ஜிம்ஷாவின் அந்த பதிவு
உங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள பல விசயங்கள் எனக்கு தமிழச்சி பின்னூட்டமிட்டது,அதை நானே அடைப்பு குறிக்குள் தான் குடுத்திருப்பேன்,ஆண்கள் ஜொள்ளு விட பெண்கள் தான் காரணம் என்று சொல்லியிருப்பது தான் உங்களை உறுத்துகிறது, உதாரணத்திற்கு தமிழகத்தில் உள்ள சொலவடை "ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது" என்று.
அதை கூட விட்டுத்தள்ளுங்கள், மணமான பெண்கள் தான் அதிகமாக ஜொள்ளு விடுகிறார்கள் என்றால், பெண்களில் ஜொள்ளு விடுவது அநேகம் பேர் மணமான பெண்கள் என்று அர்த்தம் இல்லை, உறவுகளில் வரம்பு மீறி செல்வது மணமான பெண்கள் என்று அர்த்தம், உதாரணத்திற்கு பெரிதாக நான் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை, தமிழக செய்தி தாள்களில் வரும் கள்ள காதல் கொலைகளே போதும்,
முன் பின் தெரியாத பெண்கள், உங்கள் வாய்ஸ் ஸ்வீட்டாக இருக்கு என்று சொன்னால், கில்மா அடைகிறார்கள்(அந்த வார்த்தைக்கு அர்த்தம் சில்பான்ஸ்-மேலும் அர்த்தம் வேண்டுமானால் சின்னி ஜெயந்தை அணுகவும்) இதற்க்கு என்னிடம் நம்பர் கேட்டுள்ளீர்கள், நான் அந்த வேலை பார்ப்பதில்லை, வேறு வேலை பார்க்கிறேன், இருந்தாலும் நட்பின் அடிப்படையில் ஒரு யோசனை, உங்கள் அலைபேசியில் இருந்து கஸ்டமர் கேருக்கு அழையுங்கள், எதாவது பெண் எடுக்கும் வரை வேதாளம் முருங்கை மரம் ஏறட்டும், அவளிடம் சொல்லி பாருங்கள் உங்கள் வாய்ஸ் ஸ்வீட்டாக இருக்கிறது என்று.
//இதுமுற்றிலும் தவறான கருத்து. எந்த ஒரு திருமணமான தமிழ்நாட்டு பெண்ணும் இன்னொரு ஆணுடன் பழகுவதை விரும்பமாட்டாள். (ஒருசில மாதர்களைத்தவிர) கடலைப்போடும் ஆண்களைப் பார்த்தாலே அவளுக்கு வெறுப்புதான் வருமே தவிர, அவள் இமியளவும் கிறங்கிப்போகமாட்டாள் என்பதே சரி.//
இதில் நீங்கள் குறிப்பிட்டது போல தான் சில பெண்களை பற்றி தான் இங்கே பேச்சு, எனது தாயும் ஒரு பெண் தான், எனது மனைவியும் ஒரு பெண் தான், என்ன நீங்கள் அந்த ஒரு சில பெண்களை அடைப்பு குறிக்குள் போட்டு தமிழக பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளீர்கள், எல்லா பெண்களையும் குறை சொன்னால் தமிழச்சி என்னை என்ன செய்வார் என்று உங்களுக்கு தெரியாதா என்ன.
