உங்கள் வீட்டு மின்விசிறி தீடிரென்று வேகமாக சுற்றும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நண்பர்கள்
சில பேரை டாக்டர் ஆக்கியிருக்கிறேன்,
சில பேர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்,
நான்கைந்து பேர் இஞ்சினியர்களாகவும் இருக்கிறார்கள்,
நண்பர்களில் ஒருவன் பிரபல நடிகன்.
ஆனால் எல்லோரும் என்னை மறந்து விட்டார்கள்,
நட்பு துரோகிகள்
ஏனென்று யோசித்ததில் தெரிந்தது
எனக்கின்னும் தூக்கம் கலையவில்லை என்று!

******************************************************
என்ன காலகொடுமை சார் இது, கவிதைனாலே கிலோ மீட்டர் தூரம் ஒட்ரவனை இப்படி கவுஜ எழுத வச்சிருசே, எனது பாழாய் போன தூக்கமின்மை வியாதி.
தினமும் எனது படுக்கையில் பத்து இயல்பு நிலை மீறிய பதிவுகள் உதிக்கிறது,
அனைத்தும் பின்நவீன பதிவுகள்(உதாரணம்), வழக்கம் போலவே ஒரு பதிவிற்கும், மறு பதிவிற்கும் இடையில் ஏற்படும் கிளை சிந்தனையில் பதிவின் சுவடுகள் காணாமல் போகின்றன, உங்கள் துர்தரிஷ்டம் ஒன்றிரண்டு இப்படி ஞாபகத்தில் இருப்பது தான்,


தூக்கமினையால் ஏற்படும் பக்கவிளைவு தான் ஞாபகமறதி,
ஆனால் எனக்கு அந்த பக்கவிளைவு கிடையாது, பகலிலே என்னால் சராசரியாக நடந்து கொள்ள முடிகிறது, இரவில் எனது சிந்தனைகளை நான் ஹார்ட்டிஸ்க்கில் ஸ்டோர் செய்வதில்லை அதான் பிரச்சினை,

பத்து குருவிகளை தொடர்ச்சியாக சில நாட்கள் ஞாபகத்தில் வைத்து கொள்ள முடியாது, அது ஒரே கூண்டில் இருந்தாலும் கூட, பல பறவைகளும், சில விலங்குகளும் இந்த வேற்றுமை மனிதர்களுக்கு புலப்படாமல் திரிக்கின்றன, அதற்காக அதனுள் வேற்றுமை இல்லாமல் பழகுகின்றன என்று அர்த்தம் இல்லை, அதனால் தன் குட்டிகளையும், பிறர் குட்டிகளையும் அடையாளம் கண்டு கொள்ள முடியும்,


அவைகளை நம்மால் கண்டுபிடிக்க முடியாததற்கு காரணம், அவைகள் நம்மை விட சில படிகள் கீழே இருப்பது தான், இன்னும் சில நாட்களில் நீங்கள் என் எதிரில் வந்தால் கூட உங்களை எனக்கு அடையாளம் தெரியாது,நான் என்பது என்னிடமிருந்து சக மனிதர்களின் வேற்றுமை தோற்ற ஞாபகங்கள் மறைக்கிறது. அதற்காக எனக்கு ஞாபக சக்தி மறைக்கிறது என்று அர்த்தம் இல்லை, நீங்கள் எப்படி குருவியை விட சில படிகள் மேலே இருக்கிறீர்களோ, அதே போல் உங்களை விட சில படிகள் நான் மேலே போகிறேன்.

முடிவில் என் இருத்தல் இருக்கும், ஆனால் என்னிடமிருந்தது "நான்" தொலைந்து போகும். தேடுதல் ஒரு அனுபவம், ஆனால் தொலைத்தல் துக்கமான அனுபவம்,
என்னிடமிருந்தது "நான்" தொலைந்து போகுதல் எனக்கு சுகமான அனுபமாக இருக்கிறது

சகவலைபதிவர்கள் என்னை போல் யாரேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும், தனிமை என்னை வாட்டுகிறது

தலைப்பின் காரணம்:என் வீட்டு மின்விசிறி தீடிரென்று வேகமாக சுற்றியதால் ஏற்பட்ட விளைவு இது, அதனால் அதையே தலைப்பாக வைத்து விட்டேன், உங்கள் வீட்டு மின்விசிறி வேகமாக சுற்றினால் உங்களுக்கும் இதே மாதிரி இருக்குமா?

