புதிரில் கலைந்த கனவுகள் அல்லது ஒரு வார்த்தையின் கதை

இரவுகளில் எனக்கு தூக்கம் வருவதில்லை, அரை மயக்க நிலையிலேயே காலம் கழிக்கிறேன், முழுதாய் தூங்கியதால் இழந்தவை பல, பல

இரவு தூங்கினால் பல புதிர்களால் நான் அவதியுருகிறேன், பதில் சொல்ல முடியாத ஒவ்வொரு புதிருக்கும் என் உடலின் பாகங்கள் ஒவ்வொன்றாக நான் இழக்க வேண்டும்.
இதை நான் சொல்லும்போது கூட என்னிடம் உடல் இல்லை. முழுவதுமாய் இழந்து விட்டேன்.
வெறும் வார்த்தை மட்டுமே மிச்சம் உள்ளது.

இருந்தாலும் என் உடலை நான் மீட்க வேண்டும். இந்த எண்ணம் எங்கேயோ போய் ஒளிந்துகொண்டது. அது இருந்தால் கொஞ்சம் உதவியாய் இருக்கும். முதலில் அதை தேடிகண்டு பிடிக்கவேண்டும். மூன்றாம் உலகில், மூன்றாம் நாட்டில், மூன்றாம் நகரில் வசிக்கும் குறிசொல்லும் ஒத்தை கொம்பு வைத்தியன் (உண்மையிலேயே அவனுக்கு தலையில் கொம்புண்டு) என் எண்ணம் முயல் வடிவ மேககூட்டத்தில் ஒளிந்திருப்பதாக சொன்னான்,

ஏழாம் கிரகத்தின் மூன்றாம் பெரிய துணைகோளுக்கு பின்னால் ஒளிந்திருந்த முயல்வடிவ மேககூட்டத்தை கண்டுபிடித்தேன்.மேகத்துக்குள் ஒளிந்திருந்த என் எண்ணம் என்னை பார்த்ததும் ஓடி வந்து கட்டிகொண்டது.இருவரும் சேர்ந்து புதிர் கடவுளிடம் எங்கள் உடலை கேட்பதற்கு புறப்பட்டோம்.

ஆட்டுதலை மனிதர்கள் வாயிர்காவலில் பிரமாண்ட கதவை திறக்க உள்ளே நுழைந்தோம். சற்றே நீள துதிக்கை மூக்கொடு அமர்ந்திருந்தான் புதிர் கடவுள். அவன் துதிக்கையாலேயே பழங்களை எடுத்து வாயில் போட்டு கொண்டான்.

எங்களை பார்த்ததும் அவனுக்கு புரிந்துவிட்டது, ஒரே ஒரு நிபந்தனையின் கீழ் எங்கள் உடலை திருப்பி தர ஒத்துகொண்டான், வேறு ஒன்றுமில்லை அவன் போடும் புதிருக்கு நாங்கள் விடை சொல்லவேண்டும் (என்ன கொடுமை சார் இது! ) நாங்களும் ஒத்துகொண்டோம்.

"சொன்னவன் சொன்னவுடன் மறைந்து விட்டான்.
கேட்டவன் கேட்ட பின்னும் இருக்கிறான். அவர்கள் யார் என்றான்."

நான் சொன்னேன், "சொன்னவன் நான் தான் வார்த்தை, நான் ஒலியாய் இருக்கிறேன், சொன்னவுடன் பொருள்களால் கிரகிக்கப்பட்டு மறைந்துவிடுகிறேன் என்றேன்".

கேட்டவன் நான் தான், எண்ணம், "நான் கேட்ட பின்னும் மறையாமல், அந்த வார்த்தைகளிலுள்ள உண்மை, பொய்களை ஆராய்கிறேன். என் எண்ணம் அதை சேமிப்பில் வைக்கிறது. அதனால் நான் இருக்கிறேன் என்றான் எண்ணம்."

பதிலில் மகிழ்ந்த புதிர் கடவுள் எங்கள் உடலை எங்களுக்கே திருப்பி தர ஒத்துகொண்டார்.
பிறகு எங்களுக்கு விருந்து படைக்கப்பட்டது, விருந்தில் அனைவரும் மது அருந்தினோம்.
அப்பொழுது நான் கேட்டேன்.எங்கள் பதில் சரியென்று எப்படி சொல்கிறீர்கள் என்று.
என்ன தவறென்று அவர் கேட்டார்.

எங்கள் பூமியில் விவிலியம் என்ற நூல் இருக்கிறது. அதில் "ஆதியில் வார்த்தை இருந்தது, அது தேவனாய் இருந்தது" என்று சொல்லியிருக்கிறது. ஆனால் நான் ஒலியாய் இருக்கிறேன், சொன்னவுடன் மறைந்துவிடுகிறேன் என்று சொன்னேன், இது எவ்வாறு சாத்தியம். வார்த்தையாய் இருக்கும் கடவுளாகிய நான் எவ்வாறு மறைய முடியும் என்றேன்.

மீண்டும் எனது உடல் பிடுங்கபட்டது.

7 வாங்கிகட்டி கொண்டது:

KARTHIK said...

ஐயோ முதலாளி நாளைக்கு 2 நாள் விடுப்பு.பரகால தண்ணி அடிக்கற செலவு மீதி.
இந்த பதிவ படிக்குற எல்லாருக்கும் மிச்சம்தான்.
முடிலட சாமி...................

வால்பையன் said...

//பரவாயில்லை தண்ணி அடிக்கற செலவு மீதி.//

உங்களுக்கா? எனக்கா ?

//நாளைக்கு 2 நாள் விடுப்பு.//

அப்ப மொத்தம் மூணு நாள் செவ்வாய் கிழமை வேலைக்கு வந்தால் போதுமா பாஸ்!

//முடிலட சாமி...................//

எனது பதிவை பற்றி தமிழச்சியின் கண்ணோட்டத்தை அவரின் பின்னூட்டத்தில் பாருங்கள்
(ஆகா கவிதை மாறியில்ல இருக்கு )

வால்பையன்

தருமி said...

வாங்க 'சின்ன' அய்யனார்!

ஏங்க இப்படி புதுசு புதுசா எழுதி எங்களை ...

என்ன கொடுமை இது, வால்பையா!

வால்பையன் said...

இந்த கதையின் காரணம் கடைசி சில வரிகள் தான்
மற்றவையெல்லாம் சும்மா லுலுலாயி

குசும்பன் said...

என் தலையில் இருந்த முடியும் புடுங்கப்பட்டுவிட்டது

கணேஷ் said...

பகல்ல சரக்கடிக்குறது இல்லைன்னு தீர்மானமா இருக்கேன்... அதுக்கு உலை வச்சிராதிங்க சாமி...

கணேஷ் said...

எதாவது போட்டோ பதிவு போடு தல... (நமீதா படம் போட்டு வித்தியாசம் கண்டுபிடிக்க சொல்லு... சும்மா பூந்து விளையாடுவோம்)

!

Blog Widget by LinkWithin