அதிமுக உண்மையில் யார் கையில்?...

இந்த நீதிமன்றம் பல விசித்திர வழக்குகளை சந்தித்துள்ளது, இதுவும் அப்படி ஒன்று தான் என்ற புகழ் பெற்ற வசனத்தை யாரும் மறக்க முடியாது, நான் சொல்ல போவதும் அப்படி ஒன்று தான், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரிக்கப்படும் ஜெயலலிதா மரணம் தான் அந்த வழக்கு.

இது வரை நடந்த விசாரணைகளை கோர்த்து பார்த்தால் பயங்கர இடியாப்ப சிக்கலாக இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அதிமுகவில் எவனும் யோக்கியன் இல்லை. மக்கள் அனைவரும் முட்டாள் ஆக்கப்பட்டுள்ளோம். இன்னும் அதுவே தான் நடக்கிறது, உண்மையில் அதிமுக மூன்று அணி, தினகரனை இணைத்துகொள்ள வேண்டும் அல்லது அங்கே போய் சேர வேண்டும் என்பது ஒரு அணி, பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு அணி, யாரும் வேண்டும், அதிமுக என்ற பெயரை கெடுக்காமல் இருப்போம் என்பது ஒரு அணி.

இந்த மூன்று அணிக்களுக்கும் உள்ள சண்டையில் ஜெயலலிதா மரணத்தின் உண்மை காரணம் அம்பலமாக உள்ளது. இந்த ஆணையத்தின் விசாரிப்பு மே மாதத்திற்கு மேல் நீடித்தால் கண்டிப்பா ஆகும், ஒருவேளை அதன் முன் வெளியிடப்பட்டால் என்னாகும்னு உங்களுக்கே தெரியும்

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது ஒ.பி.எஸ் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டார். ஏற்கனவே இரு முறை ஜெயலலிதாவால் பரிந்துரைக்கப்பட்டவர் என்பதால் எந்த சட்டமன்ற உறுப்பினர்களும் போர் கொடி தூக்க வில்லை, மன்னார்குடியும் வாய் திறக்கவில்லை.



அம்மா நலமுடன் உள்ளார், இட்லி சாப்பிட்டார் என ஒவ்வொருவராக சொல்லிக்கொண்டிருந்த பொழுதே ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட சசிகலா கணவர் நடராஜன், தினகரன், திவாகரன் அப்பல்லோவுக்குள் நுழைந்தனர், இங்கே நீங்க யோசிக்கவேண்டிய ஒரு விசயம் இருக்கிறது, அந்த சமயத்தில் ஜெயலலிதாவின் ரத்த உறவான தீவாவோ அவரது தம்பியோ அனுமதிக்கப்படவில்லை

ஜெயலலிதா இறந்ததும் அல்லது இப்பொழுது தான் இறந்தார் என சொல்லப்பட்ட பொழுது தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தது. சசிகலா பொது செயலாளர் ஆக்கப்பட்டார். அவருக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க ஓ.பி.எஸ் தன் பதவியை ராஜினாமா செய்தார், ஆனால் மத்தியில் இருப்பவர்களுக்கு சசிகலா முதல்வர் ஆவது பிடிக்கவில்லை. மேலும் சொத்துகுவிப்பு வழக்கை இறுக்கி சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கி கொடுத்தனர்.

சசிகலா சிறை செல்லும் முன் தனக்கு தான் முதல்வர் பதவி என எதிர்பார்த்தார் ஓ.பி.எஸ். ஆனால் காட்சி மாற்றத்தில் செங்கோட்டையனுக்கு கூட கிடைக்காமல் அது ஈ.பி,எஸ் கைக்கு சென்றது. உள்வட்டாரத்தில் ஓ.பி.எஸ் ஜெயலலிதாவுக்கு பணிவாக இருந்துள்ளார். ஈ.பி.எஸ் ஜெயலலிதாவை விட சசிகலாவுக்கு பணிவாக இருந்துள்ளார். என்ற பேச்சுகள் உண்டு



சசிகலா சிறை சென்ற பின் ஓ.பி.எஸ் தன் தர்மயுத்ததை ஆரம்பிக்கிறார். அம்மா சாவில் மர்மம் உள்ளது. அப்போதும், இப்போதும் இருக்கும் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தான் முதல் குற்றவாளி  எங்கிறார். அது ஊழல் அரசு அகற்றியே ஆக வேண்டும் என பேசிக்கொண்டிருக்கும் பொழுது தான் கூவந்தூர் கூத்து நடக்குது. அங்கிருந்து மாஃபா பாண்டியராஜன் தப்பித்து வருகிறார்.

இங்கே ஒரு ப்ளாஷ்பேக், பாண்டியராஜன் ஒரு பக்கா இந்துதுவாவாதி, முன்னாள் பாஜக உறுப்பினர், அப்புறம் தான் தேமுதிக, அதிமுக என ஆடுறா ராமா கதை நடந்தது. அப்போதும் தினகரன் பிடியில் அதிமுக இருக்கவே பாஜக பன்னீர் அணியை மறைமுகமாக ஆதரிக்க ஆரம்பித்தது. அதன் பிண்ணனியில் இருந்தது குருமூர்த்தி. அந்த சமயத்தில் கே.சி.பழனிசாமி என்னும் முன்னாள் எம்.பி பொதுசெயலாளர் மொத்த கட்சியின் உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என குட்டைய குழப்ப. பாஜகவை அதிமுக ஆதரிக்காது என டீவி பேட்டியில் பேசியதற்காக கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்