22 வாங்கிகட்டி கொண்டது:

சென்ஷி said...

//தலைப்பின் காரணம்:என் வீட்டு மின்விசிறி தீடிரென்று வேகமாக சுற்றியதால் ஏற்பட்ட விளைவு இது, அதனால் அதையே தலைப்பாக வைத்து விட்டேன், உங்கள் வீட்டு மின்விசிறி வேகமாக சுற்றினால் உங்களுக்கும் இதே மாதிரி இருக்குமா?//

அச்சச்சோ.. எங்க ரூம்ல ஃபேன் இல்லியே. ஏசிதான். நான் என்ன செய்ய :((

சென்ஷி said...

//தினமும் எனது படுக்கையில் பத்து இயல்பு நிலை மீறிய பதிவுகள் உதிக்கிறது,
அனைத்தும் பின்நவீன பதிவுகள்(உதாரணம்), வழக்கம் போலவே ஒரு பதிவிற்கும், மறு பதிவிற்கும் இடையில் ஏற்படும் கிளை சிந்தனையில் பதிவின் சுவடுகள் காணாமல் போகின்றன, உங்கள் துர்தரிஷ்டம் ஒன்றிரண்டு இப்படி ஞாபகத்தில் இருப்பது தான்,
//

அதுவும் ஞாபகத்துல இல்லாம இருக்க ஏதாவது மருந்து கிடைச்சா சாப்பிடுங்களேன். நாங்க புழைச்சுக்கறோம் :))

g said...

என்னது, உங்கள் வீட்டிலிருக்கும் மின்விசிறி திடீரென்று வேகமாக சுழலுகிறதா? அப்போ அது ஒரு பழைய மின்விசிறியாக இருக்கலாம். முதலில் சம்பளம் வங்கியவுடன் புதிய மின்விசிறி வாங்கி மாட்டுங்கள். அப்புறம் இந்த மாதிரி சிந்தனையெல்லாம் உங்களுக்கு வராது. மீறி வந்தால் நீங்கள் ஒருஅரைகுறை டாக்டரை சந்திப்பதை தவிர வேறுவழியில்லை.

மங்களூர் சிவா said...

'நல்ல'(!?) 'லேடி' டாக்டரை பார்க்கவும்.

அதுக்காக க்ளினிக் வாசல்ல இருந்து பாத்துட்டேன்னோ இல்ல ரோடுல இருந்து பாத்துட்டேன்னோ சொல்லப்பிடாது!

வால்பையன் said...

//சென்ஷி said...
அச்சச்சோ.. எங்க ரூம்ல ஃபேன் இல்லியே. ஏசிதான். நான் என்ன செய்ய :((//

சமயலறையில புகை போறதுக்கு திரும்பி பார்த்த மாதிரி ஒரு மின்விசிறி வச்சிருப்பாங்க!
காலையில அத போய் உத்து பாருங்க, தங்கமணி கூப்பிட்டாலும் திரும்ப கூடாது,
எதாவது மாற்றம் இருந்தா சொல்லுங்க, நம்ம ரெண்டு பேரும் ஒரே லிஸ்ட்டான்னு கண்டுபிடிச்சிரலாம்

வால்பையன்

வால்பையன் said...

//சென்ஷி said...
அதுவும் ஞாபகத்துல இல்லாம இருக்க ஏதாவது மருந்து கிடைச்சா சாப்பிடுங்களேன். நாங்க புழைச்சுக்கறோம் :))///

உங்களோடது ரெண்டு பதிவு படிச்சா போதும் எல்லாம் மறந்துரும்ன்னு சொல்றாங்களே உண்மையா :))

வால்பையன்

வால்பையன் said...

