இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம்.
நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் மாற்ற முடியாது. அதை அனுபவமா எடுத்துக்கமே தவிர அதை நினைத்து புலம்புறது வேஸ்ட்.(இது ஏன் முதல்ல வருதுன்னா அதை கடைபிடிக்கத்தான் படாதபாடு படுறேன்)
என்னை நியாயபடுத்திக்க யாரையும் குற்றம் சாட்டக்கூடாது
பிச்சை, உதவி என்ற வார்த்தையே இல்ல, இல்லாதவங்களுக்கு செய்யுறது நம் கடமை
குற்ற உணர்ச்சி இல்லாம வாழ ஓப்பனா இருக்கனும் அதுக்கான முடிந்தவரை உண்மை பேசனும்.
வாழ்க்கை ஒரு முறை தான். அதை நம்பனும். நான் வாழ்ந்த தடத்தை பதிக்கனும். அட்லீஸ்ட் வாழ்ந்தேன்னு காட்டனும்
என் சந்தோசத்துக்கு யாருக்கும் செலவு வைக்கக்கூடாது. அதை கடனா நினைத்து அடுத்த முறை கொடுத்தரனும்
ஆலோசனைகும் அட்வைஸ்க்கும் வித்தியாசம் தெரியாவங்க நிறைய பேரு இருக்காங்க, அதுனால உரிமை எடுத்துக்கக்கூடாது
எனக்கு இழப்பே ஏற்பட்டாலும் தனி மனித உரிமைக்காக மட்டுமே பேசனும். யாரையும் குற்றம் சாட்டக்கூடாது
எதிர்காலம் குறித்த திட்டமிடல் வேஸ்ட். அது அந்த நொடியில் என்ன தேவையோ அதை எடுத்துக்குது, இப்பவே திட்ட்மிட்டு ஒன்னு ஆகபோறதில்ல
சக மனிதர்களின் அடையாளம் பார்க்கக்கூடாது.
பிடிக்கலைன்னு சொன்னா பொண்டாட்டியா இருந்தாலும் தொடக்கூடாது
அழுகை வந்தா அழனும், சிரிப்பு வந்தா சிரிக்கனும்
என் குழுந்தைங்க பூமிக்கு வர நான் ஒரு கருவி தாம், நான் அவங்களுக்கு ஓனர் இல்ல
இறப்பு என்பது மனிதத்தின் விடுதலை. விட்டு போறோம் அவ்ளோ தான். நாம இருக்கனும்னா இங்கேயே எதாவது பண்ணிட்டு போகனும். மறுபிறவின்னு ஒன்னு இல்ல