உருவ வழிபாடு இல்லாத மதத்தை சேர்ந்தவர்கள், ஒன்றாக இணைந்து பிரார்த்திக்க எதாவது ஒரு இடத்தை வைத்திருக்கிறார்கள். இதில் நன்றாக அனைவரும் அறிந்தது கிறிஸ்தவமும், இஸ்லாமும்.
இஸ்லாம் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது.நிறைய இஸ்லாம் நண்பர்கள் இருந்தாலும் அவர்களும் என்னை அங்கெ ஒருநாளும் அழைத்து சென்றதில்லை. கிறிஸ்தவ நண்பர்களோடு அவர்களின் பிரார்த்தனை கூடத்திற்கு சென்றிருக்கிறேன்.
அங்கே எனக்கு சில முரண்பாடுகள் தெரிந்தன. பல நாட்களாக நெருடி கொண்டிருந்த சந்தேகங்களை இங்கே பதிலுக்காக வைக்கிறேன்.
எல்லா பிரார்த்தனை கூட்டத்திலும் ஒரு பிரசங்கி இருக்கிறார். அவரே அங்கே மையமாக இருக்கிறார். அவரின் பிரசங்கத்தை கேட்க வந்த கூட்டம் விளிம்பு நிலை மனிதர்களாக உள்ளனர்.
பிரசங்கத்தை கேட்க மட்டுமே அவர்களின் உரிமை. அது அவர்களின் கடமையும் கூட என்று சொல்லபடுகிறது. பிரசங்கி உண்மையை சொன்னாலும் பொய்யை சொன்னாலும் கேட்பவர் நம்பித்தான் ஆகவேண்டும். சந்தேகமோ எதிர்கேள்வியோ கேட்க முடியாது.
என்னை மாதிரி ஆட்களை அழைத்து சொல்கிறவர்கள் தான் பாவம். தர்மசங்கடத்திற்கு ஆளாக நேரிடும். பொசுக் பொசுக் என்று எழுந்து கேள்வி கேட்பேன்.
புத்தகத்தை தவிர உங்கள் கடவுளை நிருபிக்க வேறு ஏதும் உள்ளதா? என்று.
பதில் என்னை அழைத்து சென்ற நண்பனுக்கு கிடைக்கும். என்னுடன் இனி சேரவேண்டாம் என்று.
என்னுடைய சந்தேகம் மனிதர்கள் கடவுளை பார்க்க ஏன் இந்த மாதிரி ப்ரோகர்கள் தேவைபடுகிறார்கள்.எல்லா மதத்திலும்!
இந்துவில் அர்ச்சகர்கள். கிறித்துவத்தில் பாதிரியார்கள், இஸ்லாத்தில் அஜ்ரத்துகள்.
10 வாங்கிகட்டி கொண்டது:
காலம்
எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் !
இத்தனை நாளு டோண்டு ராகவனை திட்டி அசிங்கமா ஆபாசமா பதிவு போட்டுவிட்டு அப்படியே சைக்கிள் கேப்பில ஏரோப்பிளேன் சீ சீ
இதுக்கு பொறுமையா நிதானமா நாட்டுகிட்டு செத்துட்டு போவலாம்.
காலம்
எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் !
இது கோவி கண்ணன் பதிவில் போட்ட வெளியிடபடாத பிண்ணோட்டம்
There is no priest system in Islam. Anybody can lead prayers and anybody can give sermons (if they are scholars in their particular concept). The so called Hazrats are appointed as Imams by the Mosque administrators to ensure timely prayers.
In Islam, no body's Fatwa or advice is final.
இந்த இரண்டு மதங்களும் உருவ வழிப்பாடு இல்லாதது என்று உங்களுக்கு யார் சொன்னா?
கிருத்துவத்தில் சிலுவையில் அறையப்பட்ட யேசு வைத்து தானே எல்லா வழிப்பாடும் சில வழியில் மாதாவை வைத்துக்கொள்வார்கள், எப்படியாயினும் உருவம் இருக்கே!
