்கு யாராவது பதில் சொல்றாங்களானு பாப்போம்..//
பதில் இருந்தா தானே சொல்வதற்கு வால்பையன்//
பதில் இல்லாமல் இல்லை... யாரும் பதில் சொல்லி உங்களிடம் கும்மியடிக்க விரும்புவதில்லை...
ஜாதகத்தின் அடிப்படையே குழந்தை பிறக்கும் இடம், நேரம்தான்... குழந்தை உருவாகும் நேரமோ இடமோ இல்லை...
ஜாதகம் ஜோதிடம் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் பலர் கேள்விகேட்பதால் இதற்கு பதில் சொல்லிமாளாது...
பார்வையில்லாதவற்கு பால் எப்படி இருக்கும் என உருவகபடுத்தியதைப் போலத்தான் இது...
அடுத்த பதிவு
வால்பையன்
வால்பையன் சார் ஒரு உண்மை இப்போ தெரிஞ்சு போச்சு.!
தமிழ்மண பதிவுகளின் தலைப்புகள் பல சமிப காலமாக " மலையாள படத்திற்கு தமிழக திரை களில் " "ரா........." என வால்போஸ்ட் அடித்து கூட்டத்தை கூட்ட வது போல் " சுண்டி இழுக்கும் காமத்துபால் தலைப்புகளும் ,ஜ... கதைகளும் இருக்கும் போது
வாசகர்களின் மன ஒட்டத்தை திருப்ப எடுத்த முயற்சியும், உங்கள் பகுத்தறிவு கொள்கை பிரச்சாரம்( இப்போ தமிழகத்தில் முன்பிருந்த வலு இப்போ இல்லாதது மாதிரி தோற்றம்)யுக்தியும் தானே
"ஒரு கல்லில் இரு மாங்காய்"
பதிவாளர்களுக்குள் இது ஒரு நல்ல ஆரோக்கிய போட்டி
"சாபாஸ் சரியான போட்டி"
(வஞ்சிக் கோட்டை வாலிபன் வீரப்பா பாணியில்)
வாசக அன்பர்களுக்கு நல்ல அறிவுச் செய்தி வேட்டை.பாரட்டுக்கள்
இப்போ வலைத்தளத்தில் " on line voting " இருக்கே
(protection againast second voting by the same person)
வாசகர் எண்ணம் என்ன என்று அறிய செய்தால் தமிழக இன்றய நிலையின் பிரதி பலிப்பை ( ஒரளவுக்கு)
தெரிய வாய்ப்பு.
தேர்தல் வேற வந்திடும் போலுள்ளதே!
அதுவும் இப்போ என்ன நடக்கப் போவதுன்ன பல பெரியவங்க விரும்பினமாதிரி இரு கட்சி ஆட்சி முறை ( மேல் நாடுகளில் உள்ளது மாதிரி
--please vist dondu.blogspot.com for further details about other nations( usa,u.k,france,germany ...etc)
ஆனால் என்ன அது இரு கம்பெனி
ஆட்சிமுறையாய் மாறும் திக்கில் செல்கிறது.
1.அண்ணன் ராமனின் இடது சாரி அணி
2.தம்பி லக்குமனனின் வலது சார் அணி.
1.அணுசக்தி ஒப்பந்தம் எதிர்ப்பு அணி
2.அணுசக்தி ஒப்பந்தம் ஆதரவு அணி
என்ன திடிரென்று கருத்து வேறு பக்கம் செல்கிறதே என்றா?
இதுவும் ஜோதிடம் சம்பந்தமாக( அதவது எதிர்காலக் கணிப்பாளர்களின் ஆருடங்கள்)
பற்றிதான்.
நாஸ்டர்டாம் போல் ஒரு கணிப்பு ( படித்த உண்மைச் செய்தி)
"வரும் காலங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து உலகில் எந்தப் பகுதியில்
வாழும் மனிதனும் தான் மாதம் பெரும் மொத்த ஊதியத்தையும்( total monthly income form all sources)
தனது குடுப்பத்தின் மாதாந்திர உணவுத் தேவைக்கு மட்டும் செலவளிக்க வேண்டியது வரும் எனவே அது சமயம் மற்ற பொருடகளை (consumer goods) வாங்க ஆளில்லாமல் பணப்புழக்கம் குறைந்து( பணவீக்கம் பணம்புழங்காச் சூழலாய் மாறி) real estate வணிகம் "பேய்கள் வாழும் மாளிகயாய் மாறும்( பேய் என்பதுகூட ஒரு கற்பனைதான் சண்டைக்கு வரவேண்டாம்- வால் பையன் சார்)
இதுக்கு பங்கு வணிகத்தில் நல்ல அளுமை உள்ளவர் என "டோண்டு ராகவன் சாரால்" வெகுவாய்ப் பாரட்டப்பட்ட வால்பையன் சார் என்ன சொல்கிறார்.