///தமிழ்நாட்டில இரண்டுமே சரியில்லையென்று வேறு சொல்லியிருக்கிறார். ஒரு தமிழ்நாட்டுப்பெண். அதுவும் இங்கேயே பிறந்து பள்ளிப்படிப்பு வரை தமிழ்நாட்டிலேயே படித்து, இப்படி தமிழ்நாட்டு பெண்களை இழிவாகப்பேசுகிறார் என்றால், உண்மையிலேயே அவர் தமிழ்நாடு தானா? அவர் ஒரு பெண்தானா என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது.///
இங்கே நீங்கள் சுட்டி காட்டியிருப்பது தமிழச்சியை என்று நினைக்கிறேன்,எனது அந்த பதிவு ஜொள்ளு விடுவது பற்றி மட்டும் அல்ல, ஆண், பெண்ணுக்குள்ள மன ரீதியான பகிர்தல்கள் எந்தளவுக்கு தமிழகத்தில் உள்ளது என்பது பற்றி,
பண்பாடு, கலாச்சாரம் போன்ற வார்த்தைகள் உங்களை இந்த அளவுக்கு பாதித்திருக்கிறது, சொல்றேன்னு தப்பு நினைக்காதிங்க ஜிம்ஷா நீங்க இன்னும் பிற்போக்கா தான் இருக்கிங்க, தேவதாசி முறை தமிழக பண்பாடு என்று மீண்டும் கொண்டு வரலாமா, ஒருவன் ஒருத்தியுடன் வாழ்வது தனி மனித ஒழுக்கம், அது உலகம் பூராவும் ஒன்றே, இதில் தமிழக கலாச்சாரம், பண்பாடு என்று இதில் சொல்லி கொள்வதற்கு ஒன்றும் இல்லை,
அடிப்படையில் மனிதன் ஒரு பேச தெரிந்த மிருகம் அவ்வளவே.கலாச்சாரம், பண்பாடு எல்லாம் அவனுடைய கலை ஆர்வத்தில் உருவானது,அதாவது நல்ல உடை உடுத்துவதும் ஒரு கலையே, மேலை நாடுகளில் அவர்களின் கலை ஆர்வத்திர்கேர்ப்ப அவர்களது உடைகளும் பண்பாட்டு கலைகளும் இருந்தது,
இன்று பெண்களின் முழு உடலையும் மறைக்கும் சுடிதார் மேலைநாட்டு உடைதான்,ஆரம்பத்தில் நமது நாட்டு பெண்களுக்கு மேலாடை கூட கிடையாது அதுவும் பிற்பாடு வந்ததே, இன்று உலகம் முழுவதும் ஒரே குடிலின் கீழ் வந்த பிறகு உன் கலாச்சாரம் ,என் கலாச்சாரம் என்று சொல்வது, அவரவர் நம்பிக்கையை பொறுத்ததே,
உங்கள் பதிவை கண்டு எனக்கு மகிழ்ச்சியே, எல்லா கருத்துக்களும் விவாததிரிக்கு உடன்படுத்த வேண்டும் என்பது தான் என் ஆசையும், அதனால் தான் பல தவறான நம்பிக்கைகளின் மூலங்கள் தகர்க்கப்படும்
தலைப்பு சும்மா லுலுலாயி
18 வாங்கிகட்டி கொண்டது:
எல்லாம் சரி மச்சி.. ஏன் எல்லாரும் பொத்திகிட்டு இருக்காங்க ???? ( போட்டோல )
ஏம்பா வாலு,
படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லையே ஏன் ?? டேய் இளையகவி இதுக்கெல்லாம் நீதான் காரணமாடா ??
//இளைய கவி said...
எல்லாம் சரி மச்சி.. ஏன் எல்லாரும் பொத்திகிட்டு இருக்காங்க ???? ( போட்டோல )//
எப்படி சீரியசான பதிவுளையும் உன்னால ஜோக் அடிக்க முடியுது
வால்பையன்
///வேலு பாரதி said...
ஏம்பா வாலு,
படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லையே ஏன் ?? டேய் இளையகவி இதுக்கெல்லாம் நீதான் காரணமாடா ??///
படம் நாகரிக மங்கைகளின் உடைகளை காட்டுவதற்காக போடப்பட்டது, அங்கேயும் ஆபாசம் இல்லாமல் தான் போட்டிரிக்கிறேன்.
இளையகவி பாவம் அவனை ஏன் வம்புக்கு இழுக்குறீர்கள்
வால்பையன்
வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வோவோவொவோஒ!!!!
ஒன்றும் இல்லை கொட்டாவிதான்
கடமைக்கு பின்னூட்டம் போடாதிங்க கூடுதுறை
உங்கள் வாதங்களை வையுங்கள்,
என் மீது தவறென்றால் நான் ஒத்து கொள்கிறேன்,
வால்பையன்
/// கூடுதுறை said...
வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வோவோவொவோஒ!!!!
ஒன்றும் இல்லை கொட்டாவிதான்///
ஏம்பா, உனக்கு இருக்கிற குசும்பு இருக்கே!?. பெரியவா இருக்காளே, கொஞ்சம் கூட மரியாதை வேண்டாம்.
உங்கள் அலைபேசியில் இருந்து கஸ்டமர் கேருக்கு அழையுங்கள், எதாவது பெண் எடுக்கும் வரை வேதாளம் முருங்கை மரம் ஏறட்டும், அவளிடம் சொல்லி பாருங்கள் உங்கள் வாய்ஸ் ஸ்வீட்டாக இருக்கிறது என்று.
மச்சி உனக்கு call பன்னா "நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் எண் உபயோகத்தில் உள்ளதுனு" வருதே இதான் காரணமா மச்சி ?????????????????????..........................................>?
கற்பென்ப்படுவது சொற் திறம்பாமை
//வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வோவோவொவோஒ!!!!
ஒன்றும் இல்லை கொட்டாவிதான்//
கொட்டாவி விடுபவருக்கு இதில் ஏதும் ஆர்வம் இல்லை அல்லது சரக்கு இல்லை என்பதுதான் அர்த்தம்.
it is a clearcut indication that he has already closed his mind over this.
எனவே அவரை மீண்டும் விவாதத்திற்கு அழைப்பு விடுவது தேவையற்றது.
//ஜிம்ஷா said...
ஏம்பா, உனக்கு இருக்கிற குசும்பு இருக்கே!?. பெரியவா இருக்காளே, கொஞ்சம் கூட மரியாதை வேண்டாம்.//
ஜிம்ஷா, கூடுதுறைக்கு நம்மை விட்ட வயது அதிகம்,
அவர் போன பதிவுக்கு போட வேண்டிய கமெண்டை இங்கே போட்டு விட்டார் அவ்வளவு தான்
வால்பையன்
தியாகு! உன் குசும்புக்கு அளவே இல்லையா!
உனக்கிருகிற கேர்ள் ப்ரெண்டுக்கு நானெல்லாம் கால் தூசு
வால்பையன்
வேலன், கூடுதுறை இதற்க்கு முந்தய பதிவுக்கு போடவிருந்த பின்னூட்டத்தை இங்கே போட்டு விட்டார், அதை மீண்டும் அந்த பதிவில் சொல்லிவிட்டார்
வால்பையன்
நன்றி வால்பையன் அவர்களே
//உங்கள் பதிவை கண்டு எனக்கு மகிழ்ச்சியே, எல்லா கருத்துக்களும் விவாததிரிக்கு உடன்படுத்த வேண்டும் என்பது தான் என் ஆசையும், அதனால் தான் பல தவறான நம்பிக்கைகளின் மூலங்கள் தகர்க்கப்படும்
//
நம்பிக்கைகள் தவறானவை என்றால் அது தகர்க்கப்பட வேண்டியவைதானே ஏன் தயங்க வேண்டும். எல்லாவற்றையும் விவாதிக்கவும்
/// புகழன் said...
நம்பிக்கைகள் தவறானவை என்றால் அது தகர்க்கப்பட வேண்டியவைதானே ஏன் தயங்க வேண்டும். எல்லாவற்றையும் விவாதிக்கவும்//
வாங்க புகழன் எங்க ரொம்ப நாளா ஆள காணோம்.
இங்க தான் விவாதம் பண்ணா வில்லன் ஆக்கிராங்க்களே
வால்பையன்
நீங்கள் இருவருமே "கயல்விழியின் கற்புனா என்ன? : சில நினைவலைகள்" என்கிற பதிவை ஒருமுறை பார்ப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன்.. பின்னூட்டங்களையும் சேர்த்து
http://timeforsomelove.blogspot.com/2008/08/360-5.html
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
Post a Comment