இஸ்லாத்திலும் தர்க்கா என்ற வகையில் இறந்த இஸ்லாமிய துறவி, அல்லது ஏதோ ஒரு புனிதர் சமாதியை வைத்தே வழிப்பாடு நடக்கிறது.
மசூதிக்கும் தர்க்காவிற்கும் வித்தியாசம் கேட்டுப்பாருங்கள் தெரியும்.
எனக்கு ப்ரோக்கர் எல்லாம் தேவையே இல்லை. எதுன்னாலும் டைரக்ட் அப்ரோச் தான்.
என் 'சாமி'க்கு பாராட்டு, திட்டு, கோபம் எல்லாம் நேரடியாச் சொல்லப்படுது:-))))
//புத்தகத்தை தவிர உங்கள் கடவுளை நிருபிக்க வேறு ஏதும் உள்ளதா?//
அந்த புத்தகமும் கூட கடவுளை நிரூபிக்க முடியாது!
Those brokers are sometimes(sometimes) so true and sacred, that, as they have already went throught the path of searching God, they can guide well. தெரிஞ்சவங்ககிட்ட வழிக்கேட்டுக்கிட்டு போறாப்ல தான், பிரசங்கம் கேட்பது.
All those who go to temples(churches, mosques) are not goin there in search of God.. they feel that as a short cut to achieve their desires.. God is there everywhere.. நான் கடவுள் இருக்கின்றான், என்று உங்களை நம்பச்சொல்லி, உங்களோடு வாதிட வரவில்லை நண்பா.. this is just my opinion.
எப்போதும் நம் கேவிகளுக்கு அடுத்தவர்கள் பதில் சொல்வதில்லை.. அதற்காக நாம் நம் கேள்விகளை மறந்துவிடக்கூடாது.. நமக்குள் இருக்கும் "நான்" சில நேரங்களில் எல்லாவற்றிற்கும் பதில் கூறும்.. அதனிடம் கேட்க துவங்குங்கள்.. ஆண்டுகள் நகர்ந்தாலும் நிச்சயம் பதில் கிடைக்கும்.
சும்மா sampleக்கு ஒரு post படிக்கிலாம்னு வந்தேன், நெறய எழுத வெச்சுட்டீங்க... good post, that kidles other's to write
அன்புள்ள வால் பையன்
போலி பதிவில் யாருடைய குடும்பத்தினரை பற்றியும் நான் எழுதவில்லை. போலிப்பதிவின் பாஸ்வேர்டு கோவி கண்ணனுக்கும், மூர்த்தி(போலி டோண்டு) ஆகிய இருவருக்கும் தான் தெரியும்.
என்மீதான புரிந்துணர்விற்கு நன்றி.
செந்தழல் ரவி
தில்லா சொல்கிறார்.......
//இது கோவி கண்ணன் பதிவில் போட்ட வெளியிடபடாத பிண்ணோட்டம்//
அதை படித்து விட்டு இங்கே வந்து பின்னூட்டம் போடிருக்கிறீர்கள் சரி!
என் பதிவை படிக்கவே இல்லையா
வவ்வால் said...
//இந்த இரண்டு மதங்களும் உருவ வழிப்பாடு இல்லாதது என்று உங்களுக்கு யார் சொன்னா?//
உண்மையில் இல்லை. இயேசுவும், நபிகளும் கடவுளல்ல இறை தூதர்கள் மட்டுமே.
அவர்கள் கடவுள் காண முடியாதவராகவும், காண கிடைக்காதவராகவும் உள்ளார்.!!
//கிருத்துவத்தில் சிலுவையில் அறையப்பட்ட யேசு வைத்து தானே எல்லா வழிப்பாடும் சில வழியில் மாதாவை வைத்துக்கொள்வார்கள், எப்படியாயினும் உருவம் இருக்கே!//
கிறிஸ்துவத்தில் அதை வைத்து கொள்ள கூடாது. மாதா மட்டுமல்ல சில இடங்களில் ஜோசப் அவர்களுக்கும் சர்ச் இருக்கிறது.
//மசூதிக்கும் தர்க்காவிற்கும் வித்தியாசம் கேட்டுப்பாருங்கள் தெரியும்.//
யாரவது வந்து சொன்னால் பரவாயில்லை. எனக்கும் இந்த வித்தியாசம் என்ன வென்று புரியவில்லை.