///ஜிம்ஷா said...
என்னது, உங்கள் வீட்டிலிருக்கும் மின்விசிறி திடீரென்று வேகமாக சுழலுகிறதா? அப்போ அது ஒரு பழைய மின்விசிறியாக இருக்கலாம். முதலில் சம்பளம் வங்கியவுடன் புதிய மின்விசிறி வாங்கி மாட்டுங்கள். அப்புறம் இந்த மாதிரி சிந்தனையெல்லாம் உங்களுக்கு வராது. மீறி வந்தால் நீங்கள் ஒருஅரைகுறை டாக்டரை சந்திப்பதை தவிர வேறுவழியில்லை.///

மின்விசிறி போனால் வேறு எதையாவது உத்து பார்த்துகொண்டிருப்பேன்,
பிரச்சினை அதுவல்ல, எனக்கு தூக்கம் வராதது

வால்பையன்

வால்பையன் said...

///மங்களூர் சிவா said...
'நல்ல'(!?) 'லேடி' டாக்டரை பார்க்கவும்.
அதுக்காக க்ளினிக் வாசல்ல இருந்து பாத்துட்டேன்னோ இல்ல ரோடுல இருந்து பாத்துட்டேன்னோ சொல்லப்பிடாது!///

நம்ம ட்ரீட்மேண்டேல்லாம் லேடீஸ் காலேஜ் வாசல்லேயே முடிஞ்சிரும்,
இப்ப செமஸ்டர் லீவு வுட்டாங்க்களா அதான் இந்த பாடு

வால்பையன்

தியாகு said...

நீங்கள் என் எதிரில் வந்தால் கூட உங்களை எனக்கு அடையாளம் தெரியாது"
மப்புல நி யாருன்னு உனெக்கே தெரியாது இதுல எப்படி மத்தவங்கள அடையாளம் தெரியும் .

,

தியாகு said...

"நான் ஹார்ட்டிஸ்க்கில் ஸ்டோர் செய்வதில்லை அதான் பிரச்சினை,""

உன்னோட ஹார்ட்டிஸ்க் காலியாகி பல வருஷம் ஆகுதுன்னு கேள்விபட்டேன் . அதன் விளைவு தான் இந்த பதிவுகள் எல்லாம்னு சொன்னாங்க ................................................................... இப்டி திடுடிபுனு சொல்லுறேயே என்னல நமபமுடியல ராசா ????????????????????????

வால்பையன் said...

//தியாகு said...
நீங்கள் என் எதிரில் வந்தால் கூட உங்களை எனக்கு அடையாளம் தெரியாது"
மப்புல நி யாருன்னு உனெக்கே தெரியாது இதுல எப்படி மத்தவங்கள அடையாளம் தெரியும் .//

அதெல்லாம் ஞானிகளின் செயல், உனக்கு புரியாது நண்பா

வால்பையன்

சென்ஷி said...

//வால்பையன் said...
//சென்ஷி said...
அச்சச்சோ.. எங்க ரூம்ல ஃபேன் இல்லியே. ஏசிதான். நான் என்ன செய்ய :((//

சமயலறையில புகை போறதுக்கு திரும்பி பார்த்த மாதிரி ஒரு மின்விசிறி வச்சிருப்பாங்க!
காலையில அத போய் உத்து பாருங்க, தங்கமணி கூப்பிட்டாலும் திரும்ப கூடாது,
எதாவது மாற்றம் இருந்தா சொல்லுங்க, நம்ம ரெண்டு பேரும் ஒரே லிஸ்ட்டான்னு கண்டுபிடிச்சிரலாம்

வால்பையன்
//

மாற்றம் கண்டிப்பா இருக்கும்.. ஏன்னா என் தங்கமணி இன்னும் என்னை கண்ணாலம் கட்டிக்கல :))

சென்ஷி said...

//வால்பையன் said...
//சென்ஷி said...
அதுவும் ஞாபகத்துல இல்லாம இருக்க ஏதாவது மருந்து கிடைச்சா சாப்பிடுங்களேன். நாங்க புழைச்சுக்கறோம் :))///

உங்களோடது ரெண்டு பதிவு படிச்சா போதும் எல்லாம் மறந்துரும்ன்னு சொல்றாங்களே உண்மையா :))

வால்பையன்
//

உங்களுக்கு சரியாயிடுச்சான்னு செக் செஞ்சு பார்த்துட்டு சொல்லி பில் அமவுண்ட் அனுப்புங்க.