ஆர்.கே.நகர் தேர்தலை மறந்தே விட்டேன். முதல் முறை தொப்பி சின்னத்தில் தினகரனை ஆதரிக்கும் பொழுது ஓ.பி.எஸ் பதவியில் தான் இருக்கிறார். ஜெயலலிதா பிணம் போல் செட் செய்து ஓட்டெல்லாம் கேட்டார்கள். அதன் பின் தான் ஓ.பி.எஸ் ராஜினாமா செய்கிறார். பாஜக பார்வையில் ஆட்சியில் இருக்கும் ஈ.பி.எஸ் அணியையும் விட மனமில்லை, அவர்களுக்கு நிச்சயமாக ஒரு குதிரை வேண்டும். அவர்கள் தூண்டுதலால் ஈ.பி.எஸ் குழப்பத்தில் இருக்கிறார்

ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தில் கொடுத்த வழக்கினால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுகிறது. சின்னத்தை பெற தினகரன் முயற்சி செய்ய திகாரில் தள்ளப்படுகிறார். அந்த சமயத்தில் மன்னார்குடியை ஓரம் கட்ட பேரம் நடத்தப்படுகிறது. ஆக ஈ.பி,எஸ் பாஜக வலைக்குள் சிக்குகிறார். தினகரன் எம்.எல்.ஏ ஆனது.  ஒன்று சேராமல் இருந்தாலும் தினகரனை தனியே சென்று ஓ.பி.எஸ் சென்று சந்திந்தது என பல கதைகள் இருந்தாலும் நாம் ஜெயலலிதா மரணத்திற்கு வருவோம்

மன்னார்குடியை ஓரம் கட்ட வேண்டும் என முடிவெடுத்த பின் அது வரை இட்லி ஊட்டி விட்டவர்கள் மாற்றி பேசினர்., திண்டுக்கல் சீனிவாசன் பொது மேடையில் மக்களே நாங்கள் பொய் சொல்லி விட்டோம், எங்களை யாரையுமெ மன்னார்குடி பார்க்க அனுமதிக்கவில்லை என்றார். மேலும் அம்மாவை ஸ்லோபாய்சன் கொடுத்து கொன்றூ விட்டார்கள் என்றார்

அப்பவே தினகரன் சொல்லி கொண்டிருப்பார். அதிமுகவுக்குள் எங்களுக்கு ஸ்லீப்பர் செல் உள்ளது என்று. இந்த ஆணைய விசாரனையில் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் நாங்கள் அனைவரும் அம்மாவை பார்த்தோம், ஒரு டாக்டர் என்ற முறையில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது குறித்து ஒரு ஆலோசனை கூட்டம் நடந்ததாக முன்னாள் தலைமைசெயலர் ராம்மோகன்ரெட்டி சில ஆணவங்களை தற்போதைய தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனிடம் கொடுத்துள்ளார்

ஆனால் பொன்னையனும், விஜயபாஸ்கரும் அப்படி ஒரு ஆலோசனை கூட்டம் நடக்கவில்லை என்று ஆணையத்தில் தெரிவித்துள்ளனர்.  ஜெயலலிதாவிற்கு வைத்தியம் பார்த்த அப்பல்லோ டாக்டர் தான் பன்னிர்செல்லம் தம்பிக்கு வைத்தியம் பார்த்தது. இதுவல்லாது நாடாளுமன்ற துணை சபாநாயகர் லண்டன் டாக்டர் பீலெவை சென்று சந்திந்துள்ளார். கேட்டால் தன் உடல்நலம் குறித்து ஆலோசனை பெற எங்கிறார், ஆனால் தர்மயுத்தம் சமயத்தில் அந்த டாக்டர் மேல் எங்களுக்கு சந்தேகம் உள்ளது என்றனர் அதிமுகவினர்



இதில் மொத்தமாக விழிபிதிக்கி நிற்பது பன்னிர்செல்வன் தான். அப்போதைய முதல்வருக்கு என்ன நடக்கிறது என்பது எல்லாம் தெரியும், அவரே நேரில் பார்த்தார்னு அப்போதைய சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்கிறார். தலைமை செயலர் நேரில் பார்த்ததாகவும் ஜெயலலிதா கட்டைவிரலை தூக்கி காட்டியதாகவும் பதிவு செய்த்துள்ளார்.

இப்போ கேள்வி என்னான்னா ஜெயலலிதா மரணத்திற்கு முன் எங்களை பார்க்க அனுமதிக்க வில்லை என பாடியவர்கள் இன்று அதற்கு எதிராக நிற்கின்றனர், தர்மயுத்தம் நடத்தி மன்னார்குடியை ஓரம்கட்டிய ஓ.பி.எஸ் பெரும் சிக்கலில் இருக்கிறார். ஈ.பி.எஸ்க்கு கொடநாடு பிரச்சனை.

நிச்சயமாக ஜெயலலிதா மரணம் பெரும் சர்ச்சை வாய்ந்தது, ஆனால் அதை வைத்து அரசியல் செய்யபோவது அதிமுக அல்ல. இவர்கள் குடுமியை கையில் வைத்திருப்பவர்கள். முழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் அதிமுக தலைமை முழிக்கிறது. பத்தாததுக்கு எடபாடி மேல் ஊழல் குற்றசாட்டு விசாரணை வேறு நடக்கிறது.

குடுமிகள் எலக்ட்ரானிக் மிசினில் தான் கைவைப்பார்கள்னு நினைச்சேன், ஆனால் ஜெயலலிதா இறந்தபொழுது சசிகலாவை நெஞ்சில் சாய்த்து ஆறுதல் சொன்னது ஞாகபம் வந்த பொழுது புரிந்துவிட்டது. அவர்களுக்கு செக் பாயிண்ட் எதுவென்று

இதையெல்லாம் பாமர மக்களுக்கு எப்படி கொண்டு செல்வது???

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin