வலை பக்கங்களுக்கு புதிதாக அறிமுகம் ஆகியுள்ள நான்,
முதலில் வாங்கியது தருமி சாரின் போன் நம்பர் தான்,
பிறகு மதுரை செல்ல வேண்டி ஒரு வேலையும் இருந்தது,
தருமி சாரை அழைத்து அவரிடம், நான் வரும் தகவலை தெரிவித்தேன்,
இருவரும் மதியம் சந்திப்பது என்று முடிவாயிற்று,
மதியம் 3.30 மணியளவில் கருப்பு கலர் ஹோண்டா ஆக்டிவாவில் வந்தார்,
அவரது வலை பக்கங்களில் என்ன மாதிரி T-shirt அணிந்த்திருப்பரோ அதே மாதிரி T-ஷர்ட்-ல் வந்தார் (அடையாளத்திற்கு இருக்குமோ!?).
மதுரை அமெரிக்கன் காலேஜில் இருவரும் அமர்ந்து கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் பேசினோம்,
பரஸ்பரம் அறிமுகத்திற்கு பிறகு தான் விவாதம் ஆரம்பித்தது,
மனிதர் வயதான இளைஞர் என்பதை நிருபித்து விட்டார்,
ஒரு சிறுவனுக்கே உள்ள குணங்கள் போல் அவர் பேசும்போது அடிக்கடி நான் உள்ளே நுழைந்து வேறு ஏதும் பேசினாலும்,பொறுமையாக கேட்டு அதற்கும் பதில் சொல்லி விட்டு மிண்டும் பழைய விவாதத்தை தொடர்கிறார்,
அவரது பொறுமை, விசயத்தை விளக்கும் விதம்.
அவரிடம் நான் படிக்காதது வாழ்கையில் எதையோ இழந்தது போல் இருந்தது, கண்டிப்பாக அவர் ஒரு சிறந்த ஆசிரியராக தான் இருந்திருப்பார்,
அவரிடம் பேசிய விசயங்களை ஒவ்வொன்றும் தனி தனி தொகுப்பாக எழுதலாம் என்று இருக்கிறேன்,
உண்மையில் அவரை நான் மிகவும் தொந்தரவு செய்து விட்டேன் அதற்காக அவர் என்னை மன்னிக்க வேண்டும்.
நான் எதை எழுதலாம் என்று யோசிக்கும் போது அதை நண்பர்களிடம் கேட்கலாம் என்று தோன்றியது,
கிழே உள்ள தலைப்புகளில் முதலில் எதை எழுதலாம் என்று உங்கள் விருப்பத்தை வைத்தே முடிவு செய்ய போகிறேன்
1.பரிணாம வளர்ச்சியின் நன்மைகளும், தீமைகளும்.
2.நான் ஏன் கவிஞனாகவில்லை.
3.கொஞ்சம் தாமதமாய் ஒரு சினிமா விமர்சனம்.
4.பணம் உண்மையில் மதிப்புடயதா?
இதில் எதை முதலில் ஆரம்பிக்கலாம் என்று சொன்னிர்கலேயானால் மிகவும் வசதியாக இருக்கும்
மீண்டும் ஒரு முறை தருமி அவர்களுக்கு நன்றி சொல்லி என் முதல் பதிப்பை முடிக்கிறேன்
நன்றி
4 வாங்கிகட்டி கொண்டது:
//நான் ஏன் கவிஞனாகவில்லை..//
அதோடு,
இப்படி ஒரு பதிவராகி, அதன் பின் கவிஞனாக வேண்டுமென்றிருக்கும் போது ...
அது நகைசுவைக்காக சேர்த்தது உண்மையில் எனக்கு கவிதை எழுத தெரியாது என்பதே உண்மை
வால்பையன்
அன்பின் அருண்
சில ஒற்றுமைகள் நமக்குள்
நானும் ஆகஸ்டு 2007 ல் வலைப்பூ ஆரம்பித்தேன். நீயும் நவம்பர் 2007.
நான் முதன் முதலில் கேட்டறிந்த தொலைபேசி எண் தருமியுடையது. நீயும் கேட்டறிந்திருக்கிறாய்.
நான் முதன் முதலில் சந்தித்த சக வலைப்பதிவர் அன்பு அண்ணன் தருமி தான். நீயும் அவரைத் தான் முதன் முதலில் சந்தித்திருக்கிறாய்.
என்ன ஒற்றுமை என்ன ஒற்றுமை
நல்வாழ்த்துகள்
Post a Comment