துளசி கோபால் said...
//எனக்கு ப்ரோக்கர் எல்லாம் தேவையே இல்லை. எதுன்னாலும் டைரக்ட் அப்ரோச் தான்.//
பாராட்டுகள்! ஆனால் தனியாக பேசிக்கொண்டு இருக்காதிர்கள். வேறு எதாவது நினைக்க போகிறார்கள் :))
tamizh said...
//தெரிஞ்சவங்ககிட்ட வழிக்கேட்டுக்கிட்டு போறாப்ல தான், பிரசங்கம் கேட்பது. //
என்ன தெரிஞ்சவங்ககிட்ட வலி கேட்கிரிங்க! அவங்க போய்ட்டு வந்துருகாங்க்களா அங்க!
//உங்களோடு வாதிட வரவில்லை நண்பா.. //
இல்லை தோழி சண்டை தான் போட கூடாது. வாதிடலாம்.
//சும்மா sampleக்கு ஒரு post படிக்கிலாம்னு வந்தேன், நெறய எழுத வெச்சுட்டீங்க... good post, that kidles other's to வறிதே//
நீங்க கண்டிப்பா நிறைய எழுதனும், உங்க வலையிலும்!!
//Anonymous said...
அன்புள்ள வால் பையன்
போலி பதிவில் யாருடைய குடும்பத்தினரை பற்றியும் நான் எழுதவில்லை. போலிப்பதிவின் பாஸ்வேர்டு கோவி கண்ணனுக்கும், மூர்த்தி(போலி டோண்டு) ஆகிய இருவருக்கும் தான் தெரியும்.
என்மீதான புரிந்துணர்விற்கு நன்றி.
செந்தழல் ரவி//
உங்களுக்கு தான் பிளாக் இருக்கிறதே பிறகு ஏன் அனானி பெயரில். பின் கீழே பெயர்.
வால்பையன்
mmm
nalla kelvi...
natpodu
nivisha
போற போக்குல இது மாதிரி தப்பான விசயத்த சொல்லிட்டு போககூடாது.தர்கா என்பது இஸ்லாமிய பெரியவர்களின் அடக்கஸ்தலம்.மசூதி என்பது இறை வணக்கஸ்தலம்.தர்காக்களை புனிதத்தல ரேஞ்சுக்கு கொண்டாடறது இஸ்லாத்துக்கு சற்றும் உடன்பாடான விஷயம் அல்ல.அங்கே அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள் அவர்களிடம் உதவி கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள் என்கிறது குர் ஆன்.அனைத்து மதங்களிலும் இருக்கும் மூட நம்பிக்கை போலவே இஸ்லாத்தில் இது.தற்காலம் தர்காக்களின் ஆதிக்கம் அதன் மீதான ஈடுபாடு முஸ்லீம்களிடத்தில் குறைந்து வருவது ஆரோக்கியமான விஷயம்.முகமது நபி அவர்கள் அடக்கம் செய்யப்பட இடத்தில் அரை அடி உயர கட்டுமானம் கூட கிடையாது.மூடநம்பிக்கை என்று சொன்னதை வைத்து யாரேனும் சகோதரன் என்னிடம் சண்டைக்கு வரலாம்.அப்படி வந்தால் நிதர்சனத்தை ஏற்று கொள்ளும் பக்குவம் அவரிடம் இல்லை என்றே பொருள்.
பார்த்தீர்களா!?
மூடநம்பிக்கை என்றால் சக இஸ்லாமியனே சண்டைக்கு வரலாம் என்று நீங்களே சொல்கிறீர்கள்!
இதே போன்று மூடநம்பிக்கைகள் எல்லா மதத்திலும் இருக்கிறது! இஅடங்களுக்கு, அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது!
நான் மதத்தையும், கடவுளையும் நம்பாதவன்!
எனது கேள்வி உருவமற்ற கடவுளுக்கு பிராத்த்னை கூடம் தேவையா?
வீட்டிலேயே அதை செய்ய வேண்டியது தானே!
Post a Comment