வால்பையன் said...

//சென்ஷி said...
மாற்றம் கண்டிப்பா இருக்கும்.. ஏன்னா என் தங்கமணி இன்னும் என்னை கண்ணாலம் கட்டிக்கல :))//

கொடுத்து வச்ச மவராசன், நல்லா இருங்க
சீக்கிரமே சிக்கல்ல சிக்கிக்க வாழ்த்துக்கள்

வால்பையன்

சின்னப் பையன் said...

//பத்து குருவிகளை தொடர்ச்சியாக சில நாட்கள் ஞாபகத்தில் வைத்து கொள்ள முடியாது//

ஒரு குருவியை பார்த்தே இன்னும் மறக்கமுடியாமெ தவிக்கிறோம். இதுலே பத்து குருவியா.. வேணாம் சாமியோவ்.....

சின்னப் பையன் said...

//இரவில் எனது சிந்தனைகளை நான் ஹார்ட்டிஸ்க்கில் ஸ்டோர் செய்வதில்லை அதான் பிரச்சினை//

எதுக்கும் ஒரு தடவை Format செய்து பாத்துடுங்க...

வால்பையன் said...

//சென்ஷி said...
உங்களுக்கு சரியாயிடுச்சான்னு செக் செஞ்சு பார்த்துட்டு சொல்லி பில் அமவுண்ட் அனுப்புங்க.//

ஆஸ்பத்திரி பிள்ள நீங்க தான் செட்டில் பண்ணனும், உங்க போட்டோவை பார்த்து ஏமாந்தது படிச்சி தான் நான் இப்படி ஆகிட்டேன்

வால்பையன்

வால்பையன் said...

//ச்சின்னப் பையன் said...
//இரவில் எனது சிந்தனைகளை நான் ஹார்ட்டிஸ்க்கில் ஸ்டோர் செய்வதில்லை அதான் பிரச்சினை//
எதுக்கும் ஒரு தடவை Format செய்து பாத்துடுங்க...///

அதான் சொன்னனே சர்வீஸ் பண்றதுக்கு திரும்பவும் லேடிஸ் காலேஜ் எல்லாம் ஒப்பன் பண்ணனும்

வால்பையன்

கூடுதுறை said...

வால்பையன் அவர்களே !!!

தங்களின் கடந்த 3 பதிவுகளை படித்து விட்டு தலையை சொரிந்து சொரிந்து புண்ணாகிவிட்டது.

உங்களுடை அதி நவின பின் நவின போன்ற அதி இலக்கிய பதிவுகளை படிததால் எனக்கு மின்விசிறி இல்லாமல் கொசுக்கடி இருந்தாலும் நன்றாக தூக்கம் வருகிறது.

அதைத்தான் குறிப்பிட்டேன்.

மற்றபடி ஒன்றும் இல்லை

எனக்கு இப்போதுதான் ஒன்று புரிகிறது. எனக்கு ஏன் பதிவிட விசயம் சிக்கவில்லை என்று... சிக்கிரம் தூங்கிவிடுகிறேன் அல்லவா?

வால்பையன் said...

கொடுத்து வச்ச மவராசன்
சீக்கிரம் தூக்கம் வந்துருது
இங்கே நம்மள தூங்க விடாம வம்புக்கு இழுக்குராங்க்களே

வால்பையன்

இளைய கவி said...

மச்சி உன்னை1000 தடவை சொல்லியிருக்கேன் தண்ணியடிச்சிட்டு பதிவு எழுதாதுன்னு கேக்குறியா??? இல்ல இது என் மருமகள் உன் மண்டையில் அடிச்ச எபெக்டா ???

வால்பையன் said...

//இளைய கவி said...
மச்சி உன்னை1000 தடவை சொல்லியிருக்கேன் தண்ணியடிச்சிட்டு பதிவு எழுதாதுன்னு கேக்குறியா??? இல்ல இது என் மருமகள் உன் மண்டையில் அடிச்ச எபெக்டா ???///

அன்னைக்கு அடிச்ச மப்பே இன்னும் தெளியல!
இதுல பதிவு போடறதுக்கு வேற தண்ணி அடிக்கணுமா

வால்பையன்

!

Blog Widget by LinkWithin