இயக்குனர் சிகரம் k.பாலசந்தர் இயக்கிய படம் இன்று K.TV-யில் மதியம் பார்த்தேன்,
சில படங்களை பார்க்கும் போது மனம் அமைதியாகிறது,
என் விருப்பம் போலவே இருந்தது இந்த படம், படத்தில் ரெண்டே பாட்டு தான், அதிலும் ஒரு பாட்டு மட்டும் தான் தேவையில்லாத பாட்டு போல் தெரிகிறது,
கம்பன் ஏமாந்தான் பாட்டு, சூழ்நிலைக்கு ஏற்ற அருமையான பாட்டு,
மேலும் இந்த படத்தில் மிக குறைந்த கதா பாத்திரங்களே நடித்துள்ளார்கள்,
இன்றைய சூழ்நிலையில் மூன்று கலர் படம் பார்த்த திருப்பதி எனக்கு, கமலுக்கும், கதா நாயகிக்கும் இருக்கும் உறவு, குஷி படத்தில் S.J.சூர்யா எடுத்தது, இன்னொருவனை விரும்பும் பெண்ணை அடைகலம் கொடுத்து காப்பாற்றி கடைசில் அவளுக்கே வாழ்வு கொடுப்பது, ஸ்ரீகாந்த், பூமிகா நடித்த ரோஜா கூட்டம் படத்தில் எடுத்தார்கள், தன்னை கெடுத்தவனை ஊர் முன்னிலையில் தவறை ஒற்று கொள்ள வைத்து பிறகு அவனை நிராகரிப்பதும் வேற சில படங்களில் எடுத்தார்கள்,
ஆக மொத்தம் மூலம் இது தான் இதை வைத்து என்னும் எத்தனை படம் எடுப்பர்களோ,
படத்திற்குள் வருவோம், செலவே கிடையாது படத்தில், படத்தில் வரும் மொத்த வாகனங்கள் ஒரு பஸ், ஒரு ஜீப், ஒரு ஸ்கூட்டர், ஒரு சைக்கிள் அவ்வளவு தான்,
வெளிநாடு போகும் செலவும் கிடையாது, ஒரு நல்ல படம் ஜெயிக்க கதை ஒன்றே போதும் என்பதற்கு இது ஒன்றே ஆதாரம்,
படத்தில் கம்யுனிசத்தை பற்றி நாயகனின் பார்வை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று, அதாவது கம்யுனிஷம் என்பது முதலாளிகளை எதிர்ப்பது அல்ல, தொழிலாளிகளுக்கு உதவி செய்வது,
நல்ல படம், பார்க்காதவர்கள் ஒரு முறை கண்டிப்பாக பார்க்கவும்.
3 வாங்கிகட்டி கொண்டது:
நல்ல படம் நானும் ரசித்து பார்த்தேன்
பழசுத்தான் எப்பவுமே மவுசு
கலர் படங்கள் வந்த பின்னும் இது கருப்பு வெள்ளையில் எடுக்கப் பட்டதாக ஞாபகம். அதில் வேறு சில விஷயங்களும் குறிப்பிடத் தக்கது. தன் தகுதிக்கு மீறி கற்பனை உலகில் வாழ்ந்து பின் யதார்த்தத்தின் வலியில் விழுந்து அதில் தன்னை தொலைக்காமல் துணிந்து தன் வாழ்க்கையை அமைக்கும் ஷோபா கதாபாத்திரம்.
Post a Comment