விவாதம் இந்த திசையில் செல்லட்டுமே
வரும் காலத்தில் பொருளாதார எருக்கடிக்கு ஆலாகப் போகும் "வெகுஜனம்" காரணத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டால்
நல்லது அல்லவா.
இது நடக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் உலகில் கட்டியங் கூற அரம்பித்துவிட்டன்
1.பணக்கார அமெரிக்காவின் பொருளாதர வீழ்ச்சி
2.கச்சா எண்ணெயின் உயர்ந்து வரும் அதீத விலையுர்வு( 200 டாலரை தொடும் என்பது கணிப்பு)
3. இந்தியாவின் பனவீக்கம் 20 ஐ நோக்கி நகர்வதாக தகவ்ல்.
4.உலக் வெப்பமாதலின் காரனத்தல்,
ஏற்படும் இழப்புக்கள் அனைத்து துறைகளிலும்( எரி சக்தியில் குறிப்பாக)
5.விவசாய நிலங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டு விவசாயப் பரப்பு வேகமாய் குறைந்து வரும் அபாயகரம்
6.நம்மைவிட வேகமாக வளர்ந்துவரும் "சைனாவின்" பொறாமை(வில்லத்தனம்)நரித் தனங்கள்
7. 2010ல் அரிசியை இறக்குமதி செய்தால்தான் அனைவருக்கும் சோறிட முடியும் எனக் கணிப்பு( அரசுத் துறை)
8.குறுக்கு வழியில் பனம் குவிக்கும்" வல்லான் பணம் குவிக்கும்" என்று பாரதி தாசன் பாடியதை மெய்பிக்கும் விதமாக செயல் படுவோர்
9.பெருகிவரும் மக்கட் தொகை பெருக்கம்
10.அரசியல் வாதிகளின் சுயநலப் போக்கு( லஞ்ச, லாவண்யம், கட்சி மாரும் போக்குகள்)
11.மக்களின் புரிந்தும் புரியாத் தன்மைகள்
12.மரங்கலை வெட்டுதல் ,பிளாஸ்டிக் பொருட்களை உலகின் தரை,வானவெளிகள்,நிர் நிலைகள், காற்று மண்டலம் முழுவதும் பரப்பி நீர்,நிலம்,காற்று ஆகிய மனித ஜீவாதாரங்களை வேகமாய் கெடுத்து இயற்கயின் சமன் சூநிலையை பாழ்படுத்தும் நாம்.
இந்த 12 ம் தான் இந்திய ஜாதகத்தில் 12 ராசிக் கட்டத்தில் உள்ல கிரகங்கள் போல்--முக்கியாமன 9 பவர் கூடியது எனவும்-மற்றவை காலிக் கட்டம்- அதாவது சிலதை சரி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்))
copy to
1.http://dondu.blogspot.com/
2.http://classroom2007.blogspot.com/
3.http://scssundar.blogspot.com
4.http://truetamilans.blogspot.com/
நண்பா,உங்கள் அலைபேசி எண்தேவை.அன்புடன் வேளராசி.velarasi@gmail.com
வால்.உங்களுடைய இந்த பதிவு தொடர்பாக என்னுடய கருத்துக்களை சொல்ல விருப்பம்.பழைய பதிவென்றாலும் நான் இப்போதுதான் படிக்கிறேன் என்பதால்.அனுமதிப்பீர்களா?மறுபடி பழைய subject -ல் விவாதம் வேண்டாம் என்றால் விட்டு விடுகிறேன்.My email id is sridharrangaraj@gmail.com
தாராளமாக வாதங்களை தொடரலாம் நண்பரே!
உங்களுடய விளக்கங்களுக்கு புதிய பதிவு போட்டு விசயத்தை மீண்டும் சூடாக்கிடலாம்.
கொஞ்சம் டயம் வேணும் பாஸ்.ஏன்னா பேசிக்காவே நான் கொஞ்சம் சோம்பேறி.சீக்கிரம் பதிவிட முயற்ச்சிக்கிறேன்.
என்னைப்போலன்னு சொல்லுங்க ஸ்ரீதர்
அத்தேதானுங்க.எழுத ஆரம்பித்து விட்டேன் ,எப்படியும் ஒரு ரெண்டு மூணு நாள்ல முடிக்கப் பார்க்கிறேன்.நன்றி வால்.
Post